Friday, February 11, 2011

அவள் தந்த முத்தம் ….

 

ந்த செய்தி தாளை பார்த்து இருந்தால், ஷீலா இறந்திருக்க மாட்டாள்.ஆனால் விதி வலிது…

அந்த பேப்பரை அவன் பையில் இருந்து எடுப்பதற்குள் குமார் வந்து விட்டான்.

அவசரமாக பையை வாங்கி பத்திர படுத்தினான்.

“என்ன போரடிக்குதா” கேட்டபடியே முத்தமிட்டான்..

அவள் தந்த பியரை பருகினான்….

அவளை இன்று மாலைதான் பார்த்தான்..

எந்த பெண்ணுடன் பேசினால் சக்சஸ் கிடைக்கும் என்பது அவனுக்கு அத்துபடி.. ஆனால் இவளை சரியாக கணிக்க முடியவில்லை..

மாடர்ன் டிரஸ்சில் இருந்தாலும் , அவளை மற்ற பெண்கள் மாதிரி நினைக்க முடியவில்லை..

ஆனால் இந்த அழகு சிலையை அப்படியே விட்டுவிடவும் மனசில்லை..

-எப்படி பேச்சை ஆரம்பிப்பது..

ஆனால் எதிர்பாராத விதமாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்…

- ஒரு பிரண்டை வர சொல்லி இருந்தேன்.. இன்னும் வரல… படம் வேற ஆரம்பிக்க போகுது.. இனி வர மாட்டா… ரெண்டு டிக்கட் வேஸ்ட் ஆக போகுது…ரெண்டு டிக்கட்டையும் நீங்களே வச்சுக்கோங்க.. தூக்கி போட மனசு வரல..

புன்சிரிப்புடன் சொன்னான்

-  நீங்க என் கூட படத்துக்கு வர்ரதா இருந்தா ரெண்டு டிக்கட்டை கொடுங்க..

படம் முடிய இரவு ஆகி விட்டது..

அதன் பின் டின்னர்.. பின் அவளது வீடு..

தனியாகவே வசித்து வந்தாள் என்பதால் “வசதியாக” இருந்தது…

- சரி..கிளம்புறேன்..

எழுந்தான்…

- நான் சந்தித்ததில் மறக்க முடியாதவர் நீங்கள்.. மீண்டும் சந்திப்போம் என்றாள்.

-மீண்டும் சந்திக்க முடியாது… அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளை குழப்பியது..

எதிர்பாராத விதமாக சட் என கத்தியை எடுத்தான்.. அவள் கழுத்தில் ஒரு கோடு இட்டது கத்தி.

- பேப்பரை எடுத்த நீ அதை படித்து இருக்க வேண்டும் ..எதையும் முழுசா செய்யணும்… சிரித்தான்

தமிழ் நாட்டை கலக்கும் சீரியல் கொலைகாரன் இவன் தான்.. பெண்களை மயக்கி, உல்லாசமாக இருந்து விட்டு, போகும் முன் கழுத்தில் பாய்ச்சுவது இவன் ஸ்டைல்… இவன் பற்றி துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இவன் புகைப்படம் கிடைத்துள்ளது…. இவனை பற்றிய தகவல் கிடைத்தால்….

இதை எல்லாம் படிக்க அவள் இல்லை….

னி இங்கு இருக்க கூடாது… போட்டோ வெளியாகி விட்டது.. சிக்கி கொள்வோம்.

தன் பொருட்களை பாக் செய்ய ஆரம்பித்தான்..

எதையும் முழுசா செய்யணும்… எதையும் விட்டு விட்டு சென்று மாட்டி கொள்ள கூடாது.

தன் அறையில் அனைத்தையும் மூட்டை கட்டினான்..

இனி இப்படி ஒருவன் இருந்ததே யாருக்கும் தெரிய கூடாது…

- கிளம்ப வேண்டியதுதான்..

நெஞ்சு லேசாக வலிப்பது போல இருந்தது…

- கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பலாம்

அமர்ந்தான்..

செய்தி தாள் கண்ணில் பட்டது..

- ஷீலா இதை பார்த்து இருந்தால் , அனாவசியாமாக உயிரை விட்டு இருக்க மாட்டாள்

சிரித்து கொண்டான்..

பேப்பரின் மற்ற செய்திகளை புரட்டினான்.

- அட .என்ன இது ? ஷிலாவின் போட்டோ?

ஒரு நாள் மனைவி என்ற பெயரில் கொலைகளை செய்து வரும் பலே கொலைகாரி இவள்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் குடும்பம் நடத்துவாளாம்.. “ அது:” முடிந்ததும், பாலிலோ , வேறு பானத்திலோ விஷம் வைத்து கொன்று விடுவாளாம்.. இவளை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய முகவரி..

- பேப்பரை முழுசா படிக்காமல் போனோமே..

நினைவு தவறும் முன் கடைசியாக அவள் தந்த பியரும், முத்தமும் நினைவுக்கு வந்தன…

 

11 comments:

 1. ஒருவழியாக தேகத்தில் சிலாகிப்பதிலும் யுத்தம் செய் படத்தை மட்டம் தட்டுவதிலும் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஆகா.... ரெண்டு பேரும் - ஒருத்தரை ஒருத்தர் முடிச்சிட்டாங்களே! :-)

  ReplyDelete
 3. அருமையான கதை! கலக்குறீங்க பாஸ்! :-)

  ReplyDelete
 4. //எதையும் முழுசா செய்யணும்// பேப்பரை முழுசா படிக்கணும்!!
  கதை நல்லாயிருந்தது!

  ReplyDelete
 5. பழைய பார்வையாளனா வாங்க தல...

  ReplyDelete
 6. பார்வையாளன்..welcome back ...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த திரில் crime கதை...

  ReplyDelete
 7. And were it not for Allah's repelling some men with others, the earth would certainly be in a state of disorder (Al Quran 2:251)

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா