Sunday, December 12, 2010

வயர் பதிவர் என்ன சொல்கிறார் ? - பதிவுலக கிசுகிசு

1. பதிவுலகில் சில திறமை மிக்க சீனியர் பதிவர்கள் உண்டு... அவர்களை சந்தித்து பேசினால்  பல விஷ்யங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது *** பதிவரின் அனுபவம்..
இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அனைவரும் பங்கு பெறும் வகையில் , ஒரு மெகா சந்திப்பை நடத்துமாறு மூத்த பதிவர்களை வற்புறுத்தி பார்த்தாராம் இவர்...
வெயில், மழை, வேலை என பல காரணங்களை சொல்லி அவர்கள் இதை செய்யவில்லையாம்..
இதனால் மனம் வெறுத்து போன பதிவர், பல விஷ்யங்களில் கில்லாடியான , சீனியர் பதிவரான வயர் பதிவரை மட்டுமாவது அழைத்து , ஆர்வம் மிக்க புதிய பதிவர்களுடன் கலந்துரையாடல் நடத்த முயன்று வருகிறாராம்.
இது நடந்தால் பதிவுலகில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான இடத்தில் இந்த நிகழ்வு நடக்குமாம்.. சம்பந்தப்பட்ட பதிவர் அந்த இடத்தை பார்த்து திருப்தி அடைந்தாராம்...


2. அதிகம் எழுதாத பதிவர் ஒருவருடன் இலக்கிய சர்ச்சை செய்து விட்டு பதிவர் இரவு நேரம் வீடு திரும்பினாராம்..
லைசன்ஸ் இல்லை, டாக்குமெண்ட் இல்லை, ஹெல்மட் இல்லை, பற்றாக்குறைக்கு “அது “ வேறு..

வழியில் போக்கு வரத்து காவலர் ஒருவர் மடக்க, இன்று ஒரு அமௌவுண்ட் அவுட் என நினைத்தாராம்..
ஆனால் நல்ல வேலையாக, சில மென்பொருள் ஊழியர்கள் அந்த பக்கம் வரவே , இவரை விட அதில்தான் ஆதாயம் என உணர்ந்து இவரை விட்டு விட்டார்களாம்..
அவர் மென்பொருளை வாழ்த்திக்கொண்டே வீடு போய் சேர்ந்தாராம்..

3 பார்ப்பதில் ஆர்வம் கொண்ட பதிவர், இயக்க தலைவர்  பெயர் கொண்ட பதிவரை, சீர்திருத்த தலைவர் படம் பார்க்க அழைத்தாராம்..
அவர் தான் ரொம்ப பிசி என சொல்லி அழைப்பை நிராகரித்து விட்டாராம்..
ஆனால் , ஹோட்டல் பதிவர் அழைத்ததும் உடனடியாக கிளம்பி படம் பார்க்க சென்று விட்டாராம்..
இதனால் சற்று குழம்பி போனாராம் பார்க்கும் பதிவர்..
ஆனால் ஹோட்டல் பதிவர் என்ன நடந்தது என தெளிவாக விளக்கம் அளிக்கவே , புரிதல் ஏற்பட்டதாம்..

விரைவில் மூவரும் சந்திக்க இருக்கிறார்களாம்...

12 comments:

 1. கனாக்காதலன் said...
  Me only put the first vote for the TOP reason.”

  பாஸ் ..உங்களுக்கு விரிவான மெயில் அனுப்பி இருக்கிறேன்

  ReplyDelete
 2. மூன்றாவது கிசுகிசு மட்டும் தெள்ளத்தெளிவாக புரிகிறது... விரைவில் சந்தித்துவிடலாம் :)

  ReplyDelete
 3. முதல் கிசுகிசுவில் மெகா சந்திப்பை வலியுறுத்திய அந்த பதிவர் நீங்களாகவே இருப்பீர்கள் என கருதுகிறேன்...

  ReplyDelete
 4. இரண்டாவதுதான் புரியவில்லை... அதிகம் படிக்கும் பதிவரா...???

  ReplyDelete
 5. @பிரபாகரன்
  அவர் யாராக இருக்கும் என விரைவில் உங்களுக்கு தெரியும்

  ReplyDelete
 6. என்ன பிரபா...ஹோட்டல் பதிவர் என்றால் யாரென்று கேட்கிறீர்கள்? அடியேன்தான்..! 'ஜூனியர் விகடன்' புலனாய்வு பிரிவில் "பார்க்கும் பதிவர்" வேலைக்கு சேர்ந்து விட்டாரோ? செவ்வனே தொடரட்டும்...தங்கள் பணி!

  ReplyDelete
 7. 'ஜூனியர் விகடன்' புலனாய்வு பிரிவில் "பார்க்கும் பதிவர்" வேலைக்கு சேர்ந்து விட்டாரோ?"

  ஹி ஹி

  ReplyDelete
 8. வயர் பதிவர் சரியான சொய்ஸ்தான் ஒருமுறை 5 பதிவர்கள் மற்றும் அவர், காலை 10 மணிதொடக்கம், மாலை 6.30 மணிவரை ஒரே இடத்தில் இருந்து பல விடையங்களை சுகாரகசிய உச்சம்வரையும் பேசிக்கொண்டிருந்தோம்.
  மிக இனிமையான நினைவுகள் அவை.

  ReplyDelete
 9. ///மிக்க சீனியர் பதிவர்கள் //
  வயசாச்சுன்னு சொல்றீங்களே.. இதெல்லாம் அநியாயமா தெரியல?

  ReplyDelete
 10. சூப்பர் தொடருங்கள்....

  ReplyDelete
 11. ஒண்ணும் புரியல. :-)

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா