Monday, October 1, 2012

திருவண்ணாமலை கிரிவலம் ரிப்போர்ட்- சீசன் 2

திருவண்ணாமலைக்கு வேறு சில விஷ்யங்களுக்காக சில முறை சென்று இருந்தாலும் , கிரி வலம் சமீபத்தில்தான் சென்றேன்.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஓர் அனுபவத்துக்காக சென்றேன். அந்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்து இருந்தது. அதை குறித்த என் அனுபவங்களை இதில் காணலாம்.

திருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்- சீசன் 1


அதன் பின் , அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனி அன்று மீண்டும் ஒரு விசிட். என் முதல் அனுபவங்களை கேட்ட சில நண்பர்கள் , இந்த முறை தாமும் கூட வருவதாக சொன்னார்கள் . கூட்டமாக செல்வதில் சில சந்தோஷங்கள் , சிக்கல்கள் இருக்கின்றன. தனியாக செல்வதிலும் ப்ள்ஸ் மைனஸ் இருக்கின்றன. எனவே எதுவாக இருந்தாலும் சந்தோஷம் என்பதே என் மன நிலையாக இருந்தது.

சாமி இருக்கிறார் அல்லது இல்லை என்ற அக்கப்போரை கடந்து , ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ,( அல்லது எந்த காரணமும் இல்லாமலேயே கூட )  ஏதாவது ஓர் இடம் சென்று வருவது புத்துணர்வூட்டுவதை இந்த பயணத்திலும் உணர்ந்தேன்.

மலையை சுற்றி வந்தால் முக்தி கிடைக்கும் , பணக்காரன் ஆகலாம் என்றெல்லாம் இல்லாமல் , அந்த இரவை முழுக்க உள் வாங்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பார்த்தேன். குறிப்பாக ஒரு குறுகிய இடம் வழியாக வெளியேறும் அமைப்புள்ள இடுக்கு பிள்ளையார் என்னை கவர்ந்தது.

உணவில் டிகிரி காஃபியும் , கோலி சோடாவும் கவர்ந்தது. நித்தியானந்தா ஆசிரமத்தில் அந்த நள்ளிரவிலும் அன்ன தானம் நடக்கிறது..

கோயிலை சுற்று எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என அவற்றுக்கு பெயர்.

முதலில் வருவது இந்திர லிங்கம். அதன் பின் வினாயகர் கோயில்கள் உள்ளன. இவற்றை தவிர சிறிய கோயில்கள் ஏராளம் உள்ளன.

அதன் பின் அக்னி லிங்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம். இவரைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

அதன் பின் வருவது எம லிங்கம். இந்த லிங்கங்களை வணங்கினால் , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்கள் .

அதன் பின் ஆதி பராசக்தி சக்தி பீடமும் , நிருதி லிங்கமும் வருகின்றன.

அதன் பின் வருவதுதான் ஹை லைட். ஆமாம் . நித்தியானந்தர் ஆசிரமம் அடுத்து வருகிறது. ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தூங்கவே மாட்டார்கள் போல.

அதன் பின் வருவது வர்ண லிங்கம் மற்றும் ஷீர்டி பாபா ஆலயம்.

வர்ண லிங்கத்துக்கு அடுத்து வாயு லிங்கம். பின் பஞ்ச முக தரிசன பகுதி.
இவற்றை எல்லாம் விட கூட்டம் குவிவது ஓர் இடத்தில். என்ன இடம் ?

குபேர லிங்கம். செல்வம் அளிப்பார் என நம்பிக்கை. பிறகு பிள்ளையார் கோயில் , ஈசான்ய லிங்கம் . பிறகு கிளைமேக்சாக ராஜ கோபுரம்.

இதைத்தவிர அமிர்தானதமயி ஆஸ்ரம் போன்ற பல்வேறு அமைப்பினரின் ஸ்டால்களில் பல்வேறு ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆகின்றன. தேவையானவர்கள் வாங்கி செல்கிறார்கள்.

தவிர , உணவு விடுதிகள் , குளிர் பான கடைகள் , மூலிகை சூப் கடைகள் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றன.

எந்த எதிர்பார்ப்புகளும் , வேண்டுதல்களும் இல்லாமல் , சும்மா போய் வந்தால் , கிடைக்கும் அனுபவம் அலாதி என்பது என் கருத்து.







4 comments:

  1. Thanks for sharing. I wanted to go there for a while.

    ReplyDelete
  2. Thanks for sharing. I wanted to go there for a while.

    ReplyDelete
  3. /// தூங்கவே மாட்டார்கள் போல. ///

    தெரிஞ்சதுதானே!

    அதுசரி, இந்த கடலைபொரி, டெல்லி அப்பளம் வகை சுற்றுலாவுக்கு தீவுத்திடல் பொருட்காட்சியை ஒரு சுற்று சுற்றி வந்தாலே போதுமே!

    ReplyDelete
  4. மனைவியின் ஜாக்கெட்டில் பணம் வைப்பது எந்த வகையில் தவறு? தனிப்பட்ட தருணங்களில் ஒரு மனிதனுக்கு காமமோ காதலோ தோன்றாமல் போகுமா? நக்சலைட்டுகளுக்கு குழந்தைகளே இல்லையா?

    சிறு பெண்ணிடம் பாலியல் தவறு இழைப்பவனை அவனுடன் இருக்கும் இன்னோரு நக்சலைத் தடுக்கவே முயற்சிப்பாள். துப்பாக்கி காட்டி மிரட்டவும் செய்வாள். இதைத் தவிர்த்து விட்டு அந்தக் காட்சியை விமரிப்பது selective amnesia

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா