Wednesday, May 28, 2014

சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிறப்பான சிலிர்ப்பான சோவியத் நாவல்

சோவியத் இலக்கிய ரசிகர்களால் மறக்க முடியாத பெயர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்..   டால்ஸ்டாய் , தாஸ்தயேவ்ஸ்கி போன்ற ரஷ்ய மேதைகளுக்கு மத்தியில் ரஷ்யாவை சேராத ஐத்மாத்தவ் தனக்கென தனி ரசிகர்களை பெற்று இருந்தார்.. இவரது அன்னை வயல் , ஜமீலா , முதல் ஆசிரியர், குல்சாரி என மறக்க முடியாத படைப்புகளை தந்துள்ளார்.

இயக்குனர் பொன்வண்ணன் இவரது தீவிர ரசிகராவார்.. எனவேதான் தன் படங்களுக்கு அன்னை வயல் , ஜமீலா என்றெல்லாம் பெயர் வைத்தார்..

ஐத்மாத்தாவ் கிர்கிஸ்தான் என்ற குடியரசை சேர்ந்தவர்.. மத்திய ஆசிய பகுதியை இவர் எழுத்து பிரதிபலிப்பதால் நம்மால் கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைய முடியும்.

ஒரு லாரி டிரைவரின் கதை என்ற நாவலும் இவரது முக்கியப்படைப்புகளில் ஒன்று..

ஒரு லாரி டிரைவர்.. தன் பணியிலும் உச்ச கட்ட ஆர்வம் கொண்டவன்.. காதலிலும் உச்சம் தொடுபவன்.. இந்த அதீத தன்மை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதே நாவல்..

இவனது எதிர்துருவமாக இவன் காதலி / மனைவி.. அழுத்தமானவள்...துணிச்சலானவள்..

பிரிவை அவன் எப்படி எதிர்கொள்கிறான்.. அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பது மிக நேர்த்தியாக சொல்லப்படுகிறது..

இந்த நாவலை வெயில் உச்சத்தில் இருக்கும் ஒரு மதிய வேளையில் படித்தேன்.. குளிர்காற்றும் , பனி பாறைகளும் , புற்களும் , மழையும் என்னை வேறொரு உலகத்துக்கே எடுத்து சென்று விட்டன.. படித்து முடித்த பின்பே வெயிலை உணர்ந்தேன்..

ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறான்.. லாரி ஓட்டுனராக திறமையாக பணியாற்றுகிறான்.. பழுதாகி நிற்கும் லாரியை அபாயகரமான மலைச்சரிவுக்ளில் தன் லாரி  மூலம் இழுத்து சென்று ஒருவனுக்கு உதவுகிறான்.. இதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையால் லாரி ஓட்டுவதில் சில தவறுகள் செய்து மேலதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்கிறான்..

இந்த சோகத்தில் இன்னொரு பெண்ணிடம் உறவு ஏற்பட , மனைவி அவனை வீட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு பிரிகிறாள்..

சில மாதங்கள் செல்கின்றன... ஒரு விபத்தில் சிக்குகிறான்.. முன்பு உதவினானே. அந்த ஆள் இவனை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு அதிர்ச்சி.. அவன் மனைவி , அந்த ஆளின் மனைவியாக அந்த வீட்டில் இருக்கிறாள்.. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் , தெரிந்தவர்களாக காட்டிகொள்ளவில்லை... தன் மகன் தன்னை மாமா என்று அன்பாக அழைக்கும் அபத்தத்தை சந்திக்கிறான்..

அவள் இவனுடன் மீண்டும் வாழ விரும்பவில்லை என்பதை அறிந்து , அதே காதலுடன் அவள் வாழ்க்கையில் வெளியேறுகிறான் என கதை பொயட்டிக்காக முடிகிறது..

அந்த ஆளுக்கு இவன் முன்னாள் கணவன் என்பது தெரியும் என்பது நமக்கு கடைசியில் தெரிவது கதைக்கு புதிய அழுத்தம் தருகிறது..   அந்த ஆள் அவளையும் அவள் மகனையும் உயிராக நேசிக்கிறான்.. ஆனால் அவள் பிரிய முடிவெடுத்தால் , அதை ஏற்க மனதளவில் ஆயத்தமாக இருக்கிறான்..

இப்படி சம்பதப்பட்ட மூவரும் பெருந்தன்மையில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். ஆனால் வாழ்க்கை தன் போக்கில் செல்கிறது..


ஓ ஏரியே.. உன் நீல நிற தண்ணீரையும் , அழகிய கரையையும் என்னுடன் எடுத்து செல்ல விரும்புகிறேன்.. ஆனால் என் காதலியை எப்படி எடுத்து செல்ல முடியாதோ அதே போல உன்னையும் எடுத்து செல்ல முடியாது.  அவள் மகிழ்ச்சியாக வாழட்டும் என அவன் சோகத்துடன் வெளியேறுவது , தேசம் மொழி காலம் கடந்து நம்மை உருக்குகிறது..

மொழி பெயர்ப்பு தா பாண்டியன்..  மிக சிறப்பான நடை..

ஒரு லாரி டிரைவரின் கதை- ஒரு உன்னதமான கதை2 comments:

 1. இவரின் ஜமீலா படித்திருக்கிறேன். ஆர்ப்பாட்டமில்லாத மனதை சுண்டிச் செல்லும் கதை அது. கண்டிப்பாக இந்தக் கதையையும் படித்துவிடுவேன் என்று எனக்குள் ஒரு தீர்மானமே செய்துகொண்டு விட்டேன்.

  ருஷ்ய இலக்கியங்களின் அழகை விவரிக்க ஒரு புதிய அகராதி தேவைப்படும். ருஷ்ய எழுத்துகளின் உள்ளே இருப்பது வெறும் மை அல்ல. ஆன்மா என்பது என் எண்ணம். இசைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கும் ருஷ்ய கதைகளைப் பற்றிய சிறிய கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன் என் தளத்தில்.

  நல்ல பதிவு. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா படிங்க..உங்க கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல்

   Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா