Thursday, February 28, 2019

பாகிஸ்தான் , இந்தியா - யார் சொல்வது உண்மை





 தேச பக்தி , மொழி உணர்வு , ஜாதிப்பாசம்  , இன உணர்வு  என எல்லாமே மனிதன் கற்பனையாக உருவாக்கிய ஒன்று.. இந்த கற்பனைகளால்தான் மனிதன் தன்னை ஒற்றைத்திரளாக திரட்டிக்கொண்டு உலகை ஆள முடிந்தது

இந்த் கற்பனைகள் இல்லாத விலங்குகள் மனிதனை விட வலுவாக இருந்தும் மனிதனிடம் தோற்றன. அவ்வளவு ஏன் , இந்த கற்பனைகள் இல்லாத மற்ற மனித இனங்கள் கூட ஹோமோ செப்பியன்ஸ் என்ற நம் ஆட்களிடம் தோற்று அழிய நேரிட்டது

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தச்சென்ற நம் விமானிக்கு ஆதரவாக நிற்பது நம் கடமை.. பாகிஸ்தான் இதை எப்படி பார்க்கிறது என கவனியுங்கள்.. தேச பக்தி என்பதை எப்படி எல்லாம் கற்பனையாக  புனைவுகள் மூலம் உருவாக்குகிறார்கள் என்பது புரியும்
------

பாகிஸ்தான் செய்தி

கொலை செய்ய வந்த எதிரிக்கு பரிவு காட்டிய பாகிஸ்தான் 

சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நாசகார செயல்கள் செய்ய நினைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கியது

இந்திய விமானிக்கு அது என்ன இடம் என தெரியவில்லை... அங்கிருந்த சிறுவர்களிடம் இது என்ன இடம் என கேட்டான்... அவர்கள் அவனிடம் விளையாடும் பொருட்டு , இது இந்தியா என்றான் ,, பாரத மாதா வாழ்க என கோஷமிட்டான் அவன்,, பாகிஸ்தானுக்கே வெற்றி என அவர்கள் கோஷமிட்டனர்.. அந்த வீர முழ்க்கத்தால் பயந்து போய் அவன் ஓடலானான்,, துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் வைத்திருந்த அவன் சிறுவர்களுக்கு பயந்து ஓடினான்,. சிறுவர்கள் துரத்தினர்.. ஆற்று நீரில் மூழ்கி தப்ப முயன்றவனை வெளியே இழுத்துப்போட்டனர்.,, மீண்டும் ஓடத்தொடங்கிவனை கற்கள் வீசி ஓட ஓட துரத்தினர் பாகிஸ்தான் இளம் வீரர்கள்...கோழைபோல ஓடிய அவனை பாகிஸ்தான் ராணுவம் பரிவுடன் காப்பாற்றியது...சிறுவர்களை சமாதானம் சொல்லி அனுப்பி விட்டு , காயங்களுக்கு மருந்தளிதது

----------


பாகிஸ்தான் ராணுவத்தின் சித்தரவதைக்கு உள்ளாகி ஏற்பட்ட காயங்களுக்கு பாகிஸ்தான் தரப்பு சொல்லும் விளக்கம் அது... பாகிஸ்தான் மக்கள் இதையே நம்புவர்... நாம் நமது அரசு சொல்வதை நம்புவோம்,

உண்மை என்பது யாருக்கும் தெரியாது.,, தெரிந்து ஆகப்போவதுப் ஒன்றும் இல்லை....

நாம் வாழ்வது இது போன்ற பொய்களால்தான் என்பதை உணர்ந்தால் போதும்


4 comments:

  1. நமது வீட்டில் அந்நியன் புகுந்தால் நாம் என்ன விருந்து வைத்தா அழைப்போம்? நாம் என்ன செய்வோமோ அதை தான் பாகிஸ்தான் ராணுவமும் மக்களும் செய்துள்ளார்கள். இதில் அவர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை. ஏதோ உயிரோடு திருப்பி அனுப்பினார்களே என்று சந்தோசப்பட வேண்டியதுதான்.
    இந்தியாவுக்குத்தான் அபிநந்தன் மாவீரன், பாகிஸ்தானுக்கு அவர் எதிரி மட்டும்தான். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்,.. ஒருவரின் ஒரே செயல் ஒரு நாட்டின் பார்வையில் வீரச்செயல்... இன்னொரு நாட்டின் பார்வையில் சதிச்செயல்.. நாடு , மொழி போன்ற கற்பிதங்களால் இது போன்ற முரண்கள் தோன்றுகின்றன.. நாடு , இனம் , மொழி என்பது இல்லாமல் மனிதம் என்பது மட்டுமே இருந்தால் , ஒருவர் செய்யும் நன்மையை உலகமே பாராட்டும்.. தீமை என்றால் உலகமே திட்டும்

      Delete
  2. நாடுகள் என்பதே நமக்குள் வரைந்து கொண்ட கோடுகள் தானே.

    யுவால் நோவா ஹராரி படித்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நாடு மொழி இன பேதங்கள் எல்லாம் கற்பிதஙகள் என யுவால் நோவா ஹராரி சொல்வது மிகவும் சரியானது என பல இடஙகளுக்கு பயணிககும் நீங்கள் அறிவீர்கள்... ஆனால் அந்த கற்பிதங்கள்தான் மனிதனின் சர்வைவலுக்கு காரணம் என்றும் அவர் சொல்கிறாரே

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா