Tuesday, June 5, 2012

வெள்ளி நகர்வதை நாளை காலை பார்க்கலாம்- அபூர்வ நிகழ்ச்சி


சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதிகம் கேள்விப்பட்டு இராத வெள்ளி கடப்பு எனும் அபூரவ நிகழ்ச்சி நாளை ( 06.06. 2012 )  நடக்கிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி , கண்டு களியுங்கள்.

அது என்ன வெள்ளி கடப்பு?





சூரியனை வெள்ளி கிரகம் சற்று மறைப்பதையே வெள்ளி கடப்பு என்கிறார்கள். சூரியன் , பூமி , வெள்ளி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இது நிகழ்கிறது.

சூரிய உதயம் முதல் பத்து மணி வரை இதை காணலாம். வெள்ளி கிரகம் சூரியனை கடந்து செல்வது , ஒரு கருப்பு புள்ளி நகர்ந்து செல்வது போல தெரியும்.

சந்திரன் வெள்ளியை விட சிறிது . சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறதே.. வெள்ளி ஏன் சிறிய பொட்டாக தெரிகிறது.

உங்கள் கண்களுக்கு அருகில் விரலை வையுங்கள். பார்வை முழுமையாக மறையும். விரலை சற்று தள்ளி வையுங்கள். பார்வை மறையாது. காரணம் விரலின் தூரம்.

நிலா நமக்கு அருகில் இருப்பதால், சூரியனுக்கு நேராக வரும்போது சூரியனை மறைக்கிறது. வெள்ளி கிரகம் நம் இடத்தில் இருந்து ரொம்ப தூரத்தில் இருப்பதால் , அவ்வளவாக மறைப்பதில்லை.

இந்த அபூர்வ நிகழ்சிக்காக விஞ்ஞானிகள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.
கில்லாமேடி ஜெண்டில் என்ற விஞ்ஞானி இதை பார்க்க பட்ட பாடு , வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

இவர் ஃபிரான்ஸ் தேசத்தவர்,. பாண்டிச்சேரியில் இருந்து இந்த  நிகழ்ச்சியை காண 1760ல் பாண்டிச்சேரி புறப்பட்டார். ஏன் பாண்டிச்சேரி வர வேண்டும்? அவர் ஊரிலேயே பார்த்தால் ஆகாதா?

அதில்தான் இருக்கிறது விஷயம். வெள்ளி சூரியனை கடப்பதை உலகின் பல்வேறு இடங்களில் இருந்து கவனித்து , அதன் மூலம் , பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரத்தை கணிக்க அன்றைய விஞ்ஞானிகள் முடிவு செய்து இருந்தனர்.

பாண்டிச்சேரி ஃபிரான்ஸ் நாட்டின் ஹோம் கிரவுண்ட் என்பதால் ஜெண்டில் பாண்டி கிளம்பினார். கப்பலில் வந்து சேர்வதற்குள் பாண்டி ஆங்கிலேயர் ஆட்சிக்கு போய் விட்டது. எனவே அவரால் பாண்டிக்குள் நுழைய முடியவில்லை. கப்பலில் இருந்த படியே இந்த நிகழ்ச்சியை கண்டார். ஆனால் கப்பலின் ஆட்டத்தால் துல்லியமான அளவீடுகள் கிடைக்கவில்லை.

என்ன செய்வது? இன்னும் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நிகழ்ச்சி நடக்கும். வெயிட் செய்து பார்க்கலாம். முடிவு செய்தார்.

8 ஆண்டுகளில் பாண்டி மீண்டும் ஃபிரான்ஸ் வசமானது. தைரியமாக பாண்டிச்சேரிக்குள் நுழைந்து வெள்ளி நகர்வை கவனிக்க ஆவலாக காத்து இருந்தார்.

அய்யோ பாவம்., அன்றைய தினம் கடும் மேக மூட்டம். வானில் ஒன்றும் தெரியவில்லை.
எட்டு ஆண்டு காத்து இருப்பு வீண்., மனம் உடைந்து ஊர் திரும்பினார்.

வெகு நாட்கள் இவரை பார்க்க முடியாததால், அவர் இறந்து விட்டதாக அங்கு நினைத்து விட்டனர். மனைவி மறுமணம் செய்து கொண்டார். அவர் வேலையில் வேறொருவர் இருந்தார்.

மனம் நொந்து போனார். அப்போதைய அரசர் மனம் இரங்கி மீண்டும் அதே வேலையை வாங்கி கொடுத்தார். ஆனால் அதே மனைவி கிடைக்கவில்லை. இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

*******************************************************************

இன்று இவ்வளவெல்லாம் கஷ்டப்படாமல் எளிதாக பார்க்கலாம். அதற்காக இளக்காரமாக நினைக்காமல் பாருங்கள்.

நேரடியாக சூரியனை பார்க்க வேண்டாம். வெல்டிங் கிளாஸ் அணிந்து பார்க்கலாம். அல்லது சூரிய ஒளியை சுவற்றில் விழச்செய்து பார்க்கலாம். அல்லது இண்டர்னெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். பாருங்கள்.






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா