Tuesday, January 1, 2013

கண்ணியமாக உடை அணிய சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா.


   இது ஒரு முட்டாள் சமுதாயம் என நான் சொன்னதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பாரத பண்பாடு, கல் தோன்றி மண் தோன்றாத... என்றெல்லாம் சொன்னார்கள்.

         நம் நாட்டை விமர்சிப்பது அதை அசிங்கப்படுத்தவதற்கு அல்ல.. இது தற்போதைய இழிவு நிலையில்  இருந்து  தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..

       ஒரு வெளி நாட்டுக்காரர்  நம் நாட்டுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் போதும் , நம் நாட்டைப்பற்றிய கேவலமான மனச்சித்திரம்  பதீவாகி விடும். டிராபிக்கை மதிக்காத  வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் மல ஜலம் கழிக்கும் படித்த சமுதாயம், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும்  காட்டுமிராண்டித்தனம் , ப்ளூ ஃபில்ம் போன்ற டிவி நிகழ்ச்சிகள் , மஞ்சள் பத்திரிக்கைகள் போன்ற வார இதழ்கள் போன்றவற்றை பார்க்கும் புதிய்வர் யாருக்கும் இது ஒரு காட்டு மிராண்டி தேசம் என்ற எண்ணமே தோன்றும்.

    நம் ஆட்களை வெளி நாட்டிற்கு செல்லும்போது இளக்காரமாக பார்ப்பதற்கு காரணம் இதுதான்.  சில நாடுகள் வெளிப்படையாக காறித்துப்புகின்றன. சில நாடுகள் நாகரிகம் காரணமாக அப்படி செய்வதில்லை.

 நம் ஆள் ஒருவன் அவர்களை பார்க்க சென்றால் கூல் ட்ரிங் சாப்பிடுங்கள் , ஏதாவது சாப்பிடுங்கள் என அவன் உபசரிப்பான். அட்டா... நமக்கு என்ன மரியாதை என நம் ஆள் புளகாங்கிதம் அடைவான்.

  உண்மையில் அவன் நோக்கம் உபசரிப்பு இல்லை.. இந்தியன் என்றால் நாற்றம் எடுத்தவன் என அவன் மனதில் பதிந்து இருக்கிறது. அதை மறைக்கவே வாசனையாக எதையாவது நம் ஆளை சாப்பிட வைக்கிறான்.

 நம் ஆள் புத்திசாலிதான் , நாற்றம் இல்லாதவன் தான்.. ஆனால் இந்தியாவின் சமூக நிலை அவனை அப்படி நினைக்க வைக்கிறது..

    இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியில் , நேரில் வந்து பார்த்துதான் இந்தியாவின் அசிங்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு செகண்டில் உலகம் முழுதும் செய்தி போய் விடுகிறது.

   டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிக்ழந்த அவலம்தான் , பிபிசி சிஎன் என் போன்ற வலைத்தளங்களில் தலைப்பு செய்தி  ஆக இருந்தது..  இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி  நாடு என்பது உலகம் முழுதும் தெரிந்து விட்டது.

     இதில் தமிழ் நாடு தனி முத்திரையை பதித்தது என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷ்யம்..


  •      இலங்கையில் தமிழர்கள் படு கொலை நடந்த போது இங்கு எந்த வித சலனமும் இல்லை . சில இயக்கங்கள் பதறினவே தவிர , பெரும்பான்மை சமூகம் சலனம் இன்றி இருந்தது.
  • அங்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக செய்தி வெளியாகி உலகமே பதைபதைத்து போனது.. ஆனால் தமிழகம் டீவியில் சினிமா டான்ஸ்  பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.
  • விக்டன் குழுமத்தில் இருந்து , ஓர் ஆபாச பத்திரிக்கை வெளியாவதை ஞாநி போன்றோர் கண்டித்தனர். அச்சு விபச்சாரம் என்றார்கள்.. ஆனால் பொது மக்களிடையே எந்த சலனமும் இல்லை.
  • மீனவர்கள் இலங்கை கப்பல் படையால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் . ஒரு சலனமும் இல்லை.
  • பெண்களை போகப் பொருட்களாக காட்டும் விளம்பரங்கள் , தொலைக்காட்சி விளம்பரங்கள் வெளிவந்த போதும் எந்த சலனமும் காட்டவில்லை.
  • டெல்லியில் ஒரு சகோதரி பாதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வேதனைக்குரியது.. அதற்காக அந்த ஊரில் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது அவர்களின் சுரணை உணர்வை காட்டியது. ஆனால் அதே கால கட்டத்தில் இங்கு அது போல பல சம்பவங்கள் நடந்தன / நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நம் மக்களுக்கு அதெல்லாம்கூட கோபம் ஏற்படுத்தவில்லை.
இப்படி பொறுமையின் சிகரமாக இருந்த நம் மக்கள் , ஒரு விஷ்யத்தில் சீறி எழுந்தார்கள். பெரும் போராட்டம் , கேலி சித்திரங்கள் , கடும் கண்டனங்கள் ..

மேற்கண்ட விஷ்யங்களை எல்லாம் விட கொடுமையான விஷ்யம் என்ன நடந்து விட்டது.

பெண்கள் , இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக உடை அணிந்தால் நல்லது என ஒருவர் சொல்லி விட்டாராம். இதற்குத்தான் இவ்வளவு களேபரங்களும்..

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு இடத்திலும் தினம் தோறும்  விதம் விதமாக அ நீதி நடந்து வருகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இதற்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்.. 

     எங்கே போய் முட்டிக்கொள்வது ? 

 இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்... 

பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன். 

 


17 comments:

  1. கண்ணியமாக உடை அணிவதில் தவறு இல்லை; ஆனால், குற்றங்களுக்கும் உடைக்கும் சம்பந்தம் இல்லை எனபது தான் அவர்கள் வாதம்.

    ReplyDelete
  2. வணக்கம் நீண்டநாட்களின் பின்னர் சந்திக்கின்றேன் முதலில் புதுவருட வாழத்துக்கள்

    ReplyDelete
  3. @jana அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே .. நண்பனே நண்பனே.. நண்பனே.... காலம் எவ்வளவு சீக்கிரமா ஓடுது !!

    ReplyDelete
  4. மதம் எனும் மடத்தனம் என்னவென்றே தெரியாமல் சுதந்திரமாக அமாசோன் காடுகளில் வாழும் ஆதிவாசி இந்தியர்கள் உடை அணியாமல் அம்மனமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சமுதாயத்தில் கற்பழிப்பு, திருட்டு, கொலை குற்றங்கள் ஏதும் கிடையாது. எனவே அவர்களைப்போல் நம் சமுதாயமும் மாறினால் நன்றாக இருக்கும்.

    அரபிய பாலைவனத்து பைத்தியகாரர்களின் அத்து மீறிய அடுத்தவன் மண் நில நாடுகளின் ஆக்கிரமிப்பு, கொலை வெறி, சின்ன திருட்டாக இருந்தாலும் கையை துண்டிக்கும் காட்டுமிராண்டித்தனம், மதமெனும் மாயை நம்ப வைத்து இளகிய மனமுடைய மனிதர்களின் மூளைகளை வசியம் செய்து உயிருள்ள நடக்கும் மனித வெடி குண்டாக மாற்றும் மாயா ஜால வித்தைகாரர்கள் மற்றும் பெண்ணை ஆணுக்கு அடிமை எனும் கருத்தை போதிக்கும் மடத்தனம் பிடித்தவர்களின் பாடங்கள் இந்தியாவுக்கு தேவையில்லை.

    எனவே அனைவரும் ஆடைகளை துறந்து குற்றமற்ற சமுதாயத்தை அமைப்போம்.

    அரபிய பாலைவனத்து மடையர்களின் மாய வலையில் சிக்க வைக்க கூலிக்கு மாரடிக்கும் பசுத்தோல் போற்றிய பிச்சைக்காரன்களை வெறுத்து ஒதுக்குவோம்.

    மடையர்களின் கடைசி புகலிடம்தான் மதமெனும் சாக்கடை.

    ReplyDelete
  5. @ மாசிலா... அமேசான் காடுகளில் பெண்களை போக பொருட்களாக சித்திரிக்கும் திரைப்படங்கள் , தொ கா நிகழ்ச்சிகள் , பத்திரிக்கைகள் இல்லை.. என்வே அங்கு மதம் எனும் மருந்து தேவையில்லை... ஆனால் ஆணாதிக்கம் எனும் விஷத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நமக்கு மருந்தாக , உண்மையான பெண் விடுதலையை ஆதரிக்கும் இஸ்லாம் எனும் மதம் தேவை

    ReplyDelete
  6. @ நம்பள்கி... குற்றங்களுக்கு ஆடைகள் மட்டுமே காரணம் என்று சொன்னால் அது தவறு... ஆண்களின் வக்கிர புத்தி, பெண்களை போக பொருட்களாக கருதும் சமூகம் என பல காரணங்கள் உண்டு.. ஒரு நாகரிகமான சமூகத்தில் ஒரு பெண் எந்த ஆடை அணிந்தாலும் பிரச்சினை இருக்காது... நம் காட்டுமிராண்டி தேசத்தில் , ஒழுங்கான ஆடை அணிந்தாலே பாதுகாப்பு இல்லை.. இதில் கவர்ச்சி ஆடைகள் அணிந்தால் கேட்கவே வேண்டாம்

    ReplyDelete
  7. //இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்...//
    என்ன வழி?

    இஸ்லாமிய நாடுகள் எதுவும் உருப்படியாக இல்லை.இந்தியாவை விட தரம் தாழ்ந்தவையே.

    பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை விட இங்குள்ள முஸ்லிம்களை நன்றாக வைக்கும் மன்ப்பாங்கு இந்தியர்களுக்கு இருக்கிறது.

    ஆகவே ஒருஇந்து ,பிற மதத்தினரை விட பல மடங்கு சிறந்த்வன்.ஆகவே முஸ்லிம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை,ஜன்நாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் இருக்கிறது.
    //பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன்.//

    இதைத்தானே சார் நிவேதிதா செய்கிறான்.அவனுக்கு வால் பிடிக்கும் சிஷ்யன் யோக்கியம் போல் பேசுவது கொடுமைடா சாமி!!

    ReplyDelete
  8. நல்ல பதிவு தான் .. நீங்கள் டெங்கு காய்ச்சலுக்கு கசாயாம் மருந்தாகாது என சொல்வது நியாயம், ஆனால் சரக்கு அடியுங்கள் சரியாகி விடும் என்பது தான் இடறுகின்றது ..

    கண்ணியமாக உடைப் போடுங்கள், ஆனால் கண்ணியத்தின் இலக்கண நிர்ணயத்தில் தான் சிக்கலே எழுகின்றது ... !

    பெண் எதையெல்லாம் மறைக்க வேண்டும், மறைக்க கூடாது, பெண் மறைக்கும் அத்தனையையும், ஆணும் மறைக்க வேண்டும் அல்லவா. இந்திய சட்ட சாசனும் ஆணும் பெண்ணும் சமம் எனக் கூறுவதை மறந்துவிட வேண்டாம். அது சரி எவன் மதிக்கிறான் நாம் மதிக்க எங்கின்றீர்களா..

    சரி விடுங்க.. நீங்கள் பரிந்துரைக்கும் மதம் தரும் சுவர்க்கத்தில் ஆணுக்கு 72 நித்ய கன்னிகைள் படுக்க கிடைக்குமாம், பெண்ணுக்கு ஏன் கிடைக்காது என்பதை விளக்க முடியுமா ???? !!!

    எப்படியாவது ஹிட்ஸ் தேற்றவேண்டுமா, நடக்கட்டும் நடக்கட்டும்.

    அப்புட்டியே சாரு சாரை கேட்டதாக சொல்லுங்கள், அடுத்த நாவல்களுக்கு ரெடியாக இருக்கின்றோம். அதில் வரும் அஜால், குஜால் வருணனைகள் எல்லாம் இன்றைய இளைய சமூகத்துக்கு, முக்கியமா இஸ்லாமிய இளைவர்களுக்கு பயன் தரும் பொக்கிசங்கள் அல்லவா.

    ReplyDelete
  9. @ இக்பால்... இந்த்ய நடைமுறை தெரியாமல் பேசாதீர்கள்... பெண்களின் அரைகுறை ஆடை படங்களை வெளியிட்டு சில தமிழ் பத்திரிகைகள் காசு பார்க்கிறார்கள்.. ஆண்களின் அரை குறை படங்களை வெளியிட்டு காசு பார்க்க முடியுமா? பெண்களை போக பொருட்களாக்கி ரசிக்கிறார்க்ள் என்பதுதானே குற்றச்சாட்டு...

    ReplyDelete
  10. @ சார்வாகன் ... முஸ்லீம்களை இந்தியர்கள் நன்றாக வைத்து கொள்கிறார்களா?
    முஸ்லீம்களையும் இந்தியர்களையும் பிரித்து பார்ப்பது ஆபத்தான போக்கு... முஸ்லீம்களும் மற்ற தமிழர்களும் காலம் காலமாக இங்கே இருக்கும் மண்ணின் மைந்தர்கள்.. இந்தியா என்பது நேற்று தோன்றிய நாடு..

    ReplyDelete
  11. பலருக்கும் பலவிதமான கருத்து, யார் சொல்வதை கேட்பது அவரவர்கள் புரிந்துகொண்டாலே போதுமானது.

    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
    http://semmalai.blogspot.com

    ReplyDelete
  12. மாசிலா ,முதலில் தங்களது யோசனைகளை நீங்களும் உங்கள் குடுமபத்தினரும் செயபடுத்திக் காட்டுங்கள்

    ReplyDelete
  13. "முஸ்லிம்களையும் இந்தியர்களையும் பிரித்துப் பார்ப்பது ஆபத்தான போக்கு. முஸ்லிம்களும் மற்ற தமிழர்களும் காலம் காலமாக இங்கே இருக்கும் மண்ணின் மைந்தர்கள். இந்தியா என்பது நேற்று தோன்றிய நாடு."

    இப்படியான சரியான "சத்தியப்புரிதல்" தான் பிச்சைக்காரனின் உயர்ந்த நோக்கத்தைக் காட்டுகிறது. நெகிழ்வுடன் பாராட்டுகிறேன். விருப்பு வெறுப்பின்றி இஸ்லாத்தை அணுகினாலே இஸ்லாம் அவர்களை தன்னுள்ளே ஈர்த்து விடும் சிந்தாந்தம் கொண்டது தான் என்பதை வரலாறு நெடுகிலும் காண முடியும்.

    ReplyDelete
  14. குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

    முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன.

    திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

    இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

    சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும்.

    இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

    http://www.thoothuonline.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/

    ReplyDelete
  15. @சார்வாகன்
    //பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை விட இங்குள்ள முஸ்லிம்களை நன்றாக வைக்கும் மன்ப்பாங்கு இந்தியர்களுக்கு இருக்கிறது.//
    //ஆகவே ஒருஇந்து ,பிற மதத்தினரை விட பல மடங்கு சிறந்த்வன்.ஆகவே முஸ்லிம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து மத சார்பின்மை,ஜன்நாயகம் கற்றுக் கொள்ளும் அவசியம் இருக்கிறது.//

    please understand the major difference between india and pakistan, pakistan is an islamic nation ruled by half baked so called muslims(name sake). whereas india is a secular country, not a hindu national ruled by corrupt politician,

    obviously india is far better than pakistan.

    ReplyDelete
  16. /அங்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக செய்தி வெளியாகி உலகமே பதைபதைத்து போனது.. ஆனால் தமிழகம் டீவியில் சினிமா டான்ஸ் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.//
    Also Some of them gathered together in the name of literature meeting in Ooty,erkadu,Mahabalipuram and courtalam. and making fun with drinking & dirty jokes

    ReplyDelete
  17. மதுரை ஆதினத்தை மாதர் சங்கம் எதிர்த்தது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நம்பவே முடியவில்லை.

    ஏனெனில், முந்திலாம் சினிமா போஸ்டரில் நடிகை படத்துக்கு மேலே கருப்பு சாயம் அடிச்சு டூ பீஸ் நடிகைக்கு பர்தா வரைவாங்க, மாதர் சங்கம்ஸ்...!

    ஆனால்... இப்போ... என்னடான்னா போராட்டம் ரிவர்சில் நடந்துட்டு இருக்கு...!

    மேலே என்னடா என்றால்... 'ஆடை அற்ற நெசவு அறிவற்ற கற்கால அம்மண காட்டுமிராண்டி காலத்துக்கு நாம் போக வேண்டும்' என்று ஒரு 'மாசு' கோருகிறார்..!

    போற போக்குலே...

    'தன் பெண் குழந்தைக்கு கண்ணியமான டிரஸ் ஒன்றை வாங்கி போட்டு அழகு பார்த்த ஒரு அப்பனை'.......... 'ஆணாதிக்கவாதி இவன்' என்று 'பெண் வன்கொடுமை சட்டத்தில்' கைது செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து போராடுவார்கள் போல 'மாதர் மாசு சங்கம்ஸ்'..! கொடுமை..! :-(

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா