Saturday, January 8, 2011

புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்

புத்தக கண்காட்சி என்றால் புத்தகங்களை பார்ப்பதை விட பதிவர்களை பார்ப்பது தனி சுவாரஸ்யம்..

எழுத்தின் மூலம் பதிவர்களை பற்றி ஒரு பிம்பம் மனதில் உருவாகி இருக்கும்.. நேரில் பார்க்கும்போது  கிடைக்கும் அனுபவம் வேறு.



அனைவரையும் பார்க்கலாம்  என்று ஆசைப்பட்டாலும், யாரும் வரவில்லையென்றால் என்ன செய்வது..



கொலை வெறியுடன் கேபிள்..சமாதானப்படுத்தும் நண்பர் 

ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் 

 நண்பர்கள் 





ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் - நர்சிம் 



மினிமம் கியாரண்டி ( இந்த வார்த்தை எப்படி கிடைத்தது என்பது பிறகு... ) உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்து, நண்பர் பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், பாஸ்கர்  ஆகியோருடன் சேர்ந்து செல்ல நினைத்தேன்...

கால் செய்ததுமே , வர சம்மதித்த பிரபாகரனின் அன்பு மகிழ வைத்தது.. சிவகுமாரும் வர ஒப்புக்கொண்டார்.. பாஸ்கரும் வர சம்மதித்தார்.. (  ஆனால் பாஸ்கர்  கால் செய்தபோது நான் அட்டெண்ட் செய்ய முடியவில்லை.. எனவே அவர் இன்னொரு நண்பருடன் கூட்டணி அமைத்துகொண்டு விட்டார் ) .

காலையிலேயே பலர் ஆர்வமாக புத்தகம் பார்க்க வந்தது சந்தோஷமாக இருந்தது...

பிரபாகரன் தான் முதலில் வந்தார்...
அவருக்கு முன் நான் வந்து விட்டது அவருக்கு தெரியாது...

அவர் என்ன செய்கிறார் என்பதை அவருக்கு தெரியாமல் புலனாய்வு செய்தபோது கிடைத்த ஏடாகூடா தகவல்கள் தனி பதிவில்...

அத்ன் பின் அவரை சந்தித்தேன்..

எழுத்தின் மூலம் மனதில் உருவாக்கி வைத்து இருந்த பிம்பம் , சரியாக பொருந்தி இருந்தது...

அதன் பின் சிவகுமார் வந்து சேர்ந்தார்..

எழுத்தில் பார்த்ததை விட , இன்னும் சுவாரஸ்யமானவராக தோன்றினார்..

முதல் சந்திப்பிலேயே நெருக்கமானவாராக மாறினார்...

பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கினர்..

ஒவ்வொருவரையும் பற்றி தனிதனியாக எழுத வேண்டும்..

பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்த படி இருந்தனர்..

எழுத்தில் தோன்றுவதை விட பல மடங்கு அன்பானவராக , திறமையானவராக,

பக்குவமானவராக தோன்றியவர் கே ஆர் பி செந்தில்..

சத்தியமாக எதிர்பார்க்கவில்லை...
ஆச்சர்யப்படுத்திவிட்டார்...
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது..

அதன் பின் பதிவர்களின் ஆக்க பூர்வமான கலந்துரையாடல்கள் துவங்கின...

  நடிப்பில் சிறந்தவர் கம்லா , ரஜினியா என்ற பிரச்சினை சூடு பிடிக்க ஆரம்பித்தது..

கேபிள் ஒரு கட்டத்தில் டென்ஷனாகியதையும், சக பதிவர்கள் அவரை சமாதான படுத்தியதையும் காண கண் கோடி வேண்டும்..

அவரை சமாதானம் செய்ய வில்லை என்றால் என்னை பிய்த்து எறிந்திருப்பார் என்பது அவர் ஆவேசத்தை  உங்களுக்கே அதை பார்த்தால் புரியும்( படம் இணைக்கப்பட்டுள்ளது )

 நினைப்பதை பளிச் என சொன்ன  மிகவும் கவனத்தை கவர்ந்தார்..

இடது சாரிகருத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் , அதில் இருக்கும் ஆர்வம் , அதை விளக்கும் திறமை என அமர்க்களப்படுத்தினார்.,,

        கம்யூனிச  தத்துவம் உன்னதமானது... அன்பை போதிப்பது...  தனக்குரிய வாய்ப்புக்காக காத்து இருக்கிறது..

அது வெல்லும்  காலம் வரும்போது, உலகுக்கு நல்லது என உதாரணம் மூலம் விளக்கினார் அவர்..


பதிவர் டம்பி மேவீ நீண்ட நாள் பழகிய நண்பர் போல பேசிய அன்பு மறக்க முடியாதது...( அவர்  தொலை பேசி என் வாங்க மறந்து விட்டேன் )

பதிவர் எல்கே த்ன் கருத்துக்களால் என்னை கவர்ந்தார்..

கார்க்கியை முதன் முதலாக பார்க்கிறேன் என்ற உணர்வே வரவில்லை...

தண்டோரா, நர்சிம், ஜெட்லீ போன்றாரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது...

சிறப்பாக அமைந்த சந்திப்பை மேலும் சந்தோஷமாக்க, சிவகாசி மாப்பிள்ளையுடன் போனில் பேசினோம்...

ஒவ்வொருவருடனும் இன்னும் நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற நிலையிலேயே , விடைபெற்று கிளம்ப வேண்டியதாயிற்று..

விரைவில் மெகா சந்திப்பு நடத்துங்கள்...

வாங்கிய புத்தகங்கள் குறித்த பதிவு அடுத்த பதிவில்.....

30 comments:

  1. அடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்..

    ReplyDelete
  2. படம் இணைக்கப்பட்டுள்ளது ) ?

    where?

    ReplyDelete
  3. அண்ணன் KRP இதில் எங்கே இருக்கிறார்?
    எந்த புகைப்படம்?

    ReplyDelete
  4. அடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்."

    உங்களை சந்திக்க எங்களுக்கும் ஆசைதான்

    ReplyDelete
  5. nalla santhippu , nesan vanthullathaaka therikirathu. anaivaraiyum snathikka aasai. viraivil chennai varukirom maduraiyil irunthu...

    ReplyDelete
  6. Hope next year, I will be able to come. Very eager to come but right now not possible.

    ReplyDelete
  7. பார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

    ReplyDelete
  8. புத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்

    http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி பார்வையாளன். மொத்தமே ஐந்து நிமிடங்கள்தான் நாம் ஒருவரைஒருவர் பார்த்துக்கொள்ள முடிந்தது. பேசியது இரண்டே வார்த்தைகள்தான். என் உடன் வந்த நண்பருக்கு ஐந்து மணிக்குத் திரும்ப வீட்டிற்கு வரவேண்டிய கட்டாயம். காலையில் இருந்து நான் அங்குதான் இருந்தேன். நீங்கள் அங்கே காலையில் இருந்து இருந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நண்பரை ட்ராப் செய்துவிட்டு மறுபடி மாலை ஏழு மணி வாக்கில் திரும்ப வரலாம் என்றுதான் எண்ணம். ஆனால் தி நகரில் வேறொரு நண்பர் பிடித்துக்கொண்டு விட்டார்.

    உங்கள் கைபேசி எண்ணை gopica@gmail.com எனக்கு அனுப்புங்கள். நன்றி.

    ReplyDelete
  10. ஆமாண்ணே ..உங்களை சந்திச்சதும் எனக்கும் ரொம்ப சந்தோசம்...

    உங்க மெயில் ஐடி தாங்க ...நம்பர் அனுப்புறேன்

    ReplyDelete
  11. பதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்

    ReplyDelete
  12. அண்ணே நீங்க இந்த போடோவில் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க முதல

    ReplyDelete
  13. அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கடந்தவருட நினைவுகள் வருகின்றது நண்பரே.
    வெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்.

    ReplyDelete
  15. அடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்...

    ReplyDelete
  16. அடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா.? நான் என்ன தப்பு செஞ்சன்.. எதுக்கு என்ன ஒதுக்கிட்டீங்க.? உங்க பேச்சு கா..!!

    ReplyDelete
  17. >>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..!!

    ReplyDelete
  18. இதுல நீங்க எங்க பாஸ் இருக்கீங்க?

    ReplyDelete
  19. இந்த ஆளு இணையத்துலதான் தமிழை கொலை செய்கிறார்னா, நேர்லயும் போட்டுத்தள்ளுறாரா?

    காவலனுக்கு தகவல் சொல்லுங்க.

    :-)

    ---------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

    ReplyDelete
  20. அண்ணன் KRP இதில் எங்கே இருக்கிறார்?
    எந்த புகைப்படம்

    கண்டு பிடியுங்கள் , பார்க்கலாம்,,உங்கள் ஊகம் என்ன ?

    ReplyDelete
  21. >>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..!!

    தனி பதிவா போடணும்

    ReplyDelete
  22. அடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா.? நான் என்ன தப்பு செஞ்சன்”

    உங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  23. அடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்.”

    வாங்க ... .. அதற்குமுன் வந்தாலும் சொல்லுங்க ... சந்திக்கலாம்

    ReplyDelete
  24. பார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..

    ஹா ஹா

    ReplyDelete
  25. வெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்”

    அந்த நல்ல நாளுக்காக காத்து இருக்கிறோம்

    ReplyDelete
  26. அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.

    அன்புக்கு நன்றி

    ReplyDelete
  27. புத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  28. பதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்”

    குட் ,, போய்ட்டு வந்து கருத்தை சொல்லுங்க

    ReplyDelete
  29. தங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி.....

    கேபிள் தல கமல் அபிமானி என்பதை தவிர வேறு எந்த சிறு குறையும் இல்லாதவர்.....

    அவரோடு பேசும் போது கமலையோ, ரஜினியையோ தவிர்த்துவிட்டால் மிகவும் சுவாரசியமான பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்......

    மேலும் அவர் சினி ஃபீல்டில் இருப்பவர்... நாமோ சினிமாவை பார்ப்பவர்... நம்மை விட அவருக்கு சில விஷயங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம்... அதனால்தான் என்னால் ரொம்ப பேச முடியவில்லை....

    எந்திரன் அவரை பொறுத்தவரை மட்டுமே தோல்வி படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்காரர் நஷ்டப்பட்டுட்டாராம்....

    மன்னாரு அம்பு அவரை பொறுத்தவரை மட்டுமே மாபெரும் வெற்றிப்படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்ல மட்டும் டிக்கெட் கிடைக்கலையாம்.... ஷோவை கேன்சல் பண்ண விஷயம் தெரியாமல் டிக்கட் கிடைக்கல... ஹிட்டு என்னும் அறியாமல் சொல்வரை சிரித்து கொண்டே அரவணைத்து செல்ல வேண்டும்

    ReplyDelete
  30. மாப்பிள்ளை . சூப்பர் . அவரை சரியாக கணித்து வைத்திருக்கிறீர்கள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா