Tuesday, November 19, 2013

எலும்புகூடு, கொலை ,பேய் - தவறவிடக்கூடாத தமிழ் திரைப்படம்


சில படங்களை பார்க்க வெகு நாளாக ஆசையாக இருக்கும். கடைசியில் ஒரு நாள் பார்த்து மகிழ்வோம். அந்த அளவுக்கு பிரபலமான படமாக இருக்கும்.

ஆனால் ஒரு விரல் ( 1965 ) என்ற படத்தை பற்றி வெகு சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன்.  எம் ஜி ஆர் , சிவாஜி போன்ற பெரிய நடிகர்களோ , பெரிய இயக்குனர்களோ இல்லாமல் இருந்தும்கூட ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என படம் பார்த்தேன். எதிர்பாராத இன்ப ஆச்சர்யத்தை கொடுத்து விட்டது படம்.

படம் ஆரம்பமே அசத்தி விட்டது. ஆரம்பத்திலேயே ஒரு மரணம்  , எலும்புக்கூடு என பிக் அப் ஆகி பயணத்தை தொடங்கி விட்டது படம். புதிய படம்போன்ற ஒளிப்பதிவு.
மருத்துவரின் அறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து செல்லும் அழகு, உரையாடலை நிழலில் இருந்து துவக்கும் நேர்த்தி , இருளின்  வீர்யம் என கலக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி ஜே சேகர்.

பணக்காரர் ஒருவர் இறந்து விடுகிறார். அவரது இரு மகன்களும் அலறி அடித்துக்கொண்டு தந்தையின் எஸ்டேட்டுக்கு வருகிறார்கள். அவர்களது தோழனும் துப்பறியும் ஆர்வத்தில் வருகிறான். மூவரும் இன்னோர் ஊரில் படித்து கொண்டு இருப்பவர்கள்.

அண்ணன் சற்று பொறுப்பில்லாதவன். ரேஸ் , ஆடம்பரம் என இருக்கிறான். தம்பி பொறுப்பானவன். கணக்கு வழக்குகளை சோதிக்கையில் மேனேஜர் ஏதோ ஃபிராடு செய்வதை கண்டு பிடிக்கிறான். மேனேஜருக்கு உதவியாக தேங்காய் சீனிவாசனை நியமிக்கிறான்.

தந்தை இறப்பதற்கு முதல் நாள் , ஒரு பெண்ணுடன் பிரச்சனை ஏற்பட்டு , அதனால் அவள் அண்ணன் அவரை கொல்லப்போவதாக மிரட்டியது தெரிய வருகிறது. எனவே அது கொலையாக இருக்கலாமோ என தம்பியும் அவன் தோழனும் கண்டு பிடிக்க முனைகிறார்கள்.
அந்த தோழன் , குடும்ப மருத்துவரின் மகளுடன் காதலில் வீழ்கிறான். அது மருத்துவருக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையே எஸ்டேட்டில் பேய் இருப்பதாக ஒரு பேச்சு கிளம்புகிறது. சில ஆதாரங்களும் கிடைக்கின்றன. எலும்புக்கூட்டின் விரல் ஒன்று கிடைக்கிறது.

துப்பறியும் பணியில் ஈடுபடும் அந்த தோழன் ஒரு கட்டத்தில் பேயைப்பார்த்து அந்த அதிர்ச்சியில் இறந்து விடுகிறான்.

அது பேயல்ல,,,தன் தந்தைதான் அவனை கொன்று விட்டார் என எண்ணும் மருத்துவரின் மகள் உண்மையை கண்டறிய முனைகிறாள்.

அந்த மேனேஜர் பணத்தை சுருட்ட திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்.

அந்த பேயை கண்டு பிடிக்கும் முயற்சியில் , அது பேயல்ல , யாரோ ஒருவர்தான் இதை எல்லாம் செய்கிறார் என்பதை மருத்துவரின் பெண் கண்டு பிடிக்கிறாள்... ஆனால் அந்த மர்ம உருவம் அவளை கொன்று விடுகிறது.

இதற்கெல்லாம் யார் காரணம், தந்தையை கொன்றது யார்.. ஏன் என்பதெல்லாம் கிளமேக்சில் தெரியும்போது அட என வியந்து போகிறோம்.

அந்த அளவுக்கு லாஜிக்கான இயல்பான  எதிர்பாராத கிளைமேக்ஸ்.

ஒரு நல்ல சஸ்பென்ஸ் படம் என்றால் , கிளெமேக்சில் புதிதாக ஏதாவது கேரக்டரை கொண்டு வந்து படத்தை முடிக்க கூடாது. ஏற்கனவே இருக்கும் கேரக்டர்களை வைத்து , ஏற்கனவே வந்த சம்பவங்களின் கன்சிஸ்டென்சி பாதிக்கப்படாமல் மர்மத்தை விடுவிக்க வேண்டும். அதை கச்சிதமாக செய்கிறது படம்.

இசை வேதா.  நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் உட்பட பக ஹிட் பாடல்களை கொடுத்த இவர், இந்த படத்திலும் அருமையான பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

சமாதியை தேடிச்செல்லுதல் , எலும்புக்கூடு பேசுவது போன்றவற்றில் பின்னணி இசை மிரட்டுகிறது.

ஒரு விரல் கிருஷ்ணராவ் என பிற்காலத்தில் புகழ்பெற்ற காமெடி நடிகர் இதில்தான் அறிமுகம் ஆனார். தேங்காய் சீனிவாசனுக்கும் இதுவே முதல் படம், முதல் படத்திலேயே காமெடி கலந்து கலக்கி இருக்கிறார். அவர் ஒரு ரகசிய போலீஸ் என்பது சுவையான ஒரு ட்விஸ்ட்

மலேசியா ராதிகா  மற்றும் திலகா ஆகியோர் நாயகிகளாக அழகாக வருகிறார்கள்.. எதிர்பாராத ட்ரீட்டாக ஒரு கவ்ர்ச்சி காட்சி,, வாவ்...
ஒரு ஸ்டைலான நடனக்காட்சி..பாடல் இல்லாமல் இசை மட்டும்.. அதுவும் லல்வி.  ஒரேயடியாக மூடி வைக்காமலும் , ஒரேயடியாக ஓப்பனாக இல்லாமலும் அளவோடு இருக்கும் கவர்ச்சி சூப்பராக இருக்கிறது. 1965ல் இது கொஞ்சம் ஓவர்தான் என நினைக்கிறேன்.
அந்த மேனேஜர் ரோலில் வருபவர் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்பட்ட கண்ணன். மற்றும் பண்டரினாத் , மீனாகுமாரி, பிரேம் ஆனந்த் ஆகியோர் கச்சிதமாக தம் பணியை செய்து இருக்கிறார்கள்.
பாடல்கள் ஆலங்குடி சோமு, இயக்கம் சி எம் வீ ராமன்.  இயக்கம் மேற்பார்வை பீ எஸ் மூர்த்தி. தயாரிப்பு சல்வந்தர் பெர்னாண்டஸ் .

அந்த கால படம் என்றாலும் ஆங்கில படம் போல 120 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. ரீமேக் செய்யாமல் , கலரில் மாற்றி வெளியிட்டால் , புதுப்படம் போலவே இருக்கும்.

அந்த காலத்தில் இதி மிகப்பெரிய ஹிட் ஆன படம் ..ஆனாலும் இது போன்ற படங்கள் அதன் பின் ஏனோ அதிகம் வரவில்லை..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - ஒரு விரல் 15 comments:

 1. நண்பரே,
  தயவு செய்து இந்தப் படத்தின் லிங்க் அல்லது டி விடி யை (கிடைக்கிறதா அப்படியானால் எங்கு என்று) எனக்கு தெரியப்படுத்தவும். உங்கள் மீது சற்று பொறாமையாக இருக்கிறது. இவ்வாறான படங்களை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். அகப்படமாட்டேன்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்..உங்களை தனி மெயிலில் தொடர்பு கொள்கிறேன்

   Delete
  2. dear sir,
   please send the link to me also.

   Thanks,
   Arun

   Delete
  3. Dear Sir,
   Pls sent sent the link to me

   Delete
  4. Dear Sir,
   Pls sent me the link to me. I am very much interest thrill movies and Detective movies.Kindly update.

   Delete
 2. pls post the link i am searching this movie so long brother

  ReplyDelete
 3. பலமுறை பார்த்து பயந்ததுண்டு...!

  ReplyDelete
 4. நண்பரே,
  தயவு செய்து இந்தப் படத்தின் லிங்க் அல்லது டி விடி யை (கிடைக்கிறதா அப்படியானால் எங்கு என்று) எனக்கு தெரியப்படுத்தவும். உங்கள் மீது சற்று பொறாமையாக இருக்கிறது. இவ்வாறான படங்களை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். அகப்படமாட்டேன்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
  --------- Sir, For me also please...........


  ReplyDelete
 5. பிச்சை சார், உங்க blogs படிச்சிட்டு இத்தனை பேர் படத்தோட லிங்க் குடுப்பீங்கனு ஏங்கி கிடக்கிறோம்... இப்படி ஏமாத்தலாமா? :-)

  ஒவ்வொரு படம் பத்தி படிக்கும போதும், அதைப் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டுட்டு, லிங்க் கொடுக்காமல் escape ஆகரீங்கலே ?? :-(((

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அப்லோட் செய்யப்படும் .. :)

   Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா