Sunday, December 4, 2011

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?

ஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன ..  நல்  வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.

ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.

இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?

இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..

உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..

2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..

பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது  ) 

2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..

செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்


3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )

கணக்கு - கணக்குகள்  

நாக்கு - நாக்குகள்


வாத்து- வாத்துகள்

 வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )

உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.

தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்


அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.

வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் 

சரியா?

வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களை    நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்











38 comments:

  1. நன்றி தோழா, இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
    இத்தனை நாட்களாய் 'வாழ்த்துக்கள்'தாம்
    தெரிவித்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  2. நானும் வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வரேன் ;-)

    மிக்க நன்றி... இலக்கணங்களும் கற்றுக்கொண்டேன் :-)

    வாழ்த்துகள் சகோ :-)

    ReplyDelete
  3. நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.பார்வையாளன்,

    எப்போதோ படித்த குற்றியலுகரத்தை மீண்டும் எங்களுக்கு நியாபகப்படுத்தி... அருமையான... மிகவும் அவசியமான பதிவு.

    //தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்//---சொல்லவந்த விஷயத்தை மிகத்தெளிவாக அறிவுறுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி சகோ.

    //2 உயிர் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..//---இதில் "உயிர்மெய் எழுத்துப்பின்"... என்று வர வேண்டுமா..?

    ReplyDelete
  5. நன்றி நண்பரே...

    ReplyDelete
  6. நன்னூல் படிச்சி மண்டை காய்ஞ்சி போச்சி..
    எளிதாக புரியும் வண்ணம் அழகாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. உதாரணங்களுடன் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. மிக்க நன்றி......

    ReplyDelete
  9. அருமையான எடுத்துகாட்டுகள் .........
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. மிக்க நன்றி......

    http://puriyathapudhir.blogspot.in/

    ReplyDelete
  11. அருமையான எடுத்துகாட்டுகள் !
    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. அருமையான பதிவு! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  13. அருமை... மிக்க நன்றி..

    ReplyDelete
  14. அருமை சார் ! நன்றி!

    ReplyDelete
  15. அருமை சார்! நன்றி! இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. அருமையான விளக்கம்.. நன்றி..

    ReplyDelete
  17. //க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..//

    அன்பரே, தயவுசெய்து இலக்கணத்தை (விதியை)த் தருவீர்களா? நச்சினார்க்கினியரே "எழுத்துக்கள்" என்று கையாண்டிருப்பதுபோல் தெரிகிறதே. என் ஐயப்பாட்டை நீக்க உதவுங்கள். மிக்க நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. முத்துகள் என எழுதாமல் முத்துக்களோ பெண்கள் என கண்ணதாசன் எழுதி இருக்கிறார் என்றால் அதன்பேர் இலக்கணப்போலி... அதாவது வேண்டும் என்றே சில இடங்களில் இலக்கணத்தை மீறலாம்.. ஆனால் இலக்கணமே தெரியாமல் தவறாக எழுதக்கூடாது

      Delete
    2. எனக்கும் இந்த சொற்றொடரைக் குறித்த சந்தேகமே! நண்பரே!


      "முற்றும்" என்ற வார்த்தை சரிதானே?! - இதில் அப்படி வருகிறதே??!!... இதுபோல் இன்னும் வார்த்தைகள் உள்ளன "முட்டும்; உப்பும்; ...". இங்கே என் சந்தேகம் வலுக்கிறது.

      ஒருவேளை, இது உகார எழுத்தை தொடர்ந்து வரும் "மெய்" எழுத்தில் முற்றுப்பெறும் வார்த்தகளுக்கு பொருந்தாதோ? :) என்றொரு கேள்வி வந்தது.

      பின், "ஊற்றுக்குள் ஊற்று" என்பது சரிதானே?!... "சோற்றுக்குள் என்ன?"; "ஊற்றுங்கள்"; "தட்டுங்கள்"; இப்படி பல வார்த்தைகளு/கேள்விகளும் என்னுள் இப்போது... :) :(

      - விழியப்பன் (எ) இளங்கோவன் இளமுருகு

      Delete
  18. > ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு

    ஆய்தம் அல்லவோ அவ்வெழுத்தின் பெயர்? ஆயுதம் என்றால் போரில் பயன்படுத்தும் கருவியெனவே எண்ணினேன்.

    ReplyDelete
  19. class; class; a rare piece; enjoyed this;
    again and again thanks.

    ReplyDelete
  20. நண்பரே!

    முதலில் உங்களுக்கு "வாழ்த்துகள்"!... நன்றிகளும்!!

    எனக்கு இப்போது, பின்வரும் சந்தேகம் வந்துள்ளது! விளக்கம் கொடுப்பின் அகமகிழ்வேன்!!

    \\\\3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..////

    இந்த சொற்றொடரைத் தொடர்ந்த என்னுடைய கேள்வி:

    "முற்றும்" என்ற வார்த்தை சரிதானே?! - இதில் அப்படி வருகிறதே??!!... இதுபோல் இன்னும் வார்த்தைகள் உள்ளன "முட்டும்; உப்பும்; ...". இங்கே என் சந்தேகம் வலுக்கிறது.

    ஒருவேளை, இது உகார எழுத்தை தொடர்ந்து வரும் "மெய்" எழுத்தில் முற்றுப்பெறும் வார்த்தகளுக்கு பொருந்தாதோ? :) என்றொரு கேள்வி வந்தது.

    பின், "ஊற்றுக்குள் ஊற்று" என்பது சரிதானே?!... "சோற்றுக்குள் என்ன?"; "ஊற்றுங்கள்"; "தட்டுங்கள்"; இப்படி பல வார்த்தைகளு/கேள்விகளும் என்னுள் இப்போது... :) :(

    - விழியப்பன் (எ) இளங்கோவன் இளமுருகு

    ReplyDelete
  21. பழந்தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் 'எழுத்துக்கள்' என்னும் வழக்கே உள்ளது. 'கள்' என்பதற்கு மது என்ற பொருள் மட்டுமன்று, பல பொருள் உண்டு; அது விகுதியாகவும் வரும். 'கள்' விகுதி வரும்போது, 'க்கள்' என்று வருமா என்பதுதான் கேள்வி. பல சொற்களுக்கு நாம் 'க்கள்' இட்டு எழுதுவதில்லை. சான்றாக, வழக்கு, கணக்கு, தோப்பு. ஆனால், தமிழில் மரபுவழக்கு என்று உண்டு. 'முன்னோர் எப்படிச் செப்பினர் அப்படிச் செப்புவதும்தான் மரபு'. பண்டைக் காலம் முதல் தமிழ்ச் சான்றோர், வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள் என்றே எழுதி வருகின்றனர். இவற்றை மரபுவழக்காகக் கருதிப் பின்பற்றுவதே முறை. அவ்வாறு எழுதுவது தவறென்றால், உரையாசிரியர்கள், பாரதிதாசன், மறைமலையடிகள் முதலானோர் தமிழ் அறியாதவர்களா? இந்தப் பதிவில் சொல்லப்பட்ட செய்திகள்கூட ஆராய்ந்து சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழை வளர்க்கவிட்டாலும் சரி, சிதைக்காமல் இருந்தாலே நமக்குக் கோடி புண்ணியம்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பலரும் பூசுத்த வருகிறார்கள் .

      Delete
  22. எழுத்துக்கள் எப்படி எழுதுவது எழுத்துகள் என்றா?

    ReplyDelete
  23. தெரிந்துகொண்டேன் நன்றிகள் வாழ்த்துகள் ....

    ReplyDelete
  24. ஊற்றுகள், தோப்புகள் எல்லாமே பன்மைதான்.

    'ஊற்றுக்குள் ஓர் ஊற்று'... ஊற்றுக்கு உள்ளே ஓர் ஊற்று என்பதாகும். இங்கு ஊற்றுக்குள் என்பதே சரி.
    "சோற்றுக்குள் ஊற்று"... சோற்று (பாத்தி)குள்ளே ஊற்று, என்பதும் சரி.
    "எழுத்து மூன்று வகை".. எழுத்துக்கள் வராது. 'உயிர், மெய், உயிர்மெய், என எழுத்துகள் மூன்று வகை' என்பது எழுத்து என்ற சொல்லின் பன்மைதானே? வாழ்த்து போலத்தான் எழுத்து. இங்கு 'க்கள்' என்பது மிகை. (superfluous)

    வேற்றுமை உருபு சில சமயம் பன்மை போன்று மாயையைக் காட்டுவதால், சிலரூக்கு சந்தேகம் வருவது இயல்பே. இதில் ஆய்வுநோக்கில் ஆழமாக நாம் பயிற்றுவிக்கப்படாததால் இன்னும் தவராகவே எழுதி வருகிறோம். செய்தித்தாளிலும் இதுபோன்ற நிறைய தவறுகள் இடம்பெறுகிறது. நடைமுறையில் ஏற்றுக்கொண்டு விட்டோம்.

    ReplyDelete
  25. Fish என்பதே பன்மையானாலும் Fishes என்பது பன்மைக்கு பன்மையாக வரும் ஆங்கில வழக்கத்தைப் போல, வாழ்த்துகள், எழுத்துகள் போன்ற விதிக்குட்பட்ட பன்மைகள், பன்மைக்கு பன்மையாக வரக்கூடிய இடங்களில் வல்லினம் மிகுத்து வாழ்த்துக்கள், எழுத்துக்கள் போன்றவாறு எழுதலாம் என்பது தற்கால அறிஞர்களின் ஏற்பாக உள்ளது. உதாரணமாக 'கன்னட எழுத்துகளும் தெலுங்கு எழுத்துகளும் ஒரே வரிவடிவமுடைய எழுத்துக்களாகும்'

    ReplyDelete

  26. http://madhavipanthal.blogspot.com/2012/06/blog-post.html
    http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

    1) "க்" மிகலாம்...

    * ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
    => முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே!
    => முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே!

    * ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
    => கொலுசுகள், மிராசுகள்

    எழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே! போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்!
    ஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்! தழும்புக்கள் இல்லை!

    ReplyDelete
  27. http://tamilvu.org/node/154572?linkid=1924

    http://madhavipanthal.blogspot.com/2012/06/blog-post.html

    1) "க்" மிகலாம்...

    * ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
    => முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே!
    => முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே!

    * ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
    => கொலுசுகள், மிராசுகள்

    எழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே! போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்!
    ஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்! தழும்புக்கள் இல்லை!

    ReplyDelete
  28. Very Nice
    All people understand easly

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா