Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Wednesday, April 29, 2020

பொய் தெய்வங்கள். ஜெயமோகனின் " கைமுக்கு "

ஜெயமோகனின் கைமுக்கு சிறுகதை வெகுவாக யோசிக்க வைத்தது

கைமுக்கு என்றால் என்ன?

அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சித்திரவதை முறை. குற்றம் சாட்டப்பட்டவர் , கொதிக்கும் எண்ணைய்க்குள் கையை விட்டு, அதில் போடப்பட்டு இருக்கும் சின்ன,அனுமன் சிலையை எடுத்துக்காட்ட வேண்டும். கையில் காயமின்றி சிலையை எடுத்தால் நிரபராதி என கருதப்படுவார்.

இந்தப்பின்னணியில் துவங்குகிறது கதை.
தற்போதையை சித்தரவதை முறைகளைப் பற்றி பேசும் முன்னாள் போலிஸ்காரர் , தனது வாழ்வில் இப்படி ஒருவனை அடித்து வெளுத்த நிகழ்வைச் சொல்கிறார்

    ஜாப் ரைட்டிங் செய்து வருமானம் ஈட்டும் ஏழை ஒருவர் , கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைக்கிறார்

பையன் படித்து , நல்ல வேலை கிடைத்து , வீடு வாங்கி , திருமணம் செய்து, குழந்தை பெற்று வசதியாக செட்டில் ஆகிறான்.

தந்தையையும் தன்னுடன் அழைத்துக கொள்கிறான்.

எல்லாம் நல்லபடியாக செல்கிறது. எதிர்பாரா விதமான சம்பவம் ஒன்றில் பையன் சிக்கியபோதுதான் , அவன் படிப்பு , வேலை எல்லாம் பொய் என தெரிகிறது. அவன் ஒரு திருடன் என தெரிந்து தந்தை நிலைகுலைந்து போகிறான். அவன் மனைவி அவனை,விட்டு விலகி விடுகிறாள்

அப்போதுதான் அந்த போலிஸ்காரர் அவனை அடித்து துவைக்கிறார். ஒரு தந்தையின் நம்பிக்கையை அழித்து,விட்டானே என்பதுதான் அவர் கோபம்

சில வருடங்கள் கழித்து அவனை சந்திக்கிறார். அவன் மகிழ்ச்சியுடன் வசதியாக இருக்கிறான். நல்ல வக்கீல்களும் பணமும் இருப்பதால் பயமின்றி திருட்டை தொடர்கிறான். தந்தையும் அவனது இந்த வாழ்க்கைக்கு பழகி சந்தோஷமாக இருக்கிறார்

அவன் ஏன் திருடன் ஆனான் என்பதுதான் மேட்டர்.

சரியான ஆடை இல்லை. நல்ல"காலணி இல்லை. காசு இல்லை. நல்ல பையன் , அறிவாளி, ஆனால் வறுமை தாளாமல் லேசாக திருட ஆரம்பித்து அப்படியே பழக்கமாகி விட்டது.
இனி அதை விடும் வாய்ப்பு கிடையாது
புலி வாலை பிடித்த கதை

இதில் கைமுக்கு என்பதை போலிஸ் அடியுடன் ஒப்பிட்டு அந்த போலிஸ்காரர் சொன்னாலும் , கைமுக்கு என்பது நம்மை வாட்டி வதைக்கும் சோதனை நெருப்பின் குறியீடு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

அந்த கைமுக்கு சோதனையை , அரசன் பரிதாபப்பட்டு நிறுத்திவிட்டான். ஆனால் வாழ்க்கைக்கு அந்த இரக்கம் கிடையாது. life is not  fair. அது கைமுக்கு சோதனையை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது

எந்த அளவு உயர்வை நாம் நாடுகிறோமோ அந்த அளவு வேதனைகளை வாழக்கை கொடுக்கிறது. அதை சகித்துக் கொண்டுதான் , கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அனுமனை எடுக்க வேண்டியிருக்கிறது

அந்தக்கால கைமுக்கு சோதனையில் வெற்றி பெற ஒரு குறுக்குவழி உண்டு. அதிகாரிகளை கவனித்து விட்டால் போதும். கையில் போலி சிலை ஒன்றை கொடுத்து விடுவார்கள். கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிடுவது போல போக்கு காட்டிவிட்டு , போலி சிலையை காட்டி வெற்றி பெற்று விடலாம்;

உண்மை தெய்வத்தை தேடுவதன் வலிகளை தாங்க முடியாமல் பொய் தெய்வத்திடம் சராணகதி அடைவதைத்தானே அன்றாடம் பார்க்கிறோம்
   எளிய உதாரணம் உண்டு. இணையத்தில் தமிழ் எழுத முடியும் என்ற வாயப்பு வந்தபோது அது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மையான ஆர்வத்துடன்தான் பலர் எழுதினர்

ஆனால் அப்படி உண்மையாக எழுதி , அமுத்த கட்டத்துக்கு நகர்வது உழைப்பைக் கோரும் வேலை என பலருக்கும் புரிந்து கொண்டனர்

  பெரும்பாலான இதழ்கள் , ஊடகங்கள் எந்த கட்சியினரின் கைகளில் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டு , அதற்கேற்ற அரசியல் சார்புகள் எடுத்து , அதற்கேற்ப தொடர்புகளை வளர்த்துக் கொண்டு , இணைய எழுத்து என்பதில் இருந்து அடுத்த கட்டம் நகர்ந்தனர். இப்படி விளையாட்டாக இறங்கிய அரசியலை இன்று உண்மையாக நம்பத் தொடங்கி அதில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டு விட்டனர்

உண்மையில் கொஞ்சம் சோதனைகளை சமாளித்து இருந்தால் , உண்மை தெய்வத்தையே பார்த்திருக்கலாம். அதாவது தமது தகுதியாலேயே உரிய இடங்களை அடைத்திருக்கலாம்

   இந்த கதையில் வரும் மகன் அந்த கல்லூரி கால அவமானங்களில் இருந்து தப்ப பொய்தெய்வத்தை ஏற்கிறான் என்றால் அது அவன் மட்டும் செய்யவில்லை.
அவனது திருட்டுத் தொழிலுக்காக அவனை விட்டு விலகும் முதல் மனைவி , அவனது திருட்டு சொத்தை அனுபவிக்க தயங்குவதில்லை. நல்ல வேலை என பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்தது அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனைதான். அதைக்கடக்க அவள் கண்டுபிடித்த , அவளுக்கு ஆறுதல் தரும்பொய் தெய்வம் அந்த சொத்துகள்

அவனை பிடிப்பதில் நேர்மையான முனைப்பு காட்டிய போலிஸ் அதிகாரி , ஒரு கஷ்டமான சூழலில் பொய் தெய்வத்திடமே சரணடைகிறார்

தனது மகன் குற்றவாளி என அறிந்து துடிக்கும் தந்தையும் மன சமாதானத்துக்கு தயாராகிறார்

  சரி..  பொய் தெய்வம் என்றால்தான் என்ன ? அவர்கள் ஜெயித்து விட்டார்களே . அந்த சந்தோஷம் போதுமே .   என நினைக்கலாம்

   ஆனால் சோதனைகளை சமாளிக்க அஞ்சி , பொய் தெய்வங்களால் வெற்றி பெற்று , பொய் தெய்வங்களால் சூழப்பட்ட ஒரு உலகை , கொதிக்கும் எண்ணெய்க்கடியில் மறைந்தபடி உண்மை தெய்வம் கவனித்துக கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது




Tuesday, April 7, 2020

உலக வரலாறை எழுதும் கிருமிகள். ஜெயமோகனின் ஆடகம்

ஜெயமோகனின் ஆடகம் என்றொரு சிறுகதை படித்தேன்

ஆடகம்..  வித்தியாசமான பெயர்.  தூய பொன் என்று பொருள்

ஆனால் கதை விஷத்தைப் பற்றி பேசுகிறது.. உண்மையில் விஷமும் அமுதமும் ஒரே மூலப்பொருட்களால் ஆனதுதான்.  மூலப்பொருட்களின் அளவைப் பொருத்து விஷமென்றோ,அமுதமென்றோ ஆகிறது

கதை நாயகனுக்கு வாழ்வில் எந்த ஆர்வமும் இல்லை. மரணத்தைப் பற்றியே கனவு காண்கிறான்..
மழைப்பொழிவு,மிகு ஆகும்பே என்ற ஊருக்கு தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு செல்கிறான்

யானையையே கொல்லத்தக்க ,,கடும் விஷமிக்க ராஜநாகங்கள் அங்கு இருப்பதை அறிந்து நாகம் கடித்து சாக விழைகிறான்

விரும்பியபடி பாம்பு கடித்து நினைவிழக்கிறான்.

அந்த விஷம் அவனை கொல்லவில்லை. அமுதமாக செயல்பட்டு அவனுக்கு,புதிதொரு வண்ணமயமான வாழ்க்கை வழங்கி இருப்பதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம்;

மழைமிகு பிரதேசம் , வனம் , பாம்பு ஆகியவை இயற்கையின் குறியீடுகள் என வாசித்தால் மெல்லிய திடுக்கிடல் ஏற்படுகிறது
Guns, Germs, and Steel என்றொரு நூல்

ஏன் ஐரோப்பா உலகை ஆள்கிறது . ஏன் கருப்பின மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர்.   எல்லா வளமும் செல்வங்களும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏன் குவிந்தது.  ஆப்ரிக்கா ஏன் வறுமையில் வாடுகிறது.

என்பது போன்ற கேள்விகளை நூல் ஆகிறது

அனைவரும் சமமான மனிதர்கள்தான். ஆனால் இந்த சமநிலையை குலைத்து வெள்ளையர்களை உயரத்துக்கு எடுத்துப் போனதில் நோய்க்கிருமிகளுக்கு முக்கிய பங்குண்டு என்கிறது நூல்

இயற்கை ஏதோ,ஒரு கணக்கிட்டு அவர்களை செல்வந்தர்களாக வல்லரசுகளாக மாற்றிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள்தான் அவர்களை வாழ வைத்த தெய்வம் என்பது நூலின் செய்தி

ஆடகம் கதையில் , சாக விரும்பும் ஒருவனை வளம்பட வாழ வைக்க இயற்கை முடிவு செய்து விட்டது. அவனை அந்த பாம்பு சற்று அதிகம் கடித்திருந்தால் அவன் செத்திருப்பான். கடிக்காது போயிருந்தால் வேறு வகைகளில் தற்கொலை செய்திருப்பான்.  சரியான அளவு கடித்து சரியான விஷத்தை இறக்கி அவனை வாழ வைத்து விட்டது

உண்மையில் அவன் இதைக் கேட்கக்கூட இல்லை

   ஒரு கணத்தின் ஒரு துளியில் இவ்வளவு விஷம் போதும் என நாகம் முடிவெடுக்கும் அந்த ஒரு சொல்லற்கரிய ஒரு காலாதீத இடைவெளியில்தான் உலக வரலாறே நிகழ்கிறது போலும்


Monday, March 23, 2020

எம்"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து


அமுதசுரபி இதழில் இந்திரா
பார்த்தசாரதியின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது

என்ற குறளை அழகாக விளக்கிய கட்டுரை


இது அதிகம் கேட்டிராத குறள்..

உடனடியாக புரிந்து விடாத குறளும்கூட

புகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும் , சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது , அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.,பலர் பல விதமாக இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்

அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன் , சாகும்போது ஏனைய புழுக்கள் , விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது,அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;

இதை மார்ச் இதழில் படித்து,மனதை பறிகொடுத்து அதைப்,பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்

அப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண,எண்ணக் குறைவது கதையை படித்தேன்.

அந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது

அந்த கதையில் பல அழகான தருணங்கள். 


உதாரணமாக இந்த,வரி
ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது

வருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது. 

ஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது

கடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது

இந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது
   சக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்

அனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு,சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்

எதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்

எனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில் , பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.;

இந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க,மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம்
குறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை

இந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக
புரிந்தது


Tuesday, February 18, 2020

ஜெயமோகனின் யாதேவியும் , பாலியல் சோதனைகளும்


அந்தி மழை இதழில் ஜெயமோகனின் யா தேவி சிறுகதையைப் பார்த்து சற்றே அதிர்ச்சி அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்

இப்போதெல்லாம் தமிழ்ப்பத்திரிக்கைகளைப் படிப்பது முகநூல் பக்கங்களைப் படிப்பதுபோன்றுதான் இருக்கிறது. அறிவுஜீவி பாவனை , மேலோட்டமான புரிதல்கள் , தப்புத்தப்பான தமிழ் , அரசியல் சார்புகள் என பத்திரிக்கைகள் எல்லாம் முகநூல் தரத்துக்கு வந்து விட்டன

என் பதிவு வாட்சப்பில் வைரல் ஆகிறது
என அந்தக்கால வலைப்பதிவர்கள் மகிழ்வது போல பத்திரிக்கையாசிரியர்கள் மகிழும் கால கட்டம்.

நமக்குத்தேவையான தீனி இங்கு கிடைக்காது என ஆங்கிலத்தின் நகரும் சூழலில் , யா தேவி கதை நல்லதொரு அனுபவத்தை தந்தது

எல்லாஆன்செல் என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஶ்ரீதரன் என்பவன் அவள் அறைக்கு செல்கிறான்.
யாரும் கேட்கவாய்ப்பற்ற அவனது காலடி ஓசைகளை அவளுக்கு கேட்கிறது என்று ஆரம்ப வரிகளிலேயே ஒரு குறிப்பு வருகிறது.

அவள் நீலப்பட நடிகை. இவன் ஒரு துறவற வாழ்க்கை நடத்துபவன் . அவளுக்கு சிகிச்சை அளிக்க வருகிறான்.

அவன் அவளை புரிந்து கொள்வதைவிட , அவள் அவனை அதிகம் புரிந்து கொள்கிறாள் எனபதுதான் இந்தக்கதையின் மறைபொருளாக இருக்கும் அழகு

 பிணங்களை தகனம் செய்வதை அடிக்கடி பார்ப்பதன் மூலம் வாழ்க்கையின் நிலையாமையை உணர்தல் , மரண பயத்தை வெல்லல் போன்றவற்றை சாதிப்பதை ஒரு ஆன்மிக பயிற்சியாக செய்வார்கள்

அதேபோல கட்டற்ற காமத்தை அனுமதித்து அதை கடக்கும் முயற்சிகளும் உண்டு.  இது சற்று raw ஆன முயற்சி. ஆனால் சரியான வழிகாட்டுதல்களுடன் இதை செய்வது உண்டு

ஓஷோவுடன் நெருக்கத்தில் இருந்த சில பாலிவுட் நடிகர்கள் தாங்கள் புணர்ந்த பெண்களின் எண்ணிக்கையை பெருமையாக கூறி , தற்போது காமம் கடந்த நிலையை அடைந்து விட்டதாக புத்தகங்கள் எழுதினார்கள். இப்படி ஒரு நடிகர் பெருமையாக ஆன்மிக சோதனை செய்து புத்தகம் எழுத முடியுமா என்பது வேறு விவகாரம் 

உண்மையில் அப்படி அனுபவிப்பது மட்டுமே விழிப்புணர்வை தந்துவிடும் என்பது தவறான புரிதல்.

உதாரணமாக இடுகாட்டில் , சுடுகாட்டில் பணி செய்வோருக்கு மரணம் என்பது அதிர்ச்சியை தராது , பிணம் அச்சம் தராது. அதற்காக மரண பயம் கடந்த ஞானியர் என அவர்களை சொல்ல முடியாது..   ஆனால் சிலருக்கு அந்த நிலை வாய்க்கவும் வாய்ப்பிருக்கிறது


இந்த கதையில் வரும் அந்த நிலையை −காமம் கடந்த நிலையை −ஶ்ரீதரன் அடைய விரும்பும் நிலையை − அல்லது அதன் சாயலை அனுபவித்து விட்டாளோ என தோன்ற வைக்கிறது கதை

எதிர்பாலருடன் மரியாதைக்குரிய வகையில் பாலியல் சோதனைகள் செய்யும் வாய்ப்பை வாழ்க்கை அவளுக்கு வழங்கவில்லை ஆனால் கிடைத்த வாழ்க்கையேகூட அந்த சோதனைகளால் அடையப்படும் இறுதி அனுபவத்தை அவளுக்கு அளித்து விட்டதா என்ன ?

அவளில் மகாசக்தியை பெண்மையின் பேரழகை அவன் காண்பதைவிட ,அவனில் அவள் காணும் பெண் மிகவும் யோசிக்க வைத்தது

அவளது இறுதிப்,பெருமூச்சு அர்த்தம் மிக்கது







Saturday, January 18, 2020

சாருவிடம் கலை உருவாகாதா ? ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி

என்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்

அறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்

அதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .

தம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.

காரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன்.  துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.

இலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்




இந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு

நிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது

கலை என்பதன் அவசியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு

ஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு.  அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்

இங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.

ஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்

சாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்

பிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார்  சாருவின் உரை காணொளி

நேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை

அப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து

பொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்

தமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது

Friday, November 30, 2018

ரஜினி + ஷங்கர் + ஜெயமோகன் = இலக்கிய தரத்தில் ஒரு சினிமா


டெக்னாலஜி வளர்ச்சி  என்பது ,மனிதனின் அதிமுக்கிய சாதனைகளுள் ஒன்று.. ஆனால் மனிதனின் இந்த அறிவு , வளர்ச்சிக்கு மட்டும் அல்ல. சக மனித உயிராகிய நியாண்டர்தால் மனிதன் போல பல உயிரிகளின் அழிவுக்கும் காரணமாகி உள்ளது..

எனவே டெக்னாலஜி வளர்ச்சியை கவனமாக கையாள வேண்டும் என்பது நியாயமான எண்ணம்.

ஆனால் நல்ல விஷ்யமான டெக்னாலஜி வளர்ச்சி எப்படி தீமைக்கு காரணமாகிறதோ அதே போல , டெக்னாலஜி வளர்ச்சியில் கவனம் தேவை என்ற நியாயமான எண்ணமும்கூட தீமைக்கு காரணமாகலாம்.. எத்தனையோ நல்ல போராட்டங்கள் திசை மாறி போவதை பார்த்திருக்க்க்றோம் அல்லவா.

 நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டத்தைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம்..  டெக்னாலஜி வளர்ச்சி என்ற நன்மைக்கும் , அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற நன்மைக்கும் இடையேயான போராட்டம்தான் 2.0

வழக்கமாக இலக்கியங்களில்தான் இப்படிப்பட்ட அறச்சிக்கல்களை பார்த்திருப்போம்.. முதன் முறையாக சினிமாவில் அறச்சிக்கலை பார்க்கிறோம்

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூலிழைதான் வித்தியாசம்.. இபப்டி ஒரு நடு நிலை பார்வையுடன் நூல்கள் படித்திருப்போம்...  துரியோதனன் வில்லன் தான்..  ஆனால் யாரோ ஒரு தேரோட்டி மகனுக்கு அரசாட்சி அளித்தபோதோ , என்னதான் பீஷ்மரை சூழ்ச்சியால் வீழ்த்தினீர்கள் என்றாலும் அவருக்கு மரியாதை செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று அறிவித்தபோதோ அவனை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்க முடியும்


  நன்மையே உருவான ஹீரோ...தீமையே உருவான வில்லன் என்றுதான் சினிமாவில் பார்த்திருக்கிறோம்

ஏதாவது பிரச்சனை செய்தால் , உன் உயிருக்கு சமமான புறாவை கொன்று விடுவேன் என மிரட்டும் ஹீரோவும் அதற்கு கண்கலங்கி அஞ்சும் இளகிய மனம் கொண்ட வில்லனும் ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு இதுவே முதல் முறை

 வில்லனுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் என்பதும் நாம் பார்த்திராத ஒன்று

 படம் எடுக்கப்பட்ட விதம் இந்தியாவுக்கு புதிது..


  • பின் வாங்குவது என்பது என் சாஃப்ட்வேரில் கிடையாது
  • வாங்கடா செல்ஃபி பிள்ளைங்களா
  • நம்பர் ஒன் நம்பர் டூ இதெல்லாம் குழந்தை விளையாட்டு
  • பசிக்குதே என்பதற்காக கையை வெட்டி சாப்பிட முடியாது
  • குறைந்த பட்சம் பறவைகளுக்கு தண்ணி வைங்க
  • மெசேஜ் ஃபார்வார்ட் பண்றது என்பது சமூக சேவை அல்ல
என பல இடங்களில் கைதட்டல்கள்

  • வடை போச்சே
  • ( போனில் முத்தம் கொடுக்க முற்படும்போது போன் பறந்து விடுகிறது ) இதுதான் ஃபிளையிங் கிஸ்ஸா?
  • காதலுக்கு மரியாதை யா?
  • நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை
  • ( unknowncallar என மெசேஜ் வருவதைப்பார்க்கும் அமைச்சர் ) யாருயா அது உன்னி கிருஷ்ணன்?
இப்படி படம் முழுக்க மெலிதான நகைச்சுவை... ரஜினி , அக்சய் , எமி ஜாக்சன் மட்டும் அல்ல .. மயில்சாமி  கலாபவன் சஜான் உட்பட அனைவருமே ஷங்கரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளனர்

அமைச்சர் பாத்திரத்துக்கு கலாபவன் தான் வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருந்து , அவர் கால்ஷீட்டுக்கு காத்திருந்து அவர் காட்சிகளை எடுத்தார்.. 

3- டி வெகு வெகு சிறப்பு

படம் முடிந்து 3 டிக்காகவே ஒரு பாடல் காட்சி என்பது நாம் பார்த்திராதது.. அற்புதம்... பாடல், பின்னணி என அனைத்திலுமே ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் இசைப்புயல் .


  பட்சிராஜன் என்ற பெயர் முதல் ஆன்மிக விளக்கங்கள் வரை ஜெயமோகனின் இருப்பு தெரிந்து கொண்டே இருக்கிறது/ ..இலக்கியம் சினிமாவுடன் கைகுலுக்குவதால் கிடைக்கும் நன்மைக்கு எடுத்துக்காட்டாக படம் இருக்கிறது

பறவைகளை , இயற்கையை நாம் அழித்துக்கொண்டே சென்றால் , ஒரு கட்டத்தில் இயற்கை கோபம் அடைந்து நம்மை திரும்ப தாக்க ஆரம்பிக்கும் என்பதை வெகு அழகாக குறியீட்டுரீதியாக காட்சிப்படுத்தி இருப்பது இலக்கியத்தரத்துக்கு ஓர் உதாரணம்

வரலாற்றில் இடம் பெறும் படம்.. 



Sunday, January 8, 2017

சாரு எனும் பல்கலைக்கழகம்

அன்புள்ள சாரு,,,,,,

charu school of thought என்கிறீர்களே ...அப்படி என்றால் என்ன என ஒருவர் அராத்து புத்தக விழாவில் என்னைக் கேட்டார்...

இலக்கியக் கூறுகள் , இசங்கள் என்பதையெல்லாம் பேச்சில் காட்டாமல் தன் வாழ்க்கையே தன் செய்தி என கொண்டாட்டமாக , யாருக்கும் தொந்தரவளிக்காத , அன்பை பரப்புகிற ஒரு வித வாழ்க்கை முறை...

விழாவில் சாருவை கவனியுங்கள்...உங்களுக்கே புரியும் என்றேன்..

இலக்கிய உச்ச கணம் என்றால் என்ன என உரை நிகழ்த்தாமல் , சிலிர்ப்பான குரலில் , மெல்லிய இசைப் பின்னண்யில் கவிதை வாசித்து - மன்னிக்கவும் கவிக்கணத்தில் வாழ்ந்து - அந்த பரவ்ச கணத்தில் அனைவரையும் சில நிமிடங்கள் வாழ வைத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார்  அவர் சாரு என்றால் அனுபவம்... வெறும் பேச்சு அல்ல என்று..


உங்களைப் பேச அழைத்தபோது , வேண்டாம்... நண்பர் ஜெயமோகன் பேசட்டும் என விட்டுக்கொடுத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார் , அக்ரெஸ்சிவ்னெஸ் இல்லாத தன்மையே ஆன்மீகம் என ஜேகே போன்றோர் சொல்வதை வாழ்ந்து காட்டும் ஆன்மிக வாழ்க்கை என்றால் என்ன என்பதை


பிரேக் அப் கதைகளைப்பற்றி விரிவாக பேச தயார் நிலையில் வந்து இருந்தீர்கள்...அதற்காக எவ்வளவு உழைப்பை - பல வேலைப்பளுகளுக்கிடையே - நல்கினீர்கள் என எங்களுக்கு தெரியும்.. ஆனால் விருந்தினரை எதிர்த்துப்பேசுவது போல ஆகி விடுமே என நினைத்து அந்த அற்புதமான உரையையே தவிர்த்தீர்களே... அங்கு புரிந்து கொண்டார் சென்சிப்லிட்டி என்றால் என்னவென்பதை////கன்சிடெரேஷன் எனும் உயரிய தன்மையை


அவ்வளவு பிசியிலும் ஆட்டோகிராப் கேட்போருக்கு பொறுமையாக , தேதி பெயர் உட்பட அனைத்தையும் விசாரித்து அக்கறையுடன் ஓர் ஓவியம் தீட்டுவது போல கை எழுத்துப்போடுவீர்களே..அங்கு புரிந்து கொண்டார் , அன்பும் அக்கறையும்தான் உண்மையான அறம் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பதை


ஜெய்மோகனை உரிமை எடுத்துக்கொண்டு கலாய்த்தது ( நான் பெண்ணாக மாறினால் யோக்கியர்களை காதலித்து காலி செய்வேன்.. முதல் நபர் ஜெயமோகன் என்றபோது அவரே வாய் விட்டு சிரித்து விட்டார் ) ஜாலியான கேள்விகள் பதில்கள் , ஆடை நேர்த்தி என எனர்ஜெட்டிக்காக இருந்தீர்களே...அங்கு புரிந்து கொண்டார் .. Life is a celebration... Celebrate it என்பதை...


சிலரது வாசிப்புகள் அவர்கள் மூளையில் ஒரு மடிப்பாக மாறுவதோடு சரி... ஆனால் சாரு படித்து குவித்த புத்தகங்கள் அவரை அன்பு மயமாக்கி வருகிறது... வாழ்ககையை மென் மேலும் கொண்டாட செய்கிறது... இந்த ரசவாதமே சாரு எனும் பல்கலைக்கழகத்தின்  அடி நாதம் என புரிந்து கொண்டேன்....என்ன நான் சொல்வது சரியாக என கேட்டார் அந்த நண்பர்

Wednesday, October 8, 2014

அசோகமிதரன் பாராட்டிய என் கதை நிராகரிக்கப்பட்டது - வெண்முரசு பற்றி ஜெயமோகனுடன் எக்ஸ்க்லூசிவ்

ஜெயமோகனின் வெண் முரசு தொடரை பலர் படித்து வருவீர்கள் என நம்புகிறேன். முதல் பாகம் தொடும் ஆழம் , அதற்கு பிந்தைய பகுதிகளில் வரும் உணர்வெழுச்சி போன்றவை அபாரமாக இருந்தன..  ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மாதிரி என்றாலும் பொதுத்தன்மை என்றால் தமிழ் ஆளுமையை சொல்லலாம். சாரு இந்த தமிழை பாராட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் முந்தைய பகுதியில் இருந்து சற்று வேறுபட்ட நடையில் வெளி வந்தது நீலம் எனும்  நாவல் . இதை புரிந்து கொள்ள முடியவில்லை.. பழைய பகுதிகள் போல இல்லை என சிலர் சொன்னார்கள்..இதுதான் நன்றாக உள்ளது என்பவர்களும் உண்டு..

இந்த முரண் குறித்து ஜெயமோகனிடம் கேட்டேன்.

நீலம் இப்படி பிரத்தியேக நடையில் எழுதப்பட காரணம் என்ன?

படிக்க கஷ்டமாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே/?

இந்த பகுதி எந்த வகை வாசகர்களுக்காக எழுதப்பட்டது/?

இதை எப்படி வாசித்தால் நல்லது/?

இதற்கு ஜெயமோகன் அளித்த பதில் உங்கள் பார்வைக்கு

*****************************************************************


அன்புள்ள பிச்சைக்காரன்,

நீண்டகாலமாக எழுதிக்கொண்டிருப்பவன் என்றவகையில் எல்லா வினாக்களுக்கும் ஏற்கனவே ஓர் அனுபவமும் விடையும் என்னிடம் இருப்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். விரைவில் கண்டடைவீர்கள்.

என் ஆரம்பநாட்களில் ஆன் மிக நுட்பமானது என்று கருதும் கதை ஒன்று கணையாழியில் வெளிவந்தது. அசோகமித்திரன் அதைப்பாராட்டி எழுதியிருந்தார். ஆனால் அதை மிக நிராகரித்து ஒருவாசகர்கடிதம் வந்தது. எனக்கு கடும் வருத்தம். கதையில் என்ன பிரச்சினை என்று என்னுள்ளே கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது அசோகமித்திரன் எழுதிய சுருக்கமான கடிதம் வந்தது.

எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல என்று அவர் எழுதியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல்படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் வாசிப்புப் பயிற்சி, இயல்பு மட்டும் அல்ல அப்படைப்பை அம்முறை வாசிக்கும்போது அவர்களுக்கிருந்த மனநிலை ஆகியவையும் முக்கியம். ஒரு படைப்பை முழுமையாக நிராகரித்த ஒருவர் கொஞ்சநாட்கள் கழித்து சிறப்பானதாக எண்ணவும் கூடும். எழுத்தாளனுக்கே உள்ளூரத்தெரியும் சரியாகவந்திருக்கிறதா என்று, அது மட்டுமே முக்கியம் என எழுதியிருந்தார்

சரியாக ஒரு வாரம் கழித்து சி.மோகனைச் சந்தித்தேன். அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை அவர் நிராகரித்தார் என்றும் அது தற்போது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். ஏன் நிராகரித்தீர்கள் என்றேன். அதை அவர் குமுதத்தில் சிறுகதைகளாக எழுதி ஒன்றாகச்சேர்த்து நாவலாக்கியது பிடிக்கவில்லை என்றார். அசோகமித்திரன் எவ்வளவு பார்த்திருப்பார் என பிரமித்தேன்.

அரசியல் காரணங்களுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காழ்ப்பும்  மனவிலக்கமும் கொண்ட வாசகர்கள் உண்டு. வாசிப்பில் மிகமிகப் பின் தங்கி தேங்கிவிட்டவர்கள் உண்டு. எந்த ஒரு பேரிலக்கியத்தையும் நிராகரிக்கும் நோக்கத்துடன் வாசித்தால் அது எதையுமே அளிக்காமல் மௌனமாகி விடுவதை, தரமற்றதாகவே தெரிவதைக் காணலாம். ஏனென்றால் இலக்கியம் ஒன்றும் புறவமயான ஒரு பொருள் அல்ல. அது வாசகன் மனதில் நிகழவேண்டிய கற்பனை. அந்த கற்பனைக்கான தூண்டுதலை அளிக்கும் மொழிவடிவம் மட்டுமே இலக்கியத்தில் உள்ளது. கற்பனைசெய்ய மறுக்கும் வாசகன் ஓவியத்தை பார்க்கும் விழியற்றவனே.

அத்தகையோரை நாம் முழுமையாகவே நிராகரித்துவிடலாம். நான் எப்போதுமே சொல்வது போல நீ என் வட்டத்துக்குள் இல்லை என்றால் நான் உன் வட்டத்துக்குள் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் கேட்கும் வினா நுண்ணுணர்வுள்ள, தொடர்ந்து இதை வாசிக்கும் மனநிலை கொண்ட, பிறபகுதிகளை ரசிக்கும் வாசகர்களைப்பற்றியது. அதற்கான என் விடையை மேலேகுறிப்பிட்ட அ-வாசகர்களை வரையறை செய்து வெளியேதள்ளிய பிறகே செய்ய முடியும்.

நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன். சமீபத்தில் இன்னொரு நண்பரிடம் இதை விரிவாக தொலைபேசியில் பேச நேரிட்டது

வாசகர்களில் மிகக்கணிசமானவர்கள் அவர்கள் கண்முன் அறியும் அன்றாடவாழ்க்கையில்  இருந்து நீட்சிகொள்ளும் புனைவிலக்கியத்தை மட்டுமே  ரசிப்பவர்களாக இருப்பார்கள். அன்றாடவாழ்க்கையின் இடைவெளிகளை நிறைப்பதாகவும், உணர்வுகளை வளர்ப்பதாகவும் அறிதல்களை நுட்பமானதாக ஆக்குவதாகவும் அவ்விலக்கியம் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அவர்கள் வாசிப்பதே அதற்காகவே.

இத்தகையவர்கள் அதிகமாக வாசிப்பவர்கள் என்பதைக் காணலாம். கொஞ்சம் சுமாராக இருந்தால்கூட இவர்களால் புனைவை வாசித்துவிடமுடியும். அதில் ஏதேனும் சில வாழ்க்கைக்கூறுகள் இருந்தால்போதும். அவர்கள் வெளியே வாழ்வதைப்போல ஓர் அக வாழ்க்கையை புனைவு வழியாக வாழ்வார்கள். அவர்கள் பாராட்டும் ஒரு படைப்பில் அவர்கள் என்ன தான் கண்டார்கள் என்று கேட்டால் அவர்கள் ஏற்கனவே அன்றாட வாழ்க்கையில் அறிந்த ஒரு நுட்பமான விஷயத்தை அப்படைப்பு தொட்டுணர்த்தியிருப்பதைச் சொல்வார்கள். இலக்கியத்தில் அன்றாடவாழ்க்கையின் ஒரு விஷயம் குறிப்புணர்த்தப்பட்டிருந்தாலே அவர்களுக்குப்போதும். இவர்கள் தங்கள் அறிவுத்திறன் அல்லது நுண்ணுணர்வைக்கொண்டு அதைக் கண்டுபிடித்தால் அதுவே இலக்கிய அனுபவம்.

இத்தகையவர்கள் இலக்கியத்தின் மொழிநடை மீது கவனமற்றவர்கள். குறைந்தபட்ச உரைநடை, சுருக்கமான வெளிப்பாடு என்பதே இவர்கள் விரும்புவதாக இருக்கும். கவித்துவம் என்பது உலகியல்தளத்தைத் தொடும்போதன்றி அவர்கள் கண்ணுக்குப்படாது. கவிதையின் கருவிகளான அணிகள், படிமங்கள், உருவகங்கள் எவையும் இவர்களை பெரிதாகக் கவர்வதில்லை. தத்துவார்த்தமான தளங்களை இவர்கள் கவனிப்பதில்லை. ஆன்மீகமான உச்சங்களை நோக்கிச் செல்வதுமில்லை.  காரணம் இவர்கள் புனைவில் கற்பனைமூலம் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கைக்குத் தடையில்லாதபடி மொழியும் புனைவுமுறையும் மிக இயல்பாக அவர்களை அறியாமல் அவர்களுடன் இருக்கவேண்டும். ஈர்த்து உள்ளே கொண்டுபோனபின் மொழி அவர்களை விட்டு விலகிவிடவேண்டும் .

இவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதக் கதைகளை வாசிப்பவர்கள். வேறுவகைப்படைப்புகளில்கூட யதார்த்தவாத அம்சத்தைக் கண்டடைந்து ரசிப்பார்கள். இவர்கள் தொடர்ந்து வாசித்து தங்களுக்குரிய இடங்களைக் கண்டடைந்துகொண்டே இருப்பார்கள். மிகநுட்பமான வாசகர்களாக தங்களை நம்புவார்கள். ஓர் எல்லைவரை அது உண்மையும் கூட!


இன்னொருவகை வாசகர்களே செவ்வியல்தன்மைகொண்ட படைப்புகளை இன்னும் அதிகமாக நெருங்குபவர்கள். அவர்களிடம் மேலே சொன்ன வாசிப்புச்சுவை இருக்கும். கூடவே இலக்கியத்தை கொஞ்சம் விலகி நின்று பார்ப்பவர்களும் கூட. ஆகவே இலக்கியத்தின் புனைவுமொழியின் அழகை அவர்கள் தனியாகக் கவனிப்பார்கள்.  கவித்துவ உத்திகளை முழுமையாக உள்வாங்க முயல்வார்கள். மொழியின் ‘ஒழுக்கை’ விட அதன் ‘செறிவு’தான் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இவர்கள் பொதுவாக சில இயல்புகள் கொண்டிருப்பார்கள். தத்துவத்திலும் தொன்மங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மரபிலக்கிய ஆர்வம் இருக்கும். மரபிலிருக்கும் அழகிய மொழிவெளிப்பாடுகளை நினைவில்கொண்டு சொல்ல முடிபவர்கள். இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புக்கு அப்பால் செல்லும் ஒன்றாகவே எப்போதும் காண்பார்கள். ஆகவே இலக்கியத்தின் உலகியல் நுட்பம், அரசியல் கூர்மை ஆகியவற்றுக்கு மேலாக அது உருவாக்கும் பிரபஞ்ச அர்த்தம், ஆன்மீகமான எழுச்சி சார்ந்து அதிகக் கவனம் கொண்டிருப்பார்கள்.

இக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தின் அணிகள், படிமங்கள், கவிருருவகங்களில் அதிகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் ஓர் அன்றாட உண்மையை ’மானுட உண்மையாக’  அல்லது ‘பிரபஞ்ச உண்மையாக’ ஆக்கவே இந்த  கவிதைக்கருவிகளைக் கையாள்கிறது.

வெண்முரசு ஒரு முழுமையான செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்கிறது. ஆகவே அதில் எல்லாவகையான புனைவுக்கும் இடமுண்டு. அதில் குழந்தைக்கதை, சாகசக்கதை, தேவதைக்கதை என எல்லாம் இருக்கும். தொன்மங்கள், படிமங்கள் எல்லாமே  கையாளப்படும். அன்றாடவாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பும் இருக்கும்.

வெண்முரசை வாசிக்கையில் அதில் அன்றாடவாழ்க்கை சார்ந்த நுட்பமான தருணங்கள் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். எந்த ஒரு யதார்த்தவாதத் தமிழ்ப்படைப்பைவிடவும் அவை வெண்முரசில் அதிகம் என்று சொல்வேன். மனிதர்களுக்கிடையேயான மனநாடகங்கள். உறவுச்சிக்கல்கள். ஒன்றிலிருந்து ஒன்றாக விரியும் உணர்வுகளின் சிடுக்குகள்.  முழுக்கமுழுக்க என்றென்றும் வாழும் மனிதர்களின் வாழ்க்கைச்சிக்கல்களாகவே நாவல் முன்னகர்கிறது.

யதார்த்தவாதத்தின் வாசகன் கண்முன் தெரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையையே புனைவிலும் வாசிக்கமுடியும் என்ற பலவீனம் கொண்டவன் அல்ல என்றால் வெண்முரசை எளிதில் வாசிக்கமுடியும், அதன் நுட்பங்களைக் கண்டடையவும் முடியும். ஆனால் அவனுக்குத் தடையாக இருப்பது அவனை ‘ஆற்றோட்டமாக’ இழுத்துச்செல்லாத செறிவான மொழி. அந்த மொழியையும் அவன் தனியாகக் கவனித்தாகவேண்டும். அது அவனை கற்பனைவாழ்க்கையில் இயல்பகா இருக்கமுடியாது வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். அதேபோல அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும் படிமங்களும், உருவகங்களும், தொன்மங்களும்.அவையும் அவனை வெளியே இழுக்கும்.

அவை கொடுக்கும் மேலதிக அர்த்தம் அவனுடைய வாசிப்புக்குத் தேவை இல்லை. எனவே யதார்த்தவாத வாசகன் மொழிநடையை அவனை அறியாமலேயே குறைந்தபட்ச அர்த்தத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வாசிக்கப்பழகிவிட்டிருப்பான். வர்ணனைகளையும் விவரணைகளையும் ‘என்ன கதை’ என்று தெரிந்துகொள்ளத் தேவையான அளவு மட்டுமே வாசிப்பான். கவித்துவத்தை முழுமையாக விட்டுவிடுவான்.

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றின் வழியாக ஒரு யதார்த்தவாத வாசகன் மேலே சொன்ன வாசிப்பினூடாக நகர முடியும். உதாரணமாக துரோணரின் கதையில் வரும் அவரது அடிப்படையான இக்கட்டு அவனை கவரும். அவரது வாழ்க்கை வழியாக அவன் பயணிப்பான். துரோணருக்கும் கிருபிக்குமான உறவின் நுட்பங்களெல்லாம் அவனைச் சென்றடையும்.  அந்த அடையாளச்சிக்கலும் பரிதவிப்பும் இன்றும் நாம் வாழ்க்கையில் காண்பதே. ஆனால் அவர்கையில் எப்போதுமிருக்கும் தர்ப்பை அவரது துயரில் தெய்வவடிவமாக விஸ்வரூபம் எடுப்பதை அவன் தாண்டிச்சென்றுவிடுவான். அது எந்தவகையான மனஎழுச்சியையும் உருவாக்காது

வெண்முரசின் முதல் மூன்றுநாவல்களும் மேலே சொல்லப்பட்ட இருவகை வாசகர்களுக்கும் இடமுள்ளவை. நீலம் இரண்டாம் வகை வாசகனுக்கு மட்டுமே இடமுள்ளது. யதார்த்தவாதத்தின் வாசகன் அதில் வாசிக்க எதுவுமே இல்லை. இதுதான் வேறுபாடு. அதில் கதை இல்லை. கதைத்தருணங்கள் இல்லை. கவித்துவத்தளம் மட்டுமே உள்ளது. மொழிவெளிப்பாட்டின் நுட்பம் வழியாக, படிமங்கள் மற்றும் தொன்மங்கள் வழியாக, மானுடவாழ்க்கையின் சில உச்சகணங்களைத் தொடுகிறது அது. காவியத்தன்மை மட்டுமே அதில் உள்ளது.

நான் பலமுறை சொன்னதுபோல நீலம் வெண்முரசின் ஒரு தனிப்பகுதி. ஓர் இணைப்பு போல. அதற்கும் வெண்முரசின் பொதுவான கதையோட்டத்துக்கும் தொடர்பு இல்லை. வெண்முரசின் அழகியல் கட்டுமானத்துக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

நீங்களே பார்க்கலாம். வெண்முரசு வரிசையில் நீலம் அளவுக்கு எதிர்வினைகள் வேறெந்த நாவலுக்கும் வரவில்லை. சொல்லப்போனால் மிதமிஞ்சிய எதிர்வினைகள் காரணமாக நானே அதிலிருந்து வெளியேறி பிரயாகைக்குள் நுழையமமுடியாமல் இருக்கிறே--  இன்னும்கூட ஆரம்பிக்கவில்லை. நீலத்துக்கான வாசகர்கள் வேறு. அவர்கள் துரோணரின் கதையில் தர்ப்பையைத்தான் பார்த்திருப்பார்கள். கர்ணன் கதையில் சூரியன் எப்படியெல்லாம் பொருள் அளிக்கிறது என்று பார்த்திருப்பார்கள். வெண்முரசின் படிமங்களையும் மொழியாட்சியையும் அதிகம் கவனித்திருப்பார்கள்.

என்ன பிரச்சினை என்றால் இவர்கள் நான் மீண்டும் மழைப்பாடல் ,வண்ணக்கடல் பாணிக்குச் செல்லக்கூடாது என்கிறார்கள். சென்றால் வெண்முரசு கீழே இறங்கிவிட்டது என்பார்கள். அவர்களுக்கும் இதேதான் பதில். இதில் எல்லாமே உண்டு.

நீலம் வாசிப்பதற்குரிய ஆரம்பகாலத் தடை சிலருக்கு இருக்கலாம். அதன் நடை மொழிமேல் ஒரு கவனத்தை கோரியபடியே இருப்பதுதான் முதல் தடை. அதற்குரிய வழி அதை கதையாக ‘என்ன நடக்கிறது, அடுத்து என்ன?’ என்றவகையில் வாசிக்காமலிருப்பதே. அதை வரிவரியாக கவிதைபோல வாசித்தாலே போதும்.

ஜெ

Tuesday, October 8, 2013

பாலகுமாரன் நல்லவரா கெட்டவரா- ஜெயமோகனின் ஹிந்து கட்டுரையும் அன்று அவர் எழுதிய கட்டுரையும்....

ஹிந்துவில் திரு. ஜெயமோகன் அவர்களின் பேட்டி படித்தேன்...
இப்படி எழுதி இருந்தார்..

தீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே. ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான, விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.
இன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.
இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக் கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர் தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர் தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.


இதைப்படித்து அதிர்ச்சி அடைந்தேன்...

இதே கருத்தை ஒரு விவாதத்தில்  நான் சொன்னபோது அதை மறுத்து அன்று அவ்ரது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்

முன்பு கூறிய கருத்து மாறி விட்டதா... எப்படி மாறியது என புரியவில்லை..

நீங்களே பாருங்கள்

வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. - ஜெயமோகன் அன்று சொன்னது


கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல

கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்


கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல
ஜெ

Wednesday, August 28, 2013

சாருவின் இமயமலை பயணமும் ஜெயமோகனின் பரங்கிமலை பயணமும்- நிர்மலுடன் ஓர் உரையாடல்


உயிரை பணயம் வைத்து சாரு நிவேதிதாவும் அவர் அணியினரும் இமயமலை பயணம் முடித்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் இப்போதுதான் ஒரு பேரழிவை உத்தர்கண்ட்  சந்தித்த நிலையில் , இந்த பயணம் ரத்து ஆகி விடும் என்றே பலர் நினைத்தார்கள்.

ஆனால் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தது.

எழுத்தாளர் ஜெயமோகன் பரங்கிமலைக்கு ஒரு நாள் பிக்னிக் போனாலே அது குறித்து ஒன்பது நாள் கட்டுரை எழுதுவார். மலைகளின் வழியே ஆன்மீக தரிசனம் என்பது போல எழுதிக் குவிப்பார். ஆனால் இத்தனை பெரிய பயணம் மேற்கொண்டும் சாரு ஸ்பாட் ரிப்போர்ட் ஏன் கொடுக்கவில்லை என சிலர் கேட்டவண்ணம் இருந்தனர்.

சாரு எது செய்தாலும் தானும் செய்து பார்க்க முனையும் ஜெமோ தானும் இமயமலை போவதாக அறிவித்துள்ளார். கண்டிப்பாக பக்கம் பக்கமாக எழுதுவார்.

இது குறித்து நண்பர் நிர்மலிடம் உரையாடியதில் இருந்து...


*********************************************************8

 நிர்மல் :  அகப்பாடுனு தொடர் எழுதறீகளே...
அது என்ன அகப்பாடு
புரியலியே


பிச்சை:

உங்க தலைவர் ( ஹா ஹா ) புறப்பாடுனு அர்த்தம் இல்லாம ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்கார்..அவரை விட கேவலமா , ஆபாசமா  எழுதலாம்னு டிரை பண்றேன்..முடியல அகதரிசனம் எனும் அக்கப்போர்



ஒ, ஒகே
அது சரி
புறப்பாடு என்றால் இமய மலை புறப்பாடா



ஆமா,,,அவர் அங்கேயே செட்டில் ஆனா நல்லது



ம்ம்ம்


ஜெ மோ ஒரு நாள் டூர் போனா ஒம்பது நாள் எழுதுவார்


சாருவின் ப்யணம் & ஜெமோ பயணம். பின் நவீனத்துவம் & நவீனத்துவம்.
இந்த ப்யணம் எனபதை பிரதி ( Text) என வைத்தால். எப்படியிருக்கும்


பிரதியை ரசிப்பவனுக்கும், பிரதியை நோட்ஸ் எடுக்கும் மேடைப்பேச்சாளருக்கும் இருக்கும் வித்தியாசம்தான்


யெஸ்
author and writer


‘இமயமலை போய் அதன் வாழ்க்கையை வாழ்பவன் ஒரு விதம்,,அங்கும் போய் நோட்ஸ் எடுத்து ஸ்டேட்டஸ் போடுபவன் ஒரு விதம்’


yes

அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்


யெஸ்
Author is dead, in case of charu



எக்சாக்ட்லி
உதாரணமாக நீங்கள் சென்னை வந்தால் , சென்னை டிராபிக் சென்னை உணவகம் என சென்ன்னை உங்களுக்குள் நிகழவ்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்.... உங்க ஊர் வாழ்வையே இங்கு வாழ முனைந்தால் , சென்னை பய்ணமே தேவை இல்லையே


யெஸ்
இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை




சென்னை டிராபிக் கஷ்டம்தான் ..இல்லை என சொல்லவில்லை..அதற்காக ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, ஸ்டேட்டஸ் போடுவது , சென்னை வந்ததாகவே கருதப்படாது


யெஸ்
கரெக்ட்


ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்


யெஸ்


என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும்


இல்லை அனுமானங்கள்

ஆமா
ஒரு உணவை சாப்பிடும்போதே அதை ரசித்து செய்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும்... பயணத்தின்போது நோட்ஸ் எடுத்து ஸ்பாட் ரிப்போர்ட் கொடுப்பதெல்லாம் இலக்கியவாதி செய்யும் வேலை அல்ல
பயணத்தை ரசித்து உள்வாங்கி , அந்த அனுபவத்தை வாசகனுக்கு கடத்த வேண்டும் என்றால் பயணத்தை முழுமையாக செய்ய வேண்டும்’

இந்த கவிதையை பாருங்கள்..இந்த அளவு உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த எந்த அளவுக்கு தவம் செய்து இருக்க வேண்டும் என யோசியுங்கள்..அறிவு ஜீவித்தனம் ஒருக்காலும் இந்த உணர்வை அனுபவிக்க முடியாது//
எத்தனை நாட்கள் கடந்திருக்கும் என்ற
கணக்கு தப்பிவிட்டது
மறிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் 
ரூபமென பாய்ந்து சென்று கொண்டு இருக்கின்றன
பனிச்சிகரங்களில் லயமாகி நிற்கிறேன்
நிசப்தம்
வார்த்தைகள் அற்றுப்போன ஏதுமற்ற
சூன்யம்
கருந்துளைக் கணம்
புறச்சூழலின் மிதக்கும் நுரைத்தன்மையிலிருந்து
விலகிவிடத் துடிக்கிறேன்
இந்த வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும்
தள்ளிவிட்டு இதோ இங்கே மண்டியிட்டு
நிற்கிறேன் உன்னை நேசித்தபடி
இந்த கணத்தில் சுவாசமும் உறைந்து’
போகுமோ
‘சொல்
- சீரோ டிகிரி





Tuesday, May 7, 2013

பெண் வாசகிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் ஆணாதிக்கமும் - ஜெயமோகன் அறிவிப்பில் அக்கப்போர்


   சொற்சிக்கனம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் எழுத்தாளர் சுஜாதா.  தேவையில்லாத ஒரு வார்த்தைகூட அவர் எழுத்தில் இருக்காது.

  ஆனால் தினத்தாள்கள் , சம கால எழுத்துகளை பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. சொல்லப்படும் கருத்துகளில் உடன்பாடு இருக்கலாம் , இல்லாமல் போகலாம் .அது வேறு.

ஆனால் சொல்லப்படும் விதம் சுருக்கமாக நறுக் என இருக்க வேண்டும்.

கடந்த 17ம் தேதி என எழுதுகிறார்கள்.

ஏன் என்றால் வெறுமனே 17ந்தேதி என எழுதினால் , அடுத்த மாதம் வரப்போகும் 17 ஆ, சென்ற ஆண்டு ஜனவரி 17ஆ என்றெல்லாம் குழப்பம் ஏற்படும்.

ஆனால் கடந்த 2010ம் ஆண்டு பதவி ஏற்றார் என்பதில் ”கடந்த”  தேவை இல்லை.

இன்னொரு 2010 வரப்போவதில்லை. சும்மா 2010 என எழுதினாலே போதும்.

இன்று ஜெயமோகனின் வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இலக்கிய சந்திப்பு நடத்துகிறாராம். ஓகே , வாழ்த்துகள்.


பெண் வாசகிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுமாம்..  நல்லதுதான்,.

வசதி செய்து தருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பெண் வாசகி என்று சீனியர் எழுத்தாளர் ஒருவர் எழுதலாமா என்பதே என் வருத்தம்.

வாசகி என்றால் அவர் பெண் தான்..பிறகு என்ன பெண் வாசகி? ஆண் வாசகி என தமிழில் இருக்கிறதா. வாசகி என்றால் போதுமே.

சரி..இது மொழி சார்ந்த விஷ்யம்.

ஆணாதிக்க கோணத்திலும் இதை பார்க்க வேண்டும். பலரும் விஷ்யம் புரியாமல் தவறாகவே நடந்து கொள்கிறோம்.

வாசகன் ஆண் பால்.. வாசகி பெண் பால்.. சரியா?

வாசகர் என்பது பன்மை அல்லது மரியாதையாக சொல்ல பயன்படுத்தும் சொல்.

ஆனால் நடைமுறையில் , ஆண்களை வாசகர் என்றே மரியாதையாக சொல்கிறோம்.

என்னை சந்திக்க ஓர் ஆண் வாசகன் வந்தான் என யாரும் சொல்வதில்லை. வாசகர் வந்தார் என்றே சொல்கிறோம்.

பெண்களையும் வாசகர் என்றே சொல்ல வேண்டும்.  சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெண் என்பதை குறிப்பிட வேண்டுமானால் பெண் வாசகர் என்று சொல்லலாம்.

வாசகி , ஆசிரியை போன்றவை எல்லாம் மரியாதைக்குறைவான சொற்கள்..  பெண் வாசகி என்ற சொற் பிரயோகம் தவறு.

*************************************************

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக புனித பைபிளில் மறைந்து போன சில சுவிசேஷங்களின் தமிழ் வடிவை வெளியிடலாமா என கேட்டு இருந்தேன். நண்பர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

விளையாட்டாக கூட யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என வள்ளுவர் சொல்லி இருப்பார். எனவே இந்த சென்சிட்டிவ் விஷயத்தில் மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் - குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் உணர்வுகளின் அடிப்படையிலே - முடிவு எடுக்க வேண்டும்.

இதில் கிறிஸ்துவ நண்பர்கள் ஒன்றை கவனித்து முடிவெடுக்க வேண்டும்.

மறைந்து போன சுவிசேஷங்கள் என்ற விஷ்யம் குறித்து ஆங்கிலத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள்.

தமிழிலும் தருமி , சார்வாகன் போன்றோர் வலைப்பதிவுகளில் எழுதி இருப்பதாக நண்பர் இக்பால் செல்வன் சொல்லி இருந்தார்.

உண்மைதான்.

ஆனால் அவை சமூக அரசியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.  உதாரணமாக பெண் உரிமை, இயேசு வாழ்ந்த கால கட்டம் போன்றவற்றையெல்லாம் அலச முனைகிறார்கள்.

நான் விரும்புவது அதை அன்று. விமர்சனம் ஏதும் இன்றி, என் விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி ,  உள்ளதை உள்ளபடி அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என விரும்பிகிறேன். அதன் மூலம் இயேசு நாதரை இன்னும் அணுக்கமாக உணர முடியும் என நினைக்கிறேன்.

யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள். உங்கள் முடிவே இறுதியானது.

அதே போல தருமி போன்ற விஷ்யம் தெரிந்தவர்களுடன் ஆரோக்கிமான விவாதத்துக்கும் வழி வகுக்கும் என கருதுகிறேன்.

*****************************************

புனித குர் ஆன் குறித்து நிறைய எழுதலாமே . அது அள்ள அள்ள குறையாத செல்வமாயிற்றே என சகோதரர் அப்துல் ஜபார் சொல்லி இருந்தார்.

உண்மைதான். வெறும் வம்புக்கும் , பொழுது போக்குக்குமாக மட்டும் இணையம் பயன்படுவது தவறு. நல்ல விஷ்யங்களை பேசினால்தான் , விவாதித்தால்தான் ஓர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

   குர் ஆன் குறித்து பலர் எழுதுகிறார்கள். அதை எல்லாம் ஒரு மாணவன் போல ஆழ்ந்து படித்து வருகிறேன். சில இஸ்லாமிய இணைய குழுமங்களில் இதற்காக சேர்ந்து இருக்கிறேன்.

       இணையம் மட்டும் அன்றி அனைத்து மீடியாக்கள் மீது எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு.

பல இஸ்லாமிய தலைவர்கள் , ஞானிகள் குறித்து போதிய தகவல்கள் பகிரப்படவில்லை.

இஸ்லாமிய ஞானிகளை ஒரு சிலர் கடவுள் போல போற்றுவதால் , அவர்களைப்பற்றி பேச இஸ்லாமியர்களும் விரும்புவதில்லை.பிறகு யார்தான் அவர்களைப் பற்றி பேசுவது , எழுதுவது.

ஓர் இஸ்லாமிய மகான் குறித்து அடுத்து எழுதுகிறேன். அவர் சொற்பொழிவுகள், கருத்துகளை பாருங்கள். கொஞ்சம் கூட இஸ்லாமிய கருத்துகளுக்கு விரோதமாக இருக்காது.

சிலர் அவரை கடவுளாக போற்றுவது , அவர்கள் மன நிலையே தவிர அந்த மகானின் நிலை அல்ல.

பொறுத்து இருந்து பாருங்கள்.

*****************************************************



Saturday, October 27, 2012

ராசலீலா படிப்பதாக ஜெயமோகனின் தளபதி உறுதிமொழி- ருசிகர சந்திப்பு அனுபவம்


கிளுகிளுப்பாக எழுதுவது , இரட்டை அர்த்த தலைப்புகள் வைப்பது , சீரியசான விஷ்யங்களை தவிர்ப்பது , டீக்கடை அரட்டைக்கு உரித்தான டாப்பிக்குகளை எடுத்து கொள்ளுதல் , வம்புச்சண்டை , அவதூறு போன்றவை எதுவும் இல்லாமல் பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.  தற்காலிக சுவாரஸ்யங்களுக்கோ , பரபரப்புக்காகவோ இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய வகையில் எழுதுபவர்கள் இன்னும் வெகு சிலரே..

இந்த சிலரில் முக்கியமானவர் திரு கோபி ( http://ramamoorthygopi.blogspot.in  )

இலக்கியம் , ஆன்மீகம் , சினிமா , பயணங்கள் , வாழ்வியல் அனுபவங்கள் என ரசித்து எழுதுபவர். ரசிக்கும் வகையில் எழுதுபவர்.  தனது இனிமையான கால கட்டங்களை மட்டும் அல்ல , தனது கஷ்டமான கால கட்டங்களையும் மறைக்காமல் எழுதுபவர்.

என் பதிவுகளில் , என்னை திட்டி வரும் பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிடுவது என் வழக்கம் . அப்படி ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தேன்.

கோபியிடம் இருந்து கால் வந்தது. அந்த குறிப்பிட்ட பின்னூட்டம் இன்னொரு பதிவரை இழிவு செய்வது போல இருக்கிறது. தயவு செய்து அதை நீக்கி விடுங்கள் என மிகவும் மென்மையாக கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஒரு பின்னூட்டத்க்துக்காக இவ்வளவு அக்கறை எடுத்து எஸ் டி டீ போட்டு பேசிகிறாரே.. அதுவும் இன்னொருவர் சம்பந்தப்பட்ட விஷயத்துக்காக.

அந்த பின்னூட்டத்தை கவன குறைவால் அனுமதித்து இருந்தேன். யாரேனும் பார்த்தால் என்னையும் தவறாக நினைக்க கூடும். கோபியின் அக்கறைக்கு மதிப்பளித்து உடனடியாக அந்த பின்னூட்டத்தை நீக்கினேன்.

இப்படி அவர் மீதான மரியாதை அதிகரிக்க பல சம்பவங்களை சொல்லலாம். ஒரு முறை , ஒரு புத்தக கண்காட்சியில் சில நொடிகள் சந்தித்து இருக்கிறோம். அதன் பின் சந்திக்க முடியவில்லை.

இதற்கிடையே எழுத்தாளர் ஜெயமோகனின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். ஜெயமோகன் வாசகர் சந்திப்புகளில் கோபியின் கட்டுரை விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கிய பிரமுகராக மாறினார்.

அதன் பின் ஏனோ தெரியவில்லை , அவர் சென்னை வந்தாலும் என்னை தொடர்பு கொள்வதும் இல்லை , சந்திப்பதும் இல்லை. சென்னை வந்து விட்டு சென்றதே , அவர் பதிவுகளை படித்துதான் எனக்கு தெரிய வரும் .

இந்த நிலையில் அவர் வெளினாடு சென்று விட்டார். இனி சந்திக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால் இனிய திருப்பமாக, நேற்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வெளி நாட்டில் இருந்து , விடுமுறைக்காக ஊருக்கு சென்னை வழியாக செல்கிறார்.  எனவே சென்னையில் சந்திக்க முடிந்தது.

வெகு நாள் கழித்து சந்தித்தாலும், வெகு நாள் நண்பர் போல அதிரடியாக பேச ஆரம்பித்தார். எனவே என்னாலும் இயல்பாக பேச முடிந்தது.  நன்றாக இருக்கிறீர்களா, ஊரில் மழையா, மாடு கன்று போட்டதா என்றெல்லாம் பேசி , பல்ஸ் பார்த்து விட்டுத்தான் நம் மக்கள் விஷ்யத்துக்கு வருவார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் நேரடியாக பேச்சை ஆரம்பித்ததால் பல விஷ்யங்கள் பேச முடிந்தது.

சாருவை அளவுக்கு அதிகமாக நான் புகழ்வதாக சொன்னார். சாருவை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. அளவுக்கு குறைவாகத்தான் பாராட்டுகிறேன் என சொல்லி அதற்கு காரணங்க்ளையும் விளக்கினேன். ராசலீலா படித்தால்  , அவரும் சாரு வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் என சொன்னேன். ஊருக்கு போகும்போது கண்டிப்பாக ராசலீலா எடுத்து போய் படிப்பதாக சொல்லி இருக்கிறார்.

இலக்கியம் , உலக அரசியல் , இந்தியா , வேலை என பல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு முறை என நண்பன் ஒருவனை , சென்னையில் இருந்து டில்லி செல்ல , வழியனுப்ப விமான நிலையம் சென்று இருந்தேன்.  நேரம் இருந்ததால் , வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் . பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதை கவனிக்கவில்லை. திடீரென நேரம் பார்த்தபோது , தாமதமாகி விட்டது. செல்ல வேண்டிய விமானத்தில் ஏற முடியவில்லை. அது பறந்து செல்வதை சோகத்துடன் பார்த்தோம்.

அதேபோல ,  நேற்றும்  ரயிலை தவற விட்டு இருப்போம். நல்ல வேளையாக கடைசி நேரத்தில் கவனித்து , கிளம்பி நகரத்தொடங்கிவிட்ட ரயிலில் பாய்ந்து ஏறி டாட்டா காட்டினார்.

அவர் காரசாரமாக பேசினாலும் , கடைசியில் ஸ்வீட் கொடுத்ததால் , இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா