Sunday, June 3, 2012

சாருவின் மூடு பனிச்சாலை- புத்தக பார்வை

அல்ட்டிமேட் ரைட்டர் என்றால் நம் நினைவுக்கு வருவது ராசலீலா , சீரோ டிகிரி , எக்சைல் போன்ற நாவல்களும் , தமிழுக்கு உலக இலக்கியத்தில் இடம் பிடித்து தந்த அவர் சிறுகதைகளும்தான்.

ஆனால் இவற்றுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை அவர் கட்டுரை தொகுப்புகள். என்னை ரீசார்ஜ் செய்து கொள்ள நான் நாடுவது அவரது கட்டுரை தொகுப்புகள்தான்.

அந்த வகையில் இன்று படித்து முடித்த அவர் புத்தகம் மூடு பனிச் சாலை. தலைப்பே ஒரு கவிதை போல இருக்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக , தமிழகத்தில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்கள் , நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும் , எவ்வாறெல்லாம் கவலையுறச்செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்.

எளிய விஷ்யத்தைக்கூட கஷ்டமான மொழியில் எழுதி குழப்புபவர்கள் பலர். சாருவை பொருத்தவரை , ச்கஜமான மொழியில் ஜாலியாக எழுதி இருப்பார். நேரம் போவது தெரியாமல் படித்து முடித்து விடுவோம். படித்து முடித்த பின்புதான் , நம்மை அறியாமலேயே பல  நல்ல விஷ்யங்களை அவர் கற்று கொடுத்து விட்டதை உணர்வோம்.

உதாரணமாக பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை போகிறபோக்கில் ஒரு கட்டுரையில் சொல்லி இருப்பார் இவர். இலக்கியம் பேசி முடித்து விட்டு7 , சல்மான்கான் ஐஸ்வர்யா என எழுதவும் அவரால்தான் முடியும்.

பெரியாரை போற்றி எழுதுவார். ஆன்மீகத்தையும் தெரிந்து வைத்து இருப்பார்.

இந்த தொகுப்பின் முதல் கட்டுரை ”கேபரே”.   கேபரே ஆடும் பெண்களை , செக்ஸுவல் பொம்மைகளாக பார்க்காமல் , கஷ்டப்படும் பெண்களாக பார்க்கிறார். ஓர் ஆணும் , பெண்ணும் மனமொத்து பாலுறவில் ஈடுபடுவது வேறு. வறுமை காரணமாக கேபரே ஆடும் பெண்களை பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும்.

அந்த பெண்களின் வறுமை ஒரு புறம் என்றால் , ந்மம் இலக்கியவாதிகளின் செக்சுவல் வறுமை இன்னொரு புறம். இதை ரமணா பட பாணியில் புள்ளி விபரத்துடன் சொல்வதை ரசித்தேன்.

அடுத்த கட்டுரை உணவும் கலாச்சாரமும் . படிக்கும்போதே அவர் சொல்லும் உணவு வகைகளை டேஸ்ட் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அந்த கட்டுரை எழுப்பும் கேள்வியும் முக்கியமானது.

தமிழ் உணர்வுடன் கூடிய கட்டுரை அடுத்தது. சாருவுக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. ஆனால் வெறி கிடையாது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என அடுத்த க்ட்டுரை பேசுகிறது.

வழக்கு எண் படம் உலகப்படம், கமல் ஹாசன் உலக நடிகர் என நினைக்கும் தமிழர்களால் வெளி நாட்டில் அடைந்த அவஸ்தைகளை செம கிண்டலாக சொல்லி இருக்கிறார் அடுத்த கட்டுரையில். சிரிக்காமல் இருக்கவே முடியாது.

கீழ் கண்ட வரிகள் ஒரு சாம்பிள்.

பட்டிமன்றம் என்றால் என்ன என தெரிந்து கொள்ள தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு பேராசிரியை கட்டை குரலில் கத்தி கொண்டு இருந்தார். “ அந்த  மங்கையர்கரசி படித்தவள் இல்லையா? படித்தவள்தான். அவள் ஏன் தன் கணவன் சின்ன வீடு வைத்து கொள்வதை அனுமதித்தாள் ? “


பேரிடி விழுந்தது போல தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்த என்னிடம் வந்து ஆதூரத்துடன் வந்து விசாரித்த அவந்திகாவிடம் கேட்டேன்  “
 இந்த மங்கையர்க்கரசி என்றால் யாரம்மா ?


“ அத்திம்பேர் தொடரில் வரும் கதானாயகி”


அடப்பாவிகளா... ஏதோ ஷேக்ஸ்பியர் கதாபாத்திரங்களைப் பற்றி குறிப்புடுவது போல அல்லவா பேசுகிறார்கள்..


இப்படி கலப்கலப்பாக செல்கிறது அந்த கட்டுரை. அத்திம்பேருக்கும் , நாத்தானருக்கும் கல்யாணம் என்ற பத்திரிக்கை செய்தியும் , அதற்கான விளக்கமும்... சாருனா சாருதான்..

அடுத்த கட்டுரை மீண்டும் தமிழ் உணர்வையும் , மொழியின் அவசியம் பற்றியது..சீரியஸ் டைப்

அடுத்த கட்டுரை திபெத் அடிப்படையிலானது. 1000 மைல் தூரத்தை உருண்டே கடக்கும் புத்த பிட்சுகள் குறித்த செய்தி, சீன ஆக்ரமிப்பு என செல்லும் எந்த கட்டுரையின் பஞ்ச் வரிகள்..

பறவைகள் அழிந்தால் பூமி அழியும் . நாமும் அழிவோம்.

வனங்களின் வளர்ச்சி பறவைகளை பொருத்தே அமைகிறது. வனமே பூமியின் அரண்.

வில்லுப்பாட்டு பற்றிய பகிர்தல்கள், தைவான் வாழ்க்கை முறை , ஜனாதிபதி ”ஆர். கே நாராயணன் ” ( !!! )    பற்றிய சிறு சிறு கட்டுரைகள் அடுத்து வருகின்றன.

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு , சீரியசான மேட்டர். சல்மான் கான், அவரது மான் வேட்டை மற்றும் நடிகைகள் வேட்டை, அவர் விஷயத்தில் நீதி கண் மூடிக்கொண்டது ஆகியவற்றை ஆவணமாக்கி இருக்கிறார்.

காதல் இல்லாத கல்யாணம் . கல்யாணத்தில் முடியாத காதல் என அடுத்தடுத்த கட்டுரைகள் விவாதிக்கின்றன.

சால்வதோர் தாலி எனும் ஓவியன் மற்றும் அவன் காதலி காலா ஆகியோரைப்பற்றிய செய்தி மனதை நெகிழச்செய்கிறது.

பெரியார் என்றால் கடவுள் இல்லை என நம்புபவர் என்ற அளவுக்கு தட்டையான புரிதல்தான் பலருக்கும் இருக்கும். பெரியார் பெரிய சிந்தனையாளர், அவர் பல தளங்ங்களில் இயங்கியவ்ர் என்பதெல்லாம் கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்டது. பெரியார் குறித்த சில ஆச்சர்யாமான தகவல்களை பதிவு செய்து இருக்கிறார்  சாரு.

அடுத்த கட்டுரையில் தன்னைப்பற்றியும் சொல்கிறார். ஒருவர் சொல்ல விரும்பாத கசப்பான பக்கங்களை , வெளிப்படையாக ப்கிர்ந்து கொள்கிறார்.

கூவாகம் , பின் நவீனத்துவம் , கால் பந்து , குஜராத் கலவரம் , ஆவியிலகம் , நடிகர்கள், சங்கராச்சியார்யார் என பரபரப்பாக அடுத்தடுத்த கட்டுரைகள் செல்கின்றன.

வயதான பெண்ணையே விட்டு வைக்காதவர், செக்ஸ் வெடிகுண்டுகளையா விட்டு வைத்து இருப்பார்.


நடிகைகளை   *டுவார்,   கை எழுத்து போட மாட்டாரா 

என செம ஃபார்மில் எழுதி இருக்கிறார்.

ஏராளமான திரைப்படங்கள், புத்தகங்கள், ஆளுமைகள் என பொக்கிஷமாக திக்ழ்கிறது புத்தகம்.வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள் என சொல்ல மாட்டேன். வாய்ப்பை உருவாக்கி கொண்டு படியுங்கள்.

*****************************************

மூடுபனிச் சாலை  கட்டுரை தொகுப்பு


சாரு நிவேதிதா6 comments:

 1. // கேபரே ஆடும் பெண்களை , செக்ஸுவல் பொம்மைகளாக பார்க்காமல் , கஷ்டப்படும் பெண்களாக பார்க்கிறார். ஓர் ஆணும் , பெண்ணும் மனமொத்து பாலுறவில் ஈடுபடுவது வேறு. வறுமை காரணமாக கேபரே ஆடும் பெண்களை பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும் //

  - நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இதில் என்ன புதிய பார்வை இருக்கிறது என்று குழப்பம் வருகிறது... ஏற்கனவே நிறைய பேர் இதை நிறைய விதங்களில் எழுதி இருக்கிறார்கள். ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோணத்திற்காக சாருவை கொண்டாட என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

  மேலும், இங்கே நீங்கள் சிலாகித்து பேசி இருக்கும் அவரின் மற்ற கட்டுரைகளிலும் எதிலுமே ஒரு புதிய பார்வை, புதிய கோணம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாமே ஏற்கனவே பலமுறை பல பேரால் சொல்லப்பட்டதுதான். எழுதப்பட்டதுதான். இதில் சாரு எங்கே வித்தியாசபடுகிறார்? எழுத்துநடை என்று மறுபடி மறுபடி சொல்லவதில் எனக்கு சில தயக்கங்கள் இருக்கிறது.

  content இல்லாத ஒரு எழுத்துநடை வெறும் வியாபார தந்திரம் மட்டுமே... புதிய மொந்தையில் பழைய கள் அவ்வளவே... இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

  பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

  நீங்கள் சாருவின் பரம ரசிகனாக இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கமுடியாது. அது உங்கள் உரிமை. என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

  சமீபத்திய உதாரணம் காட்டவா...

  வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது?

  நான் ஒரு சவால் விடவா?

  சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால், அந்த கதை இதுவரை யாருமே எழுதாத படைப்பாக, தொடாத சிந்தனையாக இருந்துவிட்டால், அவருடைய அத்தனை புத்தகங்களையும் பத்து பத்து பிரதிகள் நான் வாங்கிக் கொள்கிறேன்.

  அப்படி நடக்காமல் போனால், ஊரில் இருப்பவர்களை எல்லாம் வைது கொண்டு இருக்காமல் நீங்களும் இருக்கவேண்டும். சாருவையும் அப்படி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

  நன்றி.

  ReplyDelete
 2. நெத்தியடி

  ReplyDelete
 3. @Mr.SURESH வழக்கு எண் படத்தை பிச்சைக்காரன் பிடித்ததாகச் சொன்னாரா ? உங்களிடம் ஆதாரமுள்ளதா ? ஊரே அந்த டப்பாப் படத்தைக் கொண்டாடிய முதல் நாளிலேயே அதை அபத்தம் என்று சொன்னதே பிச்சைக்காரன்தான், ஒருவேளை உங்களுக்கு புரிதலில் குறைபாடு இருக்கக் கூடும். அதனாலேயே சாருவையும் உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. சரி போகட்டும், சாருவின் வாசகர்கள் அடுத்த வாரம் திண்டுக்கல் சிறுமலையில் கூடுகிறோம், அங்கு வந்து சாருவின் நாவலில் எந்தக் கதையையும் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். சும்மானாச்சும் திரிய கிள்ளிப்போட்டுட்டு நான் அறிவாளின்னு சொல்லிக்கலாம், ஆனால் அது கதைக்காவது.! சவால் விட்டுட்டா களத்துல குதிச்சு சொன்னத நிருபிக்கணும், வர்றீங்களா ?

  ReplyDelete
 4. சகா

  வரும் காலங்களில் புத்தகங்கள் குறித்து எழுதுகையில் அவை எந்த பதிப்பகம்,, நேரில் வாங்க எந்த புத்தக விற்பனை நிலையத்தில் கிடைக்கிறது, இணையம் மூலம் வாங்க சுட்டி போன்ற தகவல்களும் அளித்தால்
  கூடுதல் பயன் உள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 5. பிச்சைக்காரன் , அராத்து , கருந்தேள் இந்த பேர்ல எழுதுற ஆள்தான் சாருங்கற பேர்லயும் எழுதுறாரா?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா