Sunday, September 30, 2012

பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் - சாரு உருக்கமான வேண்டுகோள்

 நேர்மை, தெளிவு , துணிவு  ,சமூகத்தின் மீது அன்பு / அக்கறை .  இந்த காம்பினேஷனில் ஒரு மனிதரை காண்பது அரிது . மற்ற துறைகளில் ஓரளவு இந்த காம்பினேஷனுடன் சிலர் இருக்கிறார்கள் . ஆனால் சம கால எழுத்தாளர்களில் இந்த பண்புகளை ஒரு சேர காண்பது மிகவும் கடினம்.

இந்த பண்புக்ளை ஒரு சேர பெற்ற , வாராது வந்த மாமணி போல , தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் சாரு என்பது பலரது கருத்து. இந்த கருத்தை வலுப்படுத்துவது போல சாருவின் இன்றைய பேச்சு அமைந்து இருந்தது.

ஜெய் பீம் காம்ரேட் ஆவண படம் குறித்து விண் தொலைக் காட்சியில் பேசினார். இன்ன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த படம் பார்க்காதவர்கள் , தன் நண்பர்களாக நீடிக்க முடியாது என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அந்த அளவுக்கு இந்த படத்தையும் , அது சொல்லும் செய்தியையும் , உணர்வுகளையும் சாரு நேசிக்கிறார்.


சக மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வதன் அவலத்தை சுட்டிக்காட்டினார். இந்த படத்தை பார்ப்பது வரலாற்று கடமை என்றார்.

மனிதன் கழிவை மனிதன் சுமக்கும் அவலத்துக்கு எதிரான சட்டம் 1993ல் கொண்டு வரப்பட்டது , ஆனாலும் இந்த இழி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மலம் என்ற வார்த்தையை சொன்னாலே பலருக்கு வாந்தி வந்து விடும். ஆனால் இந்த கழிவுகளை சுமப்பதையே வேலையாக சிலர் செய்கிறார்களே.. அவர்களது நிலையை நாம் எண்ணி பார்த்தோமோ என்றெல்லாம் சாட்டையால் விளாசினார்.


இந்த நிலையில் இருந்து அவர்கள் வெளி வர வேண்டும் என்றால் அதை கல்விதான் சாதிக்கும் என்று சொன்னவர் தன் வாழ்க்கையை உதாரணமாக காட்டினார்.

இந்த விளிம்பு நிலை மக்களுடன் தான் , சாருவின் இளமைக் காலம் கழிந்து இருக்கிறது. மலம் அள்ளும்போது கூட சென்று இருக்கிறார் ( தேகம் நாவலில் இதை உருக்கமாக சொல்லி இருப்பார் ) மலத்தின் மீது சாம்பலை தூவி , அதை அள்ளி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றுவது அவர்கள் பணி. குடிக்காமல் இந்த வேலையை செய்ய முடியாது. காலப் போக்கில் குடிக்கு அடிமையாகி விடுவார்கள்.


கல்விதான் தன்னை இதில் இருந்து காப்பாற்றும் என உணர்ந்த சாரு , வெறித்தனமாக படிக்க ஆரம்பித்து , வேறு ட்ராக்கிற்கு வந்து விட்டார். ஆனால் , அவர் தம்பிக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் , அதிலேயே சிக்கி கொண்டார். 40 வயதிலேயே இறந்து விட்டார்.  


சாருவுக்கு இந்த படத்தின் மீதான உணர்வு பூர்வமான நெருக்கத்துக்கு , இதுதான் காரணம் போலும்.

இந்த படம் 13 ஆண்டுகளாக எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொன்னார். இப்படியெல்லாம் பாராட்டிபேசிய சாரு ,மாற்று கருத்தையும் முன் வைத்தார்.

மதம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது தவறு என ஆதாரபூர்வமாக சுட்டி காட்டினார். அமெரிக்காவில் நிலவிய இன வெறி கொள்கைக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என கேட்டார். எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர , ஹீரோ வில்லன் சண்டையாக இதை மாற்ற கூடாது என உணர்ச்சி பூர்வமாக சொன்னார்.


தமிழ் பொது புத்தி பொறுப்பை தட்டி கழிப்பதற்கு பேர் போனது. பிரச்சினைக்கு நீயோ , நானோ காரணம் இல்லை ,. ம்தம்தான் எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என சொல்லி விட்டு , மானாட மயிலாட பார்க்க சென்று விடுவோம் . ஆனால் , இதற்கு காரணம் நீதான் , மதம் காரணம் இல்லை என்று சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். சாருவுக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. இதோ , அவர் பேச்சின் இணைப்பு. 


4 comments:

 1. சர்ச்சைக்குரிய மனிதராக இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாம்.

  ReplyDelete
 2. சாருவின் நேர்காணல் லிங்கை தந்தமைக்கு நன்ரி. இந்த பட dvd வாங்கலாம்

  ReplyDelete
 3. சாருவின் நேர்காணல் லிங்கை தந்தமைக்கு நன்ரி. இந்த பட dvd வாங்கலாம்

  ReplyDelete
 4. ஜெய் பீம் காம்ரேட், அது சொல்லும் வலி எப்போதுமே தலித் அல்லாதவரால் உணர முடியாது. தீர்வுகள்+ நிலைப்பாடுகள் பற்றி சொல்லவில்லை. உண்மைநிலையை முதலில் தேசம் உணர்ந்தால்தான் தீர்வு கிடைக்கும். வன்முறையை கையில் எடுக்காத மக்கள், அழுதுகொண்டே சொல்லும்போதே நாம என்னவென்று கவனிக்க வேண்டும்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா