Wednesday, June 6, 2012

சாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதிலும்..

சாரு நிவேதிதா அளவுக்கு தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த எழுத்தாளரும் இல்லை. அவரைப் போல எதிர்ப்புகளை சந்தித்தவர்களும் யாரும் இல்லை. இன்னும் நூறு ஆண்டு கழித்து வாழ இருக்கும் தலை முறைக்குதான் சாருவின் உன்னத புரியும். 

சாருவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடப்பதால், புதிதாக வாசிக்க துவங்குபவர்கள் விஷ்யம் ஏதும் தெரியாமலேயே சாருவுக்கு எதிரான மன நிலையை பெற்று விடுகிறார்கள்.  பின்பு விஷ்யம் தெரிந்த பின் சாருவின் வாசகர்கள் ஆகிறார்கள்.

 நம் வலைப்பூவில் வந்த சமீப கட்டுரை ஒன்றுக்கு நண்பர் ஒருவர்  எதிர் வினை ஆற்றி இருந்தார். சிலர் உள் நோக்கத்துடனும் , துவேஷத்துடனும் எதிர் வினை ஆற்றுவார்கள். ஆனால் இந்த நண்பர் தன்னைப் பற்றிகூறும்போது
 “ நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன்.” 
என்றார்.

எனவே இவருக்கு துவேஷமோ , உள் நோக்கமோ  இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அந்த அடிப்ப்படையில் இவருக்கும் , இவரை போன்ற புதிதாக வாசிக்க ஆரம்பித்து இருப்பவர்களுக்கும் சில விளக்கங்கள் கொடுக்க விரும்புகிறேன்.

கேள்வி 1    சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? 

                             நிமிர்ந்த  நன் நடை , நேர் கொண்ட பார்வை ,  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். சமீபத்தில் வழக்கு எண் என்றோர் குப்பைப் படம் வெளி வந்தது.  விபரம் புரியாத சிலர் , வித்தியாசமானதை ஆதரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு உலகப்படம் அது இது என உணர்ச்சி வசப்பட்டார்கள். ஒரு சிலருக்கு உண்மையிலேயே படம் பிடித்து இருந்தது. சரி.. ரசனை ஒவ்வொரு விதம். அதில் தவறில்லை.

ஆனால் சில இலக்கியவாதிகளும் , அறிவு ஜீவிகளும் கூட படம் குப்பை என தெரிந்திருந்தாலும் கூட , படம் அபாரம் என புகழ்ந்தனர், காரணம்? சினிமா வாய்ப்பு, டிவியில் பேட்டி கொடுக்க கிடைக்கும் வாய்ப்பு.

சர்ரு மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக படத்தின் மீது காறி உமிழ்ந்தார். 

எப்போது? படம் சூப்பர் ஹிட்... படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர் என ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டு கொண்டிருந்த நிலையில்.
        
இந்த உண்மைதான் சாருவை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது. 

உண்மை ஜெயிக்க தாமதமாகலாம் . ஆனால் கண்டிப்பாக ஜெயிக்கும்.

வழக்கு எண் படத்தை பற்றி இப்போது அதன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்? படம் நல்ல படம்தான்.. ரசிகர்கள்தான் சரி இல்லை.. ஆதரிக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்கிறார்கள்.  ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டுவதாக அவர்கள் விட்ட புருடாவை அவர்களே வாபஸ் வாங்கி இருக்கிறார்கள்.. 

இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

சிறு கூட்டமா? ஹா ஹா.

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து சில துரோகிகள் அதிர்ந்து போனார்கள். சாருவுக்கு நிகரான கூட்டத்தை கூட்ட வேண்டுமானால் ரஜினியால் மட்டுமே முடியும் என நினைத்து , ரஜினியை வைத்து கூட்டம் நடத்தினார்கள். சாருவை சிறு கூட்டம் மட்டுமே பின்பற்றுகிறது என்றால் அவர்களுக்கு ஏன் அவ்வளவு பதட்டம் ?


பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

சாரு தமிழர்களை திட்டுகிறார் என்றால் இதற்கு காரணம் தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதால்தான். தமிழர்கள் மீது கொண்ட அன்பினால்தான். மனம் நொந்து போய்தான் திட்டுகிறார்.

இதே காரணத்தால்தான் , பாரதியும்கூட தமிழர்களை திட்டி இருக்கிறார். நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.

கீழ் கண்ட கவிதை எழுதியவர் சாருவா , பாரதியா என யோசித்து பாருங்கள்..

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு 
கோடியென் றாலது பெரிதாமோ ? 

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன் 
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு 
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச் 

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே 
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச் 
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் 
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் 

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் 
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் 
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலாயிரங் கோடி நயந்து நின்ற 
புண்ணிய நாட்டினிலே - இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

சமீபத்திய உதாரணம் காட்டவா...

வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது? 


சாரு எழுத்துகளை படிக்காமல் இருந்து இருந்தால் , கண்டிப்பாக அந்த பட கிளைமேக்சை விசில் அடித்து ரசித்து இருப்பேன். ஆனால், இந்த படத்தை பார்த்த உடனேயே இது கேவலமான படம் புரிந்து விட்டது .  நான் ஒருபோதும் இந்த குப்பையை பாராட்டவில்லை.

இது குறித்து சாரு என்ன சொல்கிறார் என பாருங்கள்.

சினிமா பற்றி இதுவரை அரை டஜன் புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.  அதைப் படிக்கும் என்னுடைய வாசகருக்கு வழக்கு எண் என்ற படம் ஒரு குப்பை என்பது தானாகவே புரிந்து விடும். 

நான் ஒரு சவால் விடவா?

சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால்.... 


 நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் சாருவைத்தவிர வேறு எந்த எழுத்தாளரும் , ஒரு சிறிய வட்டத்தை தாண்டி வெளியே செல்லவில்லை. தமது வாசகர்களுக்கு புதிய எல்லைகளை அறிமுகப்படுத்தவில்லை என்பதையே உங்கள் கேள்வி காட்டுகிறது.

ஜெனிவாவில் சங்கர்லால் என்ற கதையை யார் படித்தாலும் கதை ஒன்றுதான்.  ஒருவர் ப்யங்கர குற்றம் செய்து இருப்பார்.. சங்கர்லால் அதை கண்டு பிடிப்பார்.

ஐந்தாம் கிளாஸ் மாணவன் முதல், கல்லூரி ஆசிரியர் வரை யார் படித்தாலும் இதுதான் கதை. கதாசிரியர் என்ன எழுதி இருக்கிறாரோ அதுதான் கதை.

ஆனால் பின் நவீனதுவத்தில் எழுத்தானை விட வாசகனே முக்கியம். வாசகனின் புத்திசாலித்தனத்துக்கு நிறைய வேலை இருக்கும். வாசகனின் புரிதலே நாவலை தீர்மானிக்கும். 

அதாவது ஜீரோ டிகிரியைப் பற்றிய என் புரிதல் , ஆரம்ப காலத்தில் வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது என்னிடம் கேட்டால் , நான் சொல்வது வேறு மாதிரி இருக்க கூடும். இது போன்ற நாவலை படிப்பதே ஒரு கலை.. death of author , deconstruct the text என்றெல்லாம் நிறைய விஷ்யங்கள் இருக்கின்றன. சாருவை தொடர்ந்து படித்து வாருங்கள்.. ஒரு புதிய உலகம் உங்களுக்காக காத்து இருக்கிறது. 

6 comments:

 1. 1 ) வழக்கு எண் - சாரு எனக்கு பிடிக்கவில்லை என்கிறார், இதில் அவரை தூக்கி வைத்து கொண்டாட என்ன இருக்கிறது? சிலர் பிடிக்கிறது என்கிறார்கள், இதில் அவர்களை திட்ட என்ன இருக்கிறது?
  2 ) மிஸ்கின் உடன் friend ஆக இருக்கும் போது நந்தலாலா படத்தை அது ஒரு copy என்று தெரிந்தும் சிலாகித்து ஏன் சாரு கூற வேண்டும்?
  3 ) மிக பெரிய வாசகர் வட்டம், கூட்டம் என்றால், ஏன் சாரு புத்தகங்கள் விற்க மாட்டேன்கிறது? நீங்களே வாங்குவது இல்லையோ?
  4 ) ஜெயமோகன் போன்றோர் நடத்தும் இலக்கிய கூட்டத்தையும் கிண்டல் செய்கிறிர்கள் , அப்புறம் இலக்கியம் வளர வில்லை என்று வாசகர்களை திட்டி என்ன பயன்?

  ReplyDelete
 2. பிச்சைக்காரன் சாருவின் ஆரம்பகால நண்பராய் இருந்தவன் நான். சாரு ஒரு அக்மார்க் சுய நலம் பிடித்தவர். அவர் எழுத்தாளரே அல்ல. நான் அவருடன் பல ஆண்டுகால நெருங்கிய நட்பில் இருந்தவன். நீங்கள் அவருடன் எத்தனை மணி நேரம் பேசி இருப்பீர்கள்? நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் பேசி இருக்கிறேன். நான்கு வருடங்கள் இப்படி. மின்னுவதெல்லாம் பொன் என்று நினைப்பதையும், எவர் ஒருவரையும் உடனே மிக நல்லவர் என்று சர்ட்டிபிகேட் வழங்குவதையும் நல்லது என்றா நினைக்கின்றீர்கள்?

  ReplyDelete
 3. Dear Pichaikaaran, I came to know about Charu, only after I started reading blogs in the net that is in the last 2 years. After reading his works & blogs I dont think he is a sane person. I pity him, for me he is a loser working hard trying to get a name in his field. I have read his works , even though I didnt like any of them. That is my opinion. For me I like to try different things and in the process have different experiences. If I like something I do go for it again let it be food,places,clothes........ The reason I am typing this is , like reading other blogs for past time , I read yours regularly. You look like a broad minded & rationalist person. But when it comes to Charu you shatter my perception, I wonder sometimes if you are also a sane person. Sometimes I find it difficult to digest the fact on your stance about Charu. My question is when someone is trying to bring out his/her work ,let it be any field. The target customers have all rights to reject or accept it. Every individual person tastes differs. But to brand the work of a movie (Vazhaku Enn ...) “Rubbish “ “Shit” is not justifiable ,however worse it is , Charu could have given some suggestions or given some explanation to better it . It ‘s only Balaji’s third movie , tell me what is so wrong in the movie , that you think it is worth to be called shit? FYI , I liked that movie very much. Imagine if someone calls your blog “shit”, how will you react.

  ReplyDelete
 4. ஹ்ம்ம்... :)

  நண்பர் பிச்சைக்காரனுக்கு முதலில் என் நன்றி.

  ஏனென்றால், பின்னூட்டம் எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்டபிறகு படித்துப் பார்த்த போது கொஞ்சம் over react செய்து விட்டோமோ என்று வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாகவே பிடித்துக்கொண்டீர்கள். மறுபடி நன்றி.

  ஒரு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களுக்கும் என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த ராஜாவிற்கும் -

  உங்கள் விமரிசனத்தில் வழக்கு எண் படத்தை நீங்கள் பிடித்து இருந்ததாக எழுதவில்லை. நான்தான் குழப்பிகொண்டேன். காரணம், உங்கள் வலைப்பூவையும் நண்பர் லுக்கிலுகின் வலைப்பூவையும் எப்பொழுதுமே குழப்பிக்கொள்வேன். அதுவே இப்பொழுதும் நடந்துவிட்டது...

  "அடிச்சான் பார்யா பல்டி" என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. :)

  இனி... என் சில கேள்விகள்...

  பாரதியின் சைவ வைணவ சண்டையை பார்த்து நொந்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற வசவும், சாருவின் 'பாத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத தமிழர்கூட்டம்' என்ற வசவும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா...?

  பத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத கூட்டம் எப்படி பெரிய கூட்டமாகும்? சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்...? சாருவே ஒப்புக்கொள்கிறார். முதலில் இதை ஒப்புக்கொண்டால்தான் இந்த சிறிய கூட்டத்தை பெரியதாக ஆக்க முயல முடியும். இந்த கூட்டத்திற்கே "அவர்கள்" பதட்டப்படுகிறார்களே என்று பேசித்திரிவது எந்தவிதத்திலும் பெருமை கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து. (முதலில் நமது கூட்டம் அவர்கள் கூட்டம் என்பதே உடன்பாடில்லாத விஷயம். சில மாதங்கள் முன்புவரை இரண்டும் ஒரு கூட்டமாகத்தான் இருந்தது...)

  // சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். // - மன்னிக்கவும். அப்படி எல்லாம் யாராலும் - திரும்பவும் சொல்லுகிறேன் - யாராலும் இருக்க முடியாது.

  என்னுடைய சவால் என்று நான் சொன்னது நண்பர் ராஜாவை காயப்படுத்தியிருப்பது போல் படுகிறது. அது விளையாட்டாக சொல்லப்பட்டது அல்ல நண்பரே. என்றோ ஒருமுறை சாருவின் வலைபூவிலேயே அவர் நாவல்களைப்பற்றி வாசகர் வட்டத்தில் நடந்த விவாதமாக நடந்ததை வெளியிட்டு இருந்தார். அதில் சாருவின் தீவீர வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களே தாங்கள் படித்த சாருவின் கதைகளை ஒரு குழப்பத்துடனே விவாதித்தார்கள். இப்பொழுதும் சொல்லுகிறேன் - அவரின் எல்லா எழுத்துக்களையும் பத்து பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். என்னால் நண்பர் ராஜா அழைத்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் அது பிரச்சனையே அல்ல. நீங்களே திருப்திகரமாக சொல்லுங்கள் ராஜா. நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன்.

  //நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது// - எங்கே சென்றுவிட்டது? முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா? இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா? அவர்கள் இசையை அவர்களுக்கே வாசித்து காட்டி கைதட்டல் வாங்கும் எ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளரா இல்லை நமது தவிலையும் நாதஸ்வரத்தையும் அங்கே எடுத்து செல்லும் தைரியம்கொண்ட இளையராஜா சிறந்த இசையமைப்பாளரா...

  நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்று தெரியவில்லை... உங்கள் பதிலில் தெரியும் என்றும் என்று நம்புகிறேன். :)

  ReplyDelete
 5. சாரு எந்த தகுதியில் ஒரு படத்தை குப்பை என்கிறார்??? சாரு ஒரு திரைபடத்தை வேண்டாம் ஒரு குறும் படத்தையாவது இயக்கி காட்டட்டும் பார்க்கலாம்.. அவரின் நாவல் குறித்து மிஸ்கின் கூறியதற்கு எப்படி குதித்தார். ஏன் அவர் அதை வாசகனின் கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ளவில்லை ??? அவர் தனக்கு ஒரு அடிமைக் கூடத்தை உருவாக்குகிறார்..ஜெயலலிதா போல்

  ReplyDelete
 6. Dear Sir,

  Frankly speaking for the past 2 years i am following ur blog as well as charu blog. Urs s better than him, reason is you never try to sell anything, u never try to beg from your followers, u never try to proove ur self a best blogger, you never tell readers need qualification to follow your blogs. Also, i am new to tamil ilakkiyam. Athu yenna sir pinnaveena thuvam antha dash therincha thaan periya dasha. World is so big. Neenga Charuva santhosapaduthuvathu ungalida urimai.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா