Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

Sunday, December 20, 2015

கேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனும் - ஒப்பீடு

இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க

அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..

எப்ப கல்யாணம் ஆச்சு

எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்

ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க

என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு

ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
------- 

பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்

ஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை



இளையராஜா இப்படி பேசுகிறார்.

இளைஞர்கள் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பது பெருமை அளிக்கிறது.  நம்மிடம் இருக்கும் மனித நேயத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு பிரச்ச்னையை நம் மீது ஏவி விட்டானோ என தோன்றுகிறது

( இப்படி சொல்லி விட்டு நிவாரண பணிகள் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் )

ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பிரச்சனை ( சிம்பு பாடல் ) குறித்து கேட்கிறார்...டென்ஷனான ராஜா , உனக்கு அறிவு இருக்கா,, நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் இதையா கேட்பது என்கிறார்..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ போகும் இடத்தில் இப்படி கேட்டால் வேறு யாராவதாக இருந்தால் இன்னும் கடுமையாக நடந்து இருப்பார்கள்... ராஜா ஓரளவு பொறுமையாகத்தான் பேசுகிறார்..

அறிவு இருக்கா என கேட்டவுடன் , அந்த நிருபர் சாரி சொல்லி இருக்கலாம்.. ஆனால் அறிவு இல்லாததால்தான் சார் கேட்கிறேன் என தொடர்ந்து இடக்காக பேசுகிறார்...

அந்த நிருபரிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என சற்று கூலாக அறிவு இல்லை என எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய் என கிண்டலாக கேட்கிறார் ராஜா...

இதை கட் எடிட் செய்து , அறிவு இருக்கா என ராஜா கேட்பதை மட்டும் ஒளிபரப்பு செய்து அவர் தேவையில்லாமல் கோபப்பட்டதுபோல பிரச்சாரம் செய்கின்றன ஊடகங்கள்..இதுதான் ஊடக அறம்போலும்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செல்லும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா