Saturday, August 1, 2015

ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி


தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

அதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.


அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என கேட்டார் ராஜா..


அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, "சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்" என்றார்.

1 comment:

  1. நண்பரே,

    எம் எஸ் வி யைப் பற்றி ரஜினிகாந்த் சொன்னது எல்லாம் உண்மையே. தலைக்கனம் சற்றும் இல்லாதவர், தனக்காக விசேஷ மரியாதைகள் எதிர்பார்க்கதவர், மற்றவர்களை குறை சொல்லாதவர், இதெல்லாம் நான் படச்சது என்ற அகங்காரம் இல்லாதவர்.

    ரஜினி வந்தது உண்மையிலேயே அவர் எம் எஸ் வி மீது கொண்ட மதிப்பினால்தான் என்று தெரிகிறது. ஆனால் திரு கமலஹாசன் இதில் கலந்துகொள்ளாததுதான் வியப்பாக இருக்கிறது. அவர் எம் எஸ் வி யின் மரணத்தின் போதே உப்புக்குச் சப்பாணி போல எதையோ சொல்லியிருந்தார்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா