Sunday, May 6, 2012

திருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்

வெளியூர் பயணம் ஒன்றுக்கு திட்டமிட வேண்டும் என்று நண்பர் நிர்மல் சமீபத்தில் சொன்னார்.   வட  மானிலம் ஒன்றுக்கு இருவரும் சென்று வரலாம் என் பேசிக்கொண்டு இருந்தோம். முடிந்தால் அந்த பயணத்திற்கு ஒரு வி அய் பியையும் அழைக்க வேண்டும் என்பது யோசனை. அந்த வி அய் பி வந்தால் இந்த பயணம் பொலிவு பெறும் .

ஒருவேளை அவர் வரவில்லை என்றாலும் , ஒவ்வொரு பயணமும் ஏதாவது சொல்லித்தரும் என்பதால், இருவர் மட்டும் செல்லலாம் என பேசினோம்.

பேசி முடித்தவுடந்தான் தோன்றியது. சமீபத்தில் அருகில் இருக்கும் ஊர்களுக்குகூட செல்லவில்லையே. அலுவல் ரீதியாக செல்வது வேறு. சும்மா நாமாக எங்கும் செல்லவில்லையே என யோசித்தேன்.

அப்படி முடிவானதுதான் திருவண்ணாமலை ட்ரிப். அலுவலக நண்பர் ஒருவர் கிரிவலம் குறித்து அடிக்கடி பேசுவார். நான் இது வரை சென்றதில்லை என்பதால், அந்த அனுபவம் பெறலாமே என நினைத்தேன். அவருடன் சேர்ந்து செல்ல முடிவு செய்தேன்.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் வர முடியவில்லை. தனியாகத்தான் செல்ல வேண்டும் . கிரிவலத்தின் முக்கியத்துவம் குறித்து சில தகவல்கள் சொன்னார். சுற்றும்போது சொல்ல வேண்டிய ஒரு மந்திர வார்த்தையும் சொன்னார்.

நான் ரொம்ப சீரியசாகவெல்லாம் செல்ல விரும்பவில்லை. ஒரு பார்வையாளனாக சென்று , கிரிவலம் என்ற அனுபவத்தை பெற விரும்பினேன். அவ்வளவுதான்.

சென்னையில் இருந்து பஸ் ஏறினேன் .போகும் வழியில் ஒருவருடன் பேசியபோதுதான் அது சித்ராபவுர்ணமி என தெரியவந்த்து. சித்திரகுபதனுக்காக பவுர்ணமியாம். சித்திரகுப்தந்தான் மரண கடவுளான எமனின் கணக்க்காளன். நம் பாவ புண்ணியங்களை கணக்கு போட்டு , எமனிடன் சொல்ப்வன். சித்திரகுபதனை சித்ராபவுர்ணமியன்று வேண்டி கொண்டால், நமக்கு சாதகமாக கணக்கு எழுதுவானாம்.

அப்படி வேண்டுவதற்கு சில முறைகள் இருக்கிறதாம், காஞ்சிபுரத்தில் அவனுக்கு கோவில் இருக்கிறதாம்.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு பயணம் செல்லும்போது பல விஷ்யங்கள் நம் காதில் விழுகின்றன. சிலர் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சில ஆலயங்கள் செல்கின்றனர். அதே போல அமாவாசை அன்று செல்ல வேண்டிய ஆலயங்களும் உள்ளனவாம். இவர்கள் ரெகுலராக செல்வதால் , அப்படி செல்பவர்களிடையே ஒரு நட்பு வளையம் ஏற்பட்டு விடுகிறது.

 நள்ளிரவு 12.30க்கு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அந்த நேரத்தில் ஏராளமானோர் திரண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நடக்கலானேன். மொத்தம் 14 கிலோ மீட்டர்களாம். என்னால் நடக்க முடியுமா என தயக்கமாக இருந்தது. சரி,  வருவது வரட்டும் என நடக்க ஆரம்பித்தேன்.

தனியாக சென்றதும் நல்லதாக போயிற்று. ஆங்காங்கு சில முக்கிய இடங்களை பார்த்தவாறு செல்ல முடிந்தது.

ரமணர் ஆசிரம் , சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரம் என்று நிதானமாக பார்த்தபடி சென்றேன்.ஆனால் இவற்றை எல்லாம் விட , பிரகாசமாக இருந்தது நித்யானந்தாவின் ஆசிரம்தான். பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. அரச்சியல்தலைவருக்கு இணையாக கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. சமீபத்து பிரச்சினைகளால் அவர் இமேஜ் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இரவு முழுதும் நடப்பதால் , இரவை முழுதும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலதரப்பட்ட மக்களை சந்த்க்கும் அனுபவமும் கிடைக்கிறது.

இரவின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்தபடி சென்றதால் , 14 கிலோ மீட்டரை நடந்து முடித்ததே தெரியவில்லை. நிதானமாக , பல இடங்களையும் சென்று பார்த்தபடி நடந்ததால் , மலையை சுற்றி முடிக்கும்போது காலை எட்டு மணி.

என்னை போல புதிதாக செல்பவர்கள் , சீக்கிரமே அங்கு சென்று விட வேண்டும். அப்போதுதான் இன்னும் பல இடங்களை நன்கு பார்க்க முடியும் ,. சில புத்தகங்கள் வாங்க விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாமல் போய் விட்டது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிரிவலம் சென்றாலும் கூட , மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை உணர முடிந்தது.

இதுபோல விசேஷ நிகழ்ச்சி இல்லாத சாதாரண நாளில் , இன்னொரு முறை வரவேண்டும் என நினைத்து கொண்டு சென்னை பஸ் ஏறினேன்.

 பரபரப்பான நள்ளிரவு

சுட சுட தேனீர்

கிரிவலம் ஆரம்பம்

ஆலயம்

பிரகாசம் குறையாத நித்யானந்தா

இமேஜ் சரிவு இல்லைவருங்கால தமிழகமே ?!!! 


காவல்த்துறையா? காவல் துறையா ? 

அதிகாலை

இரவு முதல் காலை வரை கிரிவலம் 

சூரிய உதயம்அடுத்த பவுர்ணமி ஞாயிறு அன்று வருகிறது.  முதல் முறை கிரி வலம் செல்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

6 comments:

 1. அற்புதம்
  அருமையாகப் பதிந்து உள்ளீர்கள் பிச்சைக் காரன்

  ReplyDelete
 2. கிரிவலப் பாதையில் நிறைய முக்கியமான இடங்கள் உண்டு. அவற்றைப் பற்றி அடுத்த முறை எழுதுங்கள்.

  கோவிலுக்குள் செல்லவில்லையா? அழகான பல சிற்பங்கள் கோயிலுக்குள் உண்டு.

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி கோபி . அடுத்த முறை கோவிலுக்குள் செல்ல வேண்டும்

  ReplyDelete
 4. உங்கள் வலம் நன்றாய் இருந்தது!

  ReplyDelete
 5. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது ஒரு பார்வையாளனாய், கிரி வலம் - ஆன்மிகத்தின் உச்சம் பாஸ்.

  ReplyDelete
 6. நித்யானந்தா காசு சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனை தகிடுதத்தங்களையும் அங்கே நடத்திக்கொண்டிருக்கிறார் அது சாதாரணமானவர்களுக்குத்தெறியாது.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா