Tuesday, November 20, 2012

நன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம்



 சில நேரங்களில்,  அவாளை நம் ஆட்கள் அளவு கடந்து தாக்குகிறார்களோ என தோன்றும்.  உதாரணமாக ஜாதி பெயர்களில் எத்தனையோ  உணவங்கள் , நிறுவனங்கள் இருக்கின்றன.  அதை எல்லாம் விட்டுவிட்டு, அவாள் பெயரில் உணவகங்கள் அமைத்தால் திட்டுகிறார்களே என வருத்தமாக இருக்கும்.


ஆனால் அவாளில் சிலர் நடந்து கொள்வதை பார்த்தால் , இப்படி திட்டுவது நியாயம்தானோ என தோன்றுகிறது.

சமீபத்தில் மணிரத்தினம் பேட்டி ஒன்று வெளிவந்து இருந்தது. சினிமாவையே அவர்தான் காப்பாற்றுவதாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் இதய கோயில் படம் இயக்க ஒப்பு கொண்டது தான் செய்த பெரிய தவறு என்றும், அது  மோசமான படம் என்றும் சொல்லி இருந்தார்.

ஒரு காலத்தில் கொடு கட்டி பறந்தவர் கோவைத்தம்பி. பல வெற்றி படங்களை தயாரித்தவர் . அவர் தயாரிப்பில் வெளிவந்த இதய கோயில் படத்தின் இயக்குனர் மணி ரத்தினம் என தெரிய வந்தபோது , அப்போதைய சினிமா ரசிகர்களுக்கு குழப்பம். யார் இந்த மணி ரத்தினம். புது ஆளுக்கு வாய்ப்பு கொடுத்து , கோவைத்தம்பி ஏன் விஷ பரீட்சை செய்கிறார் என நினைத்தார்கள் . 

அது வரை வெற்றி கரமாக இருந்த இளைய ராஜா - கோவைதம்பி கூட்டணி இதில்தான் முறிந்தது. காரணம் மணி ரத்தினம். இந்த படம் மூலம்தான் மணிரத்னம் என்றால் யார் என்றே தமிழ் நாட்டுக்கு தெரிய வந்தது . இந்த நிலையில் , ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல , இந்த படத்தை அவர் விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த விமர்சனத்துக்கு , இதய கோயில் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அளித்த பதில் 

‘‘அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.
கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது உண்மைதான்.
எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும். அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல், காட்சிகளை சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’ வெற்றி படம்தான்.
திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது.

2 comments:

  1. Pichai, i came to your blog thru charu's link. I thought you were a very sensible person seeing your unbiased views on injustices against muslims and unncecessary attack on a "nothing hotel" just because it carried brahmin name and some earlier articles.

    But now with this article, It makes me believe that you claiming Charu as your guru is for namesake. After reading all this works extensively, if you can stoop to such low level of writing, it makes me think that your reading of him is total waste as you seem to have grasped nothing of it. A great man like Charu who has an universal view will be ashamed to see this from you.

    As per your article, since a brahmin director backstabbed somebody, you conclude that all brahmins are the same and so no harm in harming them. Then this can be applied to any community and religion and attack them since there will be criminals in every one of them.

    Kindly don't claim to be a follower of Charu anymore and don't show him article as well.

    ReplyDelete
  2. நண்பரே... சாருவை குருவாக கொண்டவன் ஜாதி துவேஷம் , மத துவேஷம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு இருப்பான் என்பது உண்மை..
    இந்த கட்டுரையில் நான் மற்ற பிரமாணர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.. அவர்களை டார்ச்சர் செய்வது நியாயம் என்றும் சொல்லவில்லை.. ஹீரோ ஹோண்டா விளம்பர விவகாரத்தில், ஹோட்டல் விவகாரத்தில் அவர்கள் தரப்பில் நின்ற வெகு சிலரில் நானும் ஒருவன் என்பதை மறந்து விடாதீர்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா