Friday, November 23, 2012

நச்சினார்க்கினியார் , முஸ்தஃபா வாக மாறியது ஏன் ?- நெகிழ்ச்சியான சம்பவம்


மணவை முஸ்தபா....  அறிவியல் தமிழில் முத்திரை பதித்த பெயர் இது. பல்வேறு துறைகளி ல் , அறிவியல் சார்ந்த புதிய கலைசொற்களை உருவாக்கியவர் இவர்.

     ந்ச்சினார்க்கினியார் என்ற பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி வந்தார். ஆனால் ஒரு உணர்வு பூர்வமான சந்தர்ப்பத்தில் முஸ்தபா என்ற பெயரில் எழுத ஆரம்பித்து, தான் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்த்தார் .   

     அவர் ஏன் பெயர் மாற்றினார் என்பதற்கு ஒரு சுவையான காரணம் இருக்கிறது.. படித்து பாருங்கள் .

*********************************************************************************************


கல்லூரிக் காலத்தில் நச்சினார்க்கினியர் என்ற பெயரோடு இருந்த தாங்கள் மணவை முஸ்தபா என்ற பெயருக்கு மாறியது ஏன்? எப்போது?


Manavai Mustafa
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆசிரியர்கள் ஒரு அணியாகவும் விவாதிக்க ஏற்பாடு. மாணவர்கள் அணிக்கு நான் தலைமை தாங்குகிறேன். விவாதத் தலைப்பு இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா? என்பதாகும். ஆசிரிய அணியினர் வளர்ந்திருக்கிறது என்றும் மாணவ அணியினர் வளரவில்லை என்றும் வாதிட்டனர். இறுதி வாக்கெடுப்பில் வளரவில்லை என வாதிட்ட மாணவ அணியினர் பெறும் வெற்றி பெற்றனர். இது பேராசிரியர் தெ.பொ.மீ.அவர்கட்கு பெரும் வியப்பளித்தது.

“அதிலும் பெருக்கத்தை வளர்ச்சியாகக் கருத முடியாது. மாறும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு மாறாத உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியங்களே வாழும் வெற்றியினைப் பெற முடியும். அத்தகைய இலக்கியங்களே வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அத்தகு அறிவாற்றல் மிக்க இலக்கியங்கள் அதிகம் உருவாகாது. வெறும் உணர்ச்சிக்கு இரைபோடும் இலக்கியங்கள் வளர்ச்சியைக் குறிக்காது. வேண்டுமானானல் அவை பெருக்கத்தைக் குறிக்கலாம். அது வளர்ச்சியாகாது” என நான் எடுத்து வைத்த வாதம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் உரையில் எடுத்து வைக்கும் வாதத் திறன் மாணவ சமுதாய எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எனவே இன்று முதல் முஸ்தபாவை நம்மிடையே வாழும் நச்சினார்க்கினியராகக் காண்போம் எனக் கூறி, எனக்குப் புதுப் பெயரைச் சூட்டினார். அன்று முதல் அப்பெயர் நிலை பெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் போது, பேராசிரியர் தெ.பொ.மீ என்னை அழைத்து, இனிமேல் நீ முஸ்தபா என்ற பெயரால் அழைக்கப் படுவதையே நான் விரும்புகிறேன். இனி, நீ உன் சொந்தப் பெயரையே பயன்படுத்த வேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது. சமயம் வரும்போது, நானே அதற்கான காரணத்தைச் சொல்வேன் எனக்கூறி கட்டளையிட்டார். அவ்வாறே நானும் நடந்து கொண்டேன். பேராசிரியர் எதைச் சொன்னாலும், செய்தாலும் என் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு.

நான் மணப்பாறையில் பிறக்காவிட்டாலும் ஐந்து வயது முதல் அவ்வூரில் வளர்ந்தவன். என் பள்ளி வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் எழுத்து, பேச்சு மற்றும் இலக்கியத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிப் பாசறையாக, குறிப்பிடத்தக்க நிலைக்களமாக மணவை இருந்ததால் நன்றியுணர்வோடு என் பெயரை மணவை முஸ்தபா என வைத்துக் கொண்டேன்.

என் பெயரை மாற்றச் சொன்னதன் இரகசியத்தை என் குருநாதர் தெ.பொ.மீ அவர்கள் தான் மறைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் (45 ஆண்டுகளுக்குப் பின்) என்னிடம் வெளிப்படுத்தினார்.

நான் ஆரம்பத்தில் உன் சிந்தனைச் செயல்பாடுகளின் அடிப்படையில் உன் எதிர்காலத் தமிழ்ப் பணிகளைப் பற்றி நிறைய கற்பனை செய்திருந்தேன். நான் எண்ணியதை விடச் சிறப்பாக உன் தமிழ்ப் பணி அமைந்துள்ளது. அதிலும் நீ முனைப்புடன் செய்து வரும் காலத்திற்கேற்ற அறிவியல் தமிழ்த் தொண்டின் பெருமை இஸ்லாமிய சமுதாயத்தின் பெருமையாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் நச்சினார்க்கினியன் என்ற பெயரிலிருந்து (மணவை) முஸ்தபா எனும் பெயருக்கு மாறச் சொன்னேன், என்று கூறிய போது தன் மாணவன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் தொலை நோக்கும் என்னை நெஞ்சுருகச் செய்துவிட்டது. இதுதான் என் பெயர்மாற்ற வரலாறு.

11 comments:

 1. Conversion. And people are proud of them. LOL :)

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete

 3. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆனந்த்,

  உண்மைய சொன்னா மணவை முஸ்தபா என்ற பெயரெல்லாம் எனக்கு இப்பதான் தெரியும் :( என்னய மாதிரி இந்த தலைமுறையினர் எத்தன பேருக்கு இந்த விசயமெல்லாம் தெரியும்னும் தெரியல.

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete

 5. Aathiga Tamilan,

  It is obvious that you have commented just after reading the title and without reading the article. There is no religious conversion here. He has started using his original name instead of the nick name as per the wish of his teacher. That is all.

  ReplyDelete
 6. இப்படியொரு குருவால்தான் இப்படியொரு மாணவரை உருவாக்கமுடியும்..

  இப்படியொரு மாணவரால்தான் அப்படியொரு குருவாக உருவாகமுடியும்...

  ReplyDelete
 7. @ஆஷிக் அகமது.. அறிவியல் தமிழின் த்ந்தை என அழைக்கப்படும் மணவை முஸ்தபா என்ற பெயரில் செயல்பட்ட இவரையே சிலருக்கு தெரியாது உண்மைதான். இந்த நிலையில் , சில இஸ்லாமியர்கள், தம் சொந்தப்பெயரை மறைத்து , வேறு பெயர்களில் உலவுவதால் , இஸ்லாமியர்களின் தமிழ் தொண்டு , கலை சேவை, அறிவியல் சாதனை போன்றவை அவ்வளவாக வெளியே தெரியாமல் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது...

  ReplyDelete
 8. மணவை முஸ்தாபா தமிழில் அறிவியல் நூல்கள் எழுதியவர் என்ற வகையில் பாராட்டப்பட வேண்டியவரே.

  ஆனால் அவரது தமிழ் அறிவியல் சொற்களஞ்சியம் நூலில் தமிழ் என சொல்லி வட மொழி, பிற மொழி சொற்களை எல்லாம் தமிழாக்கிவிட்டார். ஒரு வேளை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி சொல் எல்லாம் தமிழ் என நினைத்திருப்பாரோ.

  மொழிக்கென அகராதி ,கலைகளஞ்சியம் என்றால் அம்மொழி வேர்ச்சொல்லில் இருக்கப்பட வேண்டும்.

  ஆட்டோ ரிக்‌ஷா விற்கு தானியங்கி மூவுருளி என தமிழாக்கம் செய்திருப்பார், என்னை கவர்ந்த சொல் :-))

  ReplyDelete
 9. @வவ்வால் ... புதிதாக உருவாகும் கலைச்சொற்கள் , பல்வேறு விவாதங்கள் மூலமே இறுதியாக ஏற்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். ஆரம்பத்தில் உருவாக்கப்படும் சொற்கள் சில நிராகரிக்கப்பட கூடும் , கேலி செய்யப்பட கூடும் என்ற ஆபத்து இருந்தும் கூட சிலர் அவரவர்கள் துறைகளில் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள் . இதை பாராட்டுக்குரியது.அதற்கும் ஓர் ஆரம்பம் தேவை அல்லவா .. அந்த வகையில் , அந்த வகையில் அறிவியல் துறையில் கலை சொற்கள் உருவாக்கிய முஸ்தஃபா அவர்கள் ஒரு சாதனையாளரே ... எயிட்ஸ் என்பதற்கு ஏமக்குறைவு நோய் என்ற பெயர் கொடுத்தார் அவர். இன்றைய இணைய தொடர்பு வசதிகள் அன்றே இருந்து இருந்தால் , இது போன்ற சொற்கள் விவாதிக்கப்பட்டு , புதிய தமிழ் வார்த்தைகள் பயன்பாட்டுக்கு வந்து இருக்கும். அது இல்லாததால்தான் இன்றும் எயிட்ஸ் என்ற வார்த்தையே தமிழாக உள்லது. மணவை முஸ்தபாவின் எழுத்துகள் , மறு வாசிப்பு செய்யப்பட வேண்டிய காலம் இது .

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா