Tuesday, February 14, 2012

ஞானிக்கு மனுஷ்யபுத்திரனே பரவாயில்லை- கவிஞர் வசுமித்ர ஆவேசம்


ஞானி தனக்குள்ள மரியாதையை , விபரம் புரியாமல் பேசி, இழக்கிறார் என்று பேசப்படும் சூழ் நிலையில், கவிஞர் வசுமித்ரவை அவதூறு செய்துள்ளார் ஞானி..
குடிப்பது குடிக்காதது தனி நபர் தேர்வு.. குடிப்பது சாகச செயலும் இல்லை.. பாவமும் இல்லை.. மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. அவ்வளவுதான்...

கவிஞர் வசுமித்ர குடித்து விட்டு யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை.. அவர் மேல் ஏன் ஞானிக்கு துவேஷம் என தெரியவில்லை...

இந்த அபாண்ட குற்றச்சாட்டுக்கு , வசுமித்ர அளித்த பதில்..

+++++++++++++++++++++++++++++++++++++++
வணக்கம் திருவாளர் ஞாநி....நானும் சங்கரும்தான் சண்டையிட்டோம்ஆனால் உங்கள் நாட்டாண்மைத் தனம் இப்படி அரை குறையாக குதிக்கக் கூடாது.முதலில் குடியை அவமானப்படுத்தும் உங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளுங்கள்குடிக்காமல் சண்டை போட்டாலும் சண்டை சண்டைதான்.

தாங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுவதாய் இருந்தால் சம்பந்தப்பட்ட சண்டை குறித்து விசாரித்திருக்க வேண்டும்.

நான் அன்று குடிக்கவில்லைகுடி குறித்து எனக்கு நிறைய பார்வைகள் உண்டு உங்களைப் போல் மட்டையடி அடிப்பது போல் குடியை நான் ஒற்றைப் பார்வையுடன் செய் செய்யாதே என்று மந்தப் போக்கில் சொல்வதில்லைஇன்னும் ஒன்று எவருடன் அமர்ந்து குடிக்க வேண்டும் என்கிற என் தெரிவுகளினாலேயே நான் குடிப்பது அபூர்வம்அன்று நான் குடிக்கவில்லை

மிஸ்டர் ஞாநி....குடிக்காத என்னை குடித்தேன் எனச் சொன்னதோடு குடித்தவர்கள் எழுதுவதெல்லாம் கவிதையல்ல...என்ற உங்களின் மனநிலை வியக்க வைக்கிறதுகுடிக்காதவர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களை பட்டியலிட்டால் உயிர் வாழ்வதே சிரமம்தான் என்ன செய்யஏன் இவ்வளவு வன்மத்தோடு செயல்படுகிறீர்கள்அன்று நான் குடித்திருந்தேன் என்று உங்களால் உறுதியாக எப்படி சொல்ல முடிகிறதுநீங்கள் குடிக்காவிட்டால் அது உங்களோடு...ஆனால் நீங்கள் குடிப்பதை நானும் பார்த்திருக்கிறேன்ஞாபகம் இருக்கிறதுஅதை தேவைப்பட்டால் விளக்குகிறேன்மேலும் உங்கள் இல்லத்தில் மதுவருந்தி கால் விரித்து படுத்திருந்த ஆளுமையையும் நான் அறிவேன்அவர்களையும் தாங்கள் குடிகாரர்கள்தான் என்று பொருட்படுத்தினால் நான் விவாதிக்கத் தயார்எல்லாவற்றிற்கும் மேலாக பல முறை சந்தித்திருக்கிறோம் என்றாவது நான் குடித்து நீங்கள் பார்த்ததுண்டா..என் உடலில் மதுவின் நறுமணத்தை சுவாசித்ததுண்டா.....

சமயோசிதமாக..நளினமாக....எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் போகிற போக்கில் என்னைக் குடிகாரன் என்றழைத்திருக்கிறீர்கள்மிக்க மகிழ்ச்சி.தாங்கள் குடிக்காமல் பல நல்ல செயல்கள் செய்து.....இலக்கியம் விமர்சனம் என எல்லாத் துறைகளையும் வளருங்கள்.

இதில் நான் மிகுந்த அவமானமடைவது... பாப்பசியில் அது குறித்து புகார் செய்தபோது அங்கிருந்த தோழமைகள் என் புகாரை பொருட்படுத்தியது நான் குடித்திருந்ததனால்தான.....வெட்கமா இருக்கிறது.காலம்போன காலத்தில் இப்படி அரை குறை தகவல்களோடு எழுதுவதற்குப் பதில் தாங்கள் ஓய்வெடுக்கலாம்தாங்கள் எழுதியதை மறுபடி மறுபடி வாசித்து வாசித்து பிழை திருத்தம் செய்வதோடு சிந்தனைகளையும் மாற்றலாம்உதவியாய் இருக்கும்.

மிகுந்த தெளிவுடன் கேட்கிறேன்...குடிக்காத...உங்கள் பார்வையில் நல்ல எழுத்துக்களை முன் வைக்கிற ஒரு சம காலப் படைப்பாளியை  நீங்கள் சுட்டினால் நான் பேசவும்...அது குறித்து எழுதவும் சித்தமாயிருக்கிறேன். 


மனுஷ்ய புத்திரன் பரவாயில்லை எனச் சொல்ல வைத்து விட்டீர்கள்.



3 comments:

  1. பிச்சைகாரனின் சிறுபிள்ளைதனமான பதிவு. ஞாநி யாரையும் அவதூறு செய்யவில்லை.இது மாதிரி எழுதினால் உங்களுடைய மரியாதை தான் போகும்.மற்றும் சாருவே உங்களை எதிர்ப்பார்.

    ReplyDelete
  2. பிச்சைகாரனின் சிறுபிள்ளைதனமான பதிவு. ஞாநி யாரையும் அவதூறு செய்யவில்லை.இது மாதிரி எழுதினால் உங்களுடைய மரியாதை தான் போகும்.மற்றும் சாருவே உங்களை எதிர்ப்பார்.

    ReplyDelete
  3. புரியாமல் பேசாதீர்கள் benjamin david... ஞாநி எக்சைல் நாவலை பாராட்டவில்லை... இனி அடுத்த target அவர்தான்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா