Monday, January 21, 2013

புத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்


ரஜினி படங்களுக்கு  முதல் நாள் முதல் ஷோ போவது  தொன்றுதொட்டு வந்த பழக்கம் , அதே போல புத்தக கண்காட்சிக்கும் முதல் நாளே போய் அட்டண்டன்ஸ் போடுவதும் நெடு நாளைய வழக்கம்.

பிச்சைக்கார வாழ்க்கை வாழ்வதால் , வெவ்வேறு ஊர்களில் இப்படி அடெண்டன்ஸ் போட்ட அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த முறை விதி செய்த சதியால் புத்தக கண்காட்ச்சிக்கு செல்ல இயலவில்லை.  ஏன் போகவில்லை என ஃப்ளாஷ் பேக் செல்ல விரும்பவில்லை. எனவே கவலை வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது போதும்,.

கண்காட்சி செல்லவில்லையே தவிர நண்பர்கள் மூலம் அப்டேட்ஸ் கிடைத்து வந்தது , மேலும் வலைப்பூக்கள் மூலமும் செய்திகள் அறிந்து வந்தேன்.

தாமதமாக செல்வதும் நன்மையில் முடிந்தது.
 என்ன புத்தகம் புதிதாக வந்துள்ளது ,  எதைப்படிக்க வேண்டும், எதை வாங்க வேண்டும் , எதை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்பதை நண்பர்கள் மூலம் முன் கூட்டியே அறிந்து கொண்டு ப்ரீ பிளானாக செல்ல முடிந்தது.


 இது வரை சென்ற கண்காட்சிகளில் எனக்கு சிறப்பாக அமைந்தது இந்த கண்காட்சிதான் . காரணம் நண்பர்கள் மூலம் கிடைத்த டிப்ஸ்.. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  • டிப்ஸ் 1 புத்தகம் வாங்க கண் காட்சிக்கு செல்கிறோம்.  அறிவுப்பசி தீர்ந்த பின் வயிற்று பசியை தீர்க்க முனைவது நல்லதுதான். ஆனால் , வயிற்று பசியை தீர்க்க முனையும்போது , சில சமயங்களில் ஒட்டு மொத்த கண் காட்சி அனுபவத்தையும் அது கெடுத்து விடக்கூடும். விலை, நாம் எதிர்பார்க்கும் சுவை இன்மை, நாம் எதிர்பார்க்கும் உணவு வகை இன்மை என பல காரணங்கள். நாம் வாக்குவது புத்தகம் வாங்குவதற்கு..சாப்பாட்டு பிரச்சினை , இந்த மெயின் மேட்டரை மறக்கடிக்க அனுமதிக்கலாகாது கண்காட்சி வளாகத்துக்கு செலவதற்கு முன்பே. புத்தகம் என்பதையெல்லாம் மறந்து விட்டு , வஞ்சிரம் மீன் வறுவல் , மீன் குழம்பு ஆர்டர் செய்து என் விருப்பம் போல ஒரு வெட்டு வெட்டினேன். வயிற்று பசி அடங்கிய பின் , புத்தக வேட்டைக்குள் புகுந்தேன் .  ஜூஸ் வகைகளோ , உணவோ எனக்கு தேவைப்படவும் இல்லை. என் கவனத்தை திசை திருப்பவும் இல்லை. முழுக்க முழுக்க புத்தக வேட்டைதான்.  • டிப்ஸ்2 நண்பர்களுடன் கெட் டுகதர் நல்லதுதான். அதற்காக புத்தக கண்காட்சியை பயன்படுத்திக்கொள்வதும் நல்லதுதான் . ஆனால் புத்தகத்தை செலக்ட் செய்யும் நேரத்தை வீணடித்து விடக்கூடாது. புத்தக கண்காட்சிக்கு வருவதே நண்பர்களை சந்திப்பதற்குத்தான் என்றால் அது வேறு விஷ்யம் . புத்தக வேட்டைதான் நோக்கம் என்றால் அதிகபட்சம் ஒருவர் போதும். one in company. two is crowd.

இந்த டிப்ஸ் கொஞ்சம் கடுமையானதுதான் . சிலரை புத்தக கண்காட்சிகளில் மட்டுமே சந்திக்க முடியும். எனவே யாரையும் சந்திக்காமல் இருப்பதும் , ஓர் அனுபவத்தை தவற விட்டதாகி விடும் . சந்திப்பு ஒரு விசிட் , புத்தகத்துக்கு ஒரு விசிட் என பிரித்து கொள்ள வேண்டியதுதான், முதல் விசிட் என்பதால் , நான் யாரையும் சந்திக்கவில்லை. எல்லா ஸ்டால்களையும் சுற்றி பார்க்க நன்றாக நேரம் கிடைத்தது.

  • டிப்ஸ் 3 கூட்டத்தை பார்த்து மிரள தேவையில்லை. புத்தகம் வாங்குவதை தடுக்கும் அம்சமாக நெரிசல் இருக்காது.
 நான் சென்ற போது,  நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் சினிமா தியேட்டரில் இருப்பது போன்ற கியூ நின்று கொண்டு இருந்தது. அசந்து போய் விட்டேன்.

ஆனால் உள்ளே போனால் அந்த கூட்டத்தில் பெரும்பகுதி ஜூஸ் கடைகளிலும் , சமையல் , ஆன்மீக புத்தக கடைகளிலும்தான் நின்று கொண்டு இருந்தது . அரசியல் ,ஆன்மீகம் , சினிமா - இவைதான் ஈர்த்து கொண்டு இருந்தன. பல அற்புதமாக புத்தகங்கள் இருக்கும் கடைகளில் அந்த அளவுக்கு நெரிசல் இல்லை. ரிலாக்சாக தேவையானவற்றை வாங்க முடிந்தது.

  • டிப்ஸ் 4 புத்தகங்கள் அனியாய விலைக்கு விற்கப்பட்டுகின்றன என்பதில் உண்மை இல்லை. எனவே தைரியமாக வாங்கலாம்.
என் மதிய உணவுக்கு 400 ரூபாய் செல்வானது. இந்த காசுக்கு ஒரு புத்தகம் வாங்கி இருந்தால் , அது ஒரு முதலீடாக இருந்து இருக்கும். ஒரு தலையணை சைஸ் புத்தகத்தை 10 ரூபாய்க்கு தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உண்மையில் வெகு குறைவான விலையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் யாரும் வாங்கி குவித்து விடவில்லை. காஸ்ட்லி என்றெல்லாம் இல்லை... தகுந்த விலைதான் நிர்ணயித்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் தேட வேண்டும். ஒரே நாவல் வெவ்வேறு பதிப்பகத்தில், வெவ்வேறு விலையில் கிடைக்கும் நிலையும் இருக்கிறது. எனவே கொஞ்சம் தேட வேண்டும். 

  • டிப்ஸ் 5 எல்லோரும்  வாங்குவ்தை நாமும் வாங்க வேண்டும் என்பதில்லை..
புத்தக கண்காட்சிக்கென பிரத்தியேக அனுகூலங்கள் உண்டு. நம் ரசனைக்கு அப்பாற்பட்ட சில புத்தகங்களும் நம் கண்களில் பட்டு ஆர்வம் ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் பரிந்துரைக்கும் பிரபலமான புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் கூட வாங்க முடியும் . ஆனால் நாமே பல தரப்பட்ட புத்தகங்களை பார்வையிடும் வாய்ப்பு புத்தக கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் .


 நான் வாங்கிய புத்தகங்களில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்கள் நூல்கள் வெகு குறைவு. படிக்க வேண்டிய சில புதிய நூல்களை வாங்கி இருக்கிறேன். சில மேலோட்டமான வாசிப்பிலேயே அருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு... புத்தக கண்காட்சி முடியப்போகும் நிலையில், இந்த டிப்ஸ் யாருக்கும் பயன்படாது என நன்கு அறிவேன் :) 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா