Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Thursday, April 23, 2020

பெரியார் பட சரச்சை இளையராஜா விளக்கம்



ஒருவர் கீழ்மட்டத்தில் இருந்து முன்னேறி வநதால் அதை பலரால் ஜீரணிக்கமுடியாது
;இளையராஜா மீதான தாக்குதல்கள் இப்படிப்பட்டவையே

சில ஆண்டுகளுக்கு,முன் பெரியார் என்ற படத்துக்கு அவர் இசையமைககக மறுத்து விட்டார் என ஒரு தரப்பு புரளி"கிளப்பியது

இதை இந்துக்கள் வரவேற்கிறாரககள் என, பிஜேபி அறிவித்தது

ஆக இரு தரப்பாலும் அவருக்கு தொல்லைதான்

அது பொய்யான தகவல் என அவரே சொன்ன பின்னும் இந்துத்துவரககளும் விடவில்லை. பிறரும் விடவில்லை

ஜீ வி இதழில் இளையராஜா அளித்த விளக்கம் இதோ..

.......

ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...
...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....
....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.
ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.
1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?
2. பெரியாரின் வரலாறா?
3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...
....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

Sunday, July 28, 2013

சொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. 

அதில் சொர்ண்மால்யா பேசினார். 

இவர்  தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் பேசுகையில் அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு  தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள்  எல்லா சாதியிலிருந்தும் பெண்கள் வந்தனர்


 என்பது போன்று பேசினார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியபோது என் கருத்தையும் கேட்டார்கள். அப்போது சொன்னதை இங்கும் பகிர்கிறேன்.

தேவதாசி முறையை ஏற்கிறோமா இல்லையா என்பதை அந்த சொல்லுக்க்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.

தேவதாசிகள் என்றால் சிறிய வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தயார் செய்யப்படும் என்று வைத்து கொண்டால் இந்த முறையை யார் ஆதரித்து பேசினாலும் கண்டிக்கத்தக்கதே.

சிலரை இப்படி பாலியர் ரீதியாக கொடுமைப்படுத்தினார்கள் என்பது உண்மை.  பெரியார், முத்துலட்சுமி ரெட்டியார் போன்றோரின் கடும் உழைப்பால் இந்த முறை ஒழிக்கபட்டது என்பது வரலாறு.

ஆனால் பண்டைய தமிழகத்தில் இந்த நிலை இருந்ததா? பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழ் மண்ணில் இப்படி ஒரு நிலை இருந்ததா? உலகுக்கே வழிகாட்டும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் இதை அனுமதித்து இருப்பாரா...

ஆராய்ந்து பார்த்தால் பண்டை தமிழகத்தில் தேவதாசி முறை என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை 
அது பாலியல் சார்ந்த்தும் இல்லை என சிலர் கூறுகிறார்கள்.

 நான் கடவுள் படத்தில் ஆர்யா இறைத்தேடலில் தன் குடும்ப வாழ்வை துறப்பாரே..அது போல இறைதேடலில் குடும்ப வாழ்வை துறக்கும் பெண்கள் தேவ அடியார்கள் என அழைக்க்பட்டார்களாம். சிலர் முழுக்க முழுக்க துறவு வாழ்க்கையில் இருப்பார்கள்..சிலரோ கலை, ஆடல், பாடலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வார்கள். இவர்களில் சிலர் யாரையேனும் மணந்து கொள்வதும் உண்டு.

ஆனால் ஒரு போதும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிலை இருந்தது இல்லை. அரசனுக்கே ஆலோசனை சொல்லும் நிலையில் கூட இருந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் , நாம் வழிபடும் சில கோயில்கள் இவர்கள் கொடுத்த பணத்தினால்தன் உருவானது.



ஆனால் தமிழர்கள் ஆட்சி அழிந்து, வேற்று கலாச்சார ஆட்சிகள் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவற்றால் அவர்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போகவே, சில உயர் சாதியினர் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளினார்கள். இன்னொரு கொடுமையாக , தேவரடியார் என தனியாக ஒரு சாதியை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி , பாலியல் சுரண்டலை ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் பெரியார் போன்றோரின் பணியால் இந்த இழி நிலை மாற்றப்பட்டது.

ஆகவே சொர்ணமால்யா கருத்தை ஏற்பதா இல்லையா என ஒரே வரியில் சொல்ல முடியாது.

பிறப்பின் அடிப்ப்படையிலான , பாலியல் சார்ந்த , பெரியாரால் எதிர்க்கப்பட்ட ஒரு முறையை தேவதாசி முறை என அழைத்த்தால் , அதை ஆதரித்து பேசுவது தவறு.

பண்டையை தமிழ் முறைப்படி அமைந்த , தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட, பாலியல் இல்லாத , பெண்ணுரிமையை மீறாத ஒரு முறையை தேவதாசி முறை என அவர் சொல்லி இருந்தால் அதை தவறு என சொல்ல முடியாது.


Friday, April 9, 2010

பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?


பெரியார் என்றால் , நமக்கு நினைவு வருவது , அவரது கடவுள் எதிர்ப்பு கொள்கைகள்தாம்...
கடவுளை நம்புபவன் முட்டாள்..காட்டு மிராண்டி என்ற அவர் பொன்மொழிகளை தெரியாதவர்கள் இருக்க முடியாது..


இன்று பலருக்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சினை கிடையாது..


இவர்கள் ஆன்மீக புத்தகங்களும் படிப்பதில்லை... (அதில் கடவுள் , கடவுள் என இருக்கும் )


பெரியாரையும் படிப்பதில்லை ( அதில் கடவுள் இல்லை... இல்லை என்றுதான் இருக்கும்)


ஆக, கடவுளை பற்றிய அக்கறை இல்லாதோர் , பெரியாரை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை...
என்னை பொறுத்தவரை, நான் கடவுள் இருக்கிறார் என்றோ , இல்லை என்றோ நம்பவில்லை... அதை பற்றி எந்த கருத்தும் இல்லை..


இந்நிலையில், பெண் ஏன் அடிமை அனால் என்ற பெரியார் புத்தகம் படிக்க நேர்ந்தது...


காதல், மறுமணம் , திருமணம்,. கற்பு என எல்லாமே பெண்ணுக்கு எதிராக எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை அவர் விளக்கும் போது. பிரம்மித்து போனேன்...அந்த காலத்தில் எப்படி முற்போக்காக சிந்தித்து இருக்கிறார்...


அவர் சும்மா, கடவுள் இருக்கிறாரா , இல்லையா என சிந்திக்கவில்லை... மக்கள் நலனைத்தான் சிந்தித்தார்.. என்பது அந்த சிறிய புத்தகத்தை படித்தால் தெர்யும்...
பெண்ணை அடிமைபடுதுவதில், கடவுள் நம்பிக்கை உள்ளவர் , இல்லை என்பவர் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கின்றனர்?
அவரை ஒரு சிந்தனை வாதி என அறிமுகபடுத்தாமல், ஒரு நாத்திகவாதி என அறிமுகபடுத்துவது சரியானதா என உண்மையில் பெரியாரை நேசிப்பவர்கள்சொல்வார்களா ? ( அவர் கொள்கை பற்றி எந்த புரிதலும் இல்லாமல், சுயலாபத்துக்காக அவர் பெயரை பயன்பத்துபவர்களுக்கு இதில் எந்த அக்கறையும் இருக்க போவதில்லை என்பது வேறு விஷயம் )

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா