Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Monday, March 17, 2014

மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை

ரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமானாலும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..
***********************************************
தண்ணீர் தேவதை

அத்தியாயம் 1 
எழுதியவர் Nirmal Mrinzo
இந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........

அத்தியாயம் 2 
எழுதியவர் பிச்சை
" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.
” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction " என்றான் நிர்மல்..
” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.
இப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏரலில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்
“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.
“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..
“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.
“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”
” என்னப்பா “
“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “
“கணேசன் ?”
“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”
“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்
அங்கே கணேசன் இல்லை...
இது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது

அத்தியாயம் 3 
எழுதியவர் நிஜந்தன் தோழன்
"கணசே" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...
அத்தியாயம் 4 
எழுதியவர் நறுமுகை தேவி

வாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே! இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ..! அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?நெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமே?உண்மையாய் இருக்குமோ? என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்தான் பிச்சை.அங்கே..
வாச..லி…ல்..
பிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..
என்ன..? அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..

உள்ளே வரலாமா?என்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்

பிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..
அத்தியாயம் 5 
சரஸ்வதி ஸ்வாமி நாதன்

என்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.

ஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.

உலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...

150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...

போன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....


அத்தியாயம்6
ராம்ஜி யாஹூ


இப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .
உங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .
அவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச்சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட
எங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்பி வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .

அத்தியாயம்7

ஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்

பிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல

( தொடரும் )


Tuesday, May 21, 2013

வலைப் பதிவர்களுடன் என் அனுபவங்கள்- வலைச்சரத்தில்...

வலைச்சரத்தில் பதிவர்கள் சிலருடன் என் அனுபவங்களையும் , சில பதிவுகளையும் பற்றி எழுதி வருகிறேன். படித்து பாருங்கள்

****************************************************************

நானும் அவர் தவறு செய்ததாக கருதினேன். அவரை விமர்சித்து எழுதலானேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி விமர்சித்தேன்.

அதன் பின் யோசித்தபோது , என்னுள் ஏன் இவ்வளவு கோபம் , வன்மம் என திகைத்தேன். இது நல்லதல்லவே என மன சாட்சி சுட்டி காட்டவே அந்த பிரச்சினையில் இருந்து மெல்ல விலகினேன். மறந்தும்போனேன்.


பதிவர்கள் ஆதிமூல கிருஷ்ணனும் , பரிசல்காரனும் ஒரு சிறுகதை போட்டி நடத்தினார்கள். அதில் எனக்கு பரிசு கிடைத்தது, சுய தம்ப்பட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, அந்த சுட்டிகளை இங்கு தர இயலவில்லை.

தொடர்ந்து பல நண்பர்கள் மெயிலிலும் , போனிலும் வாழ்த்து சொன்னார்கள். புதிய எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. யாரோ ஒருவர் பேசினார்.. நான் கேட்டிராத குரல்.

வாழ்த்துகள்.. நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

சார்... நீங்க யாரு... குரல் கொஞ்சம் அடையாளம் தெரியல..என தயங்கிவாறு கேட்டேன். யாரவது நெருங்கிய நண்பர் அழைத்து , குரல் தெரியாமல் போய் விட்டதா என்ற குழப்பம்.

எதிர் முனை சிரித்தது.. என்னை உங்களுக்கு பிடிக்காது...ஆனால் உங்களை எனக்கு பிடிக்கும்..அதனால்தான் அழைத்தேன் என்றார் அவர்.

உங்க பேர் ? என்றேன்,

யார் அவர்? என்ன சொன்னார்?

*************************************************************************************8


சென்னை புத்தககண்காட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் பாஸ்கருடன் சென்று இருந்தேன்.   அந்த நேரத்தில் சாரு நிவேதிதாவும் அங்கு வந்து இருந்தார்.

பாஸ்கருக்கு சாருவுடன் நல்ல பழக்கம். நான் அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

 “ கொஞ்சம் இருங்க..பேசிட்டு வருகிறேன் “ என்றார் பாஸ்கர்.. நானும் வருகிறேன் என சொல்லி விட்டு சாருவிடம் சென்றோம்.

போனோமோ , கை குலுக்கினோமோ... ஆட்டோகிராப் வாங்கினோமா என இருந்திருக்க வேண்டும். ஆனால் விதி வலிது.

தொடர்ந்து படிக்க


Sunday, May 19, 2013

இரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்

1.   இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க .....


சில நேரங்களில் சில பதிவர்கள்- ஓர் அறிமுகம்

இன்னும் ஒரு வார காலத்துக்கு வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். பதிவர்களைப்பற்றிய என் பார்வையை பகிர இருக்கிறேன்.

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

2. எல்லா விஷ்யங்களுமே முழுமையை நோக்கி  அழைத்து செல்வதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பார்வை. எல்லா விஷயங்களுமே அதன் அளவில் முழுமையானதுதான் என்பது ஒரு பார்வை.

இரண்டு பார்வைகளுமே எனக்கு பிடித்தவைதான்.
sanshiro sugata என்ற அகிரா குரோசாவின் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் ஆரம்ப கால படத்திலேயே தன் ஆளுமையை காட்டி இருப்பார் அவர்.
தற்காப்பு கலையை கற்க ஆரம்பிக்கும் நாயகன் , அதன் மூலம் வாழ்க்கையையே அறிந்து கொள்கிறான் என்பது கான்சப்ட்.

தீவிரமாக ஒரு செயல் உயர்னிலை அடைந்து நம்மை வேறு ஓர் இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு பார்வை.  உதாரணமாக பாலுணர்விலேயே சிக்கி கிடைக்காமல் , அதன் மூலம்கூட உயர்னிலை அடைய முடியும் என்பதற்காகத்தான் கலைகள் , சிற்பங்கள், சில தியான முறைகள்.

ஆனால் ஒரு வேலையை முழுமையாக செய்தால் ,ஓர் உணர்ச்சியை முழுமையாக துய்த்தால் அதுவே போதும். அதன் மூலம் வேறு எதையும் அடைய வேண்டியதில்லை என்பதும் ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது.

லாஸ்ட் டெம்ப்டேஷன் படத்தின் கான்சப்ட் இதுதான், அன்பு செலுத்து ..அன்பு செலுத்தினால் உனக்கு நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல.  எதையும் எதிர்பாராமல் ஒரு ரோஜா , தன் இயல்புப்படி மணம் வீசுகிறதே ..அது போல..


ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் என்ற படமும் இந்த பார்வையையே முன் வைக்கிறது. காதல் வெற்றி , காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறேமே..

காதலின் இலக்கு என்ன,,,  ஊர் சுற்றுவதா? கல்யாணமா? புலனின்பமா?  எதை அடைந்தால் காதல் வெற்றி என சொல்ல முடியும்?

காதலுக்கு இப்படி இலக்கு தேவை இல்லை. காதலிக்க , அன்பு செலுத்த தெரிந்து விட்டால், அந்த உணர்வை அனுபவித்து விட்டால் போதும், அதன் மூலம் எதையும் அடைய வேண்டியதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது படம். காதல் அதன் அளவில் பரிபூரணமாக இருக்கிறது.


இன்னும் சில நல்ல படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் எழுதுவேன்.


3. அறிவியல் புனைவுகளை பலர் ரசித்து பாராட்டி இருந்தார்கள். மேலும் சில எழுத இருக்கிறேன்.

4. போரும் அமைதியும், எல்லை காந்தியின் சுய சரிதம் போன்ற சில புத்தகங்கள் படித்து முடித்தேன். அதைப் பற்றியும் எழுதுவேன்.

Monday, February 7, 2011

யுத்தம் செய் ப்ளூ ஃபில்மா? ஃபிலாப் ஃபில்மா? காப்பி ஃபில்மா? பதிவர்களிடம் கருத்து கணிப்பு

யுத்தம் செய் படம்  பிளாப் படம், ப்ளூ ஃபில்ம் , காப்பி ஃபில்ம் என பல்வேறு கருத்துக்கள் வலம் வரும் நிலையில், பதிவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமாகிறது..

பலரின் கருத்துக்களை பார்த்தால் நடுனிலை பார்வை கிடைக்கும் என்பதால் அனைவரின் கருத்தையும் தொகுத்து தருகிறேன்..
( என் கருத்து தவிர்க்கப்பட்டுள்ளது .அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால், அவர்கள் கருத்தும் இல்லை)
முடிவு என்ன என்பது கடைசியில் கொடுத்துள்ளேன்..இது என் கருத்து அல்ல...
*******************************************


யுத்தம் செய் - கொரிய படங்களின் வாந்தி

யுத்தம் செய் Memory of Murder ன் காப்பி என நினைத்து இருந்தேன் ஆனால் மிஸ்கின் சில பல கொரியன் படங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து இருக்கிறார்.

படம் ஆரம்பத்திலேயே என்னகு தெரிந்து விடுகிறது கைகள் வெட்டபட்டு காட்சிக்கு வைக்கபடும் சீன்கள் No Mercy என்ற கொரியன் படத்தில் சுட்டது என்று ,அதேபோல் மார்ச்சுவரி அதிகாரி கேரக்டரும் இந்த படத்தில் இருந்து சுட்டதுதான் 

-ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)
 *******************************************
சமீபத்தில் வந்த ஈசன் ப்டத்தின் கருவும் இப்படத்தின் கருவும் ஒரே விதமாய் வாடை வருவதை மறக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சேரன் ஏன் அவரது அஸிஸ்டெண்டுகளை பற்றிய பைல்களை அவர்கள் கண் முன்னே குப்பை தொட்டியில் போட வேண்டும்? அவர் ஒன்று அவ்வளவு அரகண்டான ஆளாய் காட்டவில்லையே? அதே போல் கடைசியில் வரும் குத்து பாட்டு பெரியதாய் எதுவும் இம்பாக்டை கொடுக்கவில்லை. அங்கு நடக்கும் ஹைஃபை கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கிறது என்றே தோன்றுகிறது.
-       கேபிள் சங்கர்
கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான்..
மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு.
சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள். 

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.
படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார். 

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம்

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர்



-       உண்மை தமிழன்
 **************************************************


பாதி அரங்கம் மட்டுமே நிரம்பியிருந்தது.
- மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம்.
- பல காட்சிகள் இயக்குனரின் முந்தய படங்களை நினைவூட்டுகின்றன, குறிப்பாக சண்டைக்காட்சிகள் அப்படியே அஞ்சாதே ஸ்டைல்.
- படத்தின் ப்ளஸ் என்று கூறிய அதே சஸ்பென்ஸ். கீழ்த்தட்டு ரசிகர்கள் என்னடா படம் எடுக்குறானுங்க என்று கெட்டவார்த்தை கமெண்ட் அடிக்கிறார்கள்.
- படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் போய் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கோரமான காட்சிகள்

-       -பிலாசபி பிரபாகரன்


***********************************************************

மிகத்தீவிரமான உணர்வுக்குவியல்களை இந்த படம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தாது. 
வெகு நிச்சயமாய் குழந்தைகளுக்கான படமல்ல இது-
ந்ந்தா ஆன்லைன்

*************************************************
‘குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க! என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ! அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான்...

படம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறுமையை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன்.

இது நல்லபடம்தான் ஆனால் ஓடாது
-       அதிஷா

****************************************************
ஹாலிவுட் படங்கள் செவன், ஹாஸ்டல் போன்றவற்றின் பாதிப்பு கதையில் தெரிகிறது. அகதா கிறிஸ்டியின் கதைக் களம் அப்படியே இதிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு, பார்க்க வேண்டிய படம்.

-டூட்டிஆன்லைன்

*****************************


ரிசல்ட்

காபி படம் - 60 %
பிளாப் ஃபில்ம் - 30%
ப்ளூ ஃபில்ம் - 10%

இது பதிவர்களின் கருத்து..

ப்ளூ ஃபில்ம் என்பதே என் கருத்து..

என் கருத்துக்கு மாறாக கருத்து கணிப்பு இருந்தாலும், அதை அப்படியே வெளியிடுவதே நடுனிலை என்பதால் அப்படியே வெளியிட்டுள்ளேன்


Sunday, December 12, 2010

வயர் பதிவர் என்ன சொல்கிறார் ? - பதிவுலக கிசுகிசு

1. பதிவுலகில் சில திறமை மிக்க சீனியர் பதிவர்கள் உண்டு... அவர்களை சந்தித்து பேசினால்  பல விஷ்யங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது *** பதிவரின் அனுபவம்..
இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அனைவரும் பங்கு பெறும் வகையில் , ஒரு மெகா சந்திப்பை நடத்துமாறு மூத்த பதிவர்களை வற்புறுத்தி பார்த்தாராம் இவர்...
வெயில், மழை, வேலை என பல காரணங்களை சொல்லி அவர்கள் இதை செய்யவில்லையாம்..
இதனால் மனம் வெறுத்து போன பதிவர், பல விஷ்யங்களில் கில்லாடியான , சீனியர் பதிவரான வயர் பதிவரை மட்டுமாவது அழைத்து , ஆர்வம் மிக்க புதிய பதிவர்களுடன் கலந்துரையாடல் நடத்த முயன்று வருகிறாராம்.
இது நடந்தால் பதிவுலகில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான இடத்தில் இந்த நிகழ்வு நடக்குமாம்.. சம்பந்தப்பட்ட பதிவர் அந்த இடத்தை பார்த்து திருப்தி அடைந்தாராம்...


2. அதிகம் எழுதாத பதிவர் ஒருவருடன் இலக்கிய சர்ச்சை செய்து விட்டு பதிவர் இரவு நேரம் வீடு திரும்பினாராம்..
லைசன்ஸ் இல்லை, டாக்குமெண்ட் இல்லை, ஹெல்மட் இல்லை, பற்றாக்குறைக்கு “அது “ வேறு..

வழியில் போக்கு வரத்து காவலர் ஒருவர் மடக்க, இன்று ஒரு அமௌவுண்ட் அவுட் என நினைத்தாராம்..
ஆனால் நல்ல வேலையாக, சில மென்பொருள் ஊழியர்கள் அந்த பக்கம் வரவே , இவரை விட அதில்தான் ஆதாயம் என உணர்ந்து இவரை விட்டு விட்டார்களாம்..
அவர் மென்பொருளை வாழ்த்திக்கொண்டே வீடு போய் சேர்ந்தாராம்..

3 பார்ப்பதில் ஆர்வம் கொண்ட பதிவர், இயக்க தலைவர்  பெயர் கொண்ட பதிவரை, சீர்திருத்த தலைவர் படம் பார்க்க அழைத்தாராம்..
அவர் தான் ரொம்ப பிசி என சொல்லி அழைப்பை நிராகரித்து விட்டாராம்..
ஆனால் , ஹோட்டல் பதிவர் அழைத்ததும் உடனடியாக கிளம்பி படம் பார்க்க சென்று விட்டாராம்..
இதனால் சற்று குழம்பி போனாராம் பார்க்கும் பதிவர்..
ஆனால் ஹோட்டல் பதிவர் என்ன நடந்தது என தெளிவாக விளக்கம் அளிக்கவே , புரிதல் ஏற்பட்டதாம்..

விரைவில் மூவரும் சந்திக்க இருக்கிறார்களாம்...

Thursday, December 9, 2010

சில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்

சில நேரங்களில் பதிவுகளை விட, பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் அவர்கள் எழுதி இருக்கும் பஞ்ச் டயலாக் நம்மை கவர்ந்து விடும்...
இவன் சிரிப்பதில்லை.. எரித்து விடுப்வன்..
மனித வடிவில் மாமிருகம்

உயிரைகொடுப்பவன் அல்ல ..எடுப்பவன்
என்று மிரட்டுவது போலவோ..

கண்ணீரை சுமந்து கவிதைக்காக காத்து இருப்பவள்
முடியா பயணத்தில் , முடிவோடு ஒரு பயணி
காலசக்கரம் நின்றாலும், இவன் கவிதைச்சரம் நிற்காது
என்பது போலவோ தம் பஞ்ச் டயலாக்கை வைத்து இருப்பார்கள்..
இதை எப்படி முடிவு செய்கிறார்கள்.. எப்படி யோசிக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்க்ளுக்குத்தான் தெரியும்..
ஆனால் சிலவற்றை பார்க்கும்போது, சில கேள்விகள் கேட்க தோன்றும்..
இதை பின்னூட்ட்த்தில் கேட்க அந்த ஆப்ஷன் இல்லை என்பதால், இங்கு கேட்கப்படுகிரது....

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா