Saturday, May 5, 2012

ஆணாதிக்கம் + கற்பனை வறட்சி= வழக்கு எண் 18/9- திரைப்பார்வை

தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் உண்டு.

கமல் ஹாசன் போன்றவர்கள் , நல்ல படம் என நினைத்து எதையாவது எடுப்பார்கள். படம் பிளாப் ஆகி குப்பை தொட்டிக்கு போகும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசனை இல்லை என பழியை தூக்கி போட்டு அடுத்த குப்பை படம் எடுக்க தயாராவார்கள்.

ஆனால் தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகள். நல்ல , வித்தியாசமான படங்களை ஆதரித்தே வந்து இருக்கிறார்கள்.

சாதாரண ரசிகர்களின் மன நிலையும், அறிவு ஜீவிகளின் மன நிலையும் ஒத்து போவதே இல்லை.


நான் படத்துக்கு போனால் படத்தை விட , ரசிகர்களின் மன நிலையையே கவனிப்பது வழக்கம்.

வழக்கு எண் 18/9திரை அரங்கில் நுழைந்ததுமே ஆச்சர்யம். புது படம் . ஆனால் கூட்டமே இல்லை.

படம் பார்க்க பார்க்க காட்சிகளுடன் ஒன்ற முடிந்தது. ஆனால் போக போகத்தான் இயக்குனருக்கு காதல் குறித்தும் புரிதல் இல்லை, சாமான்யர்களின் வலி மீதும் அக்கறை இல்லை என்பது புரிந்தது.

 நம்மை போன்றவர்கள் முதலில் படத்தை ஆகோ ஓகோ என பாராட்டுவோம். யோசித்து பார்த்தால்தான் அது ஒரு குப்பை என புரியும்.

ஆனால் சராசரி ரசிகன் முதல் பார்வையிலேயே படத்தை எடை போட்டு7 விடுவான்.

 நல்லவர்களை பெண்கள் நம்ப மாட்டார்கள், அயோக்கியர்களைத்தான் நம்புவார்கள் என்ற புளித்து போன ஆணாதிக்க சிந்தனைதான் கதைக்கரு. இதை மறைக்க செல் போன் மெசேஜ் ஸ்கேண்டல் போன்ற கிளுகிளு விஷ்யங்களை கையில் எடுத்து இருக்கிறார்.சாமான்யன் துன்புறுகிறான் . கெட்டவன் ஜெயிக்கிறான் ,கடைசியில் சினிமாட்டிக்கான கிளைமேக்ஸ்.

இது ஒப்பாறாது என இயக்குனருக்கே தெரிந்து விட்டதால் , இன்னொரு யுக்தியை முயன்று பார்த்து இருக்கிறார்.

அந்த காலத்தில் மனிதனின் மறுபக்கம் என்று ஒரு படம் வந்தது. சிவகுமார் கதா நாயகன். அவர் தன் மனைவியை கொன்று விட்டார் என்பது குற்றச்சாட்டு. அவர் ஏன் கொன்றார் என்பதை துப்பறிந்து கண்டு பிடிப்பார்கள். அந்த காட்சிகள் ஃபிளாஷ்பேக்காக காட்டப்படும்போது ,  வில்லன் தோற்றதில் அவர் இருப்பார்.

அதன் பின் மனைவி எப்படி இறந்தார் என்று சிவகுமார் தன் பார்வையில் சொல்வார். அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் வேறு மாதிரி இருக்கும்.

இந்த திரைக்கதை யுக்தியை கொஞ்சம் ஆட்டையை போட்டு இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் லாஜிக் பற்றி கவலையே படவில்லை என்றாலும் , பீச் காட்சி சரியான கற்பனை வறட்சி.

புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பாராட்டத்தக்கது.. ஆனால் அதற்கேற்ப உழைப்பும் இருந்தால்தான் ஆர்வம் செயலாகும்.

  வெர்டிக்ட்        
வழக்கு எண் 18/9 -   தள்ளுபடி செய்யப்படுகிறது 10 comments:

 1. பாஸ் அப்படியே எங்க மனசில நினைத்தத நீங்க எழுதி இருக்கீங்க.தொடரட்டும் ..,

  ReplyDelete
 2. வேறு சில நபர்களும் கூட படம் சுமார்
  தேவை இல்லாது நிறையக் காட்சிகள் இடைவேளை வரை
  என்றும் எழுதி உள்ளார்கள்

  வழக்கின் இருபுறமும் பார்க்க வேண்டும் சார்

  விருமாண்டியை ஒரு பக்கதார்க்கு பிடித்து இருந்தது

  மறுபக்கத்தாருக்கு விருமாண்டியைப் பிடிக்க வில்லை

  ReplyDelete
 3. ella manitharkalum oru visayathai parattum nalil ulagam amaithi perum.

  oru velai neengal antha dhineshagavum irukkalam.

  ReplyDelete
 4. சாரு, நீரே ஒரு (உலகின் சிறந்த) படத்தை இயக்கி மக்களுக்கு விளக்கலாமே? அத விட்டுபுட்டு மறைவா ஒளிஞ்சிகிட்டு அம்பு விடுவதேன்?

  ReplyDelete
 5. சூப்பர்,அடுத்த உயிர்மை விருது உங்களுக்குத்தான். இப்பவே அப்ளை பண்ணிடுங்க

  ReplyDelete
 6. very fine review, I too hate that beach schene

  ReplyDelete
 7. God indha madhir realitynra perula ammerr sasikumar bala edukkura kuppaigalukku sattayadi

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா