Monday, February 7, 2011

“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் !!! நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்


ஒரு படைப்பு என்பது நம்மை யோசிக்க வைக்க வேண்டும்.. நமக்கு சவால் விட வேண்டும்...

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு வழங்கி இருக்கும் தேகம் நாவலின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு வித அனுபவத்தை தரக்கூடியது அந்த நாவல்..


அதனால்தான் விற்பனையில் நம்பர் ஒன் என்ற நிலையில் இருக்கிறது...

அந்த நாவல் குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் சொல்ல்லாம்... சொல்லிக்கொண்டே இருக்கலாம்...

தேகம் நாவல் தன்னை எவ்வாறு பாதித்த்து என நண்பர் நிர்மல் சொல்வதை சற்று கேளுங்கள்

*************************************************
தேகம் வாசிப்பு அனுபவம் -2  Mrinzo Nirmal 

இந்த நாவல் படித்து முடித்த பின்பும் எனது நினைவில் இந்த நாவலின் எழுத்துகள் தைத்துக்கொண்டு இருந்தன, அதை விட்டு வெளியே வர முடியவில்லை. இதைப் பற்றி யாரிடமாவது   பேசலாம் என்றால் யாரும்  இல்லை. நான் வாழும் ஊர் அப்படி.

இதைப்பற்றி எழுதுவதால் மட்டும்தான் இந்த எழுத்தின் பிடியில் இருந்து நழுவி விடலாம் என  பார்க்கிறேன்.

      இந்த நாவலின்  மற்றும் ஒரு கோணமும் எனக்கு தோன்றியது, தர்மா என்கிறவன் மனிதனா அல்லது ஒரு குறியீடா?
 அந்த கதாபாத்திரத்தை அப்படி ஒரு குறியீடாய் நினைத்துப்   பாருங்கள் .இன்னும் ஒரு கோணத்தில் கதை மாறும் .

இந்த தர்மா எதற்கான குறியீடு?என்னைப் பொருத்த வரை அவன் பெயர்தான் அதற்கான clue .

ஆம் "தர்மம்"

         தர்மம் என்றால் என்ன
                                  
  சட்டம், கொள்கை , கோட்பாடு, கட்டளைகள், வேதம், இது சரி இது தவறு என்று சொல்லும் கோட்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம் போன்றவை தர்மம் என்ன கொள்ளலாம். குறிப்பாக இந்திய துணைகண்டத்தில் பிறந்த எந்த ஒரு தத்துவமும், கோட்பாடும் எது தர்மம் எது அதர்மம் என்கிற கேள்விக்குத்தான் பதிலை காலம்தோறும் சொல்லிவந்துள்ளன.

உதாரணம் சனாதன தர்மம், ஜைன தர்மம், புத்த தர்மம், சீக்கிய தர்மம்.
ஆனால் இதற்குள் உலகில் உள்ள எல்லா கோட்பாடுகள், சட்டங்களையும் சேர்த்துகொள்ளலாம்உதாரணம்  விவிலியம், குரான், Indian Pinal Code, அரசியல் சாசனம்.
  ஏன் என்றால் எல்லாம் எது நன்மை எது தீமை என்று பகுத்து அதற்கான தீர்ப்பை சொல்லுகின்றவை. 

             இந்த பார்வையில் பார்த்தால் என்ன தெரிகின்றது? தர்மம் சும்மா யாரையும் வதை செய்யாது. அதுக்கு தகுந்த காரணம் இருக்கணும். அதை நாடிவருபவர்களுக்கு அதன் கதைவையடைத்து, தனது இயலாமையை வெளியே  காட்டாமல் நாடி வருபவரை சமூகவிரோதியாக ஆக்கும் ( செலின்) .
தர்மத்திற்கு இன்று ஒருவன் எப்படி இருக்கிறான் என்பது முக்கியமில்லை. அவனது குற்ற சரித்திரம்தான் முக்கியம் .ஒருவனது  திருந்திய வாழ்வு முக்கியம் இல்லை ( நேஹா), தர்மம் அது சாகும் தருவாயிலும் அதுவாக எதுவும் செய்யாது , சொல்லாது.  யாரவது கேக்கணும் அல்லது கண்டுபிடிக்கணும். அப்புறம் பக்கம் பக்கமாய் கவிதை எழுதும் ( case history)
               முக்கியமான மேட்டர் இந்த தர்மத்தின் குறி மற்றவரை சித்திரவதை செய்யும்போது மட்டும்தான் வேலை செய்கிறது அதாவது இந்த தர்மம் ஒன்றும் செய்யமுடியாத victim மிடம் மட்டும் அதனின் ஆண்மையை காட்டுகிறது. தர்மத்தின் குறி என்பது தர்மத்தின் மூலம்   விளையும் நன்மை என்றும், அதனின் செயல்பாட்டு முறையை திறன்    என்றும்  கருதலாம்,  இந்த தர்மம் அந்த நீதியோடு சேர்ந்து கொலை பண்ணுது .அதுவும் பொணத்தை குத்துது தர்மம். இதுல குறிப்பாய் கவனிக்க வேண்டியது தர்மத்தின் குறி ஒரு சிலரை மட்டும் சந்தோஷப் படுத்த முடியுது.
தர்மத்துக்கு இந்த problem ( குறி சரியாய் வேலை செய்யாதது) இருப்பது தெரிகிறது .எனவே அதற்கு வளையம் அணிவித்து மகிழ்கிறான் .இது சட்டங்களை ஒரு guidance அக பார்க்காமல் அதை அழகுபடுத்தி, மெருகூட்டி, தெய்வத்தின் வாக்காய் மாற்றி பார்க்கும் நமது பார்வையை சொல்வது  போல இருக்கிறது.  தர்மமும் ***க்கறுந்த  பன்றியும் ஒன்று. அவ்வப்போது சாமிக்கு பலிகொடுத்து சாப்பிட்டுவிடவேண்டும். 

இதை நமது IPC , மத கோட்பாடுகள் , அரசியல் சாசனம், போன்றவற்றோடு ஒப்பிட்டும்  பார்க்கலாம்.      முடிவில் இந்த தர்மம் யாரை திருமணம் கொண்டுள்ளது தெரியுமா? மிடில் கிளாஸ் / மத்திய தர வர்க்கம். 

                   இப்போ எனக்கிருக்கும் கேள்வி யார் தர்மத்தின் குறியை வேலைசெய்யவிடாமல் ஆக்கியது? இல்லையென்றால் எல்லா தர்மத்திற்கும் அது அப்படித்தனா, எப்போதும் ? 

இது என்னோட அனுபவம்தான், இப்படித்தான் சாரு எழுதினாரா என்றால், எனக்கு தெரியாது, எனக்கு இந்த தேகத்தின்  எழுத்துகள் இப்படியும் தோன்றுகிறது என்று மட்டும்தான் அர்த்தம். 

இதில் வரும் உபநிஷம், விவிலிய வசனம், நேஹாவின்  புலம்பல்கள், உணர்வு மிக்க கவிதைகள் ஆழ்ந்த சிந்திப்புக்கு உரியவை .
படித்து பாருங்கள்
Cheers
Mrinzo Nirmal 





ப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா? தேகம் வாசிப்பு அனுபவம்- நிர்மல்
புளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தாரா? தேகம் நாவலின் நுட்பமான ஒரு பகுதி, நிர்மல் பார்வையில்



2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா