Friday, January 25, 2013

விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும்


 
     நான் ஒரு முறை  ஓர் இஸ்லாமிய மருந்து கடையில் சில பொருட்கள் வாங்கினேன். வாங்கி விட்டு , வீட்டுக்கு போய் விட்டேன். இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அந்த கடை எனக்கு தெரிந்த கடை அன்று. தற்செயலாக என் கண்ணில் பட்டதால் , அந்த கடையில் நுழைந்தேன் . அவ்வள்வுதான். அந்த கடை பெயரைக்கூட நினைவில் கொள்ளவில்லை.

  சில நாட்கள் கழித்து அதே மருந்து தேவைப்பட்டது. வேறு கடைகளில் கிடைக்காததால் , அதே இஸ்லாமிய கடைக்கு சென்றேன். அந்த கடையின் லொக்கேஷன் மறந்து விட்டது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடித்தான்  அந்த கடைக்கு சென்றேன்.

 தேவையானதை வாங்கி விட்டு , காசை நீட்டினேன். கவுண்டரில் இருந்தவர் என்னை சில உற்று பார்த்து விட்டு , “ போன வாரம் இதே மருந்தை எங்களிடம் வாங்கினீர்கள் அல்லவா “ என்று கேட்டார்.

 எனக்கு ஆச்சர்யம் .. எனக்கு அவர் முகம் நினைவு இல்லை. ஆனால் அவர் என்னை நினைவு வைத்து இருக்கிறாரே.. சரி, நான் யாராக இருந்தால் என்ன ,,ஏன் என்னை விசாரிக்கிறார்.

   ” அனத் மருந்துடன் சேர்த்து , இன்னொரு பொருளை கேட்டீர்கள்.  நான் அது வருவது இல்லை என சொன்னேன்.. நினைவு வருகிறதா ? “ என்றார்.

“ ஆமா சார்,,  நான் தான் அது ..ஏன் கேட்கிறீர்கள் “ என்றேன்.

” போன முறை ஐனூறு ரூபாய் கொடுத்து விட்டு , மீதியை வாங்காமல் சென்று விட்டீர்கள் .. அந்த மீதி காசை தனியாக எடுத்து வைத்து உங்களுக்காக காத்து இருக்கிறேன். இன்றும் நீங்கள் வரவில்லை என்றால் , அந்த காசை தானம் செய்து விடலாம் என இருந்தேன். நல்ல வேளை வந்து விட்டீர்கள். “ என சொல்லொயபடி , தனியாக எடுத்து வைத்து இருந்த மீதி காசை , பத்து பைசா கூட குறையில்லாமல் கொடுத்தார்.

எனக்கே அப்போதுதான் நினைவு வந்தது.  காசு எப்படி குறைகிறது என குழம்ப்பி , பிறகு கை விட்டு விட்டேன். இவர் நினைவு வைத்து கொடுக்கிறாரே.

“ எங்கள் மார்க்கம் மற்றவர்கள் காசுக்கு ஆசைப்படக்கூடாது என சொல்லித்தந்து இருக்கிறது. எனவேதான் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறேன் “ என்றார்.

எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

அன்றில் இருந்து நான் பெரும்பாலும் இஸ்லாமிய கடைகளையே prefer செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமிய கடைகளில்தான் பெரும்பாலும் வாங்குகிறேன்.

நான் சொல்ல வருவது அதுவல்ல.

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது, இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் . அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

    அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் . இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி  , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள்  என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

 இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.


ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.
இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

************************************************** • ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு. சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் . அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன  உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.                
 1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
 2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
 3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
 4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.                               


சொல்லிக்கொண்டே போகலாம்.  யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.


 • இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். 

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே.. இன்னொன்றும் பார்க்க வேண்டும் . கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை. 

 • எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது..... 

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


 • இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே.. 
கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள். அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா? சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள். அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள்  நடமாடுவது போல எடுக்க முடியுமா?  அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை. ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும். 


 • ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது , பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் , வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார். இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன. எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. 


29 comments:

 1. போடா மன நோயாளி

  ReplyDelete
 2. உண்மையை உரத்து கூறும் தாங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  **********


  விஸ்வரூபம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை போர்வையில் விஷத்தை விதைக்கும் ஊடக தீவிரவாதம் என்பதை ரஜினியும் உணர்கிறார்

  மேலும் படிக்க‌ >>>>> ரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்

  .

  ReplyDelete
 3. நல்ல பதிவு..கேள்விகளுக்கு பதில்கள் மிக அருமை..! என்னுடைய ஒரு கேள்வியையும் பதிந்து கொள்கிறேன்..!

  விஸ்வரூபம் வெளியிடுவது கருத்துரிமை என்பவர்களுக்கு ஒரு சவால் :

  முன்வருபவர்களின் படத்தை முதலில் தவறானவர் என்று மக்கள் முன் பொய் பிரச்சாரம் செய்வோம்..பிறகு விபச்சாரம் செய்தார் என்று கூறி நியுஸ் சேனலில் ஒரு நாள் மட்டும் வெளியிடுவோம்....பிறகு பார்ப்போம்..மக்கள் உங்களை நம்புகிறார்களா.? அல்லது ஊடகத்தை நம்புகிறார்களா..? என்று .

  இதில் உங்களுக்கு உள்ள சாதகங்கள் :

  திரைப்படம் போன்று உலகம் எங்கும் வெளியிட போவதில்லை..திரைப்படம் போன்று பல நாள் பல காட்சிகள் காட்டபோவதில்லை..திரைப்படம் போன்று உங்களை தெரியாத மக்களுக்கும் சென்றடைய போவதில்லை..உங்களை தெரிந்த சிலருக்கு மட்டும்தான் விஷயம் தெரிய போகுது...! திரைப்படம் போன்று ஒன்றி பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் ஆரோ திரீடி எபக்ட் ,பின்னணி இசை போன்று எதுவும் இல்லை..!

  நிச்சயம் சொல்வேன் ஊடகம்தான் வெல்லும்..நீங்கள் தோற்று கூனி குறுகித்தான் போவீர்கள்..ஊடகம் சொல்வது எல்லாம் சரிதான் என்கிற ரீதியில்தான் இன்றைய மக்களை வார்த்தெடுத்து இருக்கிறார்கள் ..அதனால்தான் அதிகமான அரசியல் கட்சிகளும் தொலைகாட்சி,செய்தித்தாள் போன்றவற்றை வைத்திருக்கின்றனர்...! ஊடக விளம்பரங்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அதிக தொகை செலவிடுகின்றனர்..நல்லவனை கெட்டவனாகவும் ,கெட்டவனை நல்லவனாகவும் காட்ட ஊடகத்தால் நிச்சயம் முடியும்..அதில் தலையாய ஊடகமாக இருப்பது சினிமாதான்

  நீங்கள் விபச்சாரம் செய்யாதபோது விபச்சாரம் புரிந்தீர்கள் என்று கூறினால் நீங்கள் எப்படி அதை மறுத்து செய்தி வெளிவராமல் இருக்க முயற்சி செய்வீர்களோ அதையே தான் முஸ்லிம் மக்களும் செய்கின்றனர்...மேற்கூறிய அளவு உங்களின் சாதகங்கள் எங்களுக்கு பாதகமே..! அதையே உங்களால் சகிக்க இயலாது ..பின் ஏன் வெட்டி நியாயம் பேசுகிறீர்கள் கடவான்களே !!!

  ReplyDelete
 4. நீங்கள் பிளாக்கில் எழுதுவதில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காகவே, நீங்கள் எழுதும் பதிவுகளை பொதுவாக நான் படிப்பதே இல்லை. ஆனாலும், நீங்கள் பதிவே போடக்கூடாது என்று நினைக்கமாட்டேன். படம் வெளிவந்து, பெரும்பாலானோர், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லிய பிறகும் ஏன் இப்படிப்பட்ட பதிவுகள் உங்களிடமிருந்து?. நன்றாக யோசித்துப் பாருங்கள், நாளை ஏதேனும் ஒரு படத்தில், உண்மையிலேயே இசுலாமியத்திற்கு எதிரான கருத்துகள் இருந்து, அதற்கு இசுலாமிய சகோதரர்கள் போராட்டம் நடத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் இவர்கள் தேவையில்லாமல் போராடுகிறார்களோ என்ற சந்தேகம்தான் ஏற்படும்.

  படத்தில் உண்மையிலேயே சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால், தாராளமாகப் படத்தைத் தடை செய்யலாம். தப்பான படத்தை எடுத்ததற்காக, தயாரிப்பாளருக்கு அது ஒரு தண்டனையாக இருக்கட்டும். அப்படி, படத்தில் ஏதும் தவறுகள் இல்லை என்று அறிவிப்பு வந்தால், இப்போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்ட ஈட்டை யார் வழங்குவது?


  ReplyDelete
 5. உங்கள் கருத்திற்கு 100% உடன் படுகின்றேன். எல்லோரும் நடுனிலை கருத்து சுதந்திரம் என கூறிகொண்டு தங்களின் ஆல் மனதில் முச்லீம்களை பற்றி இருகும் வன்மங்கள் வெலிபட்டுகொண்டு இருகின்றதாகவே தோன்றுகின்றது.

  ReplyDelete
 6. http://tamilmottu.blogspot.com/2013/01/blog-post.html

  உங்களின் பதிவில் பல இடங்களில் உடன்படுகிறேன்

  ReplyDelete
 7. சிவப்பு நிறத்தில் இருக்கும் கேள்விகளுக்கும், பதில்களுக்கும், மேலே நாகூர் மீரான் பின்னூட்டத்திற்கும் முழுமையான ஆதரவு சொல்கிறேன்.

  ஏனென்றால் இஸ்லாமியர் என்றாலெ ஒரு பிம்பம் விழுந்ததற்கு திரைப்படங்களும், செய்தி ஊடகங்களும் காரணம். சமூக நல்லிணக்கம் விரும்புகிறவர்கள் இது போன்ற சித்தரிப்புகளை எதிர்க்க வேண்டும்.

  இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்புக் காட்டியது, கமலுக்கு வேண்டுகோள் விட்டதும் மிகவும் கண்ணியமாகவே இருந்தது.

  நீங்கள் சொன்னது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஜாதிக்கட்சிகள், மதக்கட்சிகளுக்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன படங்களில் பாடல் வரிகளில், படப்பெயர்களில்.

  இந்த எதிர்ப்பு வந்த போதெல்லாம் அதற்கும் இப்போது போலவே அட்வைஸ்கள் வழங்கப்பட்டன. இப்போது மட்டுமோ அல்லது இஸ்லாமியருக்கு மட்டுமோ அல்ல. சிலர் தீவிரமாக எதிர்க்கவும் செய்தனர். பாபா படப்பெட்டியை பாமகவினர் தடுத்ததாகவும் நினைவு.

  இந்த எதிர்மறை விளைவுகள் அரசு படத்தையெ தடை செய்ததாலும், அரசியல் அறிவு இல்லாத பாமர திரைப்பட ரசிகர்களின் வெறுப்பு அப்படித்தான் இருக்கும். இந்தத் தடையை இஸ்லாமியரல்லாதவர் சிலர் ஆதரிக்கின்றனர்.

  மேலே குறிப்பிட்டவை உங்கள் சமூகத்தினரின் வாழ்வுரிமை, கண்ணியம் குறித்தது. அதனால் அதற்கு முழு ஆதரவு.

  இனி அடுத்து, மேலே குறிப்பிட்டது பற்றி,

  //நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான். இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.//

  ஃபாசிசம் பற்றியோ இந்துப் பாசிசம் பற்றியோ பேசும் போது நீங்கள் ஃபாசிஸ்டாக இருக்கக்கூடாது. ஆனால் நீங்களோ மதவெறிப் பாஸிஸ்ட் அன்றி வேறென்ன ? உங்களுக்கும் இந்துப் பாஸிஸ்ட்களுக்கும் வேறுபாடு பெரிதாகக் கிடையாது.

  இஸ்லாத்தை விமர்சித்தால் விளம்பரம் கிடைக்குமா ? முற்போக்குப் பட்டம் கிடைக்கும் என்று யார் சொன்னது. சரி இன்றைக்கு மனுஸ்யபுத்திரன் காவிப்பயங்கரவாதம் எழுப்பும் கேள்விகள் என்று எழுதியிருக்கிறார். இதுவும் விளம்பரம் தேடும் செயலோ ? இப்போது இந்துக்கள் பொங்கினால் என்ன சொல்வீர்கள் அவருக்கு ஆதரவாக வரத் தயாரா ? இஸ்லாமை விமர்சிப்பதை நீங்கள் விரும்பவில்லை அதுதான் உண்மை. அதிலும் இஸ்லாமியராகப் பிறந்து கொஞ்சம் மார்க்கத்திலிருந்து வேறுபட்டு மனிதாபிமானம் பேசினால் உடல் ஊனத்தைக் கொண்டு வெறுப்பைக் காட்டுவீர்கள் அல்லவா ? விமர்சனம் என்பது உங்களுக்கு இனிப்பது போலச் செய்யமுடியாது.

  ReplyDelete
 8. இப்போது இஸ்லாமியருக்கு வரும் விமர்சனங்களுக்குக் காரணம் படம் தடை செய்யப்பட்டதால்தான். இது கருத்து சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால்தான் இந்த எதிர்ப்பு என நினைக்கிறேன்

  ReplyDelete
 9. // யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.//

  இந்த லச்சணத்துல நடுநிலைமை வேஷம் வேற. கடுப்பேத்துறாங்க யுவர் ஹானர்.

  ReplyDelete
 10. mr nanbendaa is 1000% right, even i can c many guys who support the film is like that type only.

  content is very good in ur article.

  on the contrary some opposing the film is also going extreme, its not right.

  ReplyDelete
 11. Salam bro.Anand,

  The BEST ARTICLE, i ever read in such a crisis situation, also with deep understandings on unquestionable truths..!

  Wow what a great view..! MashaAllaah..!
  You are a great wiriter brother Anand..!

  Jazakkallaah khair brother..! Thanks a lot..!

  ReplyDelete
 12. சிறந்த இடுகை நண்பரே!

  ReplyDelete
 13. Pretty solid post brother !!
  Thank you so much. Wassalaam

  ReplyDelete
 14. உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், அளவற்ற அருளும் உண்டாகட்டுமாக!

  இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பிக் கொண்டிருப்பவ‌ர்களுக்கு நீங்கள் சொல்லிய ஒவ்வொரு பதிலும் உண்மை நிலையை மட்டும் அடிப்படையாக கொண்ட நியாயமான பதில்கள். நன்றிகள் சகோ.

  //கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை//

  இதை ஏன் சிலர் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்களோ தெரியவில்லை :(

  இது சம்பந்தமான (நடுநிலை பதிவுகளைத் தொகுத்து கொடுத்துள்ள) என் பதிவிலும் உங்களின் இந்த லிங்க் கொடுத்துள்ளேன் சகோ.

  ReplyDelete
 15. தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

  சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

  விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

  இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.

  இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

  24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

  விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

  எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html

  ReplyDelete
 16. இது போன்ற எதிர்ப்புகள் நல்ல முஸ்லிம்கள் மீதும் தேவையற்ற வெறுப்பை ஏற்படுத்திவிடும். நண்பரே!

  ReplyDelete
 17. எந்த முஸ்லிம் மாற்று மத கோட்பாட்டை கேவல படுத்தி இருக்கான் உங்கள் விரல் என் மூக்கை தொடாத வரை உங்கள் சுதந்திரம் Nasir Ali.K

  ReplyDelete
 18. Ningal padam parkavillai enru therikirathu! Oru Tamil Muslim Talibanuku ethiraga ulavu parpathu thappu enru solkireergal??? Afghanistan la apo ena RSS karangala irukanga? Ponga Boss

  ReplyDelete
 19. oru muslim appadi endral anaivarium appadiya adai podum mudaray. nee solvadai parthal ulgill ulla all muslimum uthmargalay. appadi andral pak, iraq,afgan, nadugalil nadampadarku pair annvam nadunellai andru veen vanthi addukaday

  ReplyDelete
 20. ungal vimarsanamum unal payar pollavay ulladhu

  ReplyDelete
 21. அருமையான பதிவு! விமர்ச்சனம் செய்பவர்கள் காயப்பட்டவர்களின் வலியை அனுபவித்தால்தான் புரியும். ஒரு சமுதாயமே புண்படும் என்று இவ்வளவு விபரமாக சொல்லியும், படம் எடுத்தவன் கஷ்டப்படுவானே, கருத்துசு; சுதந்திரம் பறிபோகிறதே என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள்.

  ReplyDelete
 22. மிக அருமையான பதிவு சமூக சிந்தனையுள்ள மனிதன் இருபக்கமும் உள்ள நியாயா தர்மத்தை உணர்ந்து தான் கருத்து தெரிவிப்பான்.. சக சகோதரனின் மானகச்டத்தை உணர்ந்து நீங்கள் வெளி படுத்தி இருக்கீர்கள்...சகோதர நன்றி.

  ReplyDelete
 23. ஒரு இந்துவாக, இஸ்லாத்தின் பெரும்பாலான கொள்கைகளை பின்பற்றுகிறேன் (கடவுள் ஒருவனே... இறைவனை தவிர வேறெவரையும் வணங்குதல் கூடாது உட்பட)

  என் வாழ்வின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லீம்களின் பங்கு இருக்கிறது. எனது உற்ற நண்பர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் தான்.

  விஸ்வரூபம் படத்திற்கான எதிர்ப்பு சரியானது என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது. திரைப்படம் திரைப்படமாக மட்டுமே இருக்கட்டும். தாங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பாபா, சண்டியர், கீதை போன்ற சம்பவங்களையும் முதிர்ச்சியின்மையாகவே கருதுகிறேன்

  ReplyDelete
 24. Excellent Article brother! May God guide and bless you and your family with the best!!!

  ReplyDelete
 25. 1.ஒரு கதை சொன்னீங்க ஒகே...
  இஸ்லாமியன் பணத்துக்கு ஆசைப் படுறான் அப்படீன்னா படத்தில இருக்கு.
  2.ஏற்கனவே டேம்999கு தடை சண்டியருக்குத் தடை....
  அதெல்லாம் ஞாயமான செயல் இல்லயே. டேம்999 அ இங்கே ஒப்பிடுவது தவறு. அணை உடையாதுன்னு நாம சொன்னோம் அவன் உடஞ்சதா காட்டுனான். அதுனால படத்தப் பாக்கமலே இது தப்புன்னு கண்டிச்சோம்.ஆனால் அதுவும் தப்புதான்.

  ReplyDelete
 26. Excellent Article Brother...................

  ReplyDelete
 27. பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் மற்ற எல்லோரும் இறைவனிடம் தேவையுடைய பிச்சைக்காரர்களே என்பது அல் குர் ஆனின் வசனம்.
  இந்த கட்டுரையை வாசிப்போர் குறிப்பாக முஸ்லிம்கள் ஓர் உண்மையை விளங்க அல்லாஹ் வகை செய்துள்ளான்......1)முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்தால் இந்தியாவின் மன நிலையில் பெருத்த மாற்றம் வரும்;2)முஸ்லிம்களின் கலாச்சாரம் பிறருக்கு துன்பம் தருபவை அல்ல;பிறர்க்கு நன்மை செய்வது பிறர் நலன் நாடுவது;3)முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியான இஸ்லாம் பற்றி பிறரிடம் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்;4)இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வாழ்வியல் நெறியை முழுமையாக விளக்கிட வேண்டும்;5)இணைவைப்பு எனும் சிலை வணக்கம்,அது சார்புடைய மனித விரோத கலாச்சாரம் என எல்லாம் பேசப்பட வேண்டும்;6)உலகில் உள்ளோர் இஸ்லாம் முஸ்லிம் பற்றி கூறும் தவறான விமர்சனங்களால் துவண்டு விடக் கூடாது;மாறாக சரியான பதிலை உரக்க சொல்ல வேண்டும்.
  இந்தியா,தன்னைப் பற்றிய உண்மையை உலகிற்கு சொல்லாது ஒக்க பயணிக்கும் வஞ்சகனின் தன்மையுடையது;பிரித்தானியர்களிடம் அடிமை சேவகம் செய்து முன்னேறிய பிராமணர்கள் தங்களின் உயர்வுக்கு தடையாக முஸ்லிம்களை பார்த்தார்கள்;பிரித்தானியர்களின் எதிரியும் முஸ்லிம்கள்....எதிர்க்கு எதிரி நன்பன் என்பது வழக்கு இங்கு எதிரிக்கு எதிரி நல்ல அடிமை ஆதலால் அதிகார மாற்றம் வழங்கிய பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி உரிமை பெற்ற பிராமணர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க பகீரத பிரயத்தனங்கள் செய்கிறார்கள்...அது.....படமானாலும்,மதக்கலவரமானாலும் எல்லாம் பிராமணர்களின் உபயமே!
  அல் குர் ஆன் கூறுகிறது;(முஸ்லிம்களே!)நீங்கள் துக்கிக்காதீர்கள்.துயரமும் கொள்ளாதீர்கள்...நீங்கள் நம்பிக்கையாளர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர்கள்(அல் குர் ஆன்)
  ஆக!தேவை எல்லாம் நாம் முஸ்லிமாக முஃமின் எனும் இறை நம்பிக்கையாளனாக உள்ளோமா?

  ReplyDelete
 28. பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் மற்ற எல்லோரும் இறைவனிடம் தேவையுடைய பிச்சைக்காரர்களே என்பது அல் குர் ஆனின் வசனம்.
  இந்த கட்டுரையை வாசிப்போர் குறிப்பாக முஸ்லிம்கள் ஓர் உண்மையை விளங்க அல்லாஹ் வகை செய்துள்ளான்......1)முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்தால் இந்தியாவின் மன நிலையில் பெருத்த மாற்றம் வரும்;2)முஸ்லிம்களின் கலாச்சாரம் பிறருக்கு துன்பம் தருபவை அல்ல;பிறர்க்கு நன்மை செய்வது பிறர் நலன் நாடுவது;3)முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியான இஸ்லாம் பற்றி பிறரிடம் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்;4)இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வாழ்வியல் நெறியை முழுமையாக விளக்கிட வேண்டும்;5)இணைவைப்பு எனும் சிலை வணக்கம்,அது சார்புடைய மனித விரோத கலாச்சாரம் என எல்லாம் பேசப்பட வேண்டும்;6)உலகில் உள்ளோர் இஸ்லாம் முஸ்லிம் பற்றி கூறும் தவறான விமர்சனங்களால் துவண்டு விடக் கூடாது;மாறாக சரியான பதிலை உரக்க சொல்ல வேண்டும்.
  இந்தியா,தன்னைப் பற்றிய உண்மையை உலகிற்கு சொல்லாது ஒக்க பயணிக்கும் வஞ்சகனின் தன்மையுடையது;பிரித்தானியர்களிடம் அடிமை சேவகம் செய்து முன்னேறிய பிராமணர்கள் தங்களின் உயர்வுக்கு தடையாக முஸ்லிம்களை பார்த்தார்கள்;பிரித்தானியர்களின் எதிரியும் முஸ்லிம்கள்....எதிர்க்கு எதிரி நன்பன் என்பது வழக்கு இங்கு எதிரிக்கு எதிரி நல்ல அடிமை ஆதலால் அதிகார மாற்றம் வழங்கிய பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி உரிமை பெற்ற பிராமணர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க பகீரத பிரயத்தனங்கள் செய்கிறார்கள்...அது.....படமானாலும்,மதக்கலவரமானாலும் எல்லாம் பிராமணர்களின் உபயமே!
  அல் குர் ஆன் கூறுகிறது;(முஸ்லிம்களே!)நீங்கள் துக்கிக்காதீர்கள்.துயரமும் கொள்ளாதீர்கள்...நீங்கள் நம்பிக்கையாளர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர்கள்(அல் குர் ஆன்)
  ஆக!தேவை எல்லாம் நாம் முஸ்லிமாக முஃமின் எனும் இறை நம்பிக்கையாளனாக உள்ளோமா?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா