Saturday, December 3, 2011

ஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா? - இஸ்லாமிய விவாதம்


nirmal Nirmal said...
பிச்சை, அறிவியலை ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி எதையும் ப்ருவ் பண்ணவேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறன். அதில அப்படிதான் இருக்கு எதுக்கு ஒரு ப்ரூப் வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அறிவியல் கோணத்தில் பார்க்கணும் என்கிற மாயையில் வெளிவரும் வார்த்தையாய் தோணுது ஆன்மிக உணர்வில் இறை அருளில் எழுதிய வார்த்தைகளுக்கு அதற்க்கு அறிவியல் அர்த்தம் தேவை இல்லை என்பது எனது கருத்து. 





மிக அருமையாக சொன்னீர்கள். அறிவியல் நிரூபணம் கொடுத்துதான் , குர் ஆனை ப்ரூஃப் பண்ண வேண்டும் என அவசியம் ஏதும் இல்லை.. 

சில அறிவியல் புத்தகங்களை படிக்கும்போது, இதெல்லாம் குர் ஆனில் இருக்கிறதே என்ற வியப்பு தோன்றியது. அதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். 

கண்ணால் கண்டு விசுவாசிப்பவனை விட , காணாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான் என பைபிளில் ஒரு வசனம் வரும்.  நிரூபணம் எதையும் கேட்காமல் , குர் ஆன் போன்ற நூல்களை தன் உள்ளுணர்வு மூலம் உணர்பவர்களே அதை உண்மையாக உணர்ந்தவர்களாவார்கள்.. அறிவு ரீதியாக அலசும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் ஆன்மீக உலகில் இரண்டாம் இடத்தில்தான் வைக்கப்படுவோம். 

அறிவியல் என்பதே கற்பனை கோட்டை என்கிறபோது, அறிவியல் ரீதியாக குர் ஆனை நிரூபிக்க நான் முயலவில்லை. என வியப்பை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.  நண்பா. நேரில் இன்னும் நிறைய பேசலாம்.

***************************************************************************
அம்பேதன் said...
பிறிதொரு காலத்தில் அதன் நம்பக தன்மையில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது//
.

.
ஆமாம் அதான் அறிவியலின் பலம்!ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்கலாம்!அவனை கல்லால் அடிக்கவோ அல்லது நரகத்துக்கு பொ என்றோ சொல்ல மாட்டார்கள் 





அப்படி சொல்ல மாட்டார்கள்.. ஆனால் அதை விட கொடூரமாக நடந்து கொள்வார்கள். புதிதாக வரும் கண்டுபிடிப்பை மட்டம் தட்டுவார்கள். புதிய விஞ்ஞானியை நோகடிப்பார்கள். அவன் கண்டு பிடிப்பை தன் பெயரில் வெளியிடுவார்கள்.. ரேடியோவை கண்டு பிடித்தது மார்க்க்கோனி அன்று என்பது எத்தனை பேருக்கு தெரியும்



*******************************************************


அறிவியலை நீங்கள் எதிர்க்கிறீர்களா?


அறிவியல் நல்ல விஷ்யம்தான்.. ஆனால் அது சொல்வதை உண்மை என அப்படியே நம்புவது பாமரத்தனம். 

************************************************************************************


நரன் said...








இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?


http://pinnoottavaathi.blogspot.com/2010/10/blog-post_17.html இதில் இந்த பிரச்சினையை  அலசி இருக்கிறார்கள்.


***************************************************


மற்ற பல கேள்விகளுக்கு இங்கே பதில் அளித்துள்ளார்கள் http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.html

********************************************************************


 நான் ஏன் முஸ்லிம் இல்லை என ஒரு புத்தகம்  அனுப்பினேன், அதைப்பற்றி உங்கள் கருத்து?


இதற்கு இவ்வளவு பெரிய புத்தகம் தேவை இல்லை. என் மனம் ஆன்மீக நாட்டம் கொள்ளவில்லை. எனக்கு குர் ஆன் வேண்டாம் என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம்.

தவம் தவமுடையார்க்கே ஆகும். அவம் அதனை
அது இல்லாதவர் மேற்கொள்வது.

எல்லோருமே ஆன்மீக வாதிகளாக இருக்க வேண்டும் என எந்த கட்டாயாமும் இல்லை. நாத்திகவாதிகள் பலர் பெரும் தொண்டு ஆற்றியதை பார்த்து இருக்கிறோம். நல்லவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.. ஆகவே  உங்கள் மனம் ஆன்மீக மார்க்கத்தில் செல்லவில்லை என்றால் ஆன்மீகத்தை மறந்து விட்டு உங்களுக்கு பிடித்த வழியில் செல்லுங்கள். தவ்றேதும் இல்லை. 

******************************************************************

கிருத்துவம் இயேசு சிலுவையில் அறையபட்டார்னு சொல்லுது!ஆனால் குரானோ அவர் கொள்ளபட்டாரே அன்றி சிலுவையில் அறையப்படவில்லைன்னு சொல்லுது!எது உண்மை?

எந்த புத்தகத்தில் அப்படி படித்தீர்கள்? எந்த பதிப்பகம், எந்த மொழி பெயர்ப்பு? 

***********************************************




(  மேலும் சில கேள்விகளை அடுத்த இடுகையில் விவாதிக்க இருக்கிறோம் ) 

9 comments:

  1. ஸலாம்

    ஒரு சில பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை சகோ ...

    மற்ற படி ஓகே ..

    ReplyDelete
  2. இன்றுதான் அனைத்து இடுகைகளையும்
    படிக்க முடிந்தது. பதிவுகளும், கேள்விகளுக்கான‌
    பதில்களும் மிக அருமை. நபிமொழி ஒன்று,

    மனதை நாசப் படுத்தும் நான்கு காரியங்களில்
    ஒன்று 'முட்டாள்களுடன் விவாதம் செய்வது'.

    ஆதலால் உங்களது Concentration/Audience
    நல்லோர் மற்றும் அறிவுடையோராய் இருக்கட்டும்.

    ReplyDelete
  3. குர்ஆனின் ஆரம்பத்தில்
    'இது பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டக்
    கூடியது' என்றும் பிறிதொரு இடத்தில்

    'இக்குர்ஆன் மூலமாக பலர் நேர்வழி
    பெறுவார்கள் சிலர் வழி தவறியும்
    போவார்கள்' என்ற ரீதியிலும் சொல்லப்
    பட்டிருக்கிறது.

    நேர்வழி பெற நினைப்பவர்கள் குர்ஆனை
    கண்ணியத்துடன் அணுகுவார்கள்.

    ReplyDelete
  4. இஸ்லாம் இந்தியாவில் எப்படி பரவியது?அன்பாலா?சாந்தியாலா சமதனதிலா?இல்லையே இஸ்லாம் அல்லாதவர்கள் மீது போட்ட வரிகளினால்!இப்படிதான் மதத்தை வளர்க்கனுமா?

    ReplyDelete
  5. சவுதியில் இன்னும் பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பதில்லை!கேட்டால் அப்படி அனுமதித்தால் அவர்கள் விபசாரம் செயவாரகால்ம்!இதான் இஸ்லாம்!இதையும் பேசு!

    ReplyDelete
  6. பெரியார்December 4, 2011 at 4:09 AM

    கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை

    ReplyDelete
  7. http://www.rajanleaks.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D


    இதையும் படி!

    ReplyDelete
  8. பெரியாருக்கெல்லாம் பெரியார்December 4, 2011 at 7:18 AM

    [[[கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை]]] ===இதற்கு

    ஆதாரம் இல்லை ஆதாரம் இல்லை ஆதாரம் இல்லை

    ReplyDelete
  9. //Anonymous said...

    இஸ்லாம் இந்தியாவில் எப்படி பரவியது?அன்பாலா?சாந்தியாலா சமதனதிலா?இல்லையே இஸ்லாம் அல்லாதவர்கள் மீது போட்ட வரிகளினால்!இப்படிதான் மதத்தை வளர்க்கனுமா? //

    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
    நதிகளில் சில துளிகள்.

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். ‍ அதிசயத்தக்க‌ வரலாறு. *******


    ****** இந்தியாவில் இஸ்லாம் அல்லாதவர்கள் மீது போட்ட (விதித்த) (ஜஸியா) வரி. *******

    ***** இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா? *******

    ****** இஸ்லாம் ஏன் பரவுகிறது? இஸ்லாம் வளர்ச்சிக்கு காரணம் என்ன? எப்படி? *******

    ****** இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா? *******


    ******* இஸ்லாம் இந்தியாவுக்கு பொருந்துமா? *******


    ********இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க? – *******


    ******* நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. - *******

    .

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா