Thursday, February 7, 2019

நாகேஷ் அடைந்த டென்ஷன் - மேதைகளின் மோதல்


சாலையில் செம நெரிசல்.. வாகனங்கள் இரண்டு ஒன்றை ஒன்று லேசாக உராய்ந்து கொண்டன.. இரு வாகன சாரதிகளும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதை காதால் கேட்க இயலவில்லை

சராசரி மனிதர்களின் மோதல் இபப்டி இருக்கும்

ஆனால் மேதைகளின் மோதல் , அப்படி இருக்காது... ரசிக்கும்படி இருக்கும்
-----

அதற்கு இரு உதாரணங்கள்


புல்லாங்குழல் மேதை மாலியின் இசைக்கச்சேரி...  நடிப்பு மேதை நாகேஷ் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.. மாலி வர தாமதமானது.. ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.. ஆனால் புல்லாங்குழலை மறந்து விட்டார்.. தன் உதவியாளரை வீட்டுக்கு அனுப்பி கொணரச் சொன்னார்

இன்னும் தாமதமா என ரசிகர்கள் அலுப்படைந்தனர்..
மாலி சொன்னார்..  என் இசை விருந்தை ரசிக்க விரும்பினால் சின்ன சின்ன தடங்கல்களை பொறுத்துதான் ஆக வேண்டும்... பொறுமை இல்லை என்றால் கிளம்பி விடுங்கள்...பாதியில் கிளம்பாதீர்கள்

இப்படி அவர் கோபமாக சொன்னதும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்தனர்... ஆனால் நாகேஷ் கோபமாக கிளம்பி விட்டார்

மாலி இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது

முடித்து விட்டு வெளியே வந்த மாலி திகைத்தார்..காரணம் நாகேஷ் வீட்டுக்குப் போகாமல் வெளியே காத்திருந்தார்

அதாவது அவர் வெளி நடப்பு ஒரு கோபத்தால்தான். மற்றபடி மாலி மீது மரியாதை உண்டு

இதை உணர்ந்த மாலி , நாகேஷ் காரில் ஏறி அவருடன் அவர் வீட்டுக்கு சென்று  அவருக்கென பிரத்யேகமாக இசை விருந்து படைத்தார்


------

காந்தி ஒரு முறை சென்னை வந்திருந்தார்... தன் அருமையான ஆங்கிலத்தில்சொற்பொழிவு ஆற்றினார்

அவருக்கு பாரதியார் கடிதம் எழுதினார்

அன்புள்ள திரு .காந்தி அவர்களுக்கு

தங்கள் உரை நன்றாக இருந்தது.. ஆனால் ஒரு குறை..  நீங்கள் தாய் மொழிப்பற்றை வலியுறுத்துபவர்.. எனவே நீங்கள் உங்கள் தாய் மொழியான குஜாராத்தியில் பேசியிருக்க வேண்டும். அல்லது எங்கள் தாய் மொழியாம் தமிழில் பேசியிருக்கலாம்.. சம்பந்தம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசியது நெருடல்

அன்புடன்

சுப்ரமணிய பாரதி

இதற்கு காந்தி பதில் எழுதினார்

அன்புள்ள பாரதி,,

என் தவறை ஒப்புக்கொள்கிறேன், மன்னிப்பு கோருகிறேன்.. ஆனால் உங்கள் கடிதத்தை தமிழிலோ குஜராத்தியிலோ எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி இருப்பது என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது

அன்புடன்

எம் கே காந்தி

----------------

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா