Sunday, November 25, 2012

நன்றி கெட்ட கல்கி- பாலகுமாரன் பரபரப்பு கட்டுரை


வாழ்க்கையில் பல புத்தகங்கள் படித்து இருப்போம். முதல் முதலாக படித்த எழுத்து எது என கேட்டால் சொல்வது கொஞ்சம் கடினம்தான்.  முதல் முதலாக   இதயத்தை தொட்ட நாவல் எது என கேட்டால் சொல்லி விடலாம்.

   யோசிது பார்த்தால், நினைவின் அடுக்குகளில் பல எழுத்துகள் இருப்பதை உணர் முடிகிறது. ஆனால் என்னை முதன் முதலாக ஒரு கற்பனை ராஜாங்கத்தில் சிறகடிக்க வைத்த நாவல் என்றால் அது கல்கியின் சிவகாமியின் சபதம் தான். அதில் இருக்கும் ரொமாண்டிக் விஷ்யங்கள் , சின்ன வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அரசர்கள், சிற்பம் , பிட்சுக்கள் , மாறுவேடம் , மகேந்திர வர்வமரின் கெட்டிக்காரத்தனம் , போர் , கோட்டை , முற்றுகை என பல சிஷ்யங்கள் கற்பனை தூண்டி , வேறோர் உலகத்துக்கு எடுத்து சென்றது.

பொன்னியின் செல்வன் நாவல் , பிற்காலத்தில்தான் படித்தேன் . படித்து விட்டு , பலருக்கு ரெக்கமண்ட் செய்து இருக்கிறேன். நான் ரெக்கம்ண்ட் செய்து படித்தவர்கள் , மேலும் பலருக்கு ரெக்கமண்ட் செய்வதை பார்த்து வருகிறேன். காலத்தை கல்கி எழுத்து வென்று விட்டது என்றே தோன்றுகிறது.

   பாலகுமாரன் நாவல்கள் கல்லூரி காலங்களில் படிக்க ஆரம்பித்தேன் . அவரது அனைத்து எழுத்துகளையும்  கிட்டத்தட்ட படித்து விட்ட்டேன். அவர் எழுத்துகளுக்கு முத்தாய்ப்பாக உடையார் அமைந்து இருந்தது. வரலாற்ரு நாவல்கள் பல படித்து இருந்தாலும், உடையார் வேறொரு வடிவில் சிறப்பாக அமைந்து இருந்தது.


  ஆக, எனக்கு உடையாரும் பிடிக்கும் , பொன்னியின் செல்வனும் பிடிக்கும். இரண்டுமே ராஜராஜ சோழனைப் பற்றிய நாவல்கள்.


இந்த நிலையில், ஒரு கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.  அதில் ஒரு பகுதியை நீங்களும் படித்து பாருங்கள்..

***********************************************************


                அவர்கள் நன்றி மறந்தார்கள்; நான் அப்படி இல்லை- பாலகுமாரன் 

 வரலாற்று ஆசிரியர்கள் துணை இல்லாமல் ஒரு நாவலாசிரியன் ஒன்றும் செய்து விட முடியாது.

   நீலகண்ட சாஸ்திரிகளின் “ பிற்கால சோழர்கள் “ என்ற இரண்டு தொகுதிகளை படிக்காமல் ஒரு பொழுதும் இரா. கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படுகிற கல்கி, அவரது பொன்னியின் செல்வனை எழுதி இருக்க முடியாது. ஆனால் நானறிந்த வரை எந்த சரித்திர ஆசிரியரைப் பற்றியும் கல்கி அவர்கள் விவரிக்கவில்லை. நன்றி சொல்லவில்லை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

    ஒருவேளை நன்றி சொல்லும் மரபு அன்று இல்லாமல் இருந்து இருக்கலாம். பிற்பாடு சரித்திர கதைகளில் பிரகாசம் பெற்ற சிலரும் புத்தகங்களை சொல்லி இருக்கிறார்களே தவிர , தனிப்பட்ட முறையில் இன்னாரின் எழுத்தால்தான் இந்த நாவல் பிறந்தது என சொன்னது இல்லை.

    ஆனால் என்னுடைய உடையார் நாவல் ஆறு பாகத்திலும் , எனக்கு உதவி செய்த சரித்திர பேராசிரியர்களை , கல்வெட்டு ஆய்வார்களை , ஆராய்ச்சியாளர்களை இனம் கண்டு முகமன் கூறி வணங்கி வாழ்த்தி இருக்கிறேன்.

5 comments:

 1. பால குமாரன் உணமையில் சரித்திர நூல்களை படிக்கிறாரா? பிற்கால சொழர் வரலாற்றை எழுதியவர் சதாசிவ பண்டாரத்தார். நீலகண்ட சாஸ்திரியார் எழுதியது தி சோலாஸ்

  ReplyDelete
 2. @ அனானி ... தகவலுக்கு நன்றி... பாலகுமாரன் நீங்கள் சொன்ன இரண்டு நூல்களையுமே படித்து இருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இரண்டையும் கலந்து குறிப்பிட்டு இருக்கிறார் என வைத்து கொள்வோமே !!

  ( நான் இரண்டு நூல்களையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஹி ஹி )

  ReplyDelete
 3. Dear Sir,
  This problem o ignorance was raised at that time by eminent scholars.But Mr.Kalki immediately wrote a letter remembering satha sivapandrathar as he reffered his books mostly to write his excellent novels that reached the common man.But that letter never published in any book that might be a planned one.Sathsiva pandarathar is the best historian of tamilnadu history.The tamilndu history congress also asked the state government to issue stamps for Sathasivapandarathar,neelakanda sathri nd few others.
  regards
  vellai varanan

  ReplyDelete
 4. மழித்தலும் நீட்டலும் வேண்டா -உலகம்
  பழித்தல் ஒழித்துவிடின்


  மற்றையோரை பழிப்போர்க்கு
  ஏன் நீட்டலும் அன்ன பிறவும்

  ReplyDelete
 5. பாலாவின்எழுத்து என்னை சற்று திகைக்க வைத்தது
  இவருக்குள்ளும் அசூயை?
  கேவலம்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா