Showing posts with label விஸ்வரூபம். Show all posts
Showing posts with label விஸ்வரூபம். Show all posts

Sunday, January 27, 2013

மனம் திறக்கிறார் விஸ்வரூபம் தணிக்கை குழு இஸ்லாமிய உறுப்பினர் - பெரும்பான்மை முடிவை நான் மாற்ற முடியாது



விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார். 

” எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். ” என்று கூறியுள்ள அவர் , ஆனால் தணிக்கை குழுவின் இறுதி முடிவு தன் ஒருவனை பொறுத்தது அன்று என்றும் , பெரும்பாலானோர் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு அமையும் என்றும் கூறி இருக்கிறார்..

விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என இஸ்லாமிய தலைவர்கள் கூறி இருந்தனர்.. 
ஆனால் படம் பார்த்த சில ஹிந்து சகோதரர்கள்  , படம் ட்ரூ லைஸ் படத்தின் மொழி பெயர்ப்பு போல இருக்கிறது.. தமிழக இஸ்லாமியர்களை கேலி செய்வது போல காட்சிகள் இல்லையே என்று கருத்து சொல்லி இருந்தனர்.
ஆனால் இஸ்லாமிய பழக்க வழக்கங்களும் , அரபி மொழியும் தெரிந்த இஸ்லாமியர்கள் , இந்த படம் இஸ்லாத்தை கேலி செய்வதை உணர முடியும் என இஸ்லாம் தலைவர்கள் சொல்லி இருந்தனர்..
ஆனால் தணிக்கை குழுவில் ஓர் இஸ்லாமியரும் இருந்தார்... அவதூறு ஏதும் இருந்தால் அவர் தடுத்து இருக்க மாட்டாரா என சிலர் கேட்டனர்.. ஓர் இஸ்லாமியர் இருந்தும் , இந்த படம் எப்படி அனுமதிக்கப்பட்டது என இஸ்லாமியர்க்ள் கோபப்பட்டனர்.

இந்த நிலையில் , விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார்.  இப்போதைய நிலையில் அவரால் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றாலும் , அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.. 
அவர் கருத்துகளில் சிலவற்றை பாருங்கள்....
  • சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
  • படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
  • விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
  • அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை. 
  • தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.  

      ஒவ்வொரு வரியிலும் அவர் வேதனை புரிகிறது,,, தணிக்கை முறையை மாற்ற வேண்டியதன் அவசியம் புரிகிறது...   

அவர் கருத்துகள் , முழுமையாக உங்கள் பார்வைக்கு ...
*******************************************************************************************

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.
      தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
 என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும் மூத்த சகோகதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாகக் என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது. மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர். அவருடைய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நானும் ஒரு காரணமாக உதவியிருக்கிறேன் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். அந்த அடிப்படையில், அவர் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் எந்தளவிலும் எனக்குக் குறையவேயில்லை. யாரோ சிலரை திருபதிப்படுதவதற்காகவோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ என்னை விமர்சிக்கவில்லை என்றே இன்னும் நம்புகின்றேன்.
இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
      தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத் துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை. வழிகாட்டும் முறைகள் (guidelines) ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
      விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு  தணிக்கை செய்யப்பட்டது., இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல்வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது.
படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை. அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு படமும் தணிக்கை செய்யப்படுகிறது. விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
 அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை. தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.   இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
 விஸ்வரூபம் படம் தற்போது உலகின் பல நாடுகளிலும், தணிக்கை செய்தபிறகே வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான மலேசியாவிலும் இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
 நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன்.எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே கூறியதுபோல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், இடைப்பட்ட நேரத்திலான செயல்பாடுகளுக்காக நான் விமர்சனத்திற்குப் பயன்படுகிறேன் என்றால் அதையும்கூட என் தனிப்பட்ட மனவலியாகத்தான் கருதுகிறேனே தவிர, ஏதேனும் ஒரு வகையில் அவருடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறேன் என்ற அளவில் மனநிறைவும் கொள்கிறேன்.

Friday, January 25, 2013

விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும்


 
     நான் ஒரு முறை  ஓர் இஸ்லாமிய மருந்து கடையில் சில பொருட்கள் வாங்கினேன். வாங்கி விட்டு , வீட்டுக்கு போய் விட்டேன். இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அந்த கடை எனக்கு தெரிந்த கடை அன்று. தற்செயலாக என் கண்ணில் பட்டதால் , அந்த கடையில் நுழைந்தேன் . அவ்வள்வுதான். அந்த கடை பெயரைக்கூட நினைவில் கொள்ளவில்லை.

  சில நாட்கள் கழித்து அதே மருந்து தேவைப்பட்டது. வேறு கடைகளில் கிடைக்காததால் , அதே இஸ்லாமிய கடைக்கு சென்றேன். அந்த கடையின் லொக்கேஷன் மறந்து விட்டது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடித்தான்  அந்த கடைக்கு சென்றேன்.

 தேவையானதை வாங்கி விட்டு , காசை நீட்டினேன். கவுண்டரில் இருந்தவர் என்னை சில உற்று பார்த்து விட்டு , “ போன வாரம் இதே மருந்தை எங்களிடம் வாங்கினீர்கள் அல்லவா “ என்று கேட்டார்.

 எனக்கு ஆச்சர்யம் .. எனக்கு அவர் முகம் நினைவு இல்லை. ஆனால் அவர் என்னை நினைவு வைத்து இருக்கிறாரே.. சரி, நான் யாராக இருந்தால் என்ன ,,ஏன் என்னை விசாரிக்கிறார்.

   ” அனத் மருந்துடன் சேர்த்து , இன்னொரு பொருளை கேட்டீர்கள்.  நான் அது வருவது இல்லை என சொன்னேன்.. நினைவு வருகிறதா ? “ என்றார்.

“ ஆமா சார்,,  நான் தான் அது ..ஏன் கேட்கிறீர்கள் “ என்றேன்.

” போன முறை ஐனூறு ரூபாய் கொடுத்து விட்டு , மீதியை வாங்காமல் சென்று விட்டீர்கள் .. அந்த மீதி காசை தனியாக எடுத்து வைத்து உங்களுக்காக காத்து இருக்கிறேன். இன்றும் நீங்கள் வரவில்லை என்றால் , அந்த காசை தானம் செய்து விடலாம் என இருந்தேன். நல்ல வேளை வந்து விட்டீர்கள். “ என சொல்லொயபடி , தனியாக எடுத்து வைத்து இருந்த மீதி காசை , பத்து பைசா கூட குறையில்லாமல் கொடுத்தார்.

எனக்கே அப்போதுதான் நினைவு வந்தது.  காசு எப்படி குறைகிறது என குழம்ப்பி , பிறகு கை விட்டு விட்டேன். இவர் நினைவு வைத்து கொடுக்கிறாரே.

“ எங்கள் மார்க்கம் மற்றவர்கள் காசுக்கு ஆசைப்படக்கூடாது என சொல்லித்தந்து இருக்கிறது. எனவேதான் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறேன் “ என்றார்.

எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

அன்றில் இருந்து நான் பெரும்பாலும் இஸ்லாமிய கடைகளையே prefer செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமிய கடைகளில்தான் பெரும்பாலும் வாங்குகிறேன்.

நான் சொல்ல வருவது அதுவல்ல.

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது, இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் . அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

    அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் . இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி  , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள்  என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

 இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.


ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.
இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

**************************************************



  • ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு. சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் . அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .



சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன  உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.                
  1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
  4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.                               


சொல்லிக்கொண்டே போகலாம்.  யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.


  • இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். 

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே.. இன்னொன்றும் பார்க்க வேண்டும் . கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை. 

  • எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது..... 

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


  • இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே.. 
கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள். அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா? சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள். அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள்  நடமாடுவது போல எடுக்க முடியுமா?  அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை. ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும். 


  • ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது , பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் , வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார். இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன. எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. 


Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்


  ஒரு பெரிய பிரச்சினையை , அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் தடுத்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

  விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் அச்சம் அடைந்தது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. நல்லிணக்கம் , அமைதியை விரும்பும் நடு நிலையாளர்களும் அச்சம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படம் இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ப்டம் பார்த்தவர்களில் ஒருவரான  உயர்திரு .ஜவாஹிருல்லா கூறுகையில் இந்த படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறினார்.


  • இஸ்லாமியர்கள் தம் உயிர் என போற்றும் குர் ஆன் , பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது
  • சர்வதேச  பயங்கரவாதி முல்லா உமர் , தமிழ் நாட்டில் ஓர் ஆண்டுகள் தங்கி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.
  • 12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது.
  • மாமன் , மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள் , அமைதியை கெடுத்து விடும். 
  • முழுக்க முழுக்க பிரச்சார நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வரலாற்ற்றில் இப்படி ஒரு பிரச்சாரப்படம் வ்ந்தது இல்லை

இவ்வாறு அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார்.


இந்த நிலையில்தான் , நடு நிலையாளர்கள் அச்சம் அடைந்தனர். தேவையில்லாமல் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற பீதி ஏற்பட்டது. போராட்டங்கள் , ஊர்வலங்கள் போன்றவற்றால் , அமைதி கெடுவதுடன் , படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுமே என நினைத்தனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் மிகவும் கட்டுப்பாடுடனும் , கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக ஏதும் பேசவில்லை..யாராவது தவறாக பேசினால் , மற்றவர்களுக்கு முன்பு நாங்களே கண்டிப்போம் என கடுமையாக எச்சரித்தனர்.

உயிரைக்கொடுத்தாவது படத்தை தடுப்போம் என அறிவித்த இஸ்லாமிய தலைவர்கள் , வன்முறையை நாடாமல் சட்டத்தை மதித்து செயல்பட்டதில்தான் , தம் முத்திரையை பதித்து விட்டார்கள்.

ஜன நாயக் முறைப்படி எதிர்ப்பை தெரிவித்த கையோடு , கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதன் விளைவாக படத்துக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே , அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

ஜாதி பலம் , பண பலம் , ஆள் பலம் , சினிமா கவர்ச்சி என அனைத்தையும் மீறி அவர்கள் பெற்றி பெற்றாலும் , அவர்கள் கமலுக்காக பிரார்த்தனை செய்யவே விரும்புகிறார்கள்..

தவறான  எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.




Tuesday, January 22, 2013

விஸ்வரூபம் - இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பும் , நடு நிலையாளர்கள் கோரிக்கையும் ...



 விஸ்வரூபம் படம்  குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தேவை அற்றது என கமல் சொல்லி இருந்தார்.   அந்த படத்தை பார்த்ததும் , அவர்கள் அச்சம் நீங்கி விடும் என்றும் ,  கமலை பாராட்டி பிரியாணி விருந்து அளிப்பார்கள் என்றும் கூறி இருந்தார்.

  இந்த நிலையில் இஸ்லாமிய தலைவர்களுக்கு தன் படத்தை கமல் திரையிட்டு காட்டினாராம். பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.  விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் தவ்ஹீத் ஜமாத் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது..

விரிவான அறிக்கையை கீழே காணலாம்.

அவர்கள் உணர்வு புரிகிறது...

ஆனால் அவர்களுக்கு  நடு நிலையாளர்கள் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறார்கள்...

கமல் செய்வதை வைத்து , ஒட்டு மொத்தமாக மாற்று மத சகோதரர்களை சந்தேகிக்க கூடாது.. புத்தக கண்காட்சியில் பார்த்து இருக்கலாம்.. இஸ்லாமிய புத்தக கடைகளில் , இஸ்லாமியர்களைவிட மாற்று மதத்தினர்தான் அதிகம் புத்தகங்கள் வாங்கினார்கள்.. 

எனவே விஸ்வரூபம் பிரச்சினையை நிதானமாக கையாண்டு வெற்றி பெற வேண்டுமே தவிர , மத பிரச்சினையாக மாற்றி விடக்கூடாது..  

**************************************************************************************************************************
  விஸ்வரூபம் வெளியிட அனுமதிக்க மாட்டோம்- தவ்ஹீத் ஜமாத் ஆவேசம்


நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

Monday, January 14, 2013

டி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் !!



     

    அனைவரும் எதிர்பார்த்ததுதான். படத்தின் விளம்பரத்துக்காக ரிலீசுக்கு முன்பே  டி டி எச் ஒளிபரப்பு  என்று படம் காட்டிய கமல் ஹாசன் , இப்போது பிப்ரவரி இரண்டாம் தேதிதான் டி டி எச் ஒளிபரப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

   போலி வாக்குறுதி அளித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

       ரிலீசுக்கு பின்புதான் டி டி எச் என்பதால் , கட்டணத்தை குறைப்பதாகவும் , படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

 தவறுக்கு வருத்தம் தெரிவித்த பின் , அவரை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.

ஆனால் அவர் என்னவோ புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டதாக , விபரங்கள் ஒன்றும் தெரியாமல் சில பத்திரிக்கைகள் உருகி உருகி எழுதின.. அவர்கள் அறியாமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 டி டி எச் என்பதை கமல் கண்டு பிடிக்கவில்லை..   டி டி எச் மூலம் புதுப்படங்களை ஒளிபரப்புவது என்பதும்  கமல் கான்சப்ட் அல்ல...

தேவையில்லாமல் இவர் புகுந்து குழப்பி , ஒரு புதிய தமிழ் சினிமாவில் வருவதை கசப்பான அனுபவமாக ஆக்கியதுதான் இவர் சாதனை  என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

       அவருக்கு பொருளாதார நெருக்கடிகள்  இருந்து இருக்கலாம். அதை சமாளிக்க இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்து இருக்கலாம். அதைக்கூட மன்னித்து விடலாம்.

  ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் போல அவர் ஆதரவு பத்திரிக்கைகள் ஆடிய ஆட்டம் மறக்க கூடியதா?

        கண்டிப்பாக கமல் சொன்னதை செய்து விடுவார் என்றும் , தியேட்டர்கள் பணிந்து விட்டன என்றும் எந்த தரவுகளும் இல்லாமல் , தெரிந்தே பொய் செய்திகள் வெளியிட்டார்களே !!

     சில பத்திரிக்கைகள் அறியாமை காரணமாக , அவற்றை உண்மை என்று நம்பி வெளியிட்டன என்பதும் உண்மைதான்.

  பத்தாம் தேதி டி டி எச் என ந்மபி பணம் கட்டியவர்கள் முறையிட்ட போது ஏளனம் செய்தன சில பத்திரிக்கைகள்.

அதையும் நேரடியாக செய்யாமல் வாசகர் கடிதம் என்ற பெயரில் செய்தன.

 அவர் என்ன கோடி கோடியாகவா ஏமாற்றி விட்டார்... சீட்டுக்கடை மோசடி, ஈமூ மோசடி போல இது என்ன அவ்வளவு பெரிதா,,,  என்பது போல ”கடிதங்கள் “ வெளியிட்டன.


      தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பொய் செய்திகள் வெளியிடலாமா?  இப்படி செய்யும் இவர்கள் , அரசியல்வாதிகளை குற்றம் சாட்ட என்ன தகுதி இருக்கிறது ?
 
          ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் , கமலுக்கு ஆதரவாக தியேட்டர்கள் அணி வகுப்பு என்றெல்லாம் பொய் செய்திகள் வெளியிட்டு , கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய்து  இந்த ஊடகங்கள்தான்.

                இனியாவது இப்படிப்பட்டவர்களை நம்பி கமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதே  நடு நிலையாளர்கள் விருப்பம் மட்டுமல்ல.. அவர் நலம் விரும்பிகளும் விருப்பமும் கூட.
   
   கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இது சம்பந்தமான செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் , இனி மேலாவது நடு நிலையுடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.



Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்டர் அதிபர்கள் சந்திப்பில் உடன்பாடு



விஸ்வரூபம் பட சர்ச்சை சுமுகமாக முடியும் நிலை உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளிவரும் முன்பே டி டி எச் மூலம் ஒளிபரப்பும் முயற்சி வட மாநிலங்களில் செய்து பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
கமல் இதை தமிழ் நாட்டில் செய்து பார்க்க முயன்றார். ஆனால் எதிபார்த்த அளவு புக்கிங் ஆகவில்லை என கூறப்படுகிறது. திரையரங்களிலும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே டி டி எச் மூலம் ஒளிபரப்பு என்பதில் சமரசத்துக்கு இடமேயில்லை என்ற கமல் , சற்று இறங்கி வந்து பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில், தியேட்டர் அதிபர்கள் நேற்று இரவு சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பட அதிபர் கேயார், தமிழ்நாடு திரையரங்க சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 10 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்து வெளியே வந்த கமல்ஹாசன், இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். நாளை (இன்று) மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம் என்றார்.அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் முதலில் ரிலீஸ் செய்யப்படும். ரிலீஸ் தேதி பற்றி, நாளை (இன்று) மீண்டும் சந்தித்து பேசியபின் அறிவிக்கப்படும் என்றார்கள்.

Sunday, December 30, 2012

மின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்கு பாயுமா ? சட்ட நிபுணர்கள் கருத்து

மர்ம யோகி படத்துக்காக நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றி விட்டதாக கமல் மேல் புகார் செய்யப்பட்டதை அடுத்து விஸ்வரூபம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

2008ம் ஆண்டு சாய் மீரா நிறுவனத்திடம் இருந்து கமல் நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றாராம் , மர்ம யோகி என்ற படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தமாம்.

ஆனால் அவர்களை ஏமாற்றி , அந்த காசை வேறு வகையில் செலவிட்டு விட்டாராம்.  சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே செலவிடுகிறேன் என்று செய்திகளைப் பரப்புபவர் , ம்ற்றவர்கள் சம்பாதித்த காசை இப்படி செல்விட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாம்..

கமலாகப் பார்த்து காசை திருப்பி கொடுப்பார் என்று காத்து இருந்த பார்த்த அந்த நிறுவனம் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறது,

 இதை தொடர்ந்து கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 இது ஒரு புறம் இருக்க , இன்னொரு சிக்கலிலும் கமல் சிக்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

 விஸ்வரூபம் படம்  எதிர்பார்த்தபடி வரவில்லை என்பதால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் , அவசர அவசரமாக டி டிஎச்சில் வெளியிட்டு , படத்தைப்பற்றிய கருத்து பரவும் முன்பே சம்பாதிக்க கமல் திட்டமிட்டார் என பேசப்படுகிறது..

    இது தமிழ் சினிமாவை அழிக்கும் என்றாலும் , சட்டப்படி தவறல்ல..

ஆனால் பிரச்சினை வேறொரு வகையில் கிளம்பியுள்ளது.  லட்சக்கணக்கானோர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விஸ்வரூபம் படம் பார்க்க பதிவு செய்துள்ளனர் என ஏர் டெல் அறிவித்துள்ளது.

இதில் கணிசமானோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் .  இதில் சென்னையை சேர்ந்தவர்கள் குறைவுதான்.  சென்னையைத்தவிர்த்த ஏனையை பகுதிகளில்தான் அதிகமாக புக்கிங் ஆகி இருக்கிறதாம்.

     சென்னையை தவிர்த்த ஏனைய பகுதிகளில் எப்போது மின்சாரம் வரும் , எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.. சென்னையிலும் கூட அவ்வபோது மின்சார தடை ஏற்படுகிறது..

  மின்சார தடையால் படம் பார்க்க முடியாமல் போனால் , ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தவர்கள் நீதி மன்றம்  செல்ல வாய்ப்பு இருப்பதால சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் விற்பனையாளருக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்பது சட்டம். ஆனால் , மின்சார தடை என்ற இடையூறு ஏற்படும் என்பது தெரிந்த ஒன்று..எனவே இது எதிர்பாராத இடையூறு என்பதில் வராது.

   வாடிக்கையாளர்கள் தெரிந்துதானே வாங்கினார்கள் என்று சொல்லி தப்ப முடியாது... வாடிக்கையாளர்கள் விளம்பரம் போன்றவற்றால் மயங்கினாலும் ,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிப்பது மோசடியாக கருதப்படும்.

கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டு இருப்பதால்,  கமல் மேல் மோசடி மற்றும் நம்பிக்கை துரோக வழக்கு  ( இந்திய தண்டனை சட்டம் பிரிவு 405 409  மற்றும் பிரிவு 421 424) பாயக்கூடும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

          சீனியர் நடிகரான கமல் , இப்படி மோசடி வழக்குக்ளில் சிக்குவது நடு நிலை சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது .



Friday, December 21, 2012

விஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டம்


கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக , திரையரங்குகிற்கே வராத விஸ்வரூபம் படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளிலேயே ரிலீஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
            விஸ்வரூபம் படத்தை எடுத்து முடித்து பல மாதங்கள் ஆகியும் , படம் விற்பனை ஆகவில்லை. காரணம் எதிர்பார்த்த அளவுக்கு அவுட்புட் இல்லை என கூறப்படுகிறது.  படத்தில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால்  ஒரு ரசிகனைப் பொருத்த வரை , end product எப்படி இருக்கிறது என்பதே முக்கியம். அதை எப்படி தயாரித்தார்கள் என்பது அவனுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே என்னதான் கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்திருந்தாலும், படம் சரியாக வரவில்லை என்பதால் , படத்தை அடிமாட்டு வில்லைக்கு கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த கமல் , நேரடியாக டிடிஎச் மூலம் ஒளிபரப்பும் உரிமையை விற்று , அதன் மூலம் கிடைக்கும் காசுடன் பாதுகாப்பாக இருந்து கொள்ள முடிவு செய்து விட்டாராம். எப்படியும் படம் ஓடப்போவதில்லை என்பதால், திருட்டு விசிடி குறித்து கவலைப்படவில்லையாம்.
இந்த நிலையில் , தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ஆர்.எம்.எம்.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரிகோவிந்த், இணை செயலாளர் ஸ்ரீதர், வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எல்.சுரேஷ், மற்றும் மதுரை அன்பு செழியன், செல்வின்ராஜ், அருள்பதி உள்பட ஏராளமான தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
அறிக்கை
கூட்டத்தின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டு கூட்டம் நடந்தது. அதில், திரைக்கு வருவதற்கு முன்பே டி.டி.எச். அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் மூலமாக வெளியிடும் எந்த படத்தையும், திரைப்பட அரங்குகளில் வெளியிட ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் அபிராமி ராமநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Saturday, December 15, 2012

கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்


எழுத எவ்வளவோ இருக்கிறது...  கமலின் சினிமா அழிப்பு முயற்சி குறித்தே எழுதுகிறீர்களே,, அவரைப்ப்பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே.. ஒரு சிலர் அறியாமை காரணமாகவோ,  உள் நோக்கத்துடனோ அவரை ஆதரிக்க்கிறார்கள்... யார் என்ன எழுதினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. எனவே எப்படி பார்த்தாலும் , நீங்கள் எழுதுவது வீண் வேலை என சிலர் உரிமையோடும் , அன்போடும் சொன்னார்கள்.

பக்காவாக திட்டம் இட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு  கமல் இதில் இறங்குகிறார். இதை தடுக்க இயலாது என்பது தெரிந்ததுதான்..  இதனால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் , கமலுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவர் யார் பேச்சையும் கேட்கப்போவதில்லை. ஆனால்  தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் , கமலுக்கும் நஷ்டம்தான் என்பது அவருக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

      நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ.. புதிதாக ஒரு பொருளைப்பார்த்தால் , வாங்கி வைத்து கொள்ளும் தமிழ் நாட்டு மனப்பான்மையிம் அடிப்படையில் சிலர் அவர் பேச்சில் மயங்குகிறார்கள்.  ஆனால் ஒரு சிலராவது அவரை கண்டித்து வருகிறார்கள்.

 ஒரு தீய செயல் நடக்கும்போது , ஆட்டு மந்தைகள் போல எல்லோரும் அவரை ஆதரிக்காமல், ஒரு சில நேர்மையான குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாலேயே நான் எழுத வேண்டி இருக்கிறது..

           விஷ்யம் என்ன , என்ன பாதிப்பு என்பது புரியாமலேயே பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.

         கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை அன்று பலரும் எதிர்த்தார்களாம்.. அப்போது கமல் மட்டுமே கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாவதை ஆதரித்தாராம். இப்போது அனைவருமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களை தருகிறார்களாம். இது கமலின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது என அவர் தொண்டர்கள் புளகாங்கிதம்  அடைகிறார்கள்..

       ஆனால் தனியார் தொலைகாட்சிகளில் கன்னாபின்னாவென அலுப்பூட்டும் அளவுக்கு சினிமா ஒளிபரப்பாவதால் , சினிமா மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது இவர்களுக்கு புரியவில்லை.

    திரையுலக ஜாம்பவான்களான பாலசந்தர் போன்றோர் இதை எதிர்த்தது அதனால்தான். ஆனால் அவர்களும் இன்று  தனியார் தொலைகாட்ச்சிக்கு வந்து விட்டார்களே என லொள்ளு பேசுகிறார்கள் சிலர்..

ஒரு பொதுவான போக்கை கவனியுங்கள்..

 ஒரு துறையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அனைவருக்கும் நல்லது.. இந்த நிலையில் ஒருவர் மட்டும் அந்த துறைக்கு துரோகம் செய்தால் , அந்த துரோகத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும்.

 இந்த நிலையில், நஷ்டத்தை தவிர்க்க வேண்டி , அனைவருமே தவறான வழியில் இறங்க வேண்டி வரும். இதில் அனைவருக்குமே நஷ்டம்தான்...  இந்த அனைவருக்குமே நஷ்டம் என்ற நடைமுறையே தற்போது நிலவுகிறது.. இது கமல் பெருமைப் பட வேண்டிய விஷ்யமா?

                      இதில் சராசரி ரசிகனுக்கு என்ன பாதிப்பு ?

   தமிழில் படம் எடுப்பது நஷ்டம்தான் என்ற நிலை உருவாகி இருப்பதால் , நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்றால், வேறு மொழிப்படங்களையே நாட வேண்டி இருக்கிறது.  life of pie போன்ற படங்கள் எல்லாம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.

  தியேட்டர்களில் டிக்கட் விலை அதிகம் என்பதால்தான் கூட்டம் வருவதில்லை என மக்கள் பல்ஸ் புரியாமல் இன்னொரு கதையை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் .

   இன்றைய நிலையில், இலவசமாகவே திரையிட்டாலும் , பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதே யதார்த்தம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் சினிமா ஓவர் டோசாகி விட்டது.

    முன்பெல்லாம் , வீடியோ கேசட்டை வைத்து , சில இடங்களில் ( கிராமப்புற பகுதிகளில் )தொலைக்காட்சிப்பெட்டிகளில்  சினிமா காட்டி காசு வசூலிப்பார்கள்.. அதிகமான காசு , சிறிய திரை , வசதி குறைவு என்றெல்லாம் யாரும் யோசித்ததில்லை.  கூட்டம் செமையாக வரும்.

 இன்று அப்படி செய்தால் சிரிக்க மாட்டார்களா...   கோயில் விழாக்களில் , திரையைக்கட்டி பழைய படங்களை திரையிடுவார்கள்..அதற்கும் பயங்கர கூட்டம் வரும். இன்று அது போன்ற பழைய படங்களை பார்க்க காசு கொடுத்தாலும் வர மாட்டார்கள் . அதுதான் 24 மணி நேரமும் டிவியில் பார்க்கிறார்களே...

எனவே டிக்கட் விலைக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை...

 நம் ஊர் டிராபிக்கில் திரையரங்கு சென்று வந்தால் , ஒரு நாள் முழுக்க அதற்கே செலவாகி விடும். அப்படியும் சினிமா செல்ல வேண்டும் என்றால் , அந்த அளவுக்கு ஈர்ப்பு வேண்டும். அந்த ஈர்ப்பை சினிமா இழந்து வருகிறது. காரணம் தனியார் தொலைக்காட்சிகளில் வரைமுறை இல்லாமல் சினிமா காண்பிக்க்படுவது..

ஒரு காலத்தில் ஞாயிற்று கிழமை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பினால் , தெருவில் ஆளே இருக்காது... அந்த ஈர்ப்பு இன்று இருக்கிறதா ?

   அமெரிக்காவை பார், ரஷ்யாவைப்பார் , இங்கிலாந்தைப் பார் என்கிறார்கள் அவர்கள். அந்த நாடுகளின் பொருளாதாரம் , சமூக அமைப்பு வேறு..அவர்கள் செய்வதை நாமும் செய்வோம் என முட்டாள்தனமாக பின்பற்ற கூடாது..


  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை சிலர் அழித்து வந்தாலும் , சினிமா தன் ஜீவனை ஒரு விஷ்யத்தில் தக்க வைத்து வந்தது.. அதை தொலைக்காட்சிகள் அழிக்க முடியாமல் இருந்தது..

அதுதான் முதல் நாள் , முதல் காட்சி பார்க்கும் பெருமிதம். முதல் சில நாட்களில் , கூட்டத்தினருடம் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவமே அலாதி. இந்த முதல் சில நாட்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆஃப் செய்யும் முயற்சிதான் , ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது..

      ரஜினி படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க , ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய்   ஆகிறது என வைத்து கொள்ளுங்கள். ஐந்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் , முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை ஐந்து பேரும் ( தலைக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் ) பெற முடியும் என்றால் , தியேட்டர்களுக்க்கு யார் போக போகிறார்கள் ?

 கண்டிப்பாக இந்த முறையால் தயாரிப்பாளருக்கு லாபம்தான். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் , ரஜினி உட்பட பலரும் இந்த முறையில் , சம்பாதிக்கவே நினைப்பார்கள்.

ஆனால் திரையரங்குகள் தமது கடைசி தடுப்பு சுவரையும் இழந்து , தம் ஈர்ப்பை முழுக்க இழக்கும்.

பெரிய பெரிய ஆடம்பர திரையரங்குகள் மட்டுமே இருக்க முடியும். எளிய மனிதன் இது போன்ற திரையரங்குகளுக்கு செல்லப்போவது இல்லை.

ஒரு வகையில் பார்த்தால் , கமல் செய்வது ஒரு தேசிய சேவைதான்.

   சினிமா என்ற மாயையில் சிக்கி , தமிழன் அழிகிறான் என சிலர் சொல்வதுண்டு. சினிமாவால் சமூகம் சீரழிவதாகவும் சிலர் தவறாகவோ சரியாகவோ பேசி எழுதி வருகிறார்கள்..

சினிமா என்ற துறையை அழிக்க எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தும் பார்த்து விட்டார்கள்.

அவர்களால் முடியாத , சினிமா ஒழிப்பு என்ற விஷயத்தை கமல் வெகு வெகு இலகுவாக செய்ய இருக்கிறார். இவருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது.  நன்றிக்கடன் பட்டு இருக்கிறது...



 

     
   

Tuesday, December 11, 2012

கமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர் அலி பதிலடி


               தன் படத்துக்கு தடை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால்தான் , முன்கூட்டியே கிடைத்தவரை சுருட்டி கொள்ள முடிவெடுத்து , டி டி எச்சில் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் முடிவெடுத்தெடுக்கிறார் என்று நடு நிலையாளரும் , தமிழுணர்வு மிக்கவருமான வே. மதிமாறன் கூறியுள்ளார்.


   அவர் தன் சமீபத்திய பதிவில் கூறியிருப்பதாவது..


 

“விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,
இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.
“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.
‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,
“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.
சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.
விஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.
இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.
‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.
முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்? விளக்கம்?
உண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..?
ரொம்ப மகிழ்ச்சி.
‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் பத்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
நம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.
எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.


*******************************************************8




  இன்னொரு புறம் பார்த்தால் , முஸ்லீம், லீக் கமலின் உறுதி மொழியை  நிராகரித்துள்ளது.


இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் உயர்திரு.  ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில்,

 'சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தன. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது,' என்று குறிப்பிட்டுள்ளார்.



Sunday, December 9, 2012

விஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினையும்


  
   விஸ்வரூபம் படம் , கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய பின்னும் , எதிர்பார்த்தபடி அவுட் புட் இல்லை எனவும் எனவே நேரடியாக டீவியில் வெளியிட்டு கிடைத்த பணத்துடன் சேஃபாக இருந்து கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு கமல் பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த பதில் சால்ஜாப்பாக இருப்பதாகவும், தெளிவில்லை என்றும் கூறப்படுகிறது.

  கமல் அறிக்கையும் , நடு நிலையாளர்களின் எதிர்வினையும் பின் வருமாறு..

*********************************************************************
  கமல் : புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

   நடு நிலையாளர்கள்   எல்லா புதிய கண்டு பிடிப்புகளும் நன்மைக்காகவே என்று சொல்லி விட முடியாது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் என்ற விஷ்யத்தை இங்கு புகுத்தி விவசாயத்தை அழிக்க சிலர் முயற்சி செய்தார்கள் . புதிய விஷ்யம் என அதை ஏற்க முடியுமா?  அணு சக்தி என்ற கண்டு பிடிப்பு கோடிக்கணக்கானோரை அழிக்கவில்லையா... 
 இன்னொரு நாட்டிற்கு பொருந்தகூடிய விஷ்யம் நம் நாட்டிற்கும் பொருந்தும் என்ற அடிமை மனப்பான்மை கமல் போன்றோரிடன் நீடிப்பது வருந்தத்தக்கது.  


ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
          புரிந்து கொண்டுதான் எதிர்க்கிறார்கள்.. 

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.

    ஒரு பொருள் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து வாங்கும் உரிமையை நுகர்வோரிடம் இருந்து பறிக்கும் இந்த முறை , அம்பானி போன்ற பணக்கார முதலாளிகளுக்கு உவப்பாகத்தான் இருக்கும். அவர்கள் இதை வரவேற்க கூடும், ஆனால் மற்றவர்கள் இதை எதிர்க்கிறார்கள் . முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு கோபம் அடைந்து இருக்கிறார்கள். 
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
                      இது நாசம் விளைவிக்கும் என சிறுபான்மை அல்ல.. பெரும்பான்மையான திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், ரசிகர்கள் நினைக்கிறார்கள்.            
எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.
        வசதியானவர்களை தாஜா செய்ய நினைத்து , எளியவர்களை பலியாக்குவது தவறல்லவா ?

இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.
  என்ன பெரிய சான்று? கமலால் நஷ்டம் என புலம்பாத தயாரிப்பாளர் உண்டா.. முக்தா சீனிவாசன் , கலைப்புலி தாணு என மாபெரும் பட்டியலே இருக்கிறதே.... 

என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.

 யார் என்ன விலை கேட்டார்கள்... சொல்ல முடியுமா? சில படங்கள் திரைய்ரங்குகளுக்கே வராமல் நேரடியாக தொலைக்காட்சிக்கே விற்கப்பட்டுள்ளன... அதிக விலை கேட்டும் , இப்படி செய்யவில்லை. விலைபோகாமல் போனதால் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன. 

முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
    இதையெல்லாம் விட , நல்ல படம் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். காப்பி அடிப்பதோ, மொழி பெயர்ப்பு செய்வதோ மட்டும் போதாது. 

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.
         இசை வெளிவந்ததே பலருக்கு தெரியாது என்பதே உண்மை... இசைத்தகடு சேல்ஸ் ரிப்போர்ட் மிக மோசமாகவே இருக்கிறது..

இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

         இந்திய சினிமாவை நம்புகிறது..ஓகே..கமல் படத்தை நம்புகிறதா ? 
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. 
           தங்காவிட்டாலும் , வேறு முறையில் காப்பி செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரியும். 
ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.
          தியேட்டர் கட்டணத்தை போல பத்து மடங்கு என்பது சரியான கணக்கல்ல.. அந்த ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஆள் மட்டுமா வீட்டில் படம் பார்ப்பார் ? 

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.
               பிறகு ஏன் டீவியில் காட்டுகிறீர்கள். இது ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை ஏமாற்றுவது ஆகாதா ? 

DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.
            அந்த 1 1/2 விழுக்காட்டினர், படம் குப்பை என சொல்லி விட்டால் , நெகடிவ் பப்ளிசிட்டி ஆகி 100 விழுக்காட்டையும் பாதிக்குமே ...

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
 திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

ஒரு தவறு , இன்னோரு தவறை நியாயப்படுத்தாது.. இரண்டுமே தவறு... 
இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.
 சிலர்தான் சுபிட்சமாக வாழ்கிறார்கள்..பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர்கள் , சினிமாவை விட்டே போய் விட்டார்கள்.. பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.  சில மூடப்பட இருக்கின்றன.  
பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.
      ஆனால் கேபிள் டிவி , விசிடி வரவால் சினிமாவுக்கு போவதை குறைத்து கொண்டார்கள். முன்பெலலாம் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்ம். இப்போதோ போதிய ஆட்கள் வராமல் காட்சிகள் ரத்தாகின்றன. 

கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. 
        சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?
ஹோட்டல்களை மூடவில்லை... ஆனால் சினிமா வீடுகளுக்கே வருவதால் , பல தியேட்டர்களை மூடி விட்டார்கள். 


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.
 அவ்வளவு உறுதியாக இருந்தால் , இஸ்லாமிய பெரியவர்களுக்கு படத்தை முன்கூட்டியே திரையிட்டு காட்டலாமே.. படம் இஸ்லாத்தின் மாண்பை உயர்த்துவதாக் இருந்தால் , வேண்டிய அளவு விருந்தளிப்பார்களே... 
அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

                இஸ்லாம் பெரியவர்களுக்கு திரையிட்டு காண்பித்து அனுமதி பெற்றால் , கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்...

Tuesday, December 4, 2012

விஸ்வரூபம் திரைப்படம்- இந்திய தேசிய லீக் பொது செயலாளர் அப்துல் ரஹீம் கோரிக்கை ஏற்கப்படுமா ?



    தெரிந்தோ , தெரியாமலோ குறிப்பிட்ட  மதத்தினரை புண்படுத்துவது போல துப்பாக்கி படம் எடுத்து விட்டார்கள். ஆனால் தவறை உணர்ந்து பிறகு திருத்தி கொண்டது பாராட்டத்தக்கது.

 இந்த நிலையில், விஸ்வரூபம் படம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானதா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.  இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் , புண்படுதலுக்கு உள்ளாகும் சகோதர மதத்தினர் , சினிமாக்காரர்கள் மீது மட்டுமல்லாது , அனைவர் மீதும் வருத்தப்படுவார்கள் என்பது யதார்த்தம்.

 இதை தவிர்க்க , படம் வெளிவருவதற்கு முன்பே, அவர்கள் சார்பாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு போட்டு காட்டி , ஆட்சேபிக்க காட்சிகளை நீக்குவதே நல்லது என நடு நிலையாளர்கள் கருதினார்கள். ஆனால் சிலர் இதை ஏற்கவில்லை.

இது கருத்துரிமையை பாதிக்கும் என்றும் , படம் வெளிவந்த பின் ஆட்சேபிக்க காட்சிகளை நீக்கலாமே என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் படம் வந்த பின் போராடுவது , படத்துக்கு விளம்பரமாகத்தான் அமையும் என்பதால் , தும்பை விட்டு வாலை பிடிப்பது வீண் வேலை என்கிறார்கள் சிலர்.

 இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் திரு. அப்துல் ரஹீம் உள்ளிட்ட பலர் , மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு , சமூக நல்லிணக்க அடிப்படையில் , இந்த கோரிக்கையை எழுப்புகின்றனர்.

அதுதான் சென்சார் போர்ட் ஓகே சொல்லி விட்டதே என சிலர் புரியாமல் கேட்கலாம். 

சென்சார் போர்ட் ஓகே சொன்ன பின்னும் , பம்பாய் திரைப்படம் வந்தபோது , பால்தாக்கரேக்கு போட்டு காட்டி , அவர் ஓகே சொன்னபின் தான் படம் வெளியானது.  முன் தணிக்கைக்கு இப்படி பல உதாரணங்கள் உள்ளன.

        முன் தணிக்கை செய்யப்படுவதால் படத்துக்கு இழப்பு ஏதும் ஏற்படபோவதில்லை. ஆட்சேபிக்க காட்சி ஏதும் இல்லாவிட்டால் , பிரதி  நிதிகள் எதுவும் சொல்லாமல் ஓகே சொல்லப்போகிறார்கள். ஆட்சேபிக்கத்தக்க காட்சிகள் இருந்தால் , அதை முன்பே நீக்கி விடுவது அனைவருக்கும் நல்லதுதானே..

   கமலுக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும் , அவரை அறியாமல் சில காட்சிகள் இடம் பெற்று விட்டால் , அவர் பெயர்தானே கெடும் .
  எனவே சட்ட நிபுணர்கள் , அறிவி ஜீவிகள் சொல்வதை கணக்கில் கொள்ளாமல் , தானே முன் வந்து முன் தணிக்கைக்கு உட்படுத்துவதே நல்லது என்றே நடு நிலையாளர்கள் கருதுகிறார்கள். 






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா