Friday, August 10, 2012

இடைவெளி- சம்பத் அளித்த இணையற்ற நாவல்

மிகவும் சிக்கலாக ஒரு விஷ்யம் இருந்தால் , அதை புரிந்து கொள்வது கடினம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு விஷ்யம் இருந்தாலும் , அதை புரிந்து கொள்ள இயலாது.

அப்படி புரிந்து கொள்ளப்படாமல் போன ஓரு அற்புத படைப்புதான் , இடைவெளி எனும் நாவல். இந்த ஒரே ஒரு நாவலால் , அழியா புகழ் பெற்று விட்டார் சம்பத்.
வரும் காலங்களில்தான் , அவர் சிறப்பு இன்னும் பரவலாக பலரை சென்றடையும் என தோன்றுகிறது.

கதாபாத்திரங்கலின் சிறப்பு , அவர்களது பிரச்சினைகள் , பிரச்சாரம் என்றெல்லாம் இல்லாமல் , முழுக்க முழுக்க தத்துவ ஆராய்ச்சி எனும் பாணியில் எழுதப்பட்டுள்ளது இந்த நாவல்.

இந்த நாவலின் நாயகன்  பணத்திலோ , திறமையிலோ பெரிய கில்லாடி எல்லாம் இல்லை. உலகியல் வெற்றியிலும் இவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. யோசித்து பார்த்தால் , பணமோ வெற்றியோ மிகவும் தற்செயலானவை. தகுதியான பலர் வெற்றிகளை சுவைக்காமலேயே இறந்து போய் இருக்கிறார்கள். இந்த நாவலாசிரியர் சம்பத் கூட , தன் தகுதிக்கேற்ற வெற்றிகளை பெறாமல் போனவர்தான்.

ஆனால் நிறைவு என்பது தற்செயலானது அல்ல. அது நம் தேர்வு. வாழ்க்கையின் எந்த புரிதலும் இல்லாமல் , தேடி சோறு தினம் தின்று , சின்ன்ஞ்சிறுகதைகள் பேசி, பின் இறந்து போவது என முடிவெடுத்து விட்டால் , யார் என்ன செய்ய முடியும் ?

ஆனால் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து விட்டால் , அதற்கு பணமோ , அந்தஸ்தோ , வேறு எதுவுமோ தடை இல்லை. ஆர்வம் மட்டும் போதும்.

சாவு என்பது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு விஷ்யம்தான் மரணம். இந்த மரணத்தை புரிந்து கொள்ள முயன்று, கடைசியில் வாழ்க்கையையே புரிந்து கொண்ட ஒரு மனிதனின் கதைதான் இடைவெளி.

வெறும் நூறு பக்கங்கள்தான். அதற்குள்ளாகவே நாவலின் நாயகன் தினகரனின் பணி சூழல் , அவன் மனைவி பத்மா , தோழி கல்பனா , சர்வர் , இவான்ஸ் , மேலதிகாரி , பெரியப்பா என பல மறக்க முடியாத கேரகடர்களை நம் கண் முன் நிறுத்தி இருப்பது பெரிய சாதனை சொல்ல வேண்டும்.


னமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும் . நாம் இருக்கும் தெருவிலேயே அது கிடைக்கும், ஆனால் நாம் கவனித்து இருக்க மாட்டோம். அந்த பொருளை தேட ஆரம்பிக்கும்போது, சட் என கண்ணில் படும்.

பிரபஞ்ச ரகசியங்களை பொருத்தவரை, தேடுவது மட்டுமே போதாது. அந்த பிரபஞ்ச ரகசியம் தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பி முன் வருவதும் நிகழ வேண்டும்.

ஸ்டீபன் ஹாக்கிங் இதைத்தான் அறிவியல் மொழியில் சொல்கிறார். பெரு வெடிப்பு எனும் மாபெரும் நிகழ்ச்சியின் மூலம் உருவான இந்த பிரபஞ்சம் யாருடைய உதவியும் இன்றி, சில இயற்பியல் விதிகளின் அடிப்படையில் உருவாகி வளர்ந்து வருகிறது. இந்த மாபெரும் வரலாற்றில் மனிதனின் இடம் மிக மிக சிறிதுதான். ஆனாலும் நாம்தாம் உலகை தாங்கி பிடிப்பதாக நினைக்கிறோம்.

 நாவல் நாயகனான தினகரனுக்கு இது தான் கேள்வி. என்னவெல்லாமா சாதிப்பதாக நினைக்கிறோம். ஆனால் கடைசியில் சாவு எல்லாவற்றையும் அடித்து கொண்டு போய் விடுகிறதே.. இந்த சாவு என்பது என்ன என சாவின் பேட்டர்னை கண்டு பிடிக்க முயல்கிறார்.

இந்த கேள்வியை ஒருசாமியாரிடம் கேட்டு இருந்தால், அவர் ஏதோ ஒரு விடையை , ஆறுதலை வழங்கி இருக்க கூடும். ஆனால் தினகரன் விரும்புவது ஆறுதலை அல்ல. ஒரு விடையை.

பலரிடம் பேசுகிறார், சிந்திக்கிறார். சூதாட்டம் என்பது எதிர்பாராத தன்மை கொண்டது. ஆனால் அதிலும் ஏதோ ஒரு பேட்டர்ன் இருக்கும். அதை கண்டு பிடித்தால், சூதாட்டம் என்ப்தை கை வசப்படுத்தி விட முடியும் என்பதால் , அதிலும் இறங்கி பார்க்கிறார். அதில் இருக்கும் பொதுதன்மை புரிகிறது.. ஆனால் சாவு மட்டும் கண்ணா மூச்சி காட்டுகிறது.

ஆப்பிள் விழுவதை எல்லோரும் பார்க்கிறார்கள். நியூட்டனும் பார்த்து இருக்க கூடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஆப்பிள் விழும் காட்சி, புவி ஈர்ப்பு விசையை பற்றி யோசிக்க வைத்தது போல, தென்னை மர- நடசத்திர காட்சி , தினகரன் கேள்விக்கு விடை அளிக்கிறது.

இடைவெளி என்பதுதான் மரணம் என உணர்கிறார். எளிய உதாரணம் தூக்கு கயிறு.அந்த சுருக்கின் இடைவெளிதானே மரணத்தை உருவாக்குகிறது. இப்படி யோசித்து பார்த்தால் , மரணத்தின் எல்லா நிலைகளிலும் இந்த இடை வெளி இடம் பெறுவதை காணலாம்.

ஆனால் இந்த இடைவெளிதான் உயிர் வாழ்வுக்கு முக்கியமான அம்சமும்கூட. இந்த சுவாரஸ்யமான முரண் அவருக்கு புரிகிறது.  நாசி துவாரம் போல பல இடைவெளிகள் இருப்பதால்தான் , நம் உடல் உருவாகி வாழ முடிகிறது.

இப்படி வாழ்விற்கு அனுசரணையாக இருக்கும் இடைவெளிக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் சாவுதான்.

சூன்யம் , இடை வெளி , ஒன்றும் இல்லாத தன்மைதான் உருவாதலுக்கும் அழிதலுக்கும் காரணம். from nothingness to nothingness என்ற மகத்தான உண்மை வேறு வார்த்தைகளில் இவருக்கு புரிகிறது.

இந்த தேடலால் அவர் பல விமர்சனங்களை சந்திக்க நேர்கிறது. ஆனால் , அவருக்கு கிடைத்த வாழ்க்கையை அற்ப விஷ்யங்களில் செலவழிக்க அவர் விரும்பவில்லை. வாழ்க்கை என்பது நம் தகுதிக்கு மீறிய பரிசு. அதை பெரிய விஷயங்களுக்குதான் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.

இடைவெளி என்பது ஒன்றும் இல்லாத சூன்யம். ஒன்றும் இல்லாததை எப்ப்படி வெல்ல முடியும்? இந்த தெளிவு வந்து அதனை வணங்கி மண்டி இடுவதுடன் கதை முடிகிறது.

ஆனால் இந்த கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் , வாசிப்பு முடிந்த பின்னும் தொடர்கிறது..

கண்டிப்பாக படித்து பாருங்கள் .



2 comments:

  1. படித்து விடுகிறேன்..

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம். உங்கள் வாசிப்பும் அது பற்றிய பகிர்தலும் பெரும் தூண்டுதல்களாக உள்ளன. இடைவெளி நானும் படித்து இருக்கிறேன். காம்யு, தாஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் எழுத்து நடையை ஒத்திருக்கும் எழுத்து சம்பத் உடையது. இவரது சாமியார் ஜூ விற்கு போகிறார் ஒரு தரமான சிறுகதை.இந்நாவலின் இறுதியில் செஸ் வீரர் காபாபிலங்கா மரணத்தை பற்றி தினகரன் ஆராய்வார். சம்பத் காபாபிலங்கா இறந்த முறையில் தான் இறந்தார், மூளை ரத்தகசிவினால் என்று தெரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. இந்நாவலின் இறுதி வரி கூட "சாவே உன் முன் மண்டி இடுகிறேன்" என்று வரும். உங்களின் "Notes from the Underground " ,Zorba the greek ' விமர்சனகளும் அருமை. நூல்களை நன்றாக உள்வாங்கி எழுதப்பட்ட சிறந்த பதிவுகள் அவை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா