Monday, December 5, 2011

எல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்

உலகம் கெட்டு போய் விட்டது என அங்கலாய்க்கிறோம். சுய நலமற்ற தலைவர்கள் இல்லையே என ஏங்குகிறோம். ஆனால் எத்தனையோ நல்ல தலைவர்களை மறந்து வருகிறோம்..

அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்த்தான் “ கான் அப்துல் கஃபார் கான் “

அவன் இறந்த போது நான் சின்ன பையன். ரேடியோவில் அவர் மரண செய்தியைக் கேட்டு பெரியவர்கள் சோகமாக பேசிக்கொண்டதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தது நினைவு இருக்கிறது. இன்று யோசித்து பார்த்தால் வெளினாட்டை சேர்ந்த  இங்கும் பிரபலமாக இருந்து இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

1890 ல் ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார்.  நன்றாக படித்த அவர் வெளி நாடு சென்று படிக்க விரும்பினார் , ஆனால் இயலாமல் போய் விட்டது.


அதன் பின்  திருமணம் , மக்கள் சேவை , அவர் சார்ந்த பஷ்தூன் மக்களின் முன்னேற்றம் என அவர் வாழ்க்கை சென்றது.


உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தார் அவர். 


பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராட கடவுளின் சேவகர்கள் என்ற இயக்கத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமாக அது திகழ்ந்தது


நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது 


என்பது அந்த இயக்க உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய செய்தி. சத்தியாகிரக வழியில் அவர் இயக்கம் செயல்பட்டது.


இந்திய பிரிவினைக்கு எதிராக அவர் இருந்தார். பிரிவினை கோரிய ஜின்னாவின் இயக்கத்தை மீறி அவர் சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று இருந்தார்.


1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது..


அவர் நினைத்து இருந்தால் , அகில இந்திய காங்கிரசுக்கு கூட தலைவர் ஆகி இருக்கக் கூடும் . ஆனால் அவர் விரும்பவில்லை. 


காந்தியின் முடிவுகளை காங்கிரசில் சிலர் ஏற்காதபோதுகூட , இவர் காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.


எல்லை காந்தி என பாசத்துடன் இவருக்கு பிரிட்டிஷ் அரசி, காங்கிரஸ் இயக்கம் , முஸ்லீம் லீக என அனைவரும் ஏமாற்றத்தையே வழங்கினர்.


 இவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியாக பிரித்து பஷ்தூனிஸ்தான்
என்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.


ஆனால் காந்தியோ, நேருவோ இவர் கோரிக்கைகளை சரியான முறையில் பிரிட்டிஷாரிடம் எடுத்து சொல்லவில்லை.


எனவே இந்தியாவில் பிரிய விருப்பமா இல்லையா என்பதை மட்டும் முக்கிய கேள்வியாக்கினர் பிரிட்டிஷார். எல்லை காந்தியின் தனி நாட்டுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்பட்டவே இல்லை.


இதன் விளைவாக பிரிவினை ஓட்டெடுப்பில் தம் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி விட்டார்.  இப்படி செய்த்தன் மூலம் அந்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார். 


சொந்த இன மக்களாலேயே தாக்கப்பட்ட்ட அவலமும் நடந்தது..


அதன் பின் பாகிஸ்தான் அரசு ஏற்பட்டு, இவர் கட்சி ஆட்சி நட்ந்த மகாணத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது..


எங்களை கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என காந்தியிடம் வேதனையிடம் முறையிட்டார். 


ஜின்னா அர்சு இவரை காரணமே இல்லாமல் சிறையில் வைத்தது. வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கழித்த இவர் 1988ல் வீட்டு சிறையில் , பெஷாவரில் மரணமடைந்தார்.


அவர் விருப்பப்படி, ஆஃப்கானிஸ்தானில் , அவர் பிறந்த ஊரில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அப்போது ஆஃப்கனில் போர் நிறுத்தம் செய்ப்பட்டது. ( அந்த நேரத்தில் கடும் போர் அங்கு நடந்து வந்தது )


அவர் விருப்பப்படி தனி நாடு வாங்கி கொடுத்து இருந்தாலோ, அவர் செல்வாக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் சேர்த்து இருந்தாலோ , உலக வர்லாறு வேறு மாதிரி இருந்திருக்க கூடும். அதை செய்ய த்வறியது காங்கிரஸ். 


*****************************************



  • அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவை சேராத ஒருவர் இதை பெறுவது அதுவே முதல் முறை
  • நோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
  • அவர் மகன் அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.





Sunday, December 4, 2011

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?

ஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன ..  நல்  வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.

ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.

இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?

இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..

உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..

2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..

பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது  ) 

2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..

செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்


3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )

கணக்கு - கணக்குகள்  

நாக்கு - நாக்குகள்


வாத்து- வாத்துகள்

 வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )

உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.

தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்


அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.

வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் 

சரியா?

வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களை    நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்











Saturday, December 3, 2011

ஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா? - இஸ்லாமிய விவாதம்


nirmal Nirmal said...
பிச்சை, அறிவியலை ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி எதையும் ப்ருவ் பண்ணவேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறன். அதில அப்படிதான் இருக்கு எதுக்கு ஒரு ப்ரூப் வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அறிவியல் கோணத்தில் பார்க்கணும் என்கிற மாயையில் வெளிவரும் வார்த்தையாய் தோணுது ஆன்மிக உணர்வில் இறை அருளில் எழுதிய வார்த்தைகளுக்கு அதற்க்கு அறிவியல் அர்த்தம் தேவை இல்லை என்பது எனது கருத்து. 





மிக அருமையாக சொன்னீர்கள். அறிவியல் நிரூபணம் கொடுத்துதான் , குர் ஆனை ப்ரூஃப் பண்ண வேண்டும் என அவசியம் ஏதும் இல்லை.. 

சில அறிவியல் புத்தகங்களை படிக்கும்போது, இதெல்லாம் குர் ஆனில் இருக்கிறதே என்ற வியப்பு தோன்றியது. அதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். 

கண்ணால் கண்டு விசுவாசிப்பவனை விட , காணாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான் என பைபிளில் ஒரு வசனம் வரும்.  நிரூபணம் எதையும் கேட்காமல் , குர் ஆன் போன்ற நூல்களை தன் உள்ளுணர்வு மூலம் உணர்பவர்களே அதை உண்மையாக உணர்ந்தவர்களாவார்கள்.. அறிவு ரீதியாக அலசும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் ஆன்மீக உலகில் இரண்டாம் இடத்தில்தான் வைக்கப்படுவோம். 

அறிவியல் என்பதே கற்பனை கோட்டை என்கிறபோது, அறிவியல் ரீதியாக குர் ஆனை நிரூபிக்க நான் முயலவில்லை. என வியப்பை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.  நண்பா. நேரில் இன்னும் நிறைய பேசலாம்.

***************************************************************************
அம்பேதன் said...
பிறிதொரு காலத்தில் அதன் நம்பக தன்மையில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது//
.

.
ஆமாம் அதான் அறிவியலின் பலம்!ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்கலாம்!அவனை கல்லால் அடிக்கவோ அல்லது நரகத்துக்கு பொ என்றோ சொல்ல மாட்டார்கள் 





அப்படி சொல்ல மாட்டார்கள்.. ஆனால் அதை விட கொடூரமாக நடந்து கொள்வார்கள். புதிதாக வரும் கண்டுபிடிப்பை மட்டம் தட்டுவார்கள். புதிய விஞ்ஞானியை நோகடிப்பார்கள். அவன் கண்டு பிடிப்பை தன் பெயரில் வெளியிடுவார்கள்.. ரேடியோவை கண்டு பிடித்தது மார்க்க்கோனி அன்று என்பது எத்தனை பேருக்கு தெரியும்



*******************************************************


அறிவியலை நீங்கள் எதிர்க்கிறீர்களா?


அறிவியல் நல்ல விஷ்யம்தான்.. ஆனால் அது சொல்வதை உண்மை என அப்படியே நம்புவது பாமரத்தனம். 

************************************************************************************


நரன் said...








இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?


http://pinnoottavaathi.blogspot.com/2010/10/blog-post_17.html இதில் இந்த பிரச்சினையை  அலசி இருக்கிறார்கள்.


***************************************************


மற்ற பல கேள்விகளுக்கு இங்கே பதில் அளித்துள்ளார்கள் http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.html

********************************************************************


 நான் ஏன் முஸ்லிம் இல்லை என ஒரு புத்தகம்  அனுப்பினேன், அதைப்பற்றி உங்கள் கருத்து?


இதற்கு இவ்வளவு பெரிய புத்தகம் தேவை இல்லை. என் மனம் ஆன்மீக நாட்டம் கொள்ளவில்லை. எனக்கு குர் ஆன் வேண்டாம் என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம்.

தவம் தவமுடையார்க்கே ஆகும். அவம் அதனை
அது இல்லாதவர் மேற்கொள்வது.

எல்லோருமே ஆன்மீக வாதிகளாக இருக்க வேண்டும் என எந்த கட்டாயாமும் இல்லை. நாத்திகவாதிகள் பலர் பெரும் தொண்டு ஆற்றியதை பார்த்து இருக்கிறோம். நல்லவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.. ஆகவே  உங்கள் மனம் ஆன்மீக மார்க்கத்தில் செல்லவில்லை என்றால் ஆன்மீகத்தை மறந்து விட்டு உங்களுக்கு பிடித்த வழியில் செல்லுங்கள். தவ்றேதும் இல்லை. 

******************************************************************

கிருத்துவம் இயேசு சிலுவையில் அறையபட்டார்னு சொல்லுது!ஆனால் குரானோ அவர் கொள்ளபட்டாரே அன்றி சிலுவையில் அறையப்படவில்லைன்னு சொல்லுது!எது உண்மை?

எந்த புத்தகத்தில் அப்படி படித்தீர்கள்? எந்த பதிப்பகம், எந்த மொழி பெயர்ப்பு? 

***********************************************




(  மேலும் சில கேள்விகளை அடுத்த இடுகையில் விவாதிக்க இருக்கிறோம் ) 

Friday, December 2, 2011

உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

மத நூல்களைப் படித்ததும் அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பல் வேறு கேள்விகள் கேட்டு , தெளிவு பெறுவது ஆரோக்கியமானதே. அந்த வகையில், சென்ற பதிவில் எதிர் கேள்விகள் கேட்டவர்களை பாராட்டுகிறேன். அதற்கு உரிய பதில் அளித்த ஆன்மீக நாட்டம் கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

இஸ்லாமிய கருத்துக்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் , அந்த இஸ்லாமிய 
சகோதரர்களின் பதிவுகளை பார்வையிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

இஸ்லாமியர்கள் என அவர்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம் தத்துவங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் என சொல்ல இயலாது. இஸ்லாம் சமுதாயத்தில் பிறக்காத சிலருக்கு, அந்த தத்துவங்கள் தெரிந்து இருப்பதும் உண்டு.

ஆக , சில சகோதரர்கள் இஸ்லாமிய கருத்துக்களை நன்றாக எழுதுகிறார்கள் என்றால் அவர்களின் தத்துவ அறிவுக்கு தலை வணங்க வேண்டுமே தவிர, முஸ்லீம்கள் என்பதால் அப்படி எழுதுகிறார்கள் என நினைக்க கூடாது. ஈடுபாடு இருந்தால்தான் இப்படி எழுத முடியுமே தவிர , இஸ்லாமியராக பிறப்பதால் மட்டுமே அந்த மத அறிவு வந்து விடாது.

 நான் எழுதுவது அறிவியல் பார்வையில், காமன் சென்ஸ் அடிப்படையில்.,
எனவே எளிய முறையில், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைபட்டு இருக்கிறேன். இது அறிவியல் பார்வையாகும்.

பார்க்கலாமா? 

1 . பரிணாம வளர்ச்சி கொள்கையும் ,மத கொள்கையும் முரண் படுவது ஏன்?


குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம கொள்கை இந்தியா போன்ற நாடுகளில்தான் முழு உண்மையாக கருத்தப்பட்டு வருகிறது. அறிவியலில் வளர்ந்த நாடுகள், இந்த கொள்கையை ஒரு ஹைப்போதீசிஸாகத்தான் நினைக்கின்றன. இன்னும் சிலரோ இந்த கொள்கையே தவறு, ஹைப்போதீசிஸ் என்ற தகுதியில் இருந்து இறக்கப்பட்டு, ஒரு கட்டுக்கதை என்ற அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர்.


அதென்ன ஹைப்போதீசிஸ்?


சொல்கிறேன்.


 பெட்ரோல் விலை கூடிக் கொண்டே செல்கிறது. என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்கள். ஆய்வு செய்கிறீர்கள். கடைசியாக இதற்கு ஒரு தீர்வை கண்டு பிடித்தே விட்டீர்கள்.


கீரையில் இருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என கண்டு பிடித்து விட்டீர்கள், ( ஒரு உதாரணத்துக்காகத்தான் )  உங்கள் வீட்டு தோட்டத்தில் கீரையை பறித்து , உங்கள் வீட்டில் பெட்ரோல் செய்தும் பார்த்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஓட்டை பைக்கில் இந்த பெட்ரோல் நிரப்பி ஓட்டியும் பார்த்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.


இதற்காக உங்களுக்கு விழா எடுப்பார்களா? சிலை வைப்பார்களா?


மாட்டார்கள்.


உங்கள் கண்டுபடிப்பு ஓர் அனுமானம்தான். அது இறுதி உண்மை அன்று.


உங்கள் அனுமானம் இறுதி உண்மையாக ஏற்கப்பட வேண்டுமென்றால் , சில நிபந்தனைகள் உண்டு.


1. ரிப்பீட்டபிலிட்டி 2. கணிக்கும் ஆற்றல் 3 புற வய சோதனையில் தேறுதல் 


இதில் ஏதாவது ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.


அதாவது, ஒரு நாள் கீரையில் இருந்து பெட்ரோல் செய்தால் போதாது. எப்போது யார் வந்து கேட்டாலும் , கீரையில் இருந்து பெட்ரோல் செய்து காட்ட வேண்டும். 


இல்லை. இன்று வெள்ளிக்கிழமை. இன்று செய்ய முடியாது.. என் வீட்டில்தான் செய்ய முடியும் என்றெல்லாம் ஜகா வாங்கினால் ,  உங்கள் கண்டுபிடிப்பு தின தந்தியில் இடம்பெற்று , பின் கேலி செய்யப்பட்டு, மறக்கப்படும். 


வெளிப்படையாக யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கும்படி இருக்க வேண்டும். என் நண்பர்கள் செய்தால் மட்டுமே பெட்ரோல் உருவாகும் என்று சொன்னால் செல்லாது...


எல்லா கண்டு பிடிப்புகளையும் இது போல சோதனை செய்ய இயலாது.


எனவே அவற்றுக்கு சலுகை உண்டு.


பிரபஞ்சம் சுருங்கி கொண்டே வருகிறது என்ற ஒரு கண்டு பிடிப்பை ( ? !! ? )  வெளியிடுகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.  ஆய்வு சாலையில் ஒரு பிரபஞ்சத்தை வைத்து சோதித்து பார்க்க முடியாது.


இந்த நிலையில், நீங்கள் சுருங்குவதால் ஏற்படும் விளைவுகளை கணித்து சொன்னால் போதும், உங்கள் கண்டுபிடிப்பு ஏற்கப்படும்.


பிரப்ஞ்சம் சுருங்குவதால், பூமியின் வெப்பனிலை கூடும்., .. நட்சத்தைர ஒளி நீளத்தில் மாற்றம் ஏற்பட்டு, நிறம் மாறும் . என சிலவற்றை கணித்து சொன்னால் போதும். உங்கள் கணிப்புகள் உண்மையானால், உங்கள் கண்டு பிடிப்பை ஏற்பார்கள்.


பரிணாம வளர்ச்சி கொள்கை இந்த எந்த சோதனையிலுமே தேறவில்லை..


ஓர் உயிரில் இருந்து இன்னொரு வகை உயிரினம் உருவாவதை நாம் பார்க்கவே இயலவில்லை. 


தகுதியுடவை எஞ்சும் என ஒரு பம்மாத்து கொள்கை. தகுதி உடையவை மட்டும்தான் எஞ்சி வாழ்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்டால் ஆதாரம் இல்லை.. தகுதியே இல்லாதவை கூட குருட்டு அதிர்ஷ்டத்திலோ, கடவுளின் கருணையாலோ ( ? ! ) பிழைத்து இருக்க கூடுமே என கேட்டால் பதில் இல்லை.. 


தகுதி உடைய உயிரினங்கள் கூட தற்செய்லலோ, இறை செயலாலோ ( ? ! ) அழிந்து போய் இருக்கலாமே என கேட்டாலும் பதில் இல்லை... 


இவை உயிர் வாழ்கின்றன.. என இவை தகுதி உடையவை.. இவை அழிந்து விட்டன. அவை தகுதி அற்றவை என மேலோட்டமாக சொல்லி சென்று கொண்டே இருக்கின்றனர்.




ஒரு காலத்தில் , அழுக்கு துணிதான் பரிணாம வளர்ச்சி அடைந்து எலியாக மாறுகிறது என்பது அறிவியல் கண்டு பிடிப்பாக இருந்தது.. வீட்டில் போட்டு வைத்து இருக்கும் பழைய துணியில் எலி இருப்பதை பார்த்து , இப்படி சொன்னார்கள்.. அடுத்த தலை முறையினர் , இந்த கண்டு பிடிப்பை கேலி செய்து தூக்கி போட்டனர்.


அதே போல , பரிணாம கொள்கையும் அதிகார பூர்வமாக தூக்கி எறியப்படும் நிலையே நிலவுகிறது..


சரி.. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை  வேறு எப்படி உருவானான்?


களிமண்ணில் இருந்து படைக்கப்பட்டானா? குர் ஆன் அப்படி சொல்கிறதா? 


இதை அரை குறையாக படித்தால் என்ன தோன்றும்?


பொற்கால,ம் படத்தில் முரளி செய்வது போல , யாரோ களிமண் பொம்மை செய்து , உயிர் கொடுத்து உலவ விடும் காட்சி மனதில் தோன்றும். 




ஆனால் முழுமையாக படித்தால் தோன்றுவது வேறு..





அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.'' (அல் குர்ஆன் 6: 2)

இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல் குர்ஆன் 30: 20)


நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்.அல்குர்ஆன்: 37:11


உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரில் இருந்து அமைத்தோம் என்பதை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21: 30 )




மண் , களி மண், தண்ணீர் என ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை..


முன்பே சொன்னபடி, அறிவியல் என்பது தற்காலிக உண்மை .. இன்றைய அறிவியல் நாளைய குப்பை.. 


அப்படிப்பட்ட இன்றைய அறிவியலே கூட என்ன சொல்கிறது..


முதல் உயிரி தண்ணீரில்தான் தோன்றியது..


முதலில் மண் , அதாவது நிலம் தோன்றியது.. அதன் பின் தண்ணீர் ... அதன் பின் உயிரிகள் தோற்றம் என்பதுதானே அறிவியல். 


மேற்கண்ட வசனங்களை இந்த பின்னணியில் பாருங்கள்


சரி.. நம் உடல் எவற்றால் ஆனது? 




கார்பன், கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர், சோடியம் , மக்னீசியம்,. தாமிரம், துத்தனாகம், செலினியம் , மாலிப்டினம் , ஃப்லோரின், க்லோரின், அயோடின், மாங்கனீசு, கோபால்ட், இரும்பு, லித்தியம், ஸ்ட்ராண்டியம் , அலுமினியம் , சிலிக்கான், காரீயம், வெனெடியம், ஆர்சனிக், ப்ரோமின்  போன்ற பொருட்களால் ஆனதுதான் என் உடம்பு, உங்கள் உடம்பு, அமலா பாலின் உடம்பு...


இந்த தனிமங்கள் எல்லாம் மண்ணிற்கும் பொதுவானவை என்பவைதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம். 


ஆனால் மண்ணால் மட்டும் ஆனவன் அல்லன் மனிதன். களிமண், மண், ஈரமான மண், தண்ணீர் என்றெல்லாம் , வசனங்களில் வருவதை பாருங்கள்.


அதாவது, மனிதன் உருவாவதற்கு ஏதுவான தனிமங்கள் கொண்ட மண் , அவன் உருவாக ஏதுவான நிலை .. இவைதான் மனிதன் உருவாக காரணம் என்பது அறிவியல்..


ஆனால் அதற்கு அடுத்த நிலையில்தான் அறிவியல் தடுமாறுகிறது.


இந்த தனிமங்கள் எல்லாம் தானாகவே ஒன்று சேர்ந்து மனிதனாக உருவாகி விட்டதா? ஆம்.. அப்படித்தான் நிகழ்ந்தது என வீம்புக்காக அறிவியல் , அவனம்பிக்கையுடம் சொல்லி வருகிறது.. ( கடவுள் அல்லது ஏதோ ஒரு இறை சக்திதான் காரணம் என்று சொன்னால், அறிவியலும் ஆன்மீகமும் 100% இணைந்து விடும். இப்போதே கூட ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் நூல்களை படித்தால் ஆன்மீக புத்தகம் படிப்பது போலத்தான் இருக்கிறது..




ஆக, மனிதன் தோன்றும்போதே மனிதனாகத்தான்  தோன்றி இருக்க வேண்டும். இப்போதைய தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதன் சற்று மாறி இந்த வடிவை அடைந்து இருக்க கூடும், குரங்கு , பாம்பு, பல்லி , பன்றி போன்றவை மனிதனாக மாறி இருக்க வாய்ப்பில்லை.. மனிதன் , ஒரு வெளி சக்தி உதவியின்றி, தானகவே உருவாகி இருக்கவும் வாய்ப்பில்லை


மத நம்பிக்கைகளை விடுங்கள்.. காமன் சென்ஸ் அடிப்படையில் எது லாஜிக்கலாக இருக்கிறது பாருங்கள்.. குரங்கில் இருந்து மனித்னா அல்லது அவன் தனி பிறவியா?


2 . ஜன தொகை அதிகரித்து வரும் நிலையில் , இஸ்லாம் குடும்ப கட்டுப்பாட்டை ஏன் எதிர்க்கிறது ?


ஓர் இஸ்லாமிய பெரியவருடன் பேசுகையில் அவர் சற்று வித்தியாசமான பதில் அளித்தார்.


இஸ்லாம் மேல் செய்யப்படும் தவறான பிரச்சாரம் இது..  பாலுணர்வு என்பது இய்ற்கையானது. அதில் தவறு இல்லை. ஆனால் குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை பயன்படுத்தி , முறைகேடான பாலியல் உறவுகளில் ஈடுபடுவது தவறு.  உடல் உற்வை வெறும் கிளர்ச்சிக்காக ப்யனபடுத்த இந்த தடுப்பு சாதனங்கள் பயன்படுபவது தவறு.


இன்னும் மோசமான போன் செக்ஸ் சாட், இண்டர் நெட் சாட் போன்றவை இயற்கையான பாலியல் முறைகள் அல்ல.. இதுவெல்லாம்தான் தவறு.
ஆக, உண்மையாகவே எல்லொரும் ஆன்மீக உணர்வில் இருந்தால் , குடும்ப கட்டுப்பாடு சாதனங்களின் தேவையே இருக்காது என்பதே உண்மை


என்றார் அவர்...


3 குர் ஆனில் இடைச்செருகல் உள்ளதா?




குர் ஆனில் இடைசெருகல் இருப்பது கடினம்..


மூலப் பிரதிகள் இன்றும் கூட பல இடங்களில் பாதுகாத்து வரப்படுகின்றன. வேறு எந்த வேதத்துக்கும் இந்த பெருமை இல்லை.


பெரும்பாலான குர் ஆன் நூல்களில், எந்த மொழி பெயர்ப்பாக இருந்தாலும் , மூல எழுத் து வடிவங்களும் கொடுக்கப்படும்,. எனவே யாராவது தவ்று செய்தாலும், அந்த தவறு உடனடியாக களையப்படும். 




4  மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்ற பின் தானே குர் ஆன் அருளப்பட்டது? ஏன் அப்படி? அதற்கு முன் இறைத்தூதர் ஏன் அனுப்பபடவில்லை? 


முகமது நபிக்கும் முன் பல நபிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த கேள்வி அர்த்தம் அற்றது..



( மற்ற கேள்விகளுக்கு பதில் அடுத்த இடுகையில் ) 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா