Monday, November 12, 2012

தீபாவளி ”கொண்டாடாதீர்கள்” - நண்பர் அராத்து ”உருக்கமான”வேண்டுகோள் !!!


 ஒரு நண்பர் கால் செய்திருந்தார் . பொதுவான விஷ்யங்கள் சிலவற்றை பேசிக்கொண்டு இருந்து விட்டு , முடிக்கும்போது ”ஹேப்பி தீபாவளி”  என ஃபார்மலாக சொல்லித் தொலைத்து விட்டேன். 

நண்பர் டென்ஷன் ஆகி விட்டார் . “ எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். சிவகாசியில் தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் , இந்த வெடிகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். இந்த் பட்டாசுகள் வெடிக்கும்போது அவர்கள் கதறல் சத்தம்தான் என் காதுகளுக்கு கேட்கிறது. எனவே நான் தீபாவளி கொண்டாடப்போவதில்லை “ என்றார்.

எனக்கு பிரமிப்பாக இருந்த்து. என்னே சமூக அக்கறை என வியந்தேன். மனிதன் என்றால் இப்படியெல்லவா இருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன். சரி, இவர் பாணியில் நாமும் தீபாவளியை புறக்கணித்து விட்டு , வேறு ஆக்க பூர்வமான பணியில் ஈடுபட வேண்டும் என உறுதி எடுத்து கொண்டேன். ஆனால் ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே..

என்வே நண்பர் செய்வதையே நாமும் செய்யலாம் என முடிவு செய்து , அவரிடமே கேட்டேன் “ கரெக்டா சொன்னீங்க பாஸ்.. தீபாவளியை புறக்கணித்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள் ? “

தீபாவளிக்கு செலவிடும் தொகையை , சிவகாசி தொழிலாளர்களுக்கு அனுப்ப போகிறேன், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உதவ போகிறேன் என்றெல்லாம் சொல்லப்போகிறார் என எதிர்பார்த்தேன்.

அவர் கூலாக சொன்னார்.

“ இந்த முறை தீபாவளி கொண்டாடப்போவதில்லை பாஸ். நண்பர்களுடன் சனிக்கிழமையே கிளம்பி கேரளா சுற்றுலா செல்கிறேன். மூன்று நாள் ஜாலியாக இருந்து விட்டு வரப்போகிறேன் “ என்றார் .


இதுதான் தீபாவளி புறக்கணிப்பா என மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி பார்த்தால் , எல்லோருமேதான் தீபாவளியை புறக்கணிக்கிறார்கள் . தீபாவளி கொண்டாடாமல் தொலைக்காட்சியில் நடிகைகள் பேட்டிகளோ , சினிமாவோ பார்க்கிறார்கள். 

நானோ தீபாவளியன்று விடுமுறை என்பதால் நன்றாக தூங்கு ஓய்வெடுப்பேன். ஆனால் நான் தீபாவளியன்று தீபாவளி கொண்டாடுவதாகத்தான் இது வரை நினைத்து வந்தேன். நானும் இதுவரை தீபாவளியை புறக்கணித்து வந்து இருக்கிறேன் என்பது இப்போதுதான் எனக்கே புரிகிறது.

ஆனால் காரணமே இல்லாமல் புறக்கணித்து இருக்கிறேன். ஏதாவது சமூக காரணத்தை சொல்லி இருக்கலாம். மிஸ் செய்து விட்டேன்.  

இந்த தீபாவளியிலும் , தீபாவளி கொண்டாடமல் , கறிசாப்பாடு , ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு,   நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற போகிறேன். புறக்கணிப்புக்கான காரணம் பிறகு அறிவிக்கப்படும்.

அதற்கு முன் நண்பரும் , இலக்கியவாதியும் , சிந்தனையாளருமான அராத்து அவர்கள் தீபாவளியை புறக்கணிக்க விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோளை படித்து விடுங்கள்.


தீபாவளி- அராத்து உருக்கமான வேண்டுகோள் 




காந்தி உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்தினாலும் படுத்தினார் , நம்மாளுங்க அதிலேருந்து எது எடுத்தாலும் நெகடிவ் அப்ரோச்.ஒரு பிரச்சனைன்னா அதை எப்படி சால்வ் பண்றது ? எப்படி மாத்தறதுன்னு பாஸிடிவா , பிராக்டிகக்லா திங்க் பண்றது இல்லை.

ஈழத்துல பிரச்சனையா ? பிறந்த நாள் கொண்டாட மாட்டேன்.

சிவகாசியில பிரச்சனையா ? தீபாவளி கொண்டாட மாட்டேன் .


காவிரி பிரச்சனையா ? பொங்கல் கொண்டாட மாட்டேன்.

நீங்க கொண்டாடவில்லையெனில் பிரச்சனை தீந்துடுமா ? அதிலும் தலைவர்கள் சொல்லும்போது எரிச்சலாக உள்ளது. எதையாவது செய்யாமல் இருப்பதற்காடா நீ தலைவன் ?

அப்பன் ஆத்தா செத்தாலே , எங்களுக்கு இந்த வருஷம் தீபாவளி கிடையாது ,சும்மா குழந்தைகளுக்காக கொஞ்சம் டிரஸ் , ஸ்வீட் அப்புறம் கொஞ்சம் வெடி வாங்கிருக்கோம் , அவ்வளவுதான் என சொல்லிவிட்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கும் சமூகம் நம் சமூகம்.

ட்வின் டவரை சிதைத்த போதோ , கடும் புயலால் பாதிக்கப்பட்ட போதோ வெள்ளைக்காரன் நான் க்றிஸ்த்மஸ் கொண்டாட மாட்டேன் , நியூ இயர் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறானா ? தெரியவில்லை.

எல்லாம் நல்லா சீன் கிரியேட் பண்ணிட்டு , அறிவு ஜீவி இமேஜை போத்திகிட்டு , புது டிரஸ் போட்டுகிட்டு ,1000 வாலா வெடிச்சிட்டு , இட்லி கறி குழம்பு வடை பாயாசம் தின்னுட்டு , சிறப்பு நிகழ்ச்சிகள் பாத்துட்டு ….குட்டி தூக்கம் போட்டுட்டு ….ஹேப்பி தீபாவளி …சே சே ….தீபாவளி கொண்டாடாதீர்கள்.

2 comments:

  1. கடவுளை நம்புவனுக்கு தீபாவளி
    நான் நம்புவதில்லை
    ஆனால்
    நரகாசூரன்
    எனது முன்னோர்
    நான் என்ன செய்யட்டும்
    கொண்டாடுவதா, நினைவேந்துவதா?

    ReplyDelete
  2. @வேல் முருகன் புராணத்தை ந்ம்பாவிட்டால் , நரகாசுரனையும் நம்ப வெண்டியதில்லையே.. சரி, பெனிஃபிட் ஆஃப் டவுட்டை அவனுக்கு கொடுத்து , அவன் மறைவுக்கு படையல் கொடுத்து , கறி சாப்பாட்டுட்டன் தீபாவளையை கொண்டாடுவோம்- மன்னிக்கவும் - தீபாவளியை அனுசரிப்போம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா