Saturday, February 4, 2012

மிலாடி நபி வாழ்த்தை விபரம் புரியாமல் எதிர்த்த இஸ்லாமிய நண்பர்


 நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடுவது  வழக்கம்.   நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்த மற்ற மதத்தினரும் இந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.

இந்த அடிப்படையில் ஓர் இஸ்லாமிய நண்பருக்கு மிலாடி நபி வாழ்த்துகள் சொன்னேன். அவர் டென்ஷனாகி என்னை முறைத்தார்.. நீங்கள் இப்படி சொல்வது எங்கள் மதத்துக்கு எதிரானது.. நாங்கள் அல்லாவை மட்டும்தான் வணங்குவோம். நபியே ஆனாலும் , அவரை கொண்டாட ஒரு பண்டிகை தேவை இல்லை.. அவர் பிறந்த நாளை கொண்டாடுவது இஸ்லாமிற்கு எதிரானது.. இனி யாருக்கும் வாழ்த்து சொல்லாதீர்கள் என சொல்லி சென்றார்.


எனக்கு அதிர்ச்சி... எனக்கு தெரிந்து இதை பல இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிரார்கள்.. வாழ்த்து சொல்கிறார்கள்.. இவர் என்ன புதிதாக சொல்கிறாரே என நினைத்தேன்,, இணைய நண்பர்கள் சிலரும் அவர் கருத்தை பிரதிபலித்தனர்.. இவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான்.. உண்மையான இஸ்லாமியர்கள்தான் பிறகு ஏன் இப்படி சொல்கிறார்கள் என சிலருடன் பேசிய போதுதான் , உண்மை தெரிந்தது...

இணை வைப்பு என்பதில் ஏற்படும் குழப்பமே இது..

இஸ்லாமிய விதிகளின்படி , அல்லாவுக்கு   நிகராக யாரும் இல்லை..பகுத்தறிவின்படியும் இது ஏற்கத்தக்கதே..

மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்சென்று பார்த்தாலும், இதில் இருக்கும் லாஜிக் புரியும்..

ஒருவர் என்னதான் சிறந்தவராக இருந்தாலும் , உலகைப்படைத்த ஏதோ ஒரு பிரமாண்டமான சக்திக்கு இணையாக அவர் ஆகி விட முடியாது..

ஆனால் சிறந்த ஒருவரை காணும்போது நம் மனதில் ஒரு மரியாதை ஏற்படும், அதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பாணியில் வெளிப்படுத்துவார்கள்..

இப்படி மரியாதை செய்வதை இஸ்லாம் தடுத்தது கிடையாது,,,

இதோ ஆதாரங்கள்...

1 “உர்வா அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி)  பெரு மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்த பிறகு, தங்களுடைய மக்களிடம் திரும்பி வந்த பிறகு, மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும், மற்றும் மன்னர்  நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை, முஹம்மது (ஸல்) நபிக்கு அவர்களுடைய தோழர்கள் மரியாதை கொடுத்ததை போன்று, கொடுக்க வில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டு கழுவும் பொழுது, அந்த தண்ணீரை சஹாபா (ரலி) பெரு மக்கள் கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல் தங்கள் கைஹளில் ஏந்தி கொண்டார்கள், பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும், தலையிலும் தடவி கொண்டார்கள். மேலும் முஹம்மது (ஸல்) நபி அவர்கள் உத்தரவு ப்ரபித்தால் அதை தலையாய கடமையாக ஏற்று செய்கிறார்கள். முஹம்மது (ஸல்) நபி அவர்கள் பேசும் போது, வாய் மூடி மெளனமாக கேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலி) பெரு மக்கள் ரசூல் (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பாக்காமல் மரியாதை செய்தார்கள்.  (ஆதாரம் – AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORE

ரசூல் (ஸல்) அவர்கள் சிலவற்றின் மீது கோபமாக இருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் எழும்பி நின்று குனிந்து ரசூல் (ஸல்) அவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களை முத்தம் இடுகிறார்கள். பிறகு உமர் (ரலி) கூறுகிறார்கள், யா ரசூலுல்லாஹ் (ஸல்), நாங்கள் அல்லாஹ்வை எங்களுடைய இறைவனாகவும், உங்களை அல்லாஹ் உடைய ரசூலாகவும் (ஸல்), இஸ்லாம் ஐ எங்களுடைய தீனாகவும், அல் குரானை எங்களுடைய வழிகாட்டியாகவும், தலைவராகவும் சந்தோஷத்துடன் பொருந்தி கொண்டோம். அல்லாஹ் மேலும் உங்களுடன் (ஸல்) நன்மை பாராட்டுவானாக என்று உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சந்தோசம் அடையும் வரை சொல்லி கொண்டே சென்றார்கள். 


(தப்சீர் இப்ன் கதீர்) மற்ற விளக்க உரையாளர்களும் மேலே சொன்ன நிகழ்வை சொல்லி காட்டு கிறார்கள்.
இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தை முத்தமிட்டதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விஷ்யத்தை சொல்ல வேண்டும். தொழுகையில் கை கட்டி தொழுவது வேறு. பெரியவர்கள் முன் மரியாதை நிமித்தம் கை கட்டுவது வேறு,.
இரண்டையும் குழப்புவது கூடாது.. 

நல்லவர்களை மதிப்பது , நினைவு கூர்வதால் அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் தோன்றும்.
அந்த அடிப்படையில், மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, நபிகள் பிறந்த நாளை கொண்டாடுவது நம் கடமை..
அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துகள்... 



ரஜினியை வைத்து போட்டி கூட்டமா? இந்த ஈனப்பிழைப்புக்கு செத்து தொலைக்கலாம் - சாரு ஆவேசம்.

பொறாமை காரணமாக ரஜினியை வைத்து போட்டி கூட்டம் நடத்தி இலக்கிய முன்னோடிகளை சிலர் அவமானப்படுத்துகின்றனர். இப்படி ஈனத்தனமான நடந்து கொள்வதை விட செத்து தொலைக்கலாம் என சாரு நிவேதிதா வேதனையுடன் பேசினார்..

எக்ஸைல் விவாத அரங்கம் இன்று சென்னையில் நடந்தது. வழக்கமான கூட்டம் போல இல்லாமல் , மிக வித்தியாசமாக  நடந்தது. எதிர் கருத்து இருந்தாலும் தாரளமாக சொல்லலாம் என பேச்சளவில் இல்லாமல் , உளப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது..

லக்கி, அதிஷா, ராஜ ராஜேந்திரன்,பஞ்சாட்ச்ரம் , சிவம் சங்கர் , பார்த்திபன் நெடுஞ்செழியன் , துரோகி ( மனுஷ்யபுத்திரன் அல்ல,, துரோகி என்ற பெயர் கொண்ட இனிய நண்பர் )  உள்ளிட்ட பலர் பேசினர். 

பெரும்பாலும் பாராட்டினாலும், எதிர்கருத்தையும் சொன்னார்கள்.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது சாருதான்.பாரம்பரிய் ஆடையில் இருந்தார். 

அடுத்தவரை பேச அழைக்கும் முன் , முந்தைய பேச்சாளர் பேச்சுக்கு பதில் அளித்தது சிறப்பாக இருந்தது.

க்வாண்டம் மெக்கானிக்ஸை வைத்து குறு நாவல் எழுத ஆவலாக இருப்பதாக சொன்னார். தன் எழுத்து தன் ரத்தம் போன்றது. இதில் ரிப்பீட் ஆவதௌ தவிர்க்க முடியாது என்றார்.

தான் காலேஜ் டிராப் அவுட் என்று சொன்னதை சில குமாஸ்தா எழுத்தாளர்கள் கிண்டலடித்தார்கள்..  டிகிரி முடிக்காமல் எப்படி டெல்லி வேலை கிடைத்தது என கேள்வி எழுப்பினார்கள்.. முட்டாக்***   என்ற வசனம் நினைவுக்கு வருகிறது..

அந்த காலத்தில் இந்த வேலைக்கு டிகிரி தேவையில்லை என்பது கூட தெரியாமல் பேசுவதைத்தான் குமாஸ்தா மனோபாவம் என்கிறேன்..  என்று விக்கி லீக்ஸ் விமலுக்கு சூடு வைத்தார் 

பத்ரி பேசுகையில், சாரு கிழக்கில் எழுத போகிறார் என்ற செய்தி வந்ததும்,  ஒருவர் ( மனுஷ் ?? )  இதை தடுக்க  முயன்றார் என்ற பகீர் தகவலை சொன்னார். 

மனோஜ் பேசுகையில் நாவலின் சிற்ப்பை சொன்னார்.

சீனிவாசன் தனக்கே உரிய பாணியில் , பட்டையை கிளப்பினானார்..

இதை எல்லாம் வீடியோவில் பார்க்கலாம் .. விரைவில் அப்லோட் செய்யப்படும்.

இதில் ஞானி பேசியதுதான் ஹைலைட்.. காதலில் பொசசிவ்னெஸ் என்பார்களே.. அதைப்போன்ற காதல் கலந்த பொசசிவ்னெஸுடன் பேசினார்..

இந்த அளவுக்கு அவர்கள் இடையே நட்பு இருப்பது இன்றுதான் தெரிந்தது..

சாரு இண்டர்னெட்டில் எழுதக்கூடாது.. பழைய காலம் மாதிரி,  எழுத்தாளர்களுக்காக மட்டும் எழுத வேண்டும் என்றார்.


கடைசியில் பேசிய சாரு, வழக்கத்துக்கு மாறாக ஆவேசமாக பேசினார்..

டிசம்பர் 6ல் , காமராஜ் அரங்கில் எக்சைல் விழா நடந்தது,,, அங்கு கூடிய கூட்டம் என் மேல் அன்பால் வந்தால் கூட்டம்.

இதை பார்த்து சிலருக்கு பொறாமை..  தூங்க முடியாமல் தவித்தார்கள்.. போட்டி கூட்டம் நடத்த ஆசை..ஆனால்  கூட்டம் எப்படி சேர்ப்பது.. 

கடைசியில் ரஜினியை காட்டி கூட்டம் சேர்த்தார்கள்.. ரஜினி எளிய மனிதர். போலியாக நடிக்க தெரியாதவர்.. 

தைரியம் இருந்தால் அவரை முதலில் பேச சொல்லியிருக்கலாமே. அப்படி பேசினால், அவர் முடித்ததும் கூட்டம் கலைந்து விடும்..

கூடி இருந்தவர்கள் ரஜினியை பார்க்க வந்தவர்கள்.. என்ன நிகழ்ச்சி , என்ன பாராட்டு என அவர்களுக்கு தெரியாது..

இப்படி செய்து இலக்கியத்தை வளர்க்க முடியுமா.. இப்படி கேவலமாக வாழ வேண்டிய நிலை வந்தால், நானாக இருந்தால் செத்து இருப்பேன்.

தான் இயக்குனர் காலில் விழ தயார் என்கிறார் ஜெயமோகன்..

இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வதற்காகவா கரிச்சான் குஞ்சு, சி சு செல்லப்பா, வெ சா போன்றோர் அன்று தியாகம் செய்தார்கள்.. இலக்கியம் வளர்த்த முன்னோடிகளை இவர்கள் இழிவு செய்கிறார்கள்..

இவ்வாறு ஆவேசமாக பேசினார்...


Friday, February 3, 2012

ரஜினியும் , மனுஷ்யபுத்திரனின் வெட்டி பந்தாவும்...


சில தினங்களுக்கு முன் அல்ட்டிமேட் ரைட்டரின் எக்சைல் நாவல்  வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடந்தது. இலக்கியம் புத்தியிர் பெற்றதற்கு பல மூத்த இலக்கியவாதிகள் மகிழ்ந்தனர். இந்திரா பார்த்தசாரதி வெளிப்படையாகவே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆனால் மனுஷ்யபுத்திரனுக்கு மட்டும் இதில் எரிச்சல். வெகு நாட்களாக தூக்கமின்றி தவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஏதேனும் செய்ய துடித்தார்..

ஆனால் என்ன செய்வது.? அவர் ஒரு விழா எடுத்தால் , அரங்கில் கால் பங்கு கூட நிரம்பாது. அந்த கால் பங்கு கூட்டத்துக்கே ஏராளமாக செலவு செய்ய வேண்டும். பிரியாணி வாங்கி கொடுங்க வேண்டும். உயிர்மையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்..

இந்த நிலையில்தான் ரஜினியின் தனிப்பட்ட நட்பை தன் வியாபாரத்துக்கு பயன்படுத்த நினைத்து , அவரை அழைத்து விழா நடத்தினார்...


ரஜினி, வைரமுத்து, இறையன்பு என பலரை அழைத்து வர செய்த கூட்டத்தையும், சார் என்ற தனி நபருக்கு வந்த கூட்டத்தயும் ஒப்பீடு அற்ப சந்தோஷம் அடைந்து கொள்கிறார்..


ரஜினிக்கு அதிக கூட்டம் வந்தது உண்மைதான்,, ஆனால் ரஜினிக்கு அடுத்து தமிழ் நாட்டில் புகழ் பெற்ற ஒரே ஒருவர்- சாருதான் என அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், எக்சைல் விவாத கூட்டத்துக்கு தன்னால் வர முடியாது , ரொம்ப பிசி.. அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் கூப்பிடாஹ.,.. ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாஹ என கதை  விடுகிறார்.

அவரைப்ப்போன்ற ஒருவர் விழாவுக்குதான் அசிங்கம் என நினைத்து அவரை யாரும் அழைக்காத நிலையில் இந்த வெட்டி பந்தா...





Thursday, February 2, 2012

நீங்களும் கவிஞர் ஆகலாம் - அத்தியாயம் 1 பட்டியல் கவிதை

என்னதான் துரோகம் செய்தாலும் , கவிஞர் என்ற பந்தா இருந்தால் , யாரும் திட்ட மாட்டார்கள்.

ஜொள்ளு விட்டாலும் கூட , அது கவிதை என நினைத்து யாரும் தவ்றாக நினைக்க மாட்டார்கள்..


யாரையேனும் அவதூறு செய்ய வேண்டுமானால், கவிதை எழுதி திட்டினால் , அவதூறு வழக்கில் இருந்து தப்பலாம்..

இப்படி பல அனுகூலங்கள் இருப்பதால், பலரும் கவிதை எழுத ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ள்னர்,

சிலருக்கோ ஆர்வம் இருந்தாலும், எப்படி எழுதுவது என்ற ஐடியா இல்லாமல் அவதியுறுவதாக ஒரு தகவல்  நம் கவனத்துக்கு வந்தது..


கவிதை எழுதுவது பெரிதல்ல.. கவிதை எழுதாமல் இருப்பதே பெரிய விஷயம்.. ஆங்அகு மானே , தேனே என போட்டு எதையாவது கிறுக்கினால் அது கவிதை எனப்படும்..

ஆனால் அப்படி எழுதினால் உங்களை கவிஞர் இல்லை என இலக்கியவாதிகள் சொல்லி விடுவார்கள்

இலக்கியத்தரமிக்க கவிதை குறித்தே இந்த தொடரில் பார்க்க போகிறோம்.

கவிதையில் பல வகை உண்டு,

பட்டியல் கவிதை, அட்டவணை கவிதை, வாய்ப்பாடு கவிதை,  கதை கவிதை, புதிர் கவிதை, விடுகதை கவிதை, பொன் மொழி கவிதை, விள்ங்காத மொழியில் எளிமையான கவிதை , எளிமையான வரிகளில்  விளங்காத கவிதை என்றெல்லாம் உண்டு..

அனைத்தையும் பார்க்கலாம்


முதலில் நாம் காண இருப்பது பட்டியல் கவிதை..

அது என்ன பட்டியல்?

தமிழில் லிஸ்ட் என சொல்வோமே..அதுதான் பட்டியல்..

எதையாவது லிஸ்ட் போட்டு விட்டு, கடைசியில் ஒரு பொன் மொழி சொன்னால் கவிதை ரெடி..

எளிய உதாரணம் பாருங்கள்.

வேறு எந்த லிஸ்ட் தெரியாவிட்டாலும், காய் கறி லிஸ்ட் தெரிந்து இருக்கும்...

அதை பாருங்கள்’

அழுகல் கத்தரிக்காய் கால் கிலோ


விளங்காத வெண்டை அரை கிலோ


அழுகிய அவரை கொஞ்சம்


வாசம் இல்லா கருவேப்பிலை இலவசமாக


கேரட் 200


நூக்கல் 1 கிலோ


சகதி படிந்த சாலை


நெரிசல் மிக்க சந்தை...

இப்படி லிஸ்ட் போட்டுக்கொண்டே செல்லுங்கள்..

கடைசியில் ஒரு ட்விஸ்ட்...


எனக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை..


என் கண்ணில் தெரிவது இதெல்லாம் இல்லை..


காய்கறி விற்கும் பெண் தான்...  


இப்படி எழுதலாம்..

அல்லது வேறொரு முடிவு..



இவையெல்லாம் எரிச்சல்தான் என்றாலும்,
இவையெல்லாம் இல்லாத
சந்தையை நினைத்து பார்க்கவே முடியவில்லை

இந்த டெம்ளேட்டில் எதை வேண்டுமானாலும் பட்டியலிட்டு, ஒரு பொன் மொழியை உதிர்த்தால் கவிதை ரெடி...

உங்களுக்கு நினைவு வரும் பட்டியல் கவிதைகளை யோசித்து பாருங்கள்

( தொடரும் )




Wednesday, February 1, 2012

விக்கி லீக்ஸ் விமலுக்கு பகிரங்க சவால்

பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்களை விட , குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்க்ள் தான் இங்கு அதிகம். ( காசு கொடுத்து பெயர் வாங்குவது தனி ரகம் )..

நமது விக்கி லீக்ஸ் விமல் , இதில் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும் ..

இவர் சாருவை வசை பாடுவதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது,.  இலக்கிய உலகின் முடி சூடா மன்னனாக இருக்கும அவரைவசை  பாடி விளம்பரம் தேடுவது , மனசாட்சிப்படி தவ்று என்றாலும் , லாஜிக்படி  விமலுக்கு லாபம்தான்.

ஆனால் சம்ப்ந்த்மே இல்லாமல் , எஸ் ராவை  வசை பாடுவதுதான் , நெருடல்..
எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் அவர்..
இப்படி எல்லோரயும் வசை பாடும் அவர் துரோக புத்திரனியும் வசை பாட தயாரா?
கண்டிப்பாக வசை பாட மாட்டார்,,,  காரணம் சில லாபங்க்கள்...


லாபம் கருதிீப்படி செய்யவில்லை என விக்கிலீ க்ஸ் விமல்சொ ல்வாரேயானால் , அதை அவர் நுரூபிக்க வேண்டும்..
துரோக புத்திரனை வசை பாட வேண்டும்...

இந்த சவாலுக்கு விக்கிலீக்ஸ் விமல் தயாரா ?







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா