Friday, April 9, 2010
பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?
பெரியார் என்றால் , நமக்கு நினைவு வருவது , அவரது கடவுள் எதிர்ப்பு கொள்கைகள்தாம்...
கடவுளை நம்புபவன் முட்டாள்..காட்டு மிராண்டி என்ற அவர் பொன்மொழிகளை தெரியாதவர்கள் இருக்க முடியாது..
இன்று பலருக்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சினை கிடையாது..
இவர்கள் ஆன்மீக புத்தகங்களும் படிப்பதில்லை... (அதில் கடவுள் , கடவுள் என இருக்கும் )
பெரியாரையும் படிப்பதில்லை ( அதில் கடவுள் இல்லை... இல்லை என்றுதான் இருக்கும்)
ஆக, கடவுளை பற்றிய அக்கறை இல்லாதோர் , பெரியாரை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை...
என்னை பொறுத்தவரை, நான் கடவுள் இருக்கிறார் என்றோ , இல்லை என்றோ நம்பவில்லை... அதை பற்றி எந்த கருத்தும் இல்லை..
இந்நிலையில், பெண் ஏன் அடிமை அனால் என்ற பெரியார் புத்தகம் படிக்க நேர்ந்தது...
காதல், மறுமணம் , திருமணம்,. கற்பு என எல்லாமே பெண்ணுக்கு எதிராக எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை அவர் விளக்கும் போது. பிரம்மித்து போனேன்...அந்த காலத்தில் எப்படி முற்போக்காக சிந்தித்து இருக்கிறார்...
அவர் சும்மா, கடவுள் இருக்கிறாரா , இல்லையா என சிந்திக்கவில்லை... மக்கள் நலனைத்தான் சிந்தித்தார்.. என்பது அந்த சிறிய புத்தகத்தை படித்தால் தெர்யும்...
பெண்ணை அடிமைபடுதுவதில், கடவுள் நம்பிக்கை உள்ளவர் , இல்லை என்பவர் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கின்றனர்?
அவரை ஒரு சிந்தனை வாதி என அறிமுகபடுத்தாமல், ஒரு நாத்திகவாதி என அறிமுகபடுத்துவது சரியானதா என உண்மையில் பெரியாரை நேசிப்பவர்கள்சொல்வார்களா ? ( அவர் கொள்கை பற்றி எந்த புரிதலும் இல்லாமல், சுயலாபத்துக்காக அவர் பெயரை பயன்பத்துபவர்களுக்கு இதில் எந்த அக்கறையும் இருக்க போவதில்லை என்பது வேறு விஷயம் )
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
April
(41)
- "சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"
- போலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...
- ஊருக்கு உபதேசமா? அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...
- சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...
- புலிகளின் இரண்டு கண்கள்
- நான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்
- இன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...
- ஊருக்கு உழைப்பவன்
- இந்த வார " டாப் 5 " கேள்விகள்
- பிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...
- ஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...
- காதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை
- ஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...
- தகுதி இல்லாத என் பதிவு
- ஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா? - டாக்டர் கலை...
- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
- சுஜாதாவை போல ஒருவர்-
- இரண்டு நாளில் இலக்கிய தமிழ் கற்று கொள்வது எப்...
- முப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி? (விட்டு...
- முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ? - நிறைவு...
- முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ??பகுதி 1
- "அங்காடி தெரு" வின் ஆயிரம் குறைகள்
- கடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )
- சங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...
- விலை மாதுடன் , ஓர் இரவு
- சானியாவும், எலிசபத் டைலரும்
- சமுதாய புரட்சியும் குழந்தையும்
- ஆவியுடன் ஒரு பேட்டி
- ராணுவ "வீரர்களின் " வெறித்தனம்
- "ஜிட்டு" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா ?
- பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?
- தொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்
- எனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்
- AR ரகுமான் நன்றி மறந்தாரா? outliers அலசல்
- அவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா? - கேஸ் study
- கலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்
- சாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு
- இயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...
- புதிய தலைமுறை
- வெட்கி தலை குனிகிறேன்
- தலைவன் - ஒரு சிந்தனை
-
▼
April
(41)
பெண் பல இடங்களிலும் பலவீனப் படுத்தப் படுகிறாள். அதிலும் கொஞ்சம் திறமை அதிகம் உள்ள பெண் வீட்டிலும் வெளியிலும் ரொம்ப காயப் படுத்தப் படுகிறாள். உங்களின் பெண்ணைப் பற்றிய இந்த அக்கறை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ReplyDeleteபெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு, இதுல எங்கிருந்து சமூக சிந்தனை வரும்!
ReplyDeleteஉண்மை உண்மை.
ReplyDeleteநானும் பலமுறை எண்ணியதுண்டு பெரியார் எப்போதுமே சொல்லி வந்தது என்னவென்றால் யாரும் சொல்வதை அது வேதத்தில் சொல்லியிருக்கிறது இதுதான் நடைமுறையில் இருக்கிறது என்றெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே.நீயாக சிந்தனை செய்து பர்ர்த்து அது உனக்கு சரி எனப்பட்டால் மட்டுமே நம்பு.
அவர் சொன்னது சிந்தனை செய்யச்சொல்லித்தான்.எதையும் கேள்வி கேள் அப்படியே நம்பாதே என்றார்.கடவுள் மறுப்பும் பிராமணிய எதிர்ப்பும் மட்டுமே இன்று பெரியாரிசஸ்ட்டுகளால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களாக இருக்கிறது.
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார் பெரியாருக்கு பிராமணன் மத்தவங்களுக்கு பக்கத்துல உக்கார வைக்கலை, சாதி பெயரைச்சொல்லி அவமானப் படுத்தினாங்க அதனால அவரு பிராமணன்தான் எதிரின்னு சொல்லிக்கிட்டுத்திரிஞ்சாறு. அவருதான் பெரிய சிந்தனாவாதின்னு எல்லாம் பேசாதன்னு சொல்லிப்போக அவரிடம் நான் அதன்பிறகு அதிகம் விவாதிப்பதில்லை.
.
ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் போனால் புத்தரை கடவுளாக்கியது போல அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்.
" அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்"
ReplyDeleteசரியா சொன்னிங்க
" பெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு"
கொஞ்ச நேரம் ஒதுக்கி , பெரியார் புத்தகங்கள் படிப்பார்கள ?
Yes.. I strongly agree with you.. I am also a follower of periyaar.. He wanted to destroy the inequality in the society.. That is his aim..
ReplyDeleteBut,avarukku pinnaal vandhavargal adhai arasiyal aakinaargal... Ippoludhu, ellaarum paarpanargalai kurai solvadhu dhaan periyaarisham endru ninaikkiraargal.. solla ponaal avargalin aadhikathai periyaar olithu vittaar..
Aanal, periyaar thaasargal endru sollikollum matra jaadhi yai serndhavargal, thangaludaya keel jaadhi maakalai samamaaga madhikiraargalaa?? idhargu yaaridamum padhil kidayaadhu....
vayithu pilaippukku periyaar peyarai ubayoga paduthum theevira vaadhigalai mudhalil olikka vendum!!!
Agreed he was a great rationalist, not just an atheist. What we are today is all because of him and his vision.
ReplyDelete