Sunday, May 13, 2012

”கவிஞர் “ வைரமுத்துவும் நானும்

என் கல்லூரி காலத்தில் அடிக்கடி நடக்கும் பஞ்சாயத்து கவிஞர்களில் சிறந்தவர் வாலியா , வைரமுத்துவா ?

அதில் வைரமுத்துவை ஆதரித்து பேசுவதில் முன்னணியில் இருந்தவன் நான். வைரமுத்து என்றால் எங்களுக்கெல்லாம் அந்த அளவு ஈர்ப்பு.
சின்ன வயதில் சினிமா பாடல் என்றால் நடிகர்களை வைத்துதான் வகைப்படுத்துவோம். இசை அமைப்பாளர் , பாடலாசியர் எல்லாம் தெரியாது..ரஜினி பாட்டு, கமல் பாட்டு , எம் ஜி ஆர் , சிவாஜி பாடல்கள் என்றுதான் தெரியும்.

கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்புதான் பாடல் வ்ரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில் , எனக்கு படித்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார்..

“ வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கொரு சேதி தரும் “
“ மெத்தை வாங்கினேன்.. சுகத்தை வாங்கல “  “  கடவுள் மனிதனை படைத்தானா , மனிதன் கடவுளை படைத்தானா.. ரெண்டு பேரும் இல்லையே “

என அந்த வயதில் சுவையான வரிகள் மனதை கவர்ந்தன. இப்படிப்பட்ட நல்ல கவிஞரை இளையராஜா பகைத்து கொண்டாரே என இளைய்ராஜா மேல் வருத்தமும் இருந்தது..

அந்த காலத்தில் இளையராஜா பணியாற்றாமல் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் வராது.. ஓரிரெண்டு படங்கள் இளையராஜா இல்லாமல் வரும். அவற்றில் வைரமுத்து கண்டிப்பாக இருப்பார்.

சந்திரபோஸ் , அம்சலேகா போல பலர் இளையராஜாவுக்கு மாற்றாக பயன்படுத்தி கொள்ளப்பட்டனர். அவற்றில் வைரமுத்து இருப்பார்.

வானமே எல்லை, ரோஜா, அண்ணாமலை என்ற மூன்று படங்களை பாலசந்தர் தயாரித்தார்.. மூன்றிலும் இயக்குனர்கள் வெவ்வேறு. நடிகர்கள் வெவ்வேறு.. ஆனால் பாடலாசியர்கள் ஒருவரே... வைரமுத்து.

அந்த அளவுக்கு இளையராஜாவுக்கு எதிராக தன் கொடியை பறக்க விட்டு கொண்டு இருந்தார் வைரமுத்து.
புத்தகங்கள் வாங்கும் பழக்கம் அப்போதுதான் ஆரம்பித்து இருந்தது,  நான் வாங்கிய முதல் புத்தகங்களில் அதிகம் வைரமுத்து புத்தகங்களே.

அவரையே உலகில் மிகப் பெரும் கவிஞராக நினைத்து வந்தேன்.
ஆனால் இலக்கிய வாசிப்பு அதிகரிக்க அதிகரிக்க, கவிதை என்ற விஷயம் புரிய ஆரம்பித்தது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. அது ஓர் உணர்வு. அதில் பல உயரங்களை தொட முடியும் . தொட்டு இருக்கிறார்கள் என்பது புரிய ஆரம்பித்தது..

கவிதைகளில் எத்தனை எத்தனை வடிவங்கள்.. எத்தனை எத்தனை உணர்வுகள். பிரமித்து போனேன்..

ஆயிரம் பக்க புத்தகம் தரும் உணர்வை மூன்று வரிகளில் சொன்ன ஜப்பானிய ஹைக்கூ ஒன்றை படித்து கண்ணீர் விட்டு அழுததும் ஒருமுறை நடந்தது..

திரைப்படத்தில் பாடல் எழுதுவ்து சாதாரண விஷ்யம் அல்ல.. அதற்கு கடும் உழைப்பு தேவை. திறமை தேவை.

இந்த இரண்டும் கொண்டவர் வைரமுத்து. திரைப்பாடலாசியர்களில் முக்கியமானவர் அவர்.

ஆனால் சிறந்த கவிஞரா . சிறந்த நாவலாசிரியா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நல்ல எழுத்தாளர் , உழைப்பாளி என சொல்லலாமே தவிர , உரைனடை கவிதை போன்றவற்றில் பெஸ்ட் என சொல்ல இயலாது..

ஒருவர் நன்றாக நடிக்கிறார் என்பதால் அவர் சிறந்த தலைவராகவும் இருப்பார் என நினைப்பது தவறு.. அதே போல ஒருவர் சிறந்த பாடலாசியர் என்பதால், அவர் சிறந்த இலக்கியவாதி என நினப்பதும் தவறு என்பதே என் கருத்து


அதே நேரத்தில் வைரமுத்துவின் திரைப்பாடல்களுக்கு நான் என்றும் ரசிகன்


2 comments:

  1. nanbaa..
    Antha Jappania Hykoo pls...

    - aravind

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகள் அருமை

    வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா