Sunday, June 10, 2012

சாருவிடம் சாமியார் சீ டி கேட்ட மீன்கடைக்காரர்- கேணி சந்திப்பில் ருசிகரம்

கேணி சந்திப்பை ஞானி தொடர்ச்சியாக நடத்தி வருவது பரவலான வரவேற்பை பெற்று வருகிறது , பயனுள்ளதாகவும் இருக்கிறது.

ஜூன் 10, 2012ல் சாரு இதில் பங்கேற்கிறார் என்பது ஆச்சர்யமாகவும் இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. அவரிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்து கொண்டு போய் இருந்தேன் . ஆனால் கடைசிவரை என்னால் கேட்க இயலவில்லை. அந்தளவுக்கு பலரும் கேள்வி கேட்டனர்.
இந்த அளவு கூட்டத்தை தானே எதிர்பார்க்கவில்லை என சாரு குறிப்பிட்டார்.

வரவேற்று பேசிய ஞானி சுவையான விஷ்யம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்

“ சாருவை அழைக்க வேண்டும் என முடிவு செய்த போது , சிலர் அவரைபோயா அழைக்கிறீர்கள் என்றார்கள். சிலர் அவரை இப்போதுதானா அழைக்கிறீர்கள் என்றார்கள்.இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு மத்தியில் வாழ்பவர் சாரு ” என்றார் .


அதன் பின் சாரு பேசினார். தூறல் போல மெதுவாக ஆரம்பித்த அவர் பேச்சு , அடைமழை போல போக போக வேகம் எடுத்தது.

அவர் பேசுகையில் ,

"  பல புத்தகங்கள்    எழுதி இருக்கிறேன். ஆனால் பேசுவது என்பது வேறு விஷ்யம். எழுதும்போது ஒரு வித உன்னத நிலைக்கு எழுதுகிறேன். எனவே சாதாரண நிலையில் இருக்கும்போது , அதைப்பற்றி பேசுவது கடினம். சாமியாடிகளைப் பார்த்து இருப்பீர்கள்.. மற்ற நேரங்களில் அவர்கள் சாதரண மனிதர்கள்தான்.

எழுத்தாளர்களைப் பற்றியும் பேச முடியாது. நாய்களை பார்த்து இருப்பீர்கள். நாய்கள் மனிதர்கள் மீது கொண்ட அன்போடு இருக்கும், ஆனால் சக நாய்களின் வயலண்டாக நடந்து கொள்ளும் .அது போலத்தான் எழுத்தாளர்களும்.

நான் தற்போது தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டு , மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு  வருகிறேன். தமிழில் எழுதும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது. எழுவதற்கான ஸ்பேஸ் இங்கு இல்லை. பத்திரிக்கைகள் இப்படி என்றால் இணையமும் இப்படித்தான் இருக்கிறது. என் வாசகர் வட்டத்திலேயே நிலை இப்படித்தான் . சினிமாவை பற்றி எழுதினால் விவாதம் செய்கிறார்கள். இலக்கியம் எழுதினால் யாரும் சீந்துவதில்லை.

சில ஆயிரம் பேருக்காக பிளாக்கில் எழுதுவதை நான் விரும்பவில்லை.,.இவ்வளவு பாடுபட்டு, உழைத்து வெறும் பிளாக் எழுத்தாளானாக இருக்க விரும்பவில்லை.

ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் எழுத மாட்டேன் என சொல்கிறான் என்றால் தில் இருக்கும் அவலத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளாவில் கேட்டால் தெரியும் , நான் பேசாத கல்லூரிகள் இல்லை.

நம் ஊரில் போர்னோவைப்போன்ற டீ வீ  நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருக்கிறோம். அதை ஏன் பார்க்க வேண்டும்? பார்த்து விட்டு ஏன் திட்ட வேண்டும்? என் வீட்டில் தொலைக்காட்ச்சி இல்லை. இதனால் தொலைக்காட்சி பார்க்க விரும்பும் ந் உறவினர்கள் என் வீட்டுக்கு வருவதில்லை. நான் அவர்கள் வீட்டுக்கு போனாலும் உடனே கிளம்பி வடுவேன்.

தமிழ் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது. ஆயிரம் பக்க நாவல்கள் எல்லாம் இப்போது படிப்பார்களா என்பதே தெரியவில்லை.பலருக்கு தமிழ் எழுதவே தெரியவில்லை. எதையும் படிக்காமலேயே எழுத வந்து விடுகிறார்கள்.

சரி,,இப்பொது நாம் உரையாடலாம்.. உங்களைப்பற்றி அறிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

******************************************************


ஞானி - ஆயிரம் பேர் படிக்கும் பிளாக்கில் எழுத மாட்டேன் என்கிறீர்களே... புத்தகம் எழுதினால் மட்டும் எவ்வளவு விற்பனை ஆக போகிறது. தமிழில் ஆயிரம் புத்தகம் விற்பதே பெரிய விஷ்யம். ஆக இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


ராச லீலா நாவலை , பிலாக்கில்தான் தொடராக எழுதினேன். பிலாக்கில் வெளியாவதற்கு முன் மலையாள கௌமுதியில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமானது. பத்திரிக்கையின் ரீச் அதிகம். ஐம்பது லட்சம் பேர் படிப்பார்கள். அதைதான் சொல்கிறேன்.

ஞானி பத்திரிக்கைகளில் எழுதுவதால் அவர் ரீச் அதிகம், பலர் என்னை ஞானி என நினைத்து ஓ பக்கங்களுக்காக என்னை பாராட்டி டார்ச்சர் செய்கிறார்கள். சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை எழுத்தாளர் என ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார்.  உங்களை படித்து இருகிறேனே.. குமுதத்தில் எழுதினீர்கள்.. பின் விகடனில் , பின் கல்கியில் விடாப்படியாக எழுதுகிக்றீர்களே என்றார் அவர்.  அவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. இதற்கு பயந்துதான் என்னை எழுத்தாளர் என சொல்லாதீர்கள் என்கிறேன்.

சென்ற மாதம் மீன் வாங்க போனேன்.  மின்கடைக்காரர் என்னை பார்த்ததும் , சார் , சிடி கிடைக்குமா என கள்ள குரலில் கேட்டார். சிடியா என திகைத்தேன். அதுதான் சார் , சாமியார் சி டி என்றார். என்னை அந்த சாமியாரோடு இணைத்து புரிந்து கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கு நிலை.

இணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அலுவலகத்தில் இலவசமாக கிடைப்பதால் , பலர் எழுதுகிறார்கள்.. இன்று ஞாயிறு என்பதால் , பலருக்கு இந்த நிகழ்ச்சி நடப்பதே தெரியாது. காரணம் அலுவலகம் விடுமுறை. நெட் கிடையாது. ஞானி - நீங்கள் முன் வைக்கும் , அசோகமித்திரன்  சிங்காரம் போன்றவர்கள் பெரிய பத்திரிக்கைகளில் எழுதியதில்லையே, பிறகு ஏன் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள்?

 வேறு யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? ( வளாகத்தில் பலத்த சிரிப்பு  )

அசோக மித்திரன் போன்று சிலர் மட்டுமே அறிந்த எழுத்தாளராக இருக்க நான் விரும்பவில்லை. அவர் மலையாள பத்திரிக்கைகளில் எழுதி இருந்தால் பெரும் புகழ் பெற்று இருப்பார்.

நித்தியானந்தா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா ..கூடாதா ?

 நோ கமெண்ட்ஸ். அவரோடு சட்டப் போர் நடத்த எனக்கு வலு இல்லை. ஏதாவது பேசினால் எனக்கு நோட்டீஸ் அனுப்ப , ஒரு வழக்கறிஞர் அணியையே எனக்கு எதிராக வைத்து இருக்கிறார்.

சாரு மஜும்தார் கொண்ட மதிப்பினால்  சாரு என்று பெயர் வைத்து கொண்டீர்கள். கம்யூனிச இயக்கம் குறித்து தற்போதைய நிலைப்பாடு என்ன ?

   அந்த இயக்கம் மேல் நம்பிக்கை போய் விட்டது. காரணம் சர்வாதிகாரம். மக்களுக்கு எதிரானதாக அந்த இயக்க்கம் மாறி விட்டது. சுதந்திரம் பறிக்கப்பட்டு , ம்க்கள் ரொட்டி துண்டுக்காக அலைய விடப்பட்டுள்ளனர். ஏனென்றால் பவர் கரப்ட்ஸ். அதிகாரம் எப்பேர்பட்டவனையும் கெடுத்து விடும்.
ஆனால் பல ஐரோப்பிய நாட்கள் , வெளியே சொல்லாமல் மார்க்ஸிய கொள்கைகளை பின் பற்றி வருகின்றன. அங்கெல்லாம் பசி கிடையாது. பணக்காரர்களுக்கு கடும் வரி விதிக்கபடுகிறது.நிவேதிதா என்ற பெயர் வைத்து கொண்டீர்களே. அது சார்ந்த மதிப்பீடு ?

பவர் கரப்ட்ஸ் என சொன்னது இதற்கும் பொருந்தும். இந்திரா காந்தி சர்வாதிகாரியாக திக்ழ்ந்த கால கட்டத்தில் , ஒரு சாமியாரை சந்திக்க போனார். அந்த சாமியார் தன் வழக்கப்பட்டி, இந்திராவின் நெற்றியில் உதைத்து ஆசி வழங்கினார். ஆக, துறவு நிலை என்பது ஒரு அதிகார சக்தியாக உருவெடுகிறது. ஆனால் , இதையெல்லாம் கடந்த ஒரு உள்ளார்ந்த தேடலில் நான் இருக்கிறேன் . இந்த தேடல் ஒரு நாஸ்திகனுக்கும் கூட வரலாம்.

பின் நவீனத்துவம் , ஸ்ட்ரக்ட்ரலிஸம் போன்ற பிரிவுகள் தேவையா? 

நல்ல கேள்வி. பிடித்த கேள்வியும் கூட . இந்த இசங்கள் பற்றி பேசும் யாரும் ( சில விதி விலக்குகள் தவிர ) யாரும் நல்ல நாவல்கள் கொடுத்ததில்லை. இவற்றை ஒரு கிராமராக வைத்து கொண்டு , படைப்பை உருவாக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் தெரியாத சிலர் நல்ல நாவலக்ள் தந்துள்ளனர்.

எனக்கு போஸ்ட் மாடர்னிசம் உதவி இருக்கிறது. ஒரு காலத்தில் எழுத்தாளன் எழுத்தில் ஆதிக்கம் செலுத்தினான். அவன் சர்வாதிகாரி மாதிரி. அவன் சொல்வதைத்தான் , வாசகன் படிக்க வேண்டும். ஆனால் போஸ்ட் மாடர்ன் எழுத்தில், வாசகனின் கிரியேட்டிவிட்டிக்கு வேலை கிடைக்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் உணவு மாதிரியல்ல இது. நீங்களே சமைத்து சாப்பிடுவது போல இது. எனவேதான் பல நாவல்களில் ஆரம்பமோ முடிவோ இல்லாததுபோல இருக்கும், இவற்றை வாசகன் தான் உருவாக்க வேண்டும்.
ஆனால் இது போன்ற இச்ங்களை பலர் வெறும் கிராமராக பயன்படுதுவதால் , அவற்றை படிக்கவே முடியவில்லை


உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,ஆனால் உங்கள் கடவுள் நம்பிக்கை எனக்கு உடன்பாடு இல்லை .


கடவுள் நம்பிக்கை குறித்து  பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை. அது என் பெர்சனல் சாய்ஸ்.

முன்பு கடவுளை நம்பாமல் இருந்தேன், ஏன் கடவுளை நம்பவில்லை என யாரும் கேட்கவில்லை. ஆனால் கடவுளை நம்புவது தவறு என்பது போன்ற கில்ட் ஃபீலிங்கை உருவாக்க முயல்கிறார்கள்.

ரஸ்புட்டீன் பற்றி எழுதினேன். அதற்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவன் ஒரு ம்ந்திரவாதி. அவ்வளவுதான்.

 நான் மதங்களை கடந்த ஆன்மீகத்தில் இருக்கிறேன்,  தினமும் சர்ச்சுக்கு செல்கிறேன். கோயில்களுக்கும் செல்கிறேன்

அதிஷா : கேரளா போன்று தமிழ் நாட்டில் எழுத்தாளனை கொண்டாடுவதில்லை என்கிறீர்கள்.  ஆனால் கேரள எழுத்தாளர்கள் போல தமிழ் எழுத்தாளர்கள் பொது பிரச்சினைக்காக போராடுவதில்லையே ? பின் எப்படி மக்கள் கொண்டாடுவார்கள் ?


தமிழ் நாட்டில் எழுத்தானுக்கு என்ன இடம் இருக்கிறது ? போராடினால் என்ன இம்பாக்ட் இருக்கும் ?  ஓர் எழுத்தாளன் போராடினால் ,. யார் போராடுகிறான் என்பதே அரசுக்கு தெரியாது.

நீங்கள் நினைப்பது போல கேரளாவில் எழுத்தாளர்கள் யாரும் போராடுவதில்லை. அதனால்தான் என்னை போன்றோர் சென்று போராட்கிறோம். கொக்கோ கோலா போராட்டத்தில் நான் கலந்து கொண்ட போது, என்னை எதுவும் செய்து விடக்கூடாது என போலிசுக்கு அரசு உத்தரவு இட்டு இருந்தது, அந்த அளவுக்கு எழுத்தானை மதிக்கிறார்கள்..
முதல்வருக்கு கேள்விகள் கேட்டு மலையாள பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட்டேன். அதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைத்தது.


(  ஞானி குறுக்கிடுகிறார் ) சாரு சொல்வது முழுக்க உண்மை. கூட்ங்குளம் பிரச்சினைக்காக எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டோம் . உங்கள் ( திரு . அதிஷா ) பத்திரிக்கை உட்பட யாரும் வெளியிடவில்லை ( பலத்த கைதட்டல் )


ஆங்கில புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஏன் தமிழுக்கு கிடைப்பதில்லை?

இதே கேள்வியைத்தான் நான் பல காலமாக கேட்டு வருகிறேன். ஆங்கிலம்படிப்பதே நாகரிகம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழில் பேசுவதே அவமானம் என நினைகிறார்கள். ஹோட்டலில் ஆங்கிலத்தில்தான் ஆர்டர் எடுக்கிறார்கள்.
டாஸ்மாக்கிலும் , காய்கறிக்கடையிலும் மட்டுமே தமிழ் பேசப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் தாய் மொழிக்கு இடம் இல்லை என்ற நிலை வேறு எங்கும் இல்லை.


எழுத்தில் உங்கள் இன்ஸ்பிரேஷன் யார் ? உங்கள் எழுத்தில் சிருங்கார ரசம் அதிகம் இருக்கிறதே ஏன் ? 
எனக்கு சார்ஜ் குறையும் போது சீரோ டிகிரியை படித்து உற்சாகப்படுத்தி கொள்வேன். வெகு நாட்களாக படிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது..


என்னை இன்ஸ்பைர் செய்தது சினிமா என்று சொல்லலாம். ஒரு நாளுக்கு இரண்டு படங்கள் பார்த்தெல்லாம் உண்டு. பல தமிழ் எழுத்தாளர்கள் என்னை எர்ச்சலூட்டியே வந்தனர். சுந்தர ராமசாமி , புதுமைபித்தன் போன்றொர் என்னை கவரவே இல்லை, ஆனால் மவுனியிடம் நிறைய கற்று கொண்டேன். கரிச்சான் குஞ்சு , கு பா ரா, லா ச ரா போன்றொர்களும் என்னை கவர்ந்தனர். பின்பு அஷோக மித்திரன் , இ பா போன்றோர்கள் கவர்ந்தனர்.

நகுலனை படித்த பின்பு , இவன் தான் நம் ஆள் என உணர்ந்தேன். அவரின் இலக்கிய வாரிசாகவே என்னை உணர்கிறேன்.

சிருங்கார ரசம் பற்றி சொன்னீர்கள். என் நாவல்களில் அந்த ரசமே கிடையாது. நம் சமூகத்தில் செக்ஸ் சிருங்காரமாக இல்லை என்பதையே நான் முன் வைக்கிறேன். சந்தேகம் இருந்தால் நாளை தின தந்தி வாங்கி படியுங்க்ள் . பாதுக்கு மேல் செக்ஸ் ரிலேட்டட் குற்றங்கள்தான். செக்ஸ் ஏன் நம் சமூகத்தில் தவ்றான செயலாக மாறியது என்பதையே அலசுகிறேன்.


 நான் ஆசிரியராக பணியாற்றுகிறேன். டி வி நிகழ்ச்சிகள் குறித்து பேசினீர்கள். இவற்றில் இருந்து மாணவர்களை காப்பாற்ற நீங்கள் சொல்லும் தீர்வு என்ன ?

நாம் டீ வி பார்ப்பவராக இருந்து விட்டு மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல இயலாது. நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும் , நான் ஆசிரியராக இருந்து , ஒரு மாணவன் டீ வி சீரியல் பற்றி பேசினால் , அதைப்பற்றி எனக்கு தெரியாது என சொல்லி விடுவேன். அன்பினால் மட்டுமே மாற்றம் நிகழும் என நினைக்கிறேன்.

சாலையில் என்னை ஒருவன் இடித்து விட்டான் . பயங்கர வலி. அவனோ என்னை முறைத்தான். “ சாரி பிரதர் “ என அமைதியாக சொன்னேன்.. சண்டையை எதிர்பார்த்த அவன் குழம்பி போய் விட்டான். அமைதியாக போய் விட்டான்.

என் நாய் பக்கத்து வீட்டு வாசலில் மலம் கழித்து விட்டது, அந்த வீட்டு அம்மையார் சத்தம் போட்டார். பாவம் அப்போதுதான் , சுத்தம் செய்து இருந்தார் போலும். சண்டையை தவிர்க்க விரும்பினேன். சட் என புது சட்டையை கழட்டி , மலத்தை துடைத்து குப்பையில் வீசினேன். சட்டை நஷ்டம் . ஆனால் சண்டை தவிர்க்கப்பட்டது.

நீங்கள் ஏன் சிறுகதை எழுதுவதில்லை ?

நான் எழுதுவது எல்லாமே ஃபிக்சன் தான் , நாவல் , குறு நாவல் , சிறு கதை என்றெல்லாம் பிரிப்பதில்லை. என் வாழ்க்கையே ஃபிக்‌ஷனாகத்தான் பார்க்கிறேன், நான் ஒருவருடன் பேசுகையில், ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டருடன் பேசுவ்தாக எண்ணி கொள்வேன்.


கூடங்குளம் குறித்து நீங்கள் ஏன் கருத்து சொல்லவில்லை ?

அதில் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. இது குறித்து விஞ்ஞானிகள்தான் பேச முடியும் , நான் அல்ல. எனக்கு தெரியாத ஒன்றை பற்றி நான் என்ன பேச முடியும்?

பாலியல் கல்வி குறித்து ?

நம் நாட்டில்தான் குழந்தைகளுடன் உட்கார்ந்து அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்க்கிறோம். வெளி நாடுகளில் , குழந்தைகள்  குழந்தைகளுக்கான ப்டம் பார்க்கிறார்கள். வாரணம் ஆயிரம் படத்தை குழந்தைகள் பார்க்க வெளி நாடுக்ளில் அனுமதி இல்லை. இப்படி எல்லாம் ப்ல பிரச்சின்கள் நம்மிடம் இருக்கின்றன. இதில் பாலியல் கல்வி என்பது துணை பிரச்சினைதான்


ஆன்மீகம் பற்றி  சொன்னீர்கள். ஆரியர் படை எடுப்பு, சனாதான தர்மம், ஜாதி வேற்றுமை, சுரண்டல் , ஏகாதிபத்தியம் - இதைப்பற்றியெல்லாம் விளக்காத உங்களை நான் எப்படி கொண்டாடுவது ?

உங்கள் கேள்வியை புரிந்து கொள்ளவே எனக்கு பாதி நாள் தேவைப்படும் . எனக்கு கேள்வி புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்னை விட்டு விடுங்கள்.

இது எஸ்கேபிசம் . உங்களை எனக்கு பிடிக்கவில்லை.

எனக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் உடனே வெளியேறி விடுவேன்.  என்னை பிடிக்கவில்லை என சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இனி என் எழுத்துகளை படிக்க வேண்டாம்.

 நாய்க்காக சட்டையை இழந்ததை சொன்னீர்கள். இப்படி செய்ததற்கு பதில், சாரி மேடம், என் நாய் செய்த தவறுக்கு மன்னியுங்கள் என அந்த பெண்ணிடம் சொல்லி இருக்க வேண்டும் . அதன் பின் மலத்தின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ப தண்ணீரும்  , டெட்டாலும் , பழைய துணியும் , துடைப்பமும் எடுத்து வந்து இருக்க வேண்டும்.  பிறகு அதை கழுவி விட்டு இருக்க வேண்டும் . அது காய்ந்த பின் , மீண்டும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும், இப்படி செய்யாமல் புது சட்டையை இழந்து விட்டீர்களே ?

 நான் இப்படி எல்லாம் யோசித்து செயலாற்றுவதில்லை. அந்தந்த கணத்தில் தோன்றுவதை செய்கிறேன். என் வாழ்க்கை ஒரு மித் போலத்தான் இருக்கும்.

தேடல் என்பதற்கு நான் சில இலக்கணக்கங்கள் வைத்து இருக்கிறேன். உங்கள் தேடல் என விளக்குங்கள். என் இலக்கணத்துக்குள் வருகிறதா என பார்க்க வேண்டும்.

என் தேடல் என்பது என் தனிப்பட்ட விஷ்யம். சில காலம் கழித்து இதெல்லாம் முட்டாள்தனம் என நான் நினைக்கலாம். அல்லது தேடியதை கண்டடையலாம். இதெல்லாம் தனிப்பட்ட விஷ்யங்கள்..

முன்பு ஒரு டி வி பேட்டியில், எனக்கு பிடித்த உண்வு உப்புமா என்றீர்கள். சமீபத்தில் இட்லி பிடிக்கும் என எழுதி இருக்கிறீர்கள். ஏன் இப்படி மாற்றுகிறீர்கள். பார்க்க விரும்பும் நபர் என ஒருவரை சொன்னிர்கள். ஏன் அப்படி சொன்னீர்கள்?

 நான் பல நாவல்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதை படித்து விட்டு வந்து கேட்காமால் , கேட்க வேண்டுமே என எதையோ கேட்காதீர்கள். சரி.. நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். நான் பார்க்க விரும்பும் , பார்க்கவிருக்கும் நபர் பிரியங்கா சோப்ரா.. போதுமா?


எழுத்தானை கொண்டாடுவதில்லை என்கிறீர்கள். ஆனால் இங்கு உடகார இடம் இல்லாமல் நின்று கொண்டு உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். இதைப்பற்றி.

வாசகர்கள்  கொண்டாடுகிறார்கள் , நான் சொல்வது அதுவல்ல. பாப்லா நெருதோ அம்ர்ந்த பாருக்கு எழுத்தாளர் மார்க்கெஸ் வந்து இருப்பதை கேள்விப்பட்ட , பிடல் கேஸ்ட்ர அவரை பார்க்க அங்கு வந்தார். இதையே  நான் சொல்கிறேன்.


12 comments:

 1. Fantastic! Very nice coverage. In case if there are any video links, please upload them thalaiva

  ReplyDelete
 2. அராத்துJune 10, 2012 at 10:54 PM

  அட்டகாசம் பிச்சை .மிக விரைவாக அப்லோட் செய்து நிகழ்ச்சியை பார்த்தது போன்ற உணர்வை வர வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 3. சாருவுக்கு எழுத்தாளர் என்றால் லோர்கா, ஓமான் பாமுக்; கவிஞர் என்றால் பாப்லோ நெரூடா... அவரைப்புகழ்ந்துகொண்டு எப்படி பாலகுமாரனையும், வைரமுத்துவையும் சிலாகிக்கிறீர்கள்? நீங்கள் கொண்டாடுவது ரமணி சந்திரனை என்று அவருக்குத் தெரியுமா?!

  ReplyDelete
 4. //சிருங்கார ரசம்? என் நாவல்களில் அந்த ரசமே இல்லை// அப்படியா சார்????? முடியல.!

  ReplyDelete
 5. என் பக்கத்தில் உட்கார்ந்துதான் நிகழ்ச்சியை கவனித்தவாறே, கேமராவில் பதிவும் செய்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால், உங்கள் இப்பதிவை படித்தவுடன்தான் நீங்கள் எவ்வளவு அட்சரம் கூட பிசகாமல் உள்வாங்கியிருக்கிறீர்கள் என்று ! அராத்து சொன்னதைப் போல் நேரடி வர்ணனை மாதிரி அழகான நடை. சிறுமலைக்கு அவசியம் வாருங்கள், சாரு இம்முறை தம் இனிய வாசகர்களுக்கு நல்விருந்து படைக்கப் போவதாக உறுதி கூறியிருக்கிறார்.

  ReplyDelete
 6. நன்றி பாஸ்! நேரில் பார்க்காத குறை தீர்ந்தது! :-)

  ReplyDelete
 7. அருமையான பதிவு நன்பா. நன்றி. ஒரு எழுத்தாளன் உலகில் நடக்கும் எல்லா விசியத்தின் மீதும் கருத்து சொல்லனும், ஒரு Guardianஆ, அறிவுரை சொல்லும் ஆசானாக இருக்கனும் என்கிற பிம்பத்தை உடைத்து தான் ஒரு படைப்பாளி அவ்வள்வுதான் எனும் சொல்கின்ற சாருவை பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
 8. திருவாளர் பிச்சைகாரன் அவர்களே, கேணி சந்திப்பில் சாருவிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகளை எவ்வளவு அருமையாக நீர்க்கச் செய்து அந்த கேள்விகளின் முழு தன்மையையே அழித்துவிட்டு பதிவிட்டிருக்கிறீர்கள் இந்த லட்சனத்துல அட்சரம் பிசகாமல் உள்வாங்கியிருக்கிறீர்கள் என்று சான்றிதழ் வேறு வழங்குகிறார்கள் என்ன கொடுமைங்க...

  ReplyDelete
 9. arumaiyaan pathivu.charus answers are fantastic.

  ReplyDelete
 10. nice one and charus answers are fantastic

  ReplyDelete
 11. அழகான பதிவு. தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு நன்றி!

  ReplyDelete
 12. very nice one . whatevr comes from him mesmerizing the readrs. He is the man unavoidable at any circumstances....

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா