Thursday, December 9, 2010

சில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்

சில நேரங்களில் பதிவுகளை விட, பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் அவர்கள் எழுதி இருக்கும் பஞ்ச் டயலாக் நம்மை கவர்ந்து விடும்...
இவன் சிரிப்பதில்லை.. எரித்து விடுப்வன்..
மனித வடிவில் மாமிருகம்

உயிரைகொடுப்பவன் அல்ல ..எடுப்பவன்
என்று மிரட்டுவது போலவோ..

கண்ணீரை சுமந்து கவிதைக்காக காத்து இருப்பவள்
முடியா பயணத்தில் , முடிவோடு ஒரு பயணி
காலசக்கரம் நின்றாலும், இவன் கவிதைச்சரம் நிற்காது
என்பது போலவோ தம் பஞ்ச் டயலாக்கை வைத்து இருப்பார்கள்..
இதை எப்படி முடிவு செய்கிறார்கள்.. எப்படி யோசிக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்க்ளுக்குத்தான் தெரியும்..
ஆனால் சிலவற்றை பார்க்கும்போது, சில கேள்விகள் கேட்க தோன்றும்..
இதை பின்னூட்ட்த்தில் கேட்க அந்த ஆப்ஷன் இல்லை என்பதால், இங்கு கேட்கப்படுகிரது....


 ****************************************************************************************************************************
பதிவின் பெயர் : அன்புடன் அருணா
  
பஞ்ச் :  நின்னைச் சில வரங்கள் கேட்பேன்- அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும், இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும். இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதும் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

கேள்வி :  கேட்ட வரங்கள் கிடைத்து விட்டனவா?

பதிவின் பெயர்  :vasal
 பஞ்ச் :   உங்கள் இதயங்களின் தலைவாசல்....!
கேள்வி  : எங்கள் இதயங்களால் ஆன வாசலா... அல்லது இதயத்துக்கு வாசலா ?

பதிவின் பெயர் :  குமரன் குடில்
 பஞ்ச் :   நிகழ்வுகள், எண்ணங்கள், படைப்புகள்
கேள்வி  : செயல்கள் இல்லையா?


பதிவின் பெயர் :மாப்ள ஹரிஸ்..
பஞ்ச் நான் கடந்தவைகளும்....என்னை கடந்தவைகளும்..
கேள்வி  : கடப்பவை, கடக்க இருப்பவை பற்றி சொல்ல மாட்டீர்களா?

பதிவின் பெயர் பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...
பஞ்ச் முதல்முறை முறிந்த கிளையொன்று பூக்குதே..
கேள்வி முதல் முறையாக முறிந்த கிளை பூக்குதா அல்லது ஏற்கனவே முறிந்த கிளை முதல் முறையா பூக்குதா?பதிவின் பெயர் அன்புடன் ஆனந்தி
பஞ்ச்   Sharing my Thoughts and Interests

கேள்வி எங்கள் எண்ணங்களை அறியும் ஆவல் இல்லையா?

ச்ச்

 

பதிவின் பெயர் சியேஸ் வித் ஜனா
பஞ்ச்  : இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், பஞ்ச் எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.
 கேள்வி :காரணம் எதுவா இருந்தா என்ன ? சரக்கு கிடைத்தா ஓக்கே தான் ...சரக்கு எப்படி இருக்கும் ? அதை சொல்லுங்க

பதிவின் பெயர் விண்ணோடும்...முகிலோடும்...!
பஞ்ச் ஐம்புலனுரசும் உலகினசைவை பதிய முயலும் என் மனசாட்சியின் எழுத்தாணி
கேள்வி இன்னா இது ? விளக்கம் சொல்லவும்... 


பதிவின் பெயர் மதிசுதா
பஞ்ச் மதியோடையில் நனைவோமா
கேள்வி உலர்த்துவதற்கு டவல் கொடுப்பீர்களா?  

பதிவின் பெயர் தமிழா...தமிழா..
பஞ்ச் ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
கேள்வி அப்படியா.. அப்படீனா நம் நாட்டுல் ஏன் இவ்வளவு கஷ்டம் ?

பதிவின் பெயர் வானம் தாண்டிய சிறகுகள்
பஞ்ச்...
கேள்வி பஞ்ச் எதுவும் இல்லையே... விஜய் படம் பார்ப்பது ஐடியா பிடிப்பதற்குதானா?


பதிவின் பெயர் கனாக்காதலன்
பஞ்ச்...
கனவுகளில் விடியலைத் தேடி.
கேள்வி : தூக்கத்தில் இருந்து எழுந்தால்தானே விடியல் கிடைக்கும் ?பதிவின் பெயர் :நான் நானாக...
பஞ்ச்...
எனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
கேள்வி : படித்த்தில் பிடிக்காதவற்றையும் சொன்னால்தானே நாங்கள் அவற்றை படிக்காமல் எச்சரிக்கையாக இருக்க முடியும்?


பதிவின் பெயர் :கிருஷ்ணகுமார்
பஞ்ச்...
யாம் கண்ட மற்றும் பெற்ற தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்....
கேள்வி : நீவிர் செய்த விஷயங்களை பற்றிய தகவல்களை மட்டும் ரகசியாமாக வைத்து கொள்வீர்களா?


பதிவின் பெயர் வம்ப வெலைக்கு வாங்குவோம்ல
பஞ்ச்... உண்மை என்று நீ உறுதி கூறும் ஒவ்வொரு விஷயமும் நீயே உனக்காக உணர்திருக்கும் , தெரிந்திருக்கும் , புரிந்திருக்கும் விஷயமாக இருக்க வேண்டும்
கேள்வி :அப்படி பார்த்தா உலக அரசியலை எப்படி அலசுறது? கடவுள் இருக்கிறார்..கடவுள் இல்லை என எப்படி பேசுவது ?


பதிவின் பெயர் கொஞ்சம் வெட்டி பேச்சு
பஞ்ச்... Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
கேள்வி : அவ்வப்போது அழ வைத்து விடுகிறீர்களே !! ?


பதிவின் பெயர் வெறும்பய
பஞ்ச்... மேதைகளின் உலகில் நான் மட்டும் முட்டாளாக..
கேள்வி :  நாங்கள் எல்லாம் மேதைனு நினைச்சா , இத்தனை நாள் பழகிக்கிட்டு இருக்கீங்க ?


பதிவின் பெயர்: நலம் வாழ எந்நாளும் ...
பஞ்ச்... நல்வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று ...
கேள்வி :  Top of Form
உங்களுக்கு யார் வாழ்த்து சொல்வது ?பதிவின் பெயர்: Manathodu mattum
பஞ்ச்... சிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்துக்காக.....
கேள்வி : பயணம் முக்கியம் என்றால் கால்களே போதுமே ?


பதிவின் பெயர் தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!
பஞ்ச். வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!”-பாவாணர். தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர் பாரதிதாசனார்
கேள்வி : ஆங்கிலத்தை தம் உயிராக அவர்கள் சொல்வதில்லை... ஆனால் அவர்கள் அடைந்த உயரத்தை , இப்படிப்பட்ட வீர உணர்வுமிக்க நாம் அடையவில்லையே ?

 மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில் 

41 comments:

 1. ஆஹா.... வித்தியாசமான பதிவாய் இருக்கே...
  ஸியேஸ் வித் ஜனாவுக்கு என்பதில்...
  -சரக்கு உள்நாட்டு தயாரிப்பில் இருந்து உலகநாட்டு முதல்தரம்வரை கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் சேவல்வாலும் (ஹாக்ரெயில்) ஸ்பெஷலாய்க்கிடைக்கும்.
  //தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு//

  இதை மறந்திட்டீங்களே தலை!!

  ReplyDelete
 2. ”சரக்கு உள்நாட்டு தயாரிப்பில் இருந்து உலகநாட்டு முதல்தரம்வரை கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் சேவல்வாலும் (ஹாக்ரெயில்) ஸ்பெஷலாய்க்கிடைக்கும்.”

  வாவ் ..கிரேட்...

  ReplyDelete
 3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
  தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள் .. அதுபோல‌

  நான் பிறரை வாழ்த்தும் போது பிறருக்காக துஆ செய்யும் போது
  எனக்காக வானவர்கள் வாழ்த்துவார்கள்/பிரார்த்தனை செய்வார்கள்.

  இது போதுமே .. இது போதுமே ..
  வாழ்க்கைப் பூந்தோட்டம்...அன்பின் ஆலயம்.

  ReplyDelete
 4. ஆமால்ல! இப்பத்தான் யோசிச்சேன் நாம 'பஞ்ச்' எதுவும் குடுக்கல இல்ல? அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்களே பாஸ்!
  இனித்தான் விஜய் படம் பார்க்கப் போறேன்!
  ஆமா அதில என்ன ஐடியா பிடிக்க இருக்கு! :-))

  ReplyDelete
 5. ”நான் பிறரை வாழ்த்தும் போது பிறருக்காக துஆ செய்யும் போது
  எனக்காக வானவர்கள் வாழ்த்துவார்கள்/பிரார்த்தனை செய்வார்கள்.”

  அருமையாக சொன்னீர்கள்..

  ReplyDelete
 6. அந்த வாசகம் புத்தர் பற்றிய ஒரு புத்தகத்தில் இருந்தது .அப்படியே ஒரு லிங்க் குடுத்திருந்தீங்கனா எனக்கும் நல்ல விளம்பரமா இருந்திருக்கும்

  ReplyDelete
 7. அந்த வாசகம் புத்தர் பற்றிய ஒரு புத்தகத்தில் இருந்தது "

  அப்படியா? சூப்பர்..

  அந்த புத்தகம் பற்றி ஒரு பதிவு போடுங்க..
  அல்லது அதை ஏன் அந்த வாசகம் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது பற்றி எழுதுங்கள்...

  ReplyDelete
 8. ஆமா அதில என்ன ஐடியா பிடிக்க இருக்கு! :-))


  ஹா ஹா

  ReplyDelete
 9. தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு

  Blog name:பிச்சைக்காரன்

  Question: Athenna? Pichaikkaaran?
  Panathilaa? Arivilaa? natpilaa?

  Answer: Indians are all Political Pichaikkaaran's.

  ReplyDelete
 10. ஒரே நகைச்சுவை தான் போங்க...!

  ReplyDelete
 11. அருமை நண்பரே,

  செம கலக்கல்....

  தொடருங்கள்.......

  ReplyDelete
 12. அசத்தல் தலைவரே.. இடையில நம்ம பெயரும் இருந்தது போல..

  ReplyDelete
 13. அசத்தல் தலைவரே.. இடையில நம்ம பெயரும் இருந்தது போல.."

  பதில் சொல்லாம போயிட்டீங்களே

  ReplyDelete
 14. மாணவன் said...
  அருமை நண்பரே,

  செம கலக்கல்....

  தொடருங்க”

  நன்றி

  ReplyDelete
 15. Answer: Indians are all Political Pichaikkaaran's.”

  :(

  ReplyDelete
 16. Sathish Kumar said...
  ஒரே நகைச்சுவை தான் போங்க.”

  பதில் சொல்லாம போயிட்டீங்களே

  ReplyDelete
 17. //கேள்வி : ஆங்கிலத்தை தம் உயிராக அவர்கள் சொல்வதில்லை... ஆனால் அவர்கள் அடைந்த உயரத்தை , இப்படிப்பட்ட வீர உணர்வுமிக்க நாம் அடையவில்லையே ? //

  பதில்.- ஹி...ஹி...ஹி.... மகிழ்ச்சி நண்பரே..! இப்போது வலைப்பதிவுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் பதிவர்களின் வளர்ச்சியும், தமிழின் வளர்ச்சியும் மெருகேறியே உள்ளது.
  விரைவில் அடைய வேண்டும் என்பதே..
  நம் ஆவல்...!

  ReplyDelete
 18. மற்ற பதிவுகளின் பஞ்ச் வசனங்களை படித்து சிரித்து கொண்டே... வரும்போது.... ஹி..ஹி..ஹி..
  நம்ப முடியவில்லை..!
  நம்ப பேரையும் சேர்த்து எழிதியதை யதார்த்தமாக...
  பார்த்து நான் மேலும் சிரித்துக்கொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

  ReplyDelete
 19. ஆயிரக்கணக்கான தமிழ் பதிவர்களின் வளர்ச்சியும், தமிழின் வளர்ச்சியும் மெருகேறியே உள்ளது.
  விரைவில் அடைய வேண்டும் என்பதே..
  நம் ஆவல்..."

  அரசியல்வாதிகளால் அல்ல...
  நம்மால்தான் இது சாத்தியம் ஆகும்

  ReplyDelete
 20. உங்க கூட கா :(

  அய்யய்யோ..

  தூக்கத்துல இருந்து எழுப்புனது தப்பா போச்சே..

  சரி,,வாங்க..

  ஒரு தூக்கத்தை பொட்டு, விழிப்புணர்வு குறித்து கனவு காணலாம் :-)

  ReplyDelete
 21. அவ்வப்போது அழ வைத்து விடுகிறீர்களே !! ?


  ...."மரண" மொக்கை போடும் போது, நீங்கள் அழுதால் கம்பெனி பொறுப்பு எடுக்காது! :-)

  ReplyDelete
 22. hirumalai Kandasami said...
  Mudiyala,,"

  :-)

  ReplyDelete
 23. ...."மரண" மொக்கை போடும் போது, நீங்கள் அழுதால் கம்பெனி பொறுப்பு எடுக்காது! :-)

  பல பதிவர்களின் மொக்கைகளை சந்த்திது இருக்கோம்..

  அழுதது இல்லை...ஓடுனது இல்ல...
  எவ்வளவு டார்ச்சர் செய்தாலும் , வலிக்காத மாதிரியே நடிச்சுக்கிட்டு இருப்போம்..

  ReplyDelete
 24. விட்யாசமான பதிவுதான்.ஆனாகூட சுவாரஸ்யம் இருக்கு.

  ReplyDelete
 25. பிச்சைக்காரன்

  தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு

  தேடினது கிடைத்ததா??

  ReplyDelete
 26. எல்லாம் சரிதான். எல்லா பதிவர்களின் லிங்க் கொடுத்திருந்தால் சில அறிமுகமில்லாத பிளாக் போய் பாத்திருக்கலாமே. வடை போச்சே

  ReplyDelete
 27. நேத்து ஒருத்தரு தலைப்ப வச்சி கேள்வி கேட்டாரு..இன்னைக்கு நீங்க டையலாக்க வச்சி கேள்வி கேட்டுருக்கீங்க..

  ReplyDelete
 28. கடப்பவை, கடக்க இருப்பவை பற்றி சொல்ல மாட்டீர்களா?..

  சொல்லலாம் தான் ஆனா தெரியாதே..

  அது என்ன நம்ம கேப்சனுக்கு மட்டும் தனியா கலர் குடுத்துருக்கீங்க..எதுவும் உள்குத்து இருக்கா?

  ReplyDelete
 29. // முதல் முறையாக முறிந்த கிளை பூக்குதா அல்லது ஏற்கனவே முறிந்த கிளை முதல் முறையா பூக்குதா? //

  ஒன்றும் விளங்கவில்லையே...

  ReplyDelete
 30. அது திட்டமிட்டு வைக்கப்பட்ட tagline அல்ல.... ஏதோ ஒரு மாலைப்பொழுதில் மனதில் தோன்றியதை வைத்தேன்...

  ReplyDelete
 31. விட்யாசமான பதிவுதான்.ஆனாகூட சுவாரஸ்யம் இருக்கு"

  நீஙக ஏன் பஞ்ச் டயலாக் வைக்கல ?

  .

  ReplyDelete
 32. அது திட்டமிட்டு வைக்கப்பட்ட tagline அல்ல.... ஏதோ ஒரு மாலைப்பொழுதில் மனதில் தோன்றியதை வைத்தேன்”

  இது கூட் கவித்துமான பஞ்ச் தான் ...

  ReplyDelete
 33. அது என்ன நம்ம கேப்சனுக்கு மட்டும் தனியா கலர் குடுத்துருக்கீங்க..எதுவும் உள்குத்து இருக்கா?”

  கலர்ஃபுல்லா எழுதுறீங்களே... அதனால்தான்

  ReplyDelete
 34. அசத்தல் ”

  நன்றி சார்..
  ஆனால் பதில் சொல்லாம போயிட்டீங்களே

  ReplyDelete
 35. தேடினது கிடைத்ததா??


  தேடல் தொடர்கிறது...

  ReplyDelete
 36. ///கேள்வி எங்கள் எண்ணங்களை அறியும் ஆவல் இல்லையா///

  உங்க எண்ணங்களை அறியும் ஆவல் இருப்பதால் தான், பின்னூட்டங்கள்.... வரவேற்கிறேன்
  அதற்கு.. தனி தனியே...பதிலும் அளிக்கிறேன்..

  என் பதிவில் உள்ள வரிகள்.. உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி.. நன்றி.. :-)

  ReplyDelete
 37. //இப்போது வலைப்பதிவுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் பதிவர்களின் வளர்ச்சியும், தமிழின் வளர்ச்சியும் மெருகேறியே உள்ளது.
  விரைவில் அடைய வேண்டும் என்பதே.//அடக் கண்றாவியே, பொருளாதாரம், தொழில் நுட்பம் வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஒழிப்பு பசுமைப் புரட்சி இந்த மாதிரி விஷயத்துல முன்னேறுவதைப் பத்தில் சொல்றீங்கன்னு பாத்தா, இடுக்கை போடுவதில் முன்னேற்றமா? இந்த கருமாந்திரத்தால ஆகப் போவது என்ன? தின்னுட்டு ஜீரணம் ஆகாத பயல்கள் பதிவு போடுவானுங்க, அதே மாதிரி வேறு சிலர் அதுக்கு பின்னூட்டம் போடுவானுங்க, உருப்படியா என்ன ஆகப் போகுது?

  ReplyDelete
 38. ஹா ஹா ஹா ஹா அட்டகாசமா இருக்குய்யா,

  அசத்துங்க அசத்துங்க....

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா