Showing posts with label சோவியத் யூனியன். Show all posts
Showing posts with label சோவியத் யூனியன். Show all posts

Tuesday, December 25, 2018

குழந்தைகளை கனவு காண விடுங்கள் - சோவியத் எழுத்தாளர் பேட்டி

சோவியத் யூனியன் உலக இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மகத்தானது... ஆனால் சோவியத் யூனியன் மறைவுக்குப் பின் அதன் இலக்கியவாதிகள் பலரை நம் சூழலில் பேசுவதில்லை.. இது வருந்தத்தக்கது...

உலக இலக்கிய சூழலில் இவர்களைப் பேசினாலும் தமிழிலும் பேச வேண்டியது அவசியம்..

எழுத்தாளர் வலண்ட்டின் கிரிகோரியேவிச் ரஸ்புடின் அந்த காலத்தில் வழங்கிய பேட்டி ஒன்று... பேட்டி எடுத்தவர். அலக்சாண்டர் அஃபனஸ்யேவ்

தமிழாக்கம் - பிச்சைக்காரன்

----------------------------------------------

ர்ஸ்புட்டீன் : குழந்தைகள் அவர்களுக்கு உரிய குழந்தைக்கதைகளால் சூழ்ந்திருக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.. அவர்களை ஆன்மாவை பாதுகாக்கவும் வளர்க்கவும் இந்த கதைகள் அவசியம். ”உலக அறிவு ” என்று உரிய வயதுக்கு முன்பே தேவையற்றதை மூளையில் திணித்து பிஞ்சில் பழுத்து வெம்பிப்போவது நல்லதன்று’

பேட்டியாளர் - உலக ஞானம் என்பதில் என்ன தவ்று கிரிகோரியேவிச். உலகத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தையின் வாழ்க்கையும் அந்த குழ்ந்தை எடுக்கும் முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே

ர  -இப்படி நினைப்பதில் மிகப்பெரிய பிழை இருக்கிறது... இந்த சிந்தனையை நான் மறுக்கிறேன்.  உலகம் , அதன் கொடுமைகள் , தீமைகள் , நன்மை , மனித பிறவியின் நோக்கம் என அனைத்தும் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பெற்றோர்கள் சின்ன வயதில் இருந்தே குழந்தைகள் மூளையில் பாடங்களை திணிக்கிறார்கள்.. இவற்றால் பயனேதும் இல்லை.. இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள ஒரு வாழ் நாள் முழுக்க தேவைப்படும். குழ்ந்தைப்பருவத்துக்குரிய கற்பனைகள் , கனவுகள் போன்றவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.. இன்றைய சூழலில் குழ்ந்தைக் கதைகளுக்கு இடமே கொடுப்பதில்லை


குழந்தைகள் கதைகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்.. நல்லதுதான்.. ஆனால் இப்படி வளரும் குழந்தைகள் உலகை எதிர்கொள்ள தேவையான மனப்பக்குவத்தை பெற்றிருக்குமா?


ர- உண்மையான குழந்தைக்கதை என்றால் அதில் எல்லாமே இருக்கும்..  புத்திகூர்மை , தாய்ப்பற்று , தேச பக்தி , நன்மை தீமைக்கான போராட்டம் , நன்மை வெல்வதன் அவசியம் என எல்லாமே இருக்கும். குழந்தைக்கதைகள் பொழுது போக்கி மகிழ்வூடுதல்ல... இவை கற்பிக்கின்றன... மரியா ரோடியோவ்னா என்று ஒரு கதை சொல்லும் பெண் கிடைத்திரா விட்டால் புஷ்கின் என்றொரு மாபெரும் கவிஞன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

 நெறிகளை விழுமியங்களை சொல்லித்தர வேண்டாமா

நன்மை எது தீமை எது என அனைவருக்கும் தெரியும்.. சொல்லித்தர வேண்டிய இல்லை... எழுத்தாளன் என்பவன் சமூகத்தை கண்காணிக்கும் போலிஸ்காரன் அல்லன்


( சம காலப்பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல் எழுத்தாளன் விலகி இருக்க வேண்டுமா...     ஆன்மிக வெற்றியும் உலகியல் வெற்றியும் ஒன்றாக அடையக்கூடியதா... எதை இலக்க்கியம் முன் வைக்க வேண்டும்... அடுத்த பதிவில் பார்ப்போம்)

- தொடரும்


Wednesday, May 28, 2014

சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிறப்பான சிலிர்ப்பான சோவியத் நாவல்

சோவியத் இலக்கிய ரசிகர்களால் மறக்க முடியாத பெயர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்..   டால்ஸ்டாய் , தாஸ்தயேவ்ஸ்கி போன்ற ரஷ்ய மேதைகளுக்கு மத்தியில் ரஷ்யாவை சேராத ஐத்மாத்தவ் தனக்கென தனி ரசிகர்களை பெற்று இருந்தார்.. இவரது அன்னை வயல் , ஜமீலா , முதல் ஆசிரியர், குல்சாரி என மறக்க முடியாத படைப்புகளை தந்துள்ளார்.

இயக்குனர் பொன்வண்ணன் இவரது தீவிர ரசிகராவார்.. எனவேதான் தன் படங்களுக்கு அன்னை வயல் , ஜமீலா என்றெல்லாம் பெயர் வைத்தார்..

ஐத்மாத்தாவ் கிர்கிஸ்தான் என்ற குடியரசை சேர்ந்தவர்.. மத்திய ஆசிய பகுதியை இவர் எழுத்து பிரதிபலிப்பதால் நம்மால் கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைய முடியும்.

ஒரு லாரி டிரைவரின் கதை என்ற நாவலும் இவரது முக்கியப்படைப்புகளில் ஒன்று..

ஒரு லாரி டிரைவர்.. தன் பணியிலும் உச்ச கட்ட ஆர்வம் கொண்டவன்.. காதலிலும் உச்சம் தொடுபவன்.. இந்த அதீத தன்மை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதே நாவல்..

இவனது எதிர்துருவமாக இவன் காதலி / மனைவி.. அழுத்தமானவள்...துணிச்சலானவள்..

பிரிவை அவன் எப்படி எதிர்கொள்கிறான்.. அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பது மிக நேர்த்தியாக சொல்லப்படுகிறது..

இந்த நாவலை வெயில் உச்சத்தில் இருக்கும் ஒரு மதிய வேளையில் படித்தேன்.. குளிர்காற்றும் , பனி பாறைகளும் , புற்களும் , மழையும் என்னை வேறொரு உலகத்துக்கே எடுத்து சென்று விட்டன.. படித்து முடித்த பின்பே வெயிலை உணர்ந்தேன்..

ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறான்.. லாரி ஓட்டுனராக திறமையாக பணியாற்றுகிறான்.. பழுதாகி நிற்கும் லாரியை அபாயகரமான மலைச்சரிவுக்ளில் தன் லாரி  மூலம் இழுத்து சென்று ஒருவனுக்கு உதவுகிறான்.. இதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையால் லாரி ஓட்டுவதில் சில தவறுகள் செய்து மேலதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்கிறான்..

இந்த சோகத்தில் இன்னொரு பெண்ணிடம் உறவு ஏற்பட , மனைவி அவனை வீட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு பிரிகிறாள்..

சில மாதங்கள் செல்கின்றன... ஒரு விபத்தில் சிக்குகிறான்.. முன்பு உதவினானே. அந்த ஆள் இவனை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு அதிர்ச்சி.. அவன் மனைவி , அந்த ஆளின் மனைவியாக அந்த வீட்டில் இருக்கிறாள்.. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் , தெரிந்தவர்களாக காட்டிகொள்ளவில்லை... தன் மகன் தன்னை மாமா என்று அன்பாக அழைக்கும் அபத்தத்தை சந்திக்கிறான்..

அவள் இவனுடன் மீண்டும் வாழ விரும்பவில்லை என்பதை அறிந்து , அதே காதலுடன் அவள் வாழ்க்கையில் வெளியேறுகிறான் என கதை பொயட்டிக்காக முடிகிறது..

அந்த ஆளுக்கு இவன் முன்னாள் கணவன் என்பது தெரியும் என்பது நமக்கு கடைசியில் தெரிவது கதைக்கு புதிய அழுத்தம் தருகிறது..   அந்த ஆள் அவளையும் அவள் மகனையும் உயிராக நேசிக்கிறான்.. ஆனால் அவள் பிரிய முடிவெடுத்தால் , அதை ஏற்க மனதளவில் ஆயத்தமாக இருக்கிறான்..

இப்படி சம்பதப்பட்ட மூவரும் பெருந்தன்மையில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். ஆனால் வாழ்க்கை தன் போக்கில் செல்கிறது..


ஓ ஏரியே.. உன் நீல நிற தண்ணீரையும் , அழகிய கரையையும் என்னுடன் எடுத்து செல்ல விரும்புகிறேன்.. ஆனால் என் காதலியை எப்படி எடுத்து செல்ல முடியாதோ அதே போல உன்னையும் எடுத்து செல்ல முடியாது.  அவள் மகிழ்ச்சியாக வாழட்டும் என அவன் சோகத்துடன் வெளியேறுவது , தேசம் மொழி காலம் கடந்து நம்மை உருக்குகிறது..

மொழி பெயர்ப்பு தா பாண்டியன்..  மிக சிறப்பான நடை..

ஒரு லாரி டிரைவரின் கதை- ஒரு உன்னதமான கதை



Tuesday, May 27, 2014

துரோகங்களால் வீழ்ந்த டிராட்ஸ்கி - வைகோவின் அழகான சொற்சித்திரம்

ரஷ்ய புரட்சியின் சிற்பி டிராட்ஸ்கி குறித்து வைகோ சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.. அவை உங்கள் பார்வைக்கு..

***********************************************************

இந்த நாட்களில்தான் மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத மனிதராக நான் கருதுகிற லியான் டிராட்ஸ்கியின் சுயசரிதையான ‘என் வாழ்க்கை’ எனும் அற்புதமான நூலைத் திரும்பவும் படித்துக் கொண்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளாக என் இல்ல நூலகத்தை அழகு செய்யும் அற்புதமான உன்னதமான நூல் இது.

“மாகாளி கடைக்கண் வைத்தாள்... ஆகா என்று எழுந்தது யுகப் புரட்சி” என எரிமலைக் கவிஞன் பாரதி பாடிய சோவியத் ருஷ்யப் புரட்சியை முன்னின்று நடத்திய வர்கள் இருவர். ஒருவர் மாமேதை லெனின், இன்னொருவர் புரட்சியின் கதாநாயகன் லியான் டிராட்ஸ்கி. 

கொள்கைப் புரட்டர்களாலும், எதிர்ப்புரட்சியாளர்களாலும் புரட்சியின் அறுவடையை அனுப வித்தபின், உண்மைப் போராளி களுக்குத் துரோகம் செய்து, தலைமைப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டவர்களாலும் விவரிக்க இயலாத துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கியவர் டிராட்ஸ்கி. 

பல ஆண்டுகளாக டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘திரிபுவாதம்’ என்றும், டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘துரோகத்தனம்’ என்றும் கம்யூனி ஸ்ட்கள் விமர்சித்து வந்தார்கள்.

மாமேதை லெனினின் இறுதி நாள்களில், அவரது மனதில் ஆறாத இரணத்தை ஏற்படுத்தியவர் ஜோசப்ஸ்டாலின். இதை லெனின் துணைவியாரான ‘குரூப்கயா’ ஆதாரத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

யூத குலத்திலே பிறந்த லியான் டிராட்ஸ்கி எழுதிய ‘என் வாழ்க்கை’ என்ற நூலில் இருந்து, அரசியலைப் போராட்டக் களமாக்கிக் கொண்ட வர்கள் பல படிப்பினைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய வித்தகரான டிராட்ஸ்கி இணை யற்ற எழுத்தாளர். புரட்சியின் படைக்கலன்களான ஏடுகள் பல வற்றின் ஆசிரியராகத் திகழ்ந்தவர்.

அகிலத்தின் ‘நிரந்தரப் புரட்சி’ என்ற சித்தாந்தத்தை உருவாக்கி ஆயுதப் புரட்சியில் களத்தில் நின்று ஆயுதம் ஏந்திப் போராடியவர்.

உலகமே திகைக்கும் விதத்தில் 1917 க்குப்பின் பிரமிக்கத்தக்க இராணுவத்தை இரஷ்யாவில் ஒரே ஆண்டில் கட்டி எழுப்பிய இராணுவ மேதை.

எதிரி நாடுகளின் படையெடுப்பை முறியடித்து உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகளுக்கு வெற்றி தந்தவர். நிகரற்ற சொல்வன்மை மிக்க மேடைப் பேச்சாளர். ‘ஸ்டாலினிஸம்’ என்ற எதேச் சதிகாரத் தன்மையை, கொள்கையற்ற பொய்மையை உலகத்திற்கு அம்பலப்படுத்தியவர். 

மாமேதை லெனின் திடீரெனப் பக்க வாத்தால் நடமாடும் சக்தியையும் பேசும் திறனையும் இழந்த துயரத்தை, டிராட்ஸ்கியின் காது களுக்கு மூன்று நாட்கள் வரை சேர விடாமல் தடுத்தனர். லெனின் உடல் நலம் ஓரளவிற்குத் தேறி பேசவும் நடக்கவும் மீண்டும் திறன் பெற்றதற்குப் பின்னரும் திரை மறைவுத் துரோகச் செயல்கள் தொடர்ந்தன.

லெனின் உயிர் நீத்த நாளில் ரஷ்ய நாட்டின் வேறொரு பகுதியில் இருந்த டிராட்ஸ்கியிடம், ‘உடனடி யாக லெனின் அடக்கம் செய்யப் பட்டு விடுவார் எனறும், அவரது ஈமச் சடங்குகளுக்கு முன்னர் வர ட்ராட்Þகிக்கு வாய்ப்பு இல்லை’ என்றும் தகவல் தரப்பட்டது. 

ஆனால், மூன்று நாட்களுக்குப் பின்னர்தான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, பதனப்படுத்தப் பட்ட பெட்டியில் சடலம் வைக்கப் பட்டது.

உண்மைகளை உரக்கப் பேசிய தால் டிராட்Þகி நாடு கடத்தப் பட்டார். அவரும் அவரது மனைவியும், மகளும் யாருக்கும் தெரியாமல் கைது செய்யப்பட்டு, பனிப் பிரதேசங்கள் வழியாக வெளியேற்றப்பட்ட கொடுமை சொல்லும் தரமன்று.

இக்காலத்தில்தான், டிராட்ஸ்கியின் இளைய மகள் நீனா நோய்வாய்ப் பட்டு இறந்தார். தந்தையிடம் இருந்து பதில் கடிதம் வரும் என மரணப் படுக்கையில் ஏங்கியவாறு உயிர் நீத்த நீனா, தந்தைக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை டிராட்Þகியிடம் கொடுக்காமலே மறைத்தனர். அவள் இறந்தபிறகே கொடுத்தனர். மரணப்படுக்கையில் இருந்த அவளைப் பார்க்கவும் டிராட்Þகியை அனுமதிக்க வில்லை. 

1928 ஜனவரி 20 ஆம் தேதி, சீனாவை ஒட்டிய ரஷ்யா எல்லைப் பகுதியில் ஒரு பாழடைந்த ‘அல்மா கட்டா’ என்ற சிறிய நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட டிராட்ஸ்கி, அங்கே சிறையில் வைக்கப்பட்டது போல முடக்கப்பட்டார்.

1929 ஜனவரி 20 இல் சோவியத் நாட்டில் இருந்தே டிராட்ஸ்கியை நாடு கடத்தும் உத்திரவு பிறப் பிக்கப்பட்டது. துருக்கி நாட்டின் கான்ஸ்டாண்டிநோபிளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

1929 ஜூன் மாதத்தில் பிரிட்டனில் குடியேற விரும்பி விசா கோரி விண்ணப்பித்தார். பிரிட்டிஷ் பிரதமர் மெக்னால்டுக்கும் தந்தி அனுப்பினார். ஆனால், தொழிற் கட்சி அரசு டிராட்ஸ்கியின் வருகையை விரும்பவில்லை.

ஜார்ஜ்பெர்னாட்ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், பேராசிரியர் ஹெரால்டுலாஸ்கி, பர்மிங்ஹம் மேற்றி ராணியார் ஆகியோர், அரசாங்கத்தைக் கண்டித்தும், ட்ராட்ஸிக்கு அனுமதி தரக் கோரியும் அறிக்கை விட்டனர்.

பெர்னாட்ஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது:- 

“மிகமிகப் பிற்போக்கான எதிரிகளுக்குக்கூட பிரிட்டன் புகலிடம் அளிக்கும்போது, உலகப் புகழ்பெற்ற ஒரு தலை சிறந்த சோசலிÞடுக்குப் புகலிடம் அளிக்க மறுப்பது ஓர் இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மறுப்பால் டிராட்ஸ்கியின் வாயை மூட முடியாது. அவர் உலக நாடு களின் தீவிரவாதிகள் அனைவரும் போற்றிப் புகழும் மாவீரர். அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுகிறவர். உந்து சக்தியாக விளங்குகிறவர். கூண்டில் அடைத்த சிங்கத்தைக் கண்டு பயப்படுகிறவர்கள், அந்தக் கூண்டின் சாவி தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் டிராட்ஸ்கியைப் பிரிட்டனுக்கு வர அனுமதிக்க வேண்டும்” 

என்றார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இக்கூண்டுச் சிங்கத்திற்கு விசா வழங்க மறுத்தன. ஜெர்மனிக்குச் செல்ல விரும்பிய டிராட்ஸ்கியை ஹிட்லர் வசை பாடினார்.

ஹிட்லரின் பத்திரிகையான ‘பெயோபச்சட்டர்’ 1929 பிப்ரவரி 9 இல் எழுதியதாவது, “சோவியத் யூத வேட்டை நாயான டிராட்ஸ்கி பெர்லினில் குடியேற விரும்பு கிறான். இந்த யூதக் கொலைகாரன் மீது நாம் ஒரு கண் வைத்து இருப்போம்’ என்று எழுதியது.

‘ஜெர்மனியில் நாஜிகள் செல் வாக்குப் பெறுவது சோசலிசத் திற்குப் பேராபத்தாக முடியும்’ என்று ஹிட்லரைக் குறித்து தொடக்கத் திலேயே எச்சரிக்கை தந்தார் டிராட்ஸ்கி.

1932 பிப்ரவரி 20 ஆம் நாள், சோவியத் ரஷ்யாவின் அறிவிக்கப் படாத சர்வாதிகாரி ஸ்டாலின், டிராட்ஸ்கியின் குடி உரிமையைப் பறித்தார்.

டென்மார்க்கின் முற்போக்கு வாதிகள் டிராட்ஸ்கியை அழைத் தனர். ஆனால், டென்மார்க் அரசு அனுமதிக்கவில்லை. சுவீடனும் மறுத்தது. பின்னர் பிரானஸ் நாட்டில் பாரஸ் பட்டணத்தை அடுத்த பார்பிசன் என்ற சிறிய நகரில் குடியேறினார்.

பின்னர் பிரான்சில் இருந்தும் நாடு கடத்தப் பட்டார். நார்வே நாட்டுக்குச் சென்றார். ஸ்டாலினின் ஆதிக்கக் கரங்கள் நார்வேயில் இருந்தும் டிராட்ஸ்கியை விரட் டியது. அங்கிருந்து அட்லாண்டிக் கடல் தாண்டி மெக்சிகோ போய்ச் சேர்ந்தார் டிராட்ஸ்கி.

டிராட்ஸ்கி தனது மரண சாசனத்தை 1940 பிப்ரவரி 27 இல் எழுதினார். அதே ஆண்டு ஆகÞட் 21 ஆம் தேதி அவர் படுகொலை செய்யப் பட்டார்.

நயவஞ்சகமாகத் திட்டமிட்டு நண்பனைப் போலவே நடித்த அக்கொலைகாரன் தந்த கட்டு ரையைச் சரிபார்த்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட கோடா லியில் டிராட்ஸ்கியின் தலையைப் பிளந்தான் கொலைகாரன் ஜக்சன்.

தலை வெட்டுண்ட நிலையிலும் கொலைகாரன் மீது பாய்ந்து டிராட்ஸ்கி போராடினார். உயிர் பிரியும் தறுவாயில், வாய் குழற அவர் கூறியது: 

“ஒரு கொலைகாரனின் தாக்கு தலால் நான் மரணத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன்... எனது அறையில் என்னைத் தாக்கினான்... நான் அவனுடன் போராடினேன்.... தயவு செய்து நமது நண்பர் களிடம் சொல்லுங்கள்... நான்காவது அகிலத்தின் வெற்றி நிச்சயம்..... முன்னோக்கிச் செல்லுங்கள்...” 

தொடர்ந்து பேச முயன்றார். முடியவில்லை.

காலம் மாறியது. 1988 நவம்பர் 7 ஆம் தேதி, மாÞகோவில் டிராட்ஸ் கியின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. 

என் நெஞ்சில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய ஒரு மாவீரனின் மறைக்கப்பட்ட வரலாறை நான் உள்வாங்கிக்கொண்டதால் இதை எழுதி இருக்கிறேன்.

Tuesday, December 27, 2011

சோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை

டிசம்பர் என்றால் நம் நினைவுகளில் பல விஷயங்கள் எட்டிப் பார்க்கும். அதில் நல்லவையும் இருக்கலாம் கெட்டவையும் இருக்கலாம்.
ஆனால் உலக அளவில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு டிசம்பரில் நடந்தது. அதன் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுதுமாக வெளிவரவில்லை.

12.12.1991  . இந்த நாளில்தான் பலரின் உயிர் தியாகத்தால் , பலரின் முயற்சியால் உருவான லட்சிய நாடான சோவியத் யூனியன் தன் மூச்சை நிறுத்தி கொண்டது.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், சோவியத் யூனியன் வீழ்ச்சி குறைத்து தவறான கருத்துகளே இன்று மக்கள் மனதில் இருக்கின்றன.

கம்யூனிச கொடுங்கோலாட்சி பிடிக்காமல் , மக்கள் புரட்சி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினார்கள் என நினைக்கிறோம். இது தவ்று.

சோவியத் யூனியனில் நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிந்து செல்ல விரும்பிகிறீர்களாக என்ற கருத்து கணிப்பில் , பெரும்பாலான மக்கள் ( 76 சதவிகிதத்தினர் ) சோவியத் யூனியனில் நீடிப்பதையே விரும்பினார்கள். ஆனால் சில ஆட்சி மாற்றங்கள் , பொருளாதார மாற்றங்களை விரும்பினார்கள்.  கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பஞ்சம் , நிர்வாக குளறுபடிகள் நிலவியபோதும் பிரிந்து செல்வதற்கு எதிராக அவர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிரிவினைக்கான போராட்டங்களும் ஆங்காங்கு நடந்தன. சில குடியரசுகள் பிரிவதாக அறிவித்தன. இந்த நிலையில், அதிகார பகிர்வுக்கு வழி செய்யும் ஒப்பந்தம் கை எழுத்தாக இருந்தது. இதன் படி, மிக சொற்பமான அதிகாரங்கள் மட்டுமே கொண்ட சோவியத் தலைமையின் கீழ் அதிக அதிகாரங்கள் கொண்ட குடிய்ரசுகள் , ஒரே நாடாக நீடிக்கும்.

ஆனால் மக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல், மூன்றே மனிதர்கள் ( ரஷ்ய அதிபர் எல்ட்சின் , யுக்ரேன் அதிபர், பெலோரஸ் அதிபர் ) தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒரு கையெழுத்து போட்டு , சோவியத் யூனியனை முடித்து வைத்தனர். சோவியத் யூனியம் அதிபராக இருந்த கார்ப்பசேவ் கையாலாகாத நிலையில் இதை பார்த்து கொண்டு இருந்தார்.

இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.


  • சோவியத் யூனியனை ஒழித்து கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாகவே வெளி நாடுகள் சதி செய்து வந்தன
  • செயற்கையான உணவு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. 
  • கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பில் இருந்த ஊடக துறை கை மாறி சென்றது. எனவே அரசுக்கு ஆதரவான செய்திகள் மக்களிடம் போய் சேரவில்லை

அப்படி என்றால் இந்த மூவர் செய்த சதிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏன் ஏற்படவில்லை?

1991ல் கோர்ப்பசேவ் ஆட்சியை கவிழ்க்க ஒரு முயற்சி நடந்தது. அந்த ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்ததும், உடனடியாக சோவியத் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படனர், சிலர் கைது செய்யப்பட்டனர். என்வே ஆதரவாளர்கள் குரல் அமுக்கப்பட்டு விட்டது.

அப்ப்டி இருந்தும் , பிரிவினைக்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. எனவே காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டட் ஸ்டேட்ஸ் என்ற கூட்டமைப்பின் கீழ் நாம் ஒன்றாகவே இருப்போம் என சொல்லி ஏமாற்றினார்கள்.

சோவியத் யூனியன் என்ற அமைப்பு தொடர்ந்து இருந்தால், தற்காலிக சோதனைகளில் இருந்து மீண்டு என்று வலிமை பெற்ற நாடாக இருந்திருக்கும் என்றே அங்கு தற்போது நினைக்கிறார்கள்

சோவியத் யூனியனின் மறைவு என்பது இயற்கையாக நிகழ்ந்தது அன்று. சில சுய நலவாதிகள் செய்த படுகொலை என்பதே அங்கு தற்போது நிலவும் கருத்து.







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா