Thursday, December 12, 2013

சிவாஜி கணேசன் மிகை நடிப்பு கலைஞரா?- ஞாநி விளக்கம்

திரு ஞாநி அவர்கள் பொது மக்களுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் உள்ளவர்... வி ஐ பி முதல் சாமான்யன் வரை யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பேசக்கூடியவர்..  ஃபேஸ் புக்கில் அவர் முன் வைக்கும் கருத்துகள் , அதிலேயே முடங்கிப்போகக்கூடாது என்பதால் சிலவற்றை இங்கு பதிவேற்றுகிறேன்...


****************************************************************

        என் கேள்வி : முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all .ஞாநி
இதில் ஒரு சிக்கலும் குழப்பமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் அன்பு காட்டியவர் மீது இன்னொரு காலகட்டத்தின் வெறுப்பே ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அன்பு காட்டிய தருணத்தில் அது பொய் என்றோ இப்போதைய வெறுப்பு பொய் என்றோ அர்த்தமல்ல. அந்தந்த நேரத்தில அதுவே நிஜம், உண்மை. எனவே முன்னாள் நண்பர், முன்னாள் எதிரி போல முன்னாள் காதலரும் சாத்தியமே.

           செய்தி : 
அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்

அருண் வேந்தன் :சிவாஜி மீது சொல்லப்பட்ட மிகை நடிப்பு என்ற குறைபாட்டை தூக்கி எறிந்த படம்...பாரதிராஜாவும் மிகை நடிப்பு பிரியர்தான்...எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..


Kirubasankar Manoharan : .எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..//எல்லா கலைவடிவத்திலும் இது போன்ற மிராக்கில் நடந்துகொண்டுதான் .இருக்கின்றன.. மோனோலிசா புகைப்படம் கூட அப்படி தானோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...

ஞாநிஅந்தப் படம் மொத்தமாகவே ஒரு மிகை உணர்ச்சிப் படம்தான். வேறு படங்களில் சிவாஜி மட்டும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்போது மிகையாக தோன்றும். இதில் எல்லாமே மிகைப் பாத்திரங்கள். அதை யதார்த்தப்படம் என்று நம்பவைத்தது மட்டுமே பாரதிராஜாவுக்கு வெற்றி.இதே கதையை மகேந்திரன் கையாண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உதிரிப்பூக்களில் விஜயன் பாத்திரத்தையும் அஸ்வினி பாத்திரத்தையும் அவர் கையாண்ட தொனி முதல் மரியாதையில் இருந்திருந்தால் அது நல்ல முயற்சி என்று சொல்லியிருக்கலாம். சிவாஜி நடிகராக தன்னை முழுக்கவும் இயக்குநருக்கு ஒப்புக் கொடுப்பவர். மிகை தோன்றினால் அதற்கு அவர்களே பொறுப்பு. துளியும் மிகை இன்றி சிவாஜி நடித்த பல படங்கள் உள்ளன.

1 comment:

  1. ஒரு விதத்தில் ஞாநி சொல்வது உண்மைதான். பாரதிராஜா, பாலச்சந்தர் பாலுமஹெந்திரா இவர்கள் எல்லோருமே மிகை நடிப்பின் இன்னொரு பரிமாணங்கள். மகேந்திரன் மட்டுமே இவர்களிடமிருந்து வேறுபட்டவர். முதல் மரியாதை படத்தைப் பொருத்தவரை அது சிவாஜிக்கு ஒரு வித்யாசமான படம் என்று சொல்லலாம். அதிலும் பல அபத்தமான காட்சி அமைப்புகள் உண்டு. சிவாஜி ஒரு இயக்குனர்களின் நடிகன். மகேந்திரன், மணி ரத்னம் (அக்னி சாட்சில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டியவர் சிவாஜி) போன்றவர்களின் இயக்கத்தில் அவருடைய மற்றொரு முகம் நமக்கு வெளிப்பட்டிருக்கும். ஏனோ அது நடக்கவில்லை. எனவேதான் முதல் மரியாதையை இத்தனை தூரம் பாராட்டுகிறோம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா