Sunday, February 19, 2012

மதிமுக வேட்பாளர் அறிவிப்பு- ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்


திராவிட கட்சிகளை ஏற்காதவர்கள் கூட அவர்களது தமிழ் உணர்வை ஏற்காதிருக்க இயலாது... 
இன்றைய நிலையில், உண்மையான திராவிட இயக்கம் என்றால் அது ம தி மு க என்பது ஒரு கருத்து... அதன் உண்மைத்தன்மை குறித்து கருத்து சொல்ல எனக்கு அனுபவம் பத்தாது..
சென்ற தேர்தலை புறக்கணித்த மதிமுக சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறது.. வைகோவை நிற்க கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது.. 
இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளராக சதன் திருமலைக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்பு எம் எல் ஏ வாக இருந்தவர்/
டாக்டர் சதன் திருமலைக்குமார் பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் வேறுபாடு இல்லாமல் எளிமையாக பழகும் குணமும், அடித்தட்டு மக்களை எளிதில் கவரும் வண்ணம் பேசும் திறமையும் கொண்டவர்  ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியில் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்பட்ட போது, சொந்த வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் "விலை' போகாமல் தலைமைக்கு விசுவாசமாக இருந்த சதன் திருமலைக்குமாருக்கு கட்சியின் பொது செயலாளர் வைகோ மனதில் நல்ல இடம் இருக்கிறது என்பதாலும் , தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உள்ளதாலும் சீட் கிடைத்ததாக தெரிகிறது 



************************************************
இவர்  சட்டப் பேரவையில் 15.07.
2009 அன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...
கல்விக் கண்திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த இந்த நன்நாளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற கல்வி மானியக் கோரிக்கையின்மீதான விவாதத்தில் பங்குகொள்கின்ற வாய்ப்புக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, பெருந்தலைவர் அவர்களை நினைவுகூர்ந்து வணங்குகின்றேன்.
“ Any satisfactory system of education should aim at a balanced growth of the individual and insist on both knowledge and wisdom. it should not only train the intellects but also bring grace into the heart of man. if we do not have a general phllosophy or attitude of life, our minds will be confused and we suffer from greed, pusillanimity, anxiety and defeatism mental slums are more dangerous to mankind than material slums”
என்று நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னதைப்போல, தனி ஒரு மனிதனின் அறிவு, ஆற்றல் போன்றவற்றை வளர்ப்பதற்கும், மனிதநேயத்தை உருவாக்குவதற்கும், மனிதவளம் மேம்பாடு அடைவதற்கும் என்றும் அழியாச் செல்வமாகிய கல்வியை ஒருவனுக்குக் கொடுப்பது ஓர் அரசின் கடமையாகிறது.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்று திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை மிக அழகாகச் சொல்கிறார். “கல்வி என்பது கடந்த காலத்து சம்பவங்களையும், நிகழ்காலத்து வாழ்வையும், எதிர்காலத்திற்கான கனவையும் நமது மனதிற்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு ஏதுவான ஒரு சாதனம்” என்று இதன் முக்கியத்து வத்தை மாக்ஸிம் கார்க்கி சொல்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க கல்வியை தமிழ்நாட்டில் எல்லோரும் அடையவேண்டும் என்ற தாகத்தால்,
என்னரும் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்று
பன்னரும் கலை ஞானத்தால்
பராக்கிரமத்தால், அன்பால்
உன்னத இமயமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்து
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ
என்று கேட்டார் பாரதிதாசன்.
அனைவருக்கும் கல்வி என்பதன்மூலம் நாம் அவ்விலக்கை எட்டி இருந்தாலும், இன்னமும் சில கிராமப்புறங்களில் சில சமூக மக்களிடையே எட்டாவது வகுப்பைக்கூட அவர்கள் எட்ட முடியாத நிலை இருக்கிறது. அதற்கு சமூகப் பொருளாதார நிலையே காரணம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். 11 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி என்ற நோக்கமும், அதைப் பெருவாரியான குழந்தைகள் அடைந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் 100 விழுக்காடு எட்டப்படவில்லை என்பது கவலை அளிப்பதாகவே உள்ளது. ஆகவே, இத்துறை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வியைத் தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசே தன் கைவசம் வைத்து இருக்கிறது. நாம் சுய நிதிக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கு அனுமதியும் அங்கீகாரமும் கொடுத்து கல்வி வழங்குகிறோம். அவற்றில் தமிழ்வழியில் கற்பிக்கும், மேம்படுத்தப் பட்ட, தரம் உயர்த்தப்பட்ட சுய நிதிப் பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக அரசு நிதி அளிக்காதது கவலை அளிப்பதாக இருக்கிறது. இதனால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கக் குழந்தைகள் நல்லதரமான கல்வி பெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கும் இதர பணியாளர்களுக்கும் எவ்விதப் பணிப் பாதுகாப்பும் இல்லை. ஆகவே, இப்பள்ளிகளில் பணி புரிவோரின் நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல்வழிக் கற்றலை வெற்றிகரமாக்கிட, தரமான ஆரம்பக் கல்வி குழந்தைகளுக்கு கிடைத்திட ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:10 ஆக மாற்றி அமைத்திட வேண்டும். பள்ளியின் வகுப்பறைகள் பெரிதாக இருக்க வேண்டும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நிரந்தரமாக பணிபுரிந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பெயர் மற்றும் பதிவு எண்ணை நீக்கம் செய்யாமல் இருப்பவர்களின் பெயர்கள் மற்றும் எண்களைப் பதிவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
நியமிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்களில் ஆண் ஆசிரியர்களும் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும். இக்கல்வி ஆண்டில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத் தவிருக்கும் கணினி அறிவியில் பாடப்பிரிவிற்கு, கணினி அறிவியலில் பட்டம் பெற்று கல்வியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும். இப்பட்டம் பெற்ற பலர், பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். புதிய பள்ளிகளுக்கு உரிய புதிய பணி இடங்கள் பள்ளி தொடங்கும் நாள் முதல் வழங்கப் பட வேண்டும். தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் கல்வியாண்டு தொடங்கும் முன்பே வெளியிடப்பட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்ட அரசு தனி நிதியினை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கல்விப் பணி செய்யும் நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கள் தவிர்க்கப்பட வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், அனைத்து வகுப்பு களிலும், கற்றல், கற்பித்தல் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கைத்தொழில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ. திட்ட நிதியினை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர் களுக்கும் இலவச சீருடை களை தற்கால நாகரிகத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறச் செய்யவேண்டும். நீதிபோத னைப் பாடப் பிரிவு மற்றும் குடிமைப் பயிற்சி தொடக்கப் பள்ளியில் இருந்தே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். “I want that education by which character is formed strength is expanded and by which one can stand on one's own feet” என்று ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் சொன்னதை மேற்கொள்காட்ட விரும்புகிறேன்.
1800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவி யர்கள் பயிலும் வாசுதேவ நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்ப றைகளை கட்டித்தர வேண்டும். புளியங் குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புறங் களில் இருந்தும், ஏழ்மை நிலையில் இருந்தும் வருகின்ற மாணவர்கள் அதிகமாக படிக்கின்றார் கள். அவர்கள் நம்பியிருக்கும் ஒரேபள்ளி இதுதான். இது மிகவும் பழைமைவாய்ந்த பள்ளி. பள்ளியின் மேற்கூரைகள் பழுது அடைந்து இருக்கின்றன. அவற்றைச் சீர் செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட முள்ளிகுளம் பாண்டியக்கோனார் அரசு மேல்நிலைப்பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துத் தரவேண்டும்.
***********************************************

2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா