Tuesday, February 8, 2011

காமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா?-Mrinzo நிர்மல்

காமம் , மரணம் என்பது எல்லா உயிரிகளுக்கும்  பொதுவான ஒன்றுதான்...
ஆனால் எல்லா உயிர்களும் இதை இயல்பாக ஏற்று வாழும் நிலையில், மனிதனுக்கு மட்டும் இவை ஏன் சிக்கலான விஷ்யங்களாகி விட்டன?
காமம், மரணம், உடல் போன்றவை மனிதனுக்கு வரமா சாபமா என்று தனக்கே உரித்தான பாணியில் அலசுகிறார் நண்பர் நிர்மல்..


*********************************************************************************


தேகம் நாவல் வாசிப்பு / பகிர்வு அனுபவம்: -Mrinzo நிர்மல்
                       
அனுபவ பகிர்வு என்பது எவ்வளவு பலம் கொண்டது!!!! நான் சில தகவலை பிச்சைக்காரனோடு பரிமாறிக்கொண்டேன். 
அதன் வடிவம், முடிவு குறித்து என்னிடம் ஒரு குழப்பம் இருந்தது. ஆழமான வாசிப்பு அனுபவம் உடைய பிச்சைக்காரன் அதை கோர்வை ஆக்கி, தனது புரிதலின் சாற்றை அதில் கலந்து இதை ஒரு கட்டுரையாக ஆக்கிவிட்டார்.  Mrinzo நிர்மல் மற்றும் பிச்சைக்காரனின் கூட்டுமுயற்சி இது. 
(இல்லை... இது முழுக்க முழுக்க  நிர்மலின் எழுத்து... ப்ரூஃப்  ரீடர் பணி மட்டுமே என்னுடையது... -பிச்சைக்காரன் )  

                       தேகம் நாவலில் வரும் தேகங்களை பற்றி பேசும்போது நாம் காண்பதெல்லாம் தேகத்தின் வலி காமத்தின் வலி மேலும் மரணம். 

காமம் மனிதனுக்கு ஒரு வரமா அல்லது சாபமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. அதுபோல இந்த பசி, தூக்கம், தாகம், காமம், முதிர்ச்சி,  மரணம் கொண்டதுதான் நமது தேகம். அதாவது நமது உடல். இந்த உடல் நமக்கு சாபமா? அல்லது வரமா? 

                                    பசி, தூக்கம், தாகம், காமம், முதிர்ச்சி,  மரணம் எல்லாம் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்துமா?
 நமது தேகத்தை கொஞ்சம் மற்ற உயிரினங்களின் தேகத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாமா? 
       உலகில் உள்ள உயிர் இனங்களை இப்படியாக வகைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் எந்த வகை உயிர் இனத்துக்கு காமம் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்பதை அலச இருக்கிறேன்.. 
 • தேக மரணம் இல்லாதவை , 
 • தேக மரணம் பயம் இல்லாதவை, 
 • தேக மரணம் பயம் உள்ளவை. 

              மரணம் இல்லாத உயிர் இனங்கள் இருகின்றனவா? 

 • அமீபா போன்ற ஒரு செல் உயிர் இனங்களில் மரணம் கிடையாதாம். எப்படி என்றால் ஒரு அமீபா நன்றாக சாப்பிட்டு வளர்ந்தபிறகு அது இரண்டாக பிளந்து இரண்டு அமீபாவாக மாறுகிறது.
 இதை போல வேறுசில ஒற்றை  செல் உயிரினங்களும்   இரண்டாக மாறுகின்றன. 
இப்படிப்பட்ட இனப் பெருக்கமுறையை Asexual Reproductive System என்கிறோம். இந்த Asexual Reproductive System மில் மரணம் இல்லை என்பதை பார்த்தீர்களா!!அதாவது இனப்பெருக்கம் செய்யும்போது அந்த முதல் உயிரினம் அழிந்துவிடுகிறது. அது எந்த எச்சத்தையும் விட்டுவிட்டுபோகவில்லை.  இங்கு தாய், தந்தை என்று யாரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் சகோதரர்கள். இவை நம்மை போல முதிர்ச்சியடைந்து சாவதில்லை. மற்றபடி பசியால் அல்லது விபத்தால் மரணம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
obviously, இந்த வகை உயிரினத்துக்கு செக்ஸ் பற்றிய சிக்கல் இருக்க வாய்ப்பில்லை .. இதற்கு செக்ஸ் என்பது வரமா சாபமா என்ற கேள்வியே இல்லை.. ஏனென்றால் செக்ஸ் என்பதே இதில் இல்லை....
 •                        அடுத்தது, இனபெருக்கம் செய்யும் போது  அழியாமல் தொடரும் ஆனால் மரணத்தை பற்றி அறியாது. அதனின் Instinct கொண்டு வாழும். Tarantula என்ற சிலந்தி கலவி செய்து முடித்தவுடன் பெண் tarantula ஆண்  tarantula வை கொன்று சாப்பிட்டுவிடுமாம்,  ஆனாலும் அவைகள் கலவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. இது போல இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன 
 இந்த வகை உயிரினத்தில், செக்ஸ் இருக்கிறது.. ஆனால் இது குறித்த சிக்கல் இல்லை.. செக்ஸ் என்பது இதற்கு வரமும் இல்லை, சாபமும் இல்லை... ஒரு செயல்.. அவ்வளவுதான்.. 
 •                           கடைசியாக மனிதர்கள். நமது இனபெருக்க முறையில் நாம் மறைந்துபோவதில்லை, தொடர்ந்து இருக்கிறோம்.  நாம் அந்த அமீபா போல இல்லாமல் கலவிக்கு பின்பும் தொடர்ந்து இருக்கிறோம், அதுபோல மற்ற மிருகத்தை போல அல்லாமல் நாம் முதிர்வு அடைந்து மரணம் அடைவோம் என்கிற அறிவும்  இருக்கிறது.

      இந்த அறிவினால்தான்  நமக்கு மரண பயம் உள்ளது. இந்த அறிவினால்தான் நாம் சாவை எப்படி வெல்லலாம்.. எப்படி இந்த மரண பயத்திலிருந்து நாம் விடுபட்டு வாழலாம் என்கிற கேள்விகள்.   அந்த கேள்விக்கான விடைதான் நாம் உருவாக்கிய  தத்துவங்கள், சிந்தனைகள். ஆக, உடல் மூலம் மரணததை வெல்ல முயற்சிக்கிறான். 

                       பிரமிட் கட்டுதல், கல்லறை கட்டுதல், புதைக்கும் போது சில பொருட்களோடு புதைத்தல், சிலை வைத்தல், போட்டோ எடுத்து வைத்து கொள்ளுதல், மறுபிறப்பு, ஆத்மாவுக்கு அழிவு இல்லை,   நாம் இறந்தாலும் மற்றுமொரு  காலத்தில் உயிர்போம், அல்லது மறுபிறவி எடுப்போம், இந்த உடல் நமக்கு மறு உலகில் கிடைக்கும் என்ற பல நம்பிக்கைகள் இந்த மரண பயத்தின் வடிவங்கள்தான். இவையாவும் நம்மை நாம்  ஆறுதல் படுத்த நாம் உருவாக்கிகொண்டதுதான். 

                      இந்த பயத்தின் கோர வடிவம் ஒரு தேகம் இன்னொரு தேகத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து தன் இருப்பை விரிவு படுத்தி கொள்ள முயற்சிப்பதுதான். அதுபோல தனது இருப்பை ( Existence)  பயமுறுத்தும் எந்த தேகத்தையும் வதைப்பதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை, 

மனித வதையின் உளவியல் காரணம் இந்த மரண பயமுமும் அதன்பொருட்டு வரும் இருப்பு சார்ந்து எழும் சிக்கல்தானோ?? 

                       இந்த இருப்பும், நாம் இருக்கிறோம் என்ற அறிவு எல்லாம் நமக்கு வரமா? அல்லது சாபமா? 

 •                    அது ஒரு வரம்  என்றால் எப்படி நம்மால் நமது உடலை, மற்றவரின் உடலை வதைக்க முடிகிறது? 
 • எப்படி மதத்தின் பெயரில் மனித வதை செய்யமுடிகிறது? 
 •  எப்படி சுயவதை செய்து கொள்ள முடிகிறது? (தண்ணீ அடித்தல், புகை பிடித்தல், இயற்கைக்கு மாறான செக்ஸ் பழக்கங்கள் போன்றவற்றை சிலர் உடல் ஏற்காது... ஆனால் மன வக்கிரங்களுக்காக அந்த பழக்கங்களை தொடர்தல் சுய வதை... அதே போல கொள்கை சார்ந்த விஷயங்கள், அறம் சார்ந்த விஷ்யங்கள் போன்றவைகளுக்காகவும் சுய வதை  நடப்பது இயல்பு )
 • காமத்தின் பசி ஏன் அதிகமாகிக்கொண்டு போகிறது? 
 •  எப்படி காதலியை கொலை செய்யமுடிகிறது?  
 • காதலியின் முகத்தில் ஆசிட் ஊத்தமுடிகிறது? 
 • கோணி ஊசியால் மற்றவனின் குறியை துளைக்க முடிகிறது?
 •  எப்படி  காம வேட்கையால் வன்புணர்ச்சி பண்ண முடிகிறது? 
 • எதற்கு  முதிர்ந்த வயதிலும் சுட்டரிக்கும் வெயிலில் எறா விற்க வேண்டும்? 
 • எதற்கு  pick pocket அடிக்க வேண்டும்? 
 • எதற்கு catamite, Gigglo வாக  இருக்கும் வேண்டும்? 
 • ஒரு பெண்ணின்  மார்பு அவளுக்கு ஏன் இத்தனை சிரமங்களை  கொடுக்கவேண்டும்?  
 • மனித உடலின் குறைபாடு ஏன் காதலை வெறும் கவிதையாய் மாற்றவேண்டும்? 

                   அந்த அமீபா போல நாமமும் உடல் உறவில் அழிந்தால் என்ன? 
அப்படி அழிவதில்லை..
ஆனால் என்றோ ஒரு நாள் யாருடைய தேகம் என்றாலும் அழியத்தான் போகிறது.. செல்வமோ, புகழோ, அதிகாரமோ இதை மாற்றப்போவதில்லை...ஆனால் இதை மனம் ஏற்பதில்லை... 


 •       இன்னொரு தேகத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து தன் இருப்பை விரிவு படுத்தி கொள்ள முயற்சிக்கும்  வரை நமது  தேகம் நமக்கு ஒரு சாபம்தான். 

அதே போல தன் மனதின் இருப்பை , தன் தேகத்தின் மூலம் விரிவு படுத்தி கொள்ள முயற்சிப்பதும் நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் தண்டனைதான்...

 • இயல்பை விட்டு தவறும்போது காமம் என்பது சாபமாகிறது..

எனவேதான் பேப்பரை எடுத்தால் காமம் சார்ந்த அவலங்களை பற்றிய செய்திகளை காண நேர்கிறது...


 •  மரணம் என்பது இயல்பான ஒன்று..  தேகம் சார்ந்து தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் மனம், இன்னொரு தேகத்தின் மூலம் தன் இருப்பை விரிவு படுத்திக்கொள்ள விரும்பும் மனம் , இதன் அபத்தத்தை உணர்ந்தே இருக்கிறது..எனவேதான் மரணம் என்பது சாபமாக தோன்றுகிறது...

3 comments:

 1. விரிவாக ஆராய முற்பட்ட ஒரு பதிவு அல்ல கட்டுரை என்றுதான் சொல்லவேண்டும். மரண பயம் சம்பந்தமாக இன்னும் அதிகம் வரலாம் என்று அபிப்பிராயப்படுகின்றேன்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா