Monday, January 14, 2013

அணு உலை பற்றிய சாரு கருத்து - ஒரு நடு நிலை அலசல்

இலக்கியவாதிகள் என்பதற்கு சில தமிழ் நாட்டில் சில அடிப்படை தகுதிகள் உண்டு.


  • பொது அறிவு இருக்க கூடாது'
  • உலக ஞானம் சிறிதும் இன்றி நமக்குதான் இல்லாம் தெரியும் என பொய்யாக எழுத வேண்டும் 
  • கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல காட்டிக்கொள்ள வேண்டும் 
  • ஆட்டு மந்தைகள் போல மற்றவர்கள் சொல்வதை தாமும் சொல்ல வேண்டும் 

இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலில் துணிச்சலாக தன் கருத்தை பதிவு செய்து இருக்கிறார் சாரு நிவேதிதா .

கூடங் குளம்  விவகாரத்தில் அவர் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார். இந்த பிரச்சினையில் விஞ்ஞானிகள்தான் கருத்து சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் அல்ல என்பதே அவர் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் சிலர் உதயகுமாரை , மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதி யதுதான் அவரை எரிச்சலடைய வைத்து விட்டது. மரம் சும்மா இருக்க நினைத்தாலும் , காற்று அப்படி சும்மா இருக்க விடாதே ..அது போல 



இந்த வாய் சொல் வீரர்களுக்கு பல விஷயங்கள் புரியாது.  எனவே அதை எல்லாம் சாரு தொடவில்லை.


  • மின்சாரம் இல்லாமல் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை, மின் விசிறி இயங்கவில்லை என்பதுதான் இந்த அறிவு ஜீவிகளின் கவலை. மின்சாரம் இல்லாமல் திருப்பூர் , கோவை போன்ற தொழில் நகரங்களில் , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது இவர்களுக்கு தெரியாது.
  • இந்த மின் தேவையை நீர் மின்சாரம் , சூரிய மின்சாரம் போன்றவற்றால் பூர்த்தி செய்ய முடியாது 
  • இது போன்ற மின்சாரங்கள் சப்போர்ட்டிங் ரோலில் செயல்பட முடியுமே தவிர , முழு தேவையையும் இதனால் பூர்த்தி செய்ய முடியாது.
  • இவர்கள் நினைப்பது போல , நீர் மின்சாரம் போன்றவை முழுமையான க்ளீன் மின்சாரம் அல்ல . அதற்கு தேவையான கருவிகள் செய்யும்போது ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை கணக்கில் கொண்டால் , அவற்றை கிளீன் மின்சாரம் என சொல்ல முடியாது.. 
  • இதனால்தான் அணு சக்தியால் பேரழிவை சந்தித்த ஜப்பான் அணு சக்தியை மீண்டும் மீண்டும் காதலிக்கிறது.
  • அணு சக்த்தியில் இந்தியா வல்லமை பெறுவது அமெரிக்காவுக்கு உவப்பானது இல்லை.

இது போன்ற உண்மைகள் நமது கிணற்று தவளைகளுக்கு புரியாது என்பதால் சாரு இதைப் பற்றியெல்லாம் பேசவில்லை.

உதயகுமாரை காந்தியவாதி என அழைப்பது தவறு என்பதே அவரது முக்கிய குற்றசாட்டு.
காந்தி அயல் நாட்டு துணிகளை புறக்கணிக்க சொன்னார் என்றால் , தானும் அதை புறக்கணித்தார்.

அனால் இவர்கள் செய்வது வேறு.

கூடங் குளத்தில் அணு உலைகளை எதிர்க்கிறார்கள் . ஆனால் கல்பாக்கம் உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் இயங்கும் அணு உலைகளின் பலன்களை வசதியாக அனுபவிக்கிறார்கள். 

இது HYPOCRISY இல்லையா.  காந்தி இப்படியா செய்து இருப்பார்.

  • அணு உலை தவறு என நினைத்து இருந்தால் , இந்தியா முழுதும் இருக்கும் அணு ஆலைகளை மூட சொல்லி போராடி இருக்க மாட்டாரா. 
  • அ ல்லது குறைந்த பட்சம் கல்பாக்கம் உலையை மூட சொல்லி போரடி இருக்க மாட்டாரா. 
  • நாடெங்கும் இருக்கும் தன ஆதரவாளர்கள் , அணு உலைகளால் கிடைக்கும் அனுபவிக்க கூடாது என உத்தரவிட்டு இருக்க மாட்டாரா.

இவர்கள் இதை எல்லாம் செய்யவில்லையே.. அப்பாவி மக்களை தூண்டி விடுவதை யார்  வேண்டுமானாலும் செய்யலாமே ?

 கூட்டம் சேர்ப்பது மட்டுமா காந்தியவாதம் ? 

      அணு உலையை ஆதரிப்பது , எதிர்ப்பது என்பதெல்லாம் அவரவர்கள் உரிமை .. 

     ஆனால் தேவையில்லாமல் அவரை காந்தியுடன் சில இலக்கியவாதிகள் ஒப்பிட்டது அசட்டுத்தனமாது.. 


இதை அப்படியே விட்டு இருந்தால் , இலக்கியவாதிகள் என்றாலே கிணற்று  தவளைகள் என மக்கள் நினைத்து இருப்பார்கள் .

இலக்கியவாதிகளிலும் நேர்மையாளர்கள் , விஷயம் புரிந்தவர்கள் உண்டு என்பதை தன கட்டுரை மூலம் சாரு  உலகத்திற்கு நிரூபித்துள்ளார். 

அவருக்கு இலக்கிய உலகம் நன்றி கடன் பட்டு இருக்கிறது, கடமைப்பட்டு இருக்கிறது..

சாய்கிற பக்கமே சாயும் ஆடு மந்தை கூட்டத்தில் இருந்து விலகி நிற்க ஒரு துணிச்சல் தேவை , அது சாருவிடம் இருக்கிறது.. அவரது வாசகன் / மாணவன்   
என்பதில் நான் பெருமைப்படுகிறேன் 
     

10 comments:

  1. Rajesh Da Scorp
    கூடங்குளம் பற்றிய சாருவின் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

    இது பற்றி தங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  2. தருதல மனுஷ்விற்கு பாப்லோ நெருதா ஒரு படி மேலேனு சொல்லிடுச்சு. இப்போ அவர கவிஞன் இல்லேனு சொன்ன செருப்படி விழும், அதான் அல்லக்கைய விட்டு பழிதீர்த்துகிறது!

    ReplyDelete
  3. எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதுன்னு சொன்ன உலை ஆரம்பிக்கும் முன்னாலேயெ 2 வால்வுல கசிவு, மூணாவது வால்வு லீக்குன்னு அவங்க மூலமாவே நியூஸ் வருது. இன்னும் வெளிவராத சமாச்சாரங்கள் எவ்வளவோ? இந்த ப்ரெஸ்ஸர் டெஸ்ட்க்கே தாங்காத இந்த உலைதான் உலகத்திலேயெ சிறந்தது. எல்லோரும் நம்புங்க.

    ReplyDelete
  4. கூடங்குளம் மின்சார திட்டம் வேண்டும். அதற்காக நான் உதயகுமார் போன்றவர்கள் நடத்தும் போராட்டங்களை சந்தேகிக்க விரும்பவில்லை.

    அரசு என்பது பெரிய டைனோசர் என்றால், போராட்டம் ஒரு கொசுகடி அளவுதான். அரசு அதை தட்டிவிட்டு அலட்சியமாய் போய்விடும். எனவே, எந்த அறவழி போராட்டமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.

    இந்தியா போன்ற ஊழலும் அலட்சியமும் நிறைந்த நாட்டில், போதிய அளவு போராட்டங்கள் நடப்பதில்லை. பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் அரசுக்கு தெரியாது.

    https://www.facebook.com/gskselva/posts/105200989657115

    ReplyDelete
  5. You are an Bloody idiot

    ReplyDelete
  6. அந்த மனிதரைப் பற்றி இதை மட்டுமே எழுத முடியும்.
    .....................................................................................

    அணு உலைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, விவசாயிகள் தங்களின் நிலங்களக் காக்கும் போராட்டம் கூட ஏகாதியபத்திற்கெதிரான போராட்டம்தான். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்கள் அதன் மூலமான காரணங்களிருந்தே இயல்பாக கிளர்கின்றன. அப்படித்தான் அணு உலைக்கு எதிராகவும் தென் பகுதி மக்கள் போராடுகிறார்கள். தங்களின் நிலத்தை வாழ்வாதாரத்தை, கடலை, விவசாயத்தைக் காக்க போராடுகிறார்கள்.
    இந்திய அயலுறவுக் கொள்கையோடும், சர்வதேச அணு சக்தி ஒப்பந்தங்களோடும், எல்லை தாண்டிய பேரங்களோடும். உள்ளூர் அரசு இராணுவங்களோடும் என தங்களின் கற்பனைகெட்டா மிருக பலம் கொண்ட அரசு இயந்திரங்களுக்கெதிராகவும்தான் அந்த மக்கள் போராடுகிறார்கள். சில விமர்சனங்கள் பலருக்கும் இருந்த போதிலும் அவர்கள் எவரும் அதை வெளிப்படுத்த தயக்கம் காட்டினார்கள். காரணம் அரசு பயங்கரவாதத்தின் நுகத்தடியில் நிறுத்தப்பட்டுள்ள அந்த மக்களையும் போராட்டக் குழுவினரையும் எந்நேரமும் வேட்டையாடக் காத்திருக்கும் அரசு இயந்திரத்திற்கு விமர்சன அளவிலேனும் இது பயன்பட்டு விடக்கூடாது என்கிற அச்சமும் பயமும்தான் காராணம்.
    ஆமாம் தோழர்களே நாம் மக்களை இயல்பாகவே நேசிப்பதால் ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்பு பல முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. நமது மனதோடு நாமே ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.
    ஆனால் சாரு என்கிற மனிதர்?

    அவரைப் பற்றி நான் புதிதாக எதையும் எழுத வேண்டியதில்லை. அது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவர் எவருடனாவது முரண்பட்டிருப்பார் என்றால் அது தனது நூல்களுக்கான ராயல்டி தொடர்பாகவும், அல்லது ரெமி மார்ட்டின் போதுமானதாக இல்லை என்பதாலும். தனக்கு உரிய முறையில் சமூகம் சிகிச்சையளிக்க வில்லை என்பதாகவும் மட்டுமே இருக்கிறது. பொதுவாக அதிகாரம் சார்ந்து கொண்டாட்டத்திற்குரிய நபர்களை சார்ந்து வாழும் சாரு. இப்போது அம்மாவுக்கு கொடி பிடிக்கிறார், கடந்த திமுக ஆட்சியில் கனிமொழியை புகழ்ந்து வாழ்ந்தார். (கனிமொழி இவரை ஒரு காமெடிப்பீசாக நடத்தியதெல்லாம் தனிக்கதை) அந்த வகையில்தான் தினமலரில் உதயகுமாரையும், போராடும் மக்களையும் கொடூரமாக மிக மிக அவதூரான வார்த்தைகளால் உண்மைக்கு புறம்பாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

    இதற்கு என்ன பதில் சொல்வது?

    வரிக்கு வரி விளக்கம் எழுதுவதா என்ன அது எனக்கு ஒரு அரைமணி நேர வேலை ஆனால் இந்த ஆள் நிமித்தம் அதைச் செலவிடுவது கூட அதிக முக்கியத்துவத்தை அவருக்குக் கொடுத்து விடும். அதனால் பத்தே நிமிடத்தில் இதை எழுதி முடித்து வெளியிடுகிறேன்.அக்கட்டுரைக்கான எதிர் வினை இதுதான்.
    ஒரு நல்ல ஊடகத்தை நடத்துவதில் ஏராளமான சிரமங்கள் உண்டு. அதற்கு நல்ல ஊடகவியலாளர்கள் வேண்டும். நிறுவனங்களின் கொள்கைக்கு உட்பட்டு ஆனால் அதே நேரம் தனது தனித்த விருப்பங்களையும் விட்டுக் கொடுக்காமல் ஒரு ஊடகவியலாளன் எழுதுகிறான். தன் மனதுக்கும் நிறுவனத்திற்கும், எழுத்திற்குமிடையே அவர் இடைவிடாது போராடிக் கொண்டிருக்கிறான். ஆனால் தினமலர் போன்ற ஊடகங்களை நடத்த அப்படி எவரும் தேவையில்லை. சதா நேரமும் மக்கள் மீது சேற்றையடிக்க எதற்கு ஊடகவியலாளர்கள் அவசியம் சாரு போன்ற முதிய வயது மனிதர்கள் இரண்டு பேர் போதும்...........

    அல்ல சாரு ஒருவரே போதும்.

    http://www.facebook.com/arayanmagan/posts/593378494011703

    ReplyDelete
  7. உதயகுமாரைத் தேடி உலகம் முழுதும் இருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மக்கள் நலன் விரும்பிகளும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஏன் இன்று இந்திய அரசியலின் எதிர்காலமாக பார்க்கப்படும் அர்விந்த் கெஜ்ரிவாலில் இருந்து, ப்ரஷாந்த் பூஷன், பினாயக் சென், அட்மிரல் ரம்தாஸ், வி,கே. சிங், அத்தனை பேரும் அந்த மனிதனைத் தேடித் தேடி வந்து சந்தித்து செல்கிறார்கள். ஆந்திரா, மாகாராஷ்ரா போன்ற அணு உலைக்கு எதிராக போராடும் குழுக்கள் உதயகுமாரிடம் வந்து ஆலோசனை கேட்டு செல்கிறார்கள். ஆனால் அந்த மனுஷன் நித்தம் அந்த இடிந்தகரை மக்களோடு மக்களாக போராட்ட பந்தலில் அமர்ந்து பேசிக் கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டும், யார் வந்தாலும் அவர்களோடு பேசி அவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சாரு போன்ற சில வக்கிரபுத்திகள் என்னை ஜெயப்பூர் கூப்புட்டாகோ, ஜப்பானில் கூப்புட்டோகோன்னு....என்ன பில்டப்பு. உதயகுமார் தன் சுக போக வாழ்க்கையை உதறிவிட்டு, மக்களோடு மக்களாக மணலில் படுக்க வந்தவர். காந்தி தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் உடுத்த உடை கிடைக்கும் வரை தன் மேல் சட்டை அணிவதில்லை என்று உறுதி பூண்டார். அதே போன்றவர்தான் உதயகுமாரும். ஒரு சாக்கடையில் கிடக்கும் புழு, அந்து போன மணி மூலமாய் வெளிச்சரக்கு அடிப்பதற்காக எழுதினால் கூட, யார் யாரைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்கு கூட ஒரு தகுதி வேண்டுமே. என்ன ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்!

    ReplyDelete
  8. சாரு சொல்றது இருக்கட்டும் அப்பு. நீங்க என்ன சொல்றீங்க.

    எப்ப பார்த்தாலும் பிச்சை எடுத்து வாந்தி எடுத்த மாதிரி எதையாவது எழுத கூடாது.

    உன் வூட்டுக்கு பின்னால, சாரு வூட்டுக்கு பின்னால இந்த அணு உலைய வைக்க சொல்லனும்.

    ReplyDelete
  9. அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் மிக மிக சொற்ப அளவு என்பது பால பாடம். மறுபடியும் முதல்ல இருந்தா? ஸ்ஸ்ஸ்ஸப்பா.. முடியல... கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் கண்களையும் விற்கிறீர்கள். அதுதான் தவறு. ஒரே ஒரு அணு உலை இந்தியாவில் வெடித்தால் தான் உங்களைப் போன்ற ஆட்கள் திருந்துவீர்கள்.

    ReplyDelete

  10. சாருவுக்கு போராட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆனபின்புதான் கருத்து சொல்ல நேரம் கிடைத்தது போல.
    ஆமா அது என்ன நடுநிலைமை பதிவு, உமக்கு நா கூசல, சாரு இந்த ஒரு வருட காலம்
    என்ன பன்னுனர்னு ketkum anaivarukkum, Charu nuclear science, atomic research, conference with Japan/Russia scientists in Malaysia and Vietnam இது போன்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் என்பதை அன்புடன் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம். அதை தான் பிச்சைக்காரன் தனது பதிவில் தெரிய படுத்தி உள்ளார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா