Tuesday, January 12, 2016

கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்


பெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..

கவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....

ஒரு  மழைக்கால பேருந்து பயணத்தில்  படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது


ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்


காதல் கடந்த ஈர்ப்பை கூறும்  நான் அவன் அது  , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் ,  நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது

கதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..

ஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார சொற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது

 கிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை

வேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..

  நீண்ட நாட்களாக நீ கேட்ட  உன் மீதான என்  காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்...  அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று

பேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி

தன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன...  பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை  கண் முன் தோற்றம் கொள்கின்றன

அன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...


ஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை

இதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை...  அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..என்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.-----------------------------------------------------

இந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு


வாசித்தேன் நல்லாருந்திச்சி


எந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு


கதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது

உங்க ஃபேவரைட் எது

அவன் அவள் அது. Is really good.

லவ்லி


அம்மா பெயர் is also nice

யட்சி கதை பிடித்திருந்தது


இன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன இன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்ஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு
அது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.

சூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு

எனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு

ஹாஹா


 incest லவ்

Attraction.

Infatuation

ந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction
நெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தது.

ஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது


Yes agreed I liked it too

ஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்


அம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை

அம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது


யட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது

யெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல

எக்சாக்ட்லி


எனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ?

How does that Jeslouse operate

என் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு
ஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்


ஆமா... அது இயல்பானது


இது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.

தாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு


யெஸ் யெஸ்

இதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..


யெஸ்

Jealousy need Not be negative or destructive

யெஸ்ஸ்ஸ்ஸ்


It's a unavoidable feel resulting in comparison

ஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன

உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா