Sunday, November 2, 2014

சின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து பாலா

கல்லூரி வாழ்க்கையில் முதல் ஆண்டு படிக்கையில் சில நண்பர்கள் அறைக்கு பாலியல் தொழிலாளியை அழைத்து வர என் உதவியை நாடினார்கள்.. அதற்கு காரணம் நான் அதில் எக்ஸ்பெர்ட் என்பது அல்ல.. நான் தங்கி இருந்த அறை ஓனர் பிரச்சனை இல்லாத தனி அறை... வேறு எங்கும் அறை எடுப்பதை விட , நம் ரூமில் வைத்து முடித்து விடலாம் என்பது அவர்கள் ஐடியா... எனக்கு அதில் ஆர்வம் இல்லை.. இதை எல்லாம் கூட்டணி அமைத்து செய்வதே பிடிக்கவில்லை... வறுமையை ப்யன்படுத்தி ஒரு பெண்ணை இப்படி அழைத்து வந்து பயன்படுத்துவதையும் நான் விரும்பவில்லை.. ஆனாலும் வெளியில் இருந்து ஆதரவு என்ற அடிப்படையில் அறையை மட்டும் அளிக்க ஒப்புக்கொண்டேன்.. நாங்கள் தங்கி இருந்தது சற்று ஒதுக்குப்புறமாக இடம்... பஸ் ஸ்டாப் சற்று தொலைவில் இருக்கும்.. எனவே பஸ் ஸ்டாப்பில் இருந்து நான் போய் பைக்கில் அழைத்து வந்தேன்.. எங்களை விட இரண்டு வயது பெரிய பெண்.. எனக்கு அவரைப்பார்க்கவே பாவமாக இருந்தது.. என்னிடம் ச்கஜமாக பேசினார்.. படிப்பை விசாரித்தார்.. பாவம்.. அவரை ரொம்ப டார்ச்சர் செய்ததாக காலையில் அறிந்தபோது மிகவும் வருந்தினேன்,,,
ஒன்று நான் அதில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.. அல்லது அறையை தர மறுத்து முற்றிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.. இந்த நடு நிலை என்பது மிக மிக மோசமானது என்பதை உணர வைத்த சம்பவம் அது...

*********************************************************************************************

அபூர்வ சகோதரர்கள் .சிறப்பு சிறுகதை 

அண்ணன் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார் . அண்ணன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் டிஸ்மிஸ் . போன் அடித்தது .

 தம்பி  - அண்ணே பேப்பர் பார்த்தீங்களா . இது உங்களுக்கு முத வார்னிங்

அடுத்தவாரம் . பொருளாளர் டிஸ்மிஸ் . போன் வந்தது . அண்ணே பேப்பர் பார்த்தீங்களா .செகண்ட் வார்னிங்


அடுத்தவாரம் . நிர்வாகிகள் டிஸ்மிஸ் . அண்ணே பேப்பர் பார்த்தீங்களா என பேசும்போது அண்ணன் வீட்டு நாய் சத்தம் போட்டு இடைஞ்சல் செய்தது . அண்ணன் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார் . தம்பி சவுண்ட் கேட்டியா ? இது உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்


************************************************************************************************

அண்ணன் காட்டிய வழியம்மா ( சிறப்பு சிறுகதை )

“ உன் பேச்சை கேட்டு உன் அண்ணன கட்சிய விட்டு தூக்கியது தப்பா போச்சு.. இப்ப பாரு . வாஷ் அவுட் ஆகி இருக்கோம் “ கொதித்தார் தலைவர்...
தோற்றாலும் பரவாயில்லை.. 20 தொகுதிகளில் மூன்றாம் இடம்...

“ அப்பா.. சட்டசபை தேர்தலில் பாருங்க”
“ தக்காளி... இதுலயே கிழிக்க முடியல..அதுல ஒண்ணும் சாதிக்க மாட்ட... சரி,,, ஒரு போட்டி வைக்க போறேன்.. அதில் ஜெயிப்பவன் தான் அடுத்த தலைவன் “
“ சரிப்பா “
“ இதோ பத்தாயிரம் ரூபாய்.. இதை செலவு செஞ்சு நம்ம வீட்டை நிரப்பணும்... யாரு செய்றாங்களோ அவன் தான் தலைவன்”
“ சரிப்பா “
------------------------------------------
பத்தாயிரம் ரூபாய்க்கும் தலைவரின் நூல்கள் , கட்சி பத்திரிக்கை என வாங்கி வீட்டில் அடுக்கினார் தம்பி.. 80%தான் நிரப்ப முடிந்தது...
அண்ணனிடம் பத்தாயிரம் கொடுத்து விட்டு , தந்தையும் இரண்டாவது மகனும் வெளியே சென்றார்கள்..
அண்ணன் அந்த பத்தாயிரத்தில் ஐந்து ரூபாய் செல்வு செய்து கால் செய்து தன் ஆதரவாளர்கள் சிலரை அழைத்தார்.. ஐந்தாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கினர்
ஒரு மணி நேரம் கழித்து தலைவரும் இரண்டாம் மகனும் வந்தனர்,...
அறை நிரம்பி இருந்தது...!!!!!!
.. அண்னனின் ஆதரவாளர்களின் சிரிப்பால் !!!!!!!!!!!!!!!!!!!!!
***********************************************************************************************

காதலே நிம்மதி
அப்பாடா . அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவனை கொன்று எரித்தாயிற்று .அவன் ஓடிப்போய்விட்டதாக கதையை பரப்பிவிட்டு , கள்ள காதலனை கணவனாக்கி விட வேண்டியதுதான் நினைத்துக் கொண்டாள் அவள் . பள்ளி விட்டு வந்த மகன் கொஞ்ச நேரம் கழித்து தன் அறையில் போய் விட்டான் . காலை . அப்பா ஓடி விட்டதாக சொல்ல வேண்டியதுதான் . அவனே பேச்சை ஆரம்பித்தான் . அம்மா , அப்பாவுடன் ஏதும் சண்டையா ? அதிர்ந்தாள் . ஏண்டா அப்படி கேட்கிற ?
நைட் என் ரூம்ல வந்து தூங்கினாரே . அதுதான் கேட்டேன் .


***********************************************************************************************************************
கல்யாணி என்ன செய்து விட்டாள்....
“ அண்ணா.. நீ ஆயிரம் சொல்லு... அம்மா மாதிரி வராது.. “ என்றாள் கல்யாணி தீர்க்கமாக...
“ அம்மாவை நான் குறைச்சு சொல்லல கல்யாணி.. ஆனா அப்பாவுக்கு நிகர் அப்பாதான் “ என்றான் குணசேகரன்...

“ஒத்துக்கவே முடியாது . அம்மா ஒரு படி மேல் ‘
புன்னகைத்தான் குணா “ வழக்கமா பொண்ணுங்களுக்கு அப்பாதான் பிடிக்கும்னு சொல்வாங்க.. நீ ஏன் எப்படி இருக்க.?. சைக்கலாஜிக்கல் பிராப்ளமா? “
கல்யாணி கோபமாக எழுந்தாள்..
: ராஸ்கல்,,,உனக்குதாண்டா சைக்காலாஜிக்கல் பிராப்ளம்..இல்லைனா டெய்லி அப்பானு அடம் பிடிப்பியா... இன்னிக்கு டின்னர் அம்மாதான்” பேய் போல கத்தியவாறு ஃபிரிஜ்ஜை திறந்தாள்..
உள்ளே இரண்டு மண்டை ஓடுகளும் மாமிச துண்டங்களும் கிடந்தன...
*****************************************************************************************************************
வாக்களிப்பதில் சிரமம் இருந்தால் அலுவலரை அணுக வேண்டும் . அவர் விண்ணப்ப படிவம் தருவார் . அதை நிரப்பி அவரிடம் கொடுக்க வேண்டும் . அவர் மேலதிகாரிக்கு அதை கொடுப்பார் . அதை பரிசீலித்து உதவியாளரை நியமிப்பார் . இதை செய்யாமல் விஜயகாந்துக்கு அவர் மனைவி உதவியது தவறு . தேர்தல் கமிஷன் சட்ட விளக்கம் .
தக்காளி , லுச்சாத்தனமா என்ன பேச்சு? அப்படி விண்ணப்ப படிவம் ஃபில் பண்ற அளவுக்கு தெளிவா இருந்தா , சுயமா ஓட்டு போட்ருப்பாரே?


********************************************************************************************************

மொரிஷியஸ் நாட்டு கரன்சியில் ஆங்கிலத்தில் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டு இருக்கும்..அதன் கீழ் இரண்டாம் இடத்தில் தமிழ் இருக்கும்.. அதன் கீழ் ஹிந்தி 3ஆம் இடத்தில் இருக்கும்... இந்தியர் ஒருவர் அதை பார்த்தாராம்.. ஹிந்திதான்பா அதிகம் பேசப்படும் மொழி...தமிழை தமிழ் நாடு எனும் சின்ன பகுதியில்கூட பேசுவதில்லை..அதற்கு ஏன் இரண்டாம் இடம் என்று சொல்லவே ஹிந்தியை இரண்டாம் இடத்துக்கு கொண்டு போனார்கள்... அங்குள்ள தமிழர்கள் போராடினர்... கரன்சிகளை எரித்தனர்... கோடிக்கணக்கான கரன்சிகள் எரிக்கப்பட்டதால் அரசு பணிந்தது... மீண்டும் தமிழ் பழைய இடம் பெற்றது...

*******************************************************************************************************************

என்னிடம் இருக்கும் கவிதையை கேளுங்கள் , தருகிறேன்
என்னிடம் இருக்கும் புன்னகையை கேளுங்கள் , தருகிறேன்
என்னிடம் இருக்கும் மரணத்தை மட்டும் கேட்காதீர்கள்
அதை என் இனத்துக்காகவும் தமிழுக்காகவும் வைத்திருக்கிறேன்
-அறிவுமதி


***************************************************************************************************************

சங்ககால பன்னி பாடல்ஒரு வீரன் வேட்டை நாய்களோடு பன்றி வேட்டைக்கு போனான் . ஆண்பன்றி பெண்பற்றி அதன் குட்டிகளை பார்த்து மகிழ்ந்தான் . நாய்களை ஏவினான் . ஆண் பன்றி நாய்களை விரட்டி அடித்தது . வீரன் டென்ஷன் ஆகி தானே களம் இறங்கினான் . அம்பை எறிய ஆயத்தமானான் . ஆண் பன்றி தன் குடும்பத்தை தன் பின் நிற்க வைத்து விட்டு அவனுடன் மோத ஆயத்தம் ஆனது . தனக்கு சமமான வீரனை பார்த்த மகிழ்வுடன் வீரன் வேட்டையை நிறுத்திவிட்டு மனநிறைவுடன் கிளம்பினான்

***********************************************************************************************

பென்சிலை சீவும்போது
எனக்கு கேட்கிறது
எங்கோ காடுகள்
முறிந்துவிழும்
சத்தம் -கல்யாண்ஜி


******************************************************************************************************
டீக்கடைகள் மூடப்பட்டதால் என் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்த முடியவில்லை . ஆலயம் போனேன் . நல்ல கூட்டம் . செருப்பை ஓரிடத்தில் விட்டேன் .இப்படி விட்டா ஆட்டய போட்ருலாய்ங்கடா . தனிதனியா பிரிச்சுபோடு . யாரும் எடுக்க மாட்டாய்ங்க்ய என்றான் கூட வந்த அறிவாளி . என் செருப்பை எல்லாம் யாரும் எடுக்க வாய்ப்பில்லை . ஆனாலும் சொன்னபடி செய்தேன் . அவன் கொஞ்ச நேரத்தில் போய் விட்டான் . நான் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பினேன் . ஒரு செருப்பு இருந்தது . இன்னொன்றை எங்கு விட்டேன் ? தெரியவில்லை .கண்டுபிடிக்க முடியவில்லை . ஒற்றை செருப்பை தூக்கி போட்டு வேறு செருப்பு வாங்கினேன் . இன்று அதே கோயில் போனேன் . அந்த ஒற்றை செருப்பு வைத்த இடத்தில் இருந்தது

**********************************************************************************************************************
நான் செய்த பணிகளை , நான் இல்லாமல் மார்க்ஸ் செய்திருப்பார் . ஆனால் அவர் செய்ததை அவரன்றி யாரும் செய்திருக்க முடியாது -எங்கெல்ஸ்

***********************************************************************************************************************
வழவழப்பான தாளில் இருந்த ஆங்கில கில்மா புத்தகத்தை கைமாத்தாக காசு வாங்கி , அந்த காசில் வாங்கினேன் . ஆனால் டிக்ஸ்னரியை பார்த்து படிப்பதற்குள் சுருண்டு சுருங்கி போய் விட்டது மனது . காசு வேஸ்ட் . ஆனால் பூனை , சேவல் போன்றவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை அப்படித்தான் கற்றேன்
******************************************************************************************************************

டிரெய்னில் யாரென்றே தெரியாதவர்களிடம் உடமைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே போவோம் . பெரும்பாலும் ஏமாற்ற மாட்டார்கள் . நம்பிக்கைவைப்பது என்பது இயல்பான தன்மை என இப்படி விளக்குகிறார் ஓஷோ . ஆனால் அறிவு ஜீவிகள் நம்பிக்கை வைப்பதை பலவீனமாக நினைக்கிறார்கள் . ஆன்மிக பாதையில் உலகியல் அறிவுக்கு வேலையில்லை என்கிறார் ஓஷோ

*******************************************************************************************************
வயிற்று பசிதீர்க்க
வராதா என்று ஏங்கி
மழைக்கு அண்ணாந்து
பார்த்த கண்கள் கண்டுகொண்டன
வானம் எல்லை இல்லாதது
-பிரமிள்

******************************************************************************************************

மருத்துவமனை போனேன் . அங்கே ஒரு பெண் . செம சிவப்பு . பிரவுன் கண்கள் . ஷார்ட் அண்ட் ஸ்டைலிஷான கண்கள் . இரட்டை ஆயுதங்கள் போன்ற , ஒரே அளவில் , அழகான அளவான பெண்மை மிளிரும் இரண்டு கன்னங்கள் . இதெல்லாம் ஈர்க்கவில்லை . வலது கன்னத்தில் நியூசிலாந்து மேப் போல அழகாக பழுப்பு நிற மச்சம் . நச் . ரசித்தபடி அமர்ந்திருந்தேன் . இன்னொருவரிடம் அவர் பேசியதில் இருந்து அவர் ஏன் வந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது . அந்த மச்சத்தை நீக்க முடியுமா என கன்சல்ட் செய்ய வந்தாராம் . ஓவியங்களுக்குகூட ரசனை இல்லாமல் போகக்கூடும் என்ற இயற்கையின் விளையாட்டு ஆச்சர்யப்பட வைத்தது

*************************************************************************************************
சில நேரங்களில் , குதூகலமாக இருப்பது பாவத்தை அளிக்கிறது . சில நேரங்களில் , பாவம் செய்வது குதூகலம் அளிக்கிறது -பைரன்

**********************************************************************************************************
ஓஷோ அனைவரையும் கிண்டல் செய்தார் . காந்தி முதல் பாதிரியார்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை . அப்பேற்பட்ட ஓஷோவுக்கே செக் வைத்தவர்தான் யூஜி கிருஷ்ணமூர்த்தி . இவர் ஓஷோவையை கிண்டல் செய்யலானார் . பல சீடர்கள் ஓஷோவிடம் இருந்து கட்சி மாறத்தொடங்கினர் . யாரும் யூஜியிடம் போகக்கூடாது என போர்டு எழுதி வைக்கும் நிலை ஏற்பட்டது . வேறு யாருக்கும் இந்த அளவு ஓஷோ அஞ்சியதில்லை . வல்லவனுக்கு வல்லவன்
*************************************************************************************************************
சமாதியில் அமர்ந்து தியானம் செய்ய நினைத்தேனா ? ஆனாலும் மெல்லிய பயம் . தனிமை . தூரத்து நிலவு . கண் மூடினேன் .யாரோ வருடுவது போல இருந்தது . அந்த இடத்தை போய் யார் தொடப்போகிறார்கள் . பிரமையா பேயா . ஆனாலும் இதமாக இருந்தது . அனுமதித்தேன்ஆனால் .ஆஆ. பேய்க்கு பல் உண்டா . திடுக்கிட்டு விழித்தேன் . பேய் இல்லை . கடி நிற்கவில்லை . எறும்பு . சென்னையில் இருந்தே பயணித்திருக்கிறது . பாவம் . மனித சமாதியில் அதுவும் சமாதி ஆகி விட்டது
********************************************************************************************************************
லவ் பெயிலர் பரிணாம வளர்ச்சி

1980வரை தற்கொலை
1990வரை தாடி வளர்ப்பு
2000 வரை குழந்தைக்கு காதலி பெயர் வைத்தல்
2010 வரை பாஸ்வேர்டுக்கு காதலி பெயரை வைத்தல்
2014 அடுத்த காதலிக்கு முந்தைய காதலி பெயரை வைத்தல்


பெண்கள் எப்பவும் ஒரேமாதிரிதான் . காதலனை பிரிந்த ஒரே ஆண்டில் கல்யாணமாகி குழந்தை பெற்று , மாமாவுக்கு டாட்டா சொல்லு


*************************************************************************************************

இயக்குனர் பாலா பேட்டியில் இருந்து
மனைவி - என் தாய்
மகள் - இன்னொரு தாய்
தந்தை - எனக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு
தோல்வி - என் செருப்பு
போதை - அனுபவித்தது போதும்
கடவுள் -நாம் அனைவரும்


****************************************************************************************************
கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இடதுசாரிகள் என அழைக்கப்படுகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது..ஃபிரஞ்சு புரட்சியின்போதுதான் இந்த சொல் புழக்கத்துக்கு வந்தது..1789ல் ஃபிரெஞ்சு தேசிய அசெம்ப்ளி கூடியபோது , மாற்றத்தை விரும்பாத கன்சர்வேட்டிவ்கள் வலதுபுறம் அமர்ந்து இருந்தனர்...புரட்சிகரமான கருத்து கொண்டோர் இடதுபுறம் அமர்ந்து இருந்தனர்..இபப்டி அமர்வது வழக்கமாகி விட்டதால் காலப்போக்கில் புரட்சியாளர்கள் இடது சாரிகள் என பெயர் பெற்றனர்.. இன்னும் பல நாடுகளில் இடது சாரிகளுக்கு இடது புறமே இருக்கை அளிக்கப்படுகிறது
******************************************************************
சோம்பல் என்பது இனிமையானது என்பார் ஓஷோ . உலகில் எல்லோரும் சோம்பேறியாக இருந்துவிட்டால் உலகப்போருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார் அவர் . நானும் சோம்பேறிதான் . தர்ப்பூசணி வாங்க போனேன் . விலை தெரியவில்லை . சும்மா நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன் . ஓர் அம்மா வந்தார் . கஷ்டப்பட்டு பேரம் பேசி ஒரு விலையை நிர்ணயித்து பழம் வாங்கினார் . அதே விலைக்கு எனக்கும் கொடுங்கள் என கேட்டு வாங்கினேன் . எனர்ஜி சேவ் ஆகி விட்டது
*****************************************************************************************
பைபிள்னா பைபிள்தான்,, மதச்சார்பற்ற கீழ்கண்ட வரிகளை படியுங்கள்... இதை , இரண்டு முதியோர்கள் என்ற கதையில் டால்ஸ்டாய் மேற்கோள் காட்டியுள்ளார்.. இது போன்ற கதைகளை அறிமுகம் செய்து வைத்த முக நூலுக்கு நன்றி
********************************************************************
யோவான் 4:21 முதல் 4:24 வரை
எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டு வந்தனர்.. நீங்களோ ஜெருசலேமில் வழிபட சொல்கிறீர்களே என்றாள் அந்த பெண்.
இயேசு சொன்னார்.. பெண்ணே.. என்னை நம்பு ,,, மலையிலும் ஜெருசலேமிலும் மட்டும் அல்ல.. சகல இடங்களிலும் கடவுளை வழிபடலாம்.. அதற்கான காலம் வந்து கொண்டு இருக்கிறது..
நீங்கள் உங்களுக்கு புரியாததை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள்... நாங்கள் வணங்கப்படுபவரை புரிந்து கொண்டு இருக்கிறோம்..
பிதா உண்மையாகவும் , ஆன்மாவோடும் இருக்கிறார்...தன்னை வணங்குபவர்களும் இப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்...
*************************************************************************************


Saturday, November 1, 2014

ஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகைக்கவைத்தவர்- அவியல்

ஓவிய கண்காட்சி.. ஆதாம் ஏவாள் ஓவியத்தை மூவர் ரசித்துக்கொண்டு இருந்தார்கள்..
பிரிட்டிஷ் ஆள் சொன்னார்... இது கண்டிப்பாக இங்கிலாந்தாகத்தான் இருக்க வேண்டும்.. மரங்கள் , பசுமையை பாருங்கள்... வேறு எங்கும் இப்படி ஒரு காட்டை பார்க்க முடியாது.
நார்வேக்காரர் சொன்னார் : இல்லை... இது நார்வே நாடு...இருவரும் நிர்வாணமாக இருக்கிறார்கள்..ஆனால் அது குறித்த பெருமிதம் இருக்கிறதே தவிர , அசிங்கமாக நினைக்கவில்லை...

கோயிந்தசாமி சொன்னார் : இல்லை.. இது கண்டிப்பாக தமிழ் நாடுதான்... உடுத்த ஆடை இல்லை...உண்ண சாப்பாடு இல்லை.. வசிக்க வீடு இல்லை... வேலை இல்லை...ஆனாலும் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துகொள்கிறார்களே..கண்டிப்பாக அவர்கள் இருவரும் தமிழர்கள்தான்..

******************************************************************

ஒரு கடையில் ஒரு புத்தகம் பார்த்து ஆச்சரியத்தேன்.. தமிழின் முதல் நாவல் என அதில் முன்னுரையில் சொல்லி இருந்தார்கள்...அந்த கால பதிப்பு .. அபூர்வமான புத்தகமாயிற்றே என விலை கேட்டேன். 100 ரூபாய் என்றார் கடைக்காரர்... வழக்கமாக நான் வாங்கும் கடைக்காரரின் மகன் இவர்.. தந்தையாக இருந்தால் டிஸ்கவுண்ட் கேட்கலாம். இவர் டிஸ்கவுண்ட் எல்லாம் இல்லை. மேக்சிமம் ஐந்து ரூபாய் டிஸ்கவுண்ட் என்றார்... இதற்கிடையே அந்த தந்தை வந்து விட்டார்.. மகனிடன் விலை கேட்டார். பிறகு என்னிடம் , அதுதான் சொல்லியாச்சே...ஐந்து ரூபாய் டிஸ்கவுண்ட்..இஷ்டம்னா வாங்கு..இல்லைனா வச்சுட்டு கெளம்பு என்றார். மேக்சிமம் பத்து ரூபாய் டிஸ்கவுண்ட் என்றார்,,
மனதுக்குள் சிரித்து கொண்டேன்... இவர் இப்படி எல்லாம் கடுமையாக பேசி கேட்டதில்லை. இவருக்குள் இப்படி ஒரு கேரக்டரா.. மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என நினைத்தபடி நூறு ரூபாய் கொடுத்தேன்..
அது அபூர்வமான புத்தகம் என்பதால் விலை பற்றி எனக்கு அதிக கவலை இல்லை.. அவர் மிச்ச காசை புத்தகத்தில்யே வைத்து ஒருவித அவசரத்துடன் கொடுத்தார்.. நான் அதை பார்க்க கூட இல்லை.
வெளியே வந்து டீ சாப்பிட அந்த பத்து ரூபாயை பயன்படுத்தலாம் என புத்தகத்தை திறந்தேன்.. உள்ளே இருந்தது , பத்து ரூபாய் அல்ல.. நாற்பது ரூபாய் !!! அவர் தவறிபோய் அப்படி வைக்கவில்லை... 20 ரூபாய்.,ஒரு பத்து ரூபாய்.இரு ஐந்து ரூபாய் நோட்டுகள் என தெரிந்தே வைத்து இருந்தார்.
இதில் காசு என்பது மேட்டர் அல்ல... ஒவ்வொருவரின் அவர்களுக்கே உரிய தர்மம் , அவர்களுக்கே உரிய லாஜிக் , பிரத்தியேக சிந்தனைப்போக்கு, எந்த இடத்தில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் திறன் ( இந்த சம்பவத்தில் தன் மகனை விட எனக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் ) என பல விஷ்யங்களை யோசிக்க வைத்து விட்டது இந்த சின்ன சம்பவம்
,,
***********************************************************
பேச்சாற்றலை வளர்ப்பது குறித்து கலைஞர் ஒரு புத்தகம் எழுதி இருப்பது பலருக்கு தெரியாது..அதில் சுவையான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.
ஒரு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய போய் இருந்தார். தான் பேசுவதை நன்கு கவனித்து எதிர்காலத்தில் பேச வேண்டும் என்றார் வேட்பாளரும் ஒப்புக்கொண்டார்.
கலைஞர் பேசினார் “ எங்களுக்கு வாக்களித்தால் உங்களுக்காக உழைப்போம்.. என்னை பெரிய தலைவன் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. வெகு வெகு சாதாரணமானவன். உங்கள் பிரச்சனைகளை எப்போதும் என் காதுகளுக்கு கொண்டு வரலாம் “ என பேச ஒரே கரகோஷம்.. வேட்பாளர் ஆச்சர்யமாக பார்த்தார்.
அடுத்த கூட்டத்தில் தனக்கு பேச வாய்ப்பு கேட்டார். கொடுக்கப்பட்டது..வேட்பாளர் தைரியமாக பேசினார்.
“ இதோ மேடையில் வீற்றிருக்கும் கலைஞரை பெரிய தலைவர் என நினைக்காதீர்கள். வெகு வெகு சாதாரணமானவர்.. ” பேச்சை ஆரம்பித்தவுடன் கரகோஷம் ஏதும் இன்றி மயான அமைதி நிலவுவதை கண்டு பேச்சை பாதியில் நிறுத்தினாராம்
**************************************************************************

எனக்கு ஏன் தமிழ் பிடிச்சு இருக்குனா , நாம திங்க் பண்றதை ஈசியா கம்யூனிகேட் பண்ண பொருத்தமான லாங்குவேஜ் தமிழ்தான் - பண்பலை வானொலி பாறைகள்
********************************************************

ஒருவர் எனக்கு முக நூலில் ரொம்ப நாள் பழக்கம்.. தன்னை தலித் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒருவர் தலித் என்பதற்காக அவரிடம் தலித்திய சிந்தனைகளை மட்டுமே பேசுவது என் இயல்பு அன்று. பொதுவாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் விஷ்யங்களையே அவரிடமும் பகிர்வேன். அதில் சில தலித்திய சிந்தனைகளும் அடங்கும். ஆனால் அவர் அதில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார். பண்டை தமிழரின் பொறியியல் ஞானம் குறித்து எழுதி இருந்தேன் அல்லவா.. அதைப்படித்து விட்டு , இஞ்சினியரிங்கில் நீங்கள் எந்த பிரிவு படித்தீர்கள் என கேட்டார்..மெக்கானிக்கல் என்றேன்.. அட,,அப்ப நீங்க என்னை மாதிரி தலித்தா என்றார்.. தக்காளி. மெக்கானிக்கலுக்கும் தலித்துக்கும் என்ன சம்பந்தம் என்றேன்.. ஆமா ,..ஐடி காரய்ங்க நம்மை மதிக்கிறதில்லை.. ஒடுக்குக்கிறார்கள்..அதுனால் இதுவும் தலித் தானே..என்றார்..ங்கொய்யால...சில ஃபேக் எழுத்தாளர்கள்தான் தலித் என சொல்லிக்கொண்டு உண்மையான தலித்துகளை ஏமாற்றுகிறார்கள் என்றால் , இது வேறையா என நினைத்துக்கொண்டேன்..

*************************************************
டெல்லியில் சைக்கிள் ரிக்‌ஷாக்களை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.. ஆனால் அதில் பயணிப்பதில் சிறு குழப்பம் உண்டு.. ஒருவர் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டும்போது நாம் சுகமாக அமர்ந்து இருப்பதை மன சாட்சி கண்டிக்கும். ஆனால் அவர்களை நாமும் புறக்கணித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தோன்றும். ஒரு முறை நான் செல்ல வேண்டிய இடம் சொன்னேன்.. ரிக்‌ஷா சாரதி நூறு ரூபாய் கேட்டார். எனக்கு தெரிந்த ஹிந்தியில் பேரம் பேசி அறுபது ரூபாய்க்கு ஒத்துக்கொள்ள வைத்தேன். இல்லை என்றால் ஆட்டோவில் போவேன் என மிரட்டியதால் பணிந்து விட்டார். அந்த வெயிலில் அவர் ரிக்‌ஷாவை மிதிப்பதை பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. மேடான பகுதியில் இறங்கி தள்ளுவார். கொட்டும் வியர்வையை துடைத்தபடி , சில கதைகளை எனக்கு புரியும்விதத்தில் சொல்லியவாறு நான் போக வேண்டிய இடத்தில் விட்டார். நான் பேசியது அறுபது ரூபாய் என்றால் நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு ( அது நியாயமான தொகைதான் ) கிளம்பினேன்.. தற்செயலாக திரும்பி பார்த்தேன்.. அவர் அந்த காசை மகிழ்ச்சி கலந்த சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது இதுதானோ என நினைத்துக்கொண்டேன்
******************************************************************
மொரிஷியஸ் நாட்டு கரன்சியில் ஆங்கிலத்தில் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டு இருக்கும்..அதன் கீழ் இரண்டாம் இடத்தில் தமிழ் இருக்கும்.. அதன் கீழ் ஹிந்தி 3ஆம் இடத்தில் இருக்கும்... இந்தியர் ஒருவர் அதை பார்த்தாராம்.. ஹிந்திதான்பா அதிகம் பேசப்படும் மொழி...தமிழை தமிழ் நாடு எனும் சின்ன பகுதியில்கூட பேசுவதில்லை..அதற்கு ஏன் இரண்டாம் இடம் என்று சொல்லவே ஹிந்தியை இரண்டாம் இடத்துக்கு கொண்டு போனார்கள்... அங்குள்ள தமிழர்கள் போராடினர்... கரன்சிகளை எரித்தனர்... கோடிக்கணக்கான கரன்சிகள் எரிக்கப்பட்டதால் அரசு பணிந்தது... மீண்டும் தமிழ் பழைய இடம் பெற்றது...
**************************************************************************************
காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்,,, நன்கு பழகுவாள்...புத்திசாலிப்பெண்... நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்..
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது... என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் ... அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் அவள் மேல் கொட்ட வேண்டும் என்பது போன்ற ஓர் உணர்வு... அவளது தாயாக நான் மாறியது போன்ற உணர்வு... அவள் தாய் அழைப்பது போல டிங்கு என அழைத்து விட்டேன்.. ஒரு கணத்தில் சுதாரித்து கொண்டேன்... டிங்கு..ம்ம்..இந்த பேருக்கு என்னமா அர்த்தம் என கேஷுவலாக கேட்பது போல மாற்றிக்கொண்டேன்..

அவள் முகம் சிவந்து விட்டது,, bye என சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்...
என்ன தப்பு செய்தேன்..இப்படி அவள் கோபித்ததே இல்லையே..அவமானமாக இருந்தது... நானே ஈகோவை விட்டு பேசினேன்..
என்ன ஆச்சு.
அந்த பேரை அப்பாவை தவிர வேற யார் யூஸ் செஞ்சாலும் பிடிக்காது என்றாள்...
அடடா..அந்த பேர்ல நான் கூப்பிடல... அதுக்கு அர்த்தம்தான் கேட்டேன் என சொல்லி ஓரளவு சமாதானம் செய்தேன்..
அவள் அப்பா போல நான் அவளை கவனிக்க முடியாது... அவள் அப்பாவுக்கு மாற்றும் ஆக முடியாது..அது என் ஆசையும் இல்லை...சாத்தியமும் இல்லை..
நான் ஒரு சாதாரண பிச்சைக்கார நாய்..
ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் காட்டிய அன்பை உலகில் யாரும் காட்டி இருக்கவும் முடியாது... இனி காட்டவும் முடியாது...
அந்த அன்பை அவளது இதயம் எப்படியோ உணர்ந்து விட்டது என்பதாலேயே அந்த கோபம் என புரிந்தது... ஆழ் மனதில் தன் தந்தையுடன் போட்டி போடுகிறேன் என்ற எண்ணம் வந்து இருக்க கூடும்..
என்றாவது ஒரு நாள் இந்த சம்பவத்தை அவள் நினைத்து பார்க்கலாம்.. அல்லது மறந்து போகலாம்.. ஆனால் அவள் இதயம் அதை அன்று புரிந்து கொண்டு விட்டது என்பதில் மகிழ்ச்சி..
***********************************************************************
இன்றைய சிறந்த போஸ்ட் 
********************************************
கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று 
ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியிருக்கிறாரே?
கலைஞர் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?
*************************************************

நான் ஒரு டுபாக்கூர் என நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.. நுனிப்புல் மேய்பவன்... உதாரணமாக ஆலயம் செல்வதால் ( பிராசதத்துக்காக ) , நாத்திகாவதிகள் என்னை ஏற்பதில்லை... சும்மா சைட் அடிப்பது க்யூவில் இரண்டு முறை போய் பிரசாதம் வாங்குவது போன்றவற்றல் ஆத்திகர்களும் என்னை ஏற்பதில்லை..
இன்று காலை கோயிலில் ஓர் அனுபவம்..அருகில் பார்வை அற்றவர் ஒருவர் சாமி கும்பிட வந்திருந்தார்.. சின்ன சின்ன உதவிகள் செய்தேன்... சார்,, ஆராதானை காட்டும்போது சொல்லுங்க என்றார்... காட்டினால் என்ன காட்டாவிட்டால் இவருக்கு என்ன என சற்று சாடிஸ்தனமாக நினைத்து அடுத்த கணமே அந்த நினைப்பை அழித்தேன்...

சாமிக்கு தீப ஆராதானை காட்டும்போது அவரிடம் சொன்னேன்..சாமி இருந்த திசையில் கும்பிட்டார்..முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..மகிழ்ச்சி...ம்ம்... நமக்கு தெரியாத ஏதோ ஒன்று அவருக்கு தெரிகிறது போல என நினைத்து கொண்டேன்...



பாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர் இன்னபிற- அவியல்


அந்த தம்மாத்தூண்டு பெயர் பலகை என் கவனத்தை கவர்ந்தது.. பேருந்து ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று கொண்டு இருந்தபோது , பஞ்சர் கடை ஒன்றை பார்த்தேன்..மரத்தடி..சிறிய தடுப்பு..அதன் முன் பெயர் பலகை... ரேடியோவில் பாட்டுக்கேட்டபடி மெக்கானிக் ஹாயாக அந்த கணத்தை வாழ்ந்து கொண்டு இருந்தார்...
முருகன் மெக்கானிக் கடை என் பெயர் பலகை அதற்கு கீழே சப் டைட்டில் போல இன்னொரு சதுர வடிவ பலகை...
அதில் சாக்பீசால் இப்படி எழுதி இருந்தது.
உழைப்பே உயர்வு தரும்
இங்கு பஞ்சர் போடப்படும்... டீவீலருக்கும் காருக்கும் வேலை செய்யப்படும்..
வெளி இடங்களுக்கு கூப்பிடாதீர்கள்..தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்... விவாதம் வினையில் முடியும்... சரியான கருத்து என்றால் நீங்கள் அதை நிரூபிக்க தேவை இல்லை..தவ்றான கருத்து என்றால் விவாதத்தில் நுழைய வேண்டியதே இல்லை.ஞாயிறும் பஞ்சர் போடப்படும்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... மரங்களை பாதுகாப்போம்...
இப்படி நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.. யாரும் படிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இப்படி எழுதி இருப்பது ஆச்சர்யம் அளித்தது...சுவராஸ்யமான ஆளாக இருப்பார் போலயே, ஒரு மொக்கையை போடலாமா என நினைத்தேன்.. பஸ் கிளம்பி விட்டது...
************************************************************************************************************
பாலா குறித்து பாலு மகேந்திரா !!
உங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே?''
'நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா!'
''உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா?''
'Forgive and you shall be forgiven' என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.
ஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
என்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
என் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்!
***********************************************************************************************************************
பொது இடங்களில் நம் லேப்டாப்பை ஓப்பன் செய்தால் , எல்லோருமே ஆர்வமாக அதை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்... எனவே பாஸ் வோர்ட் அடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அராத்து முன்பு ஒரு முறை சொல்லி இருந்தார்... வேண்டுமென்றே தவறாக அடித்து , பிறகு பேக்ஸ்பேஸ் சென்று மாற்றினால் குழம்பி விடுவார்கள் என்பது அவர் ஐடியா.
சமீபத்தில் திருச்சி போய் இருந்தேன் அல்லவா.. கார்டை மறந்து விட்டேன்.. காசு கொஞ்சம்தான் இருந்தது...சரி, ஆன் லைனில் புக் செய்யலாம் என நினைத்து , பொது இடம் ஒன்றில் அமர்ந்து லாப் டாப் ஆன் செய்தேனோ இல்லையோ, எல்லோரும் அதை காண கூடி விட்டனர்..
அவர் சொன்ன யுக்தியை பயன்படுத்தி தப்பாக அடிப்பது போல போக்கு காட்டி , மீண்டும் சரியாக அடித்தேன்...இன்கரக்ட் பாஸ் வோர்ட் என வந்தது..
கரக்ட் செய்வதில் தப்பு போல என நினைத்தவாறு மீண்டும் அடித்தேன்..மீண்டும் இன்கரக்ட்...
ங்கொய்யால... டென்ஷன் ஆகி விட்டது.. நிதானமா அடிங்க சார் என்றார் ஒரு பார்வையாளர்..
அது ஒரு பொது பிரச்சனையாகி விட்டதே என நினைத்தவாறு இந்த முறை ட்ரிக் எதுவும் செய்யாமல் அடித்தேன்... மீண்டும் இன்கரட்..கார்ட் பிளாக் ஆகி விட்டது..
சுற்றி இருந்த எல்லோரும் ஏமாற்ற பெருமூச்சு விட்டனர்,,
அதை பார்த்து எனக்கு எரிச்சல் பெருமூச்சு வந்தது..
தமிழில் அடித்து விட்டு , ஆங்கிலத்துக்கு மாற்றாமல் அப்படியே அடித்ததுதான் பிரச்சனை போல.. டென்ஷனில் கவனிக்கவில்லை
யாராவது லேப் டாப் ஓப்பன் செய்தால் , இப்படி சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்
— feeling எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.
**********************************************************************************************************
சேரன் பாண்டியன் படத்தில் கவுண்டமணிக்கு யாரோ வாட்ச் வாங்கி கொடுத்து விடுவார்கள்... அவர் அதை கட்டிக்கொண்டு , யாராவது டைம் கேட்டு மானத்தை வாங்கி விடுவார்களோ என பயந்து கொண்டே செல்வார்.. காரணம் அவருக்கு மணி பார்க்க தெரியாது...அது போல , சிலர் என்னிடம் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை ஓரிரு வரிகளில் விளக்குங்கள் என கேட்டு அதிர்ச்சி அளிப்பதுண்டு...இது போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் அளிப்பவர் நண்பர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன் .. கேட்டு பலன் பெறுங்கள்
*****************************************************************************************************
தட்காலில் புக் செய்து திருச்சி போய்க்கொண்டு இருந்தேன்... செக்கிங் வரும்போதுதான் , உரிய ஐடி ஆவணம் என்னிடம் இல்லாதது தெரிந்தது... உரிய ஐடி இல்லை என்றாலும் வேறு சில இருந்தன....
எனவே வழக்கம்போல , நம் பாணியில் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தேன்...
அவர் மசியவில்லை...ஃபைன் கட்டியே ஆக வேண்டும் என்றார்...
என் பொது வாழ்க்கையில் பேச்சு வார்த்தைக்கு மசியாத டிடிஆரை சந்தித்தது இதுவே முதல் முறை..
வெகு நேரம் பேசிய பின் , கடைசியில் வார்ன் செய்து அனுப்பி விட்டார்.. ( அந்த நபர் நான் தான் என நிரூபிக்க வேறு சில ஆவனங்கள் இருந்ததால் - ரயில்வே அங்கீகரிக்காதவை..ஆனால் உண்மையானவை)
பத்து பைசா கூட வாங்கவில்லை...
இனி வருங்காலத்தில் எப்போதாவது லஞ்சம் கொடுக்க முயன்றால் சிவியராக நடந்து கொள்வேன் என்றும் சொன்னார்...
அவர் சற்று கடுமையாக நடந்து கொண்டாலும், குடியரசு தினத்தன்று நேர்மையான ஒருவரை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது
*******************************************************************************
சன் டீவியில் சீனா வானொலியில் பணி புரியும் கலை மகளை நம் மக்கள் பேட்டி எடுத்தனர்,.... அவருக்கு தூய தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் , நம் மக்கள் பேசும் ”பண்ணி தமிழ் ” அவருக்கு சரியாக பிடிபடவில்லை... உதாரணமாக உங்களை மீட் பண்ணுவதில் , டாக் பண்ணுவதில் மகிழ்ச்சி என்பது பிடிபடவில்லை.... சந்திப்பதில் பேசுவதில் மகிழ்ச்சி என மொழி பெயர்த்ததும் புரிந்து கொண்டார்.
அது போல , ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றாம் (1963 ) ஆம் ஆண்டு என அவர் சொல்வது நம் ஆட்களுக்கு புரியவில்லை... நைண்ட்டீன் சிக்ஸ்ட்டி த்ரீ என ”மொழி பெயர்த்து” புரிந்து கொண்டார்கள்...
தமிழ் பாறைகள் !!!!!
****************************************************************************
அருகி வருகிறது என்ற வார்த்தை வாக்கிய பயன்பாடு அருகி வருவதை யாரேனும் கவனித்தீர்களா?
******************************************************************************


Friday, October 31, 2014

ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணர்ந்த கணம்

ஒரு மொண்ணை தன்னை  மொண்ணை என  உணரும்போது , உலகில் ஒரு மொண்ணையின் எண்ணிக்கை  குறைகிறது..


அந்த காலத்தில் கைகளால் தண்ணீர் எடுத்து பருகி வந்தனர். ஒரு நாள் குவளை கண்டுபிடிக்கப்பட்டது..  வீணாகாமல் குடிக்க முடிந்தத்தால் குவளை பிரபலம் ஆனது. காலப்போக்கில் குவளை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது.. ஆடம்பரமான குவளைகள் , குடிப்பதற்கான வழி முறைகள் , அதை சொலித்தரும் நிறுவனங்கள் என வளர்ந்தன..  தண்ணீர் குடிப்பதை விட குவளையே முக்கியமாக போனது..  குடிக்க தேவை இல்லாதபோது குவளையில் எதையாவது ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.

ஒருவன் இதையெல்லாம் பார்த்து சுஸ்த்தாகி விட்டான். இனி குவளை வேண்டாம் , சுடுகாட்டில் கிடைக்கும் மண்டையோட்டை பொறுக்கி வந்து அதில்தான் இனி குடிப்பேன் என ஆரம்பித்தான்.. அவனை  எல்லா மொண்ணைகளும் கிண்டல் செய்தனர்... அவன் பயப்படவில்லை..

அப்போது இன்னொருவன் வந்தான்.

” தம்பி நீ செய்வதை வரவேற்கிறேன். குவளையின் மீதான மூடத்தனமாக ஈர்ப்பை மறக்க செய்ய இது நல்ல வழி “ என்றான்.

“ அப்பாடா.. என்னை நீயாவது புரிந்து கொண்டாயே”

“ ஆமா. சரி.. ஆனா இப்படி மண்டை ஓட்டை தப்பு தப்பாக பயன்படுத்தக்கூடாது..   குறிப்பிட்ட அளவு , குறிப்பிட்ட வயது , குறிப்பிட்ட நிறம் கொண்ட மண்டை ஓடுதான் பயன்படுத்த வேண்டும் என விதி கொண்டு வர வேண்டும். 99 நாட்கள் குவளையில் இருந்து விடுதலை என்ற சவாலை ஏற்க தயாரா என அவர்கள் ஈகோவை தூண்டிவிட்டு, எல்லோரையும் இதற்கு மாற்ற வேண்டும் ..எப்பூடீ ? “ 

திகைத்தான் நம் ஆள்..

” ஒரு மொண்ணைத்தனத்தில் இருந்து இன்னொரு மொண்ணைத்தனத்துக்கு மாறுவது நிஜமான மாற்றம் அன்று “ என்றபடி மண்டை ஓட்டை எறிந்துவிட்டு , கைகளால் நீரை பருக ஆரம்பித்தான்..

போஸ்ட் ஆஃபிஸ் நினைவுகள் - அழியும் கலை

போஸ்ட் கவர் வாங்க தபால் நிலையம் போனேன்..  அந்த காலத்தில் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸ் கூட்டத்தால் நிரம்பி வழியும்.  பேனா ஓசி கேட்பவர்கள் , அட்ரஸ் எழுதி தந்து உதவுபவர்கள் , விண்ணப்ப்ப படிவ நிரப்புதல் நிபுணர்கள் என சில “ கலைஞர்கள் “ ( இப்போது அவர்கள் வழக்கொழிந்து விட்டார்கள் )  அங்கு இருப்பார்கள். 4.15க்க்கு கடைசியாக தபால் பெட்டி திறக்கப்படும் பட்சத்தில்  , 4.30க்கு போஸ்ட் செய்தால் ,  அடுத்த நாள்தான் எடுக்கப்படும். இதை லாகவமாக கணக்கிட்டு , தபால் பெட்டியில் போடாமல் நேரடியாக அதற்கான அலுவலரிடம் லெட்டரை கொடுத்து விட்டு வருவது அந்த காலத்தில் சாமர்த்தியமான விஷயமாக கருதப்படும்.

    இப்போது நான் சந்தித்த சில சிறுவர்களிடம் தபால் பெட்டியை பார்த்திருக்குறார்களா என ஆய்வு நடத்தினேன். பலர் பார்த்தது இல்லை. சிலர் வீட்டு மின் வைக்கப்பட்டு இருக்கும் கடிதபெட்டிகளை , தபால் பெட்டி என நினைத்ததும் தெரியவந்தது.  தபால் பெட்டி என்பது தபால் நிலையத்தில் மட்டும் இருக்காது.. ஆங்காங்கு இருக்கும் ,  நம் ஏரியாவில் எங்கு இருக்கிறது என தெரிந்து வைத்திருப்பது அந்த கால சிறுவர்களின் அவசிய தேவையாகும் .  பெரியவர்கள் ஏதாவது எழுதி , ஓடிப்போய் போஸ்ட் செஞ்சுட்டு வாப்பா என சிறுவர்களைத்தான் அனுப்புவார்கள்.   இன்றைய சிறுவர்களுக்கு அப்படி போஸ்ட் செய்த அனுபவம் இல்லை. அதேபோல லெட்டர் என்பதன் அனுபவம் இல்லாத பெரியவர்களும் உண்டு ..  பிறந்த ஊரிலேயே படித்து வேலையும் பெற்று இருப்பார்கள்.   எனவே கடிதம் எழுத வாய்ப்பு இருந்து  இருக்காது.  வேலைக்கு செல்லும்போது , கைபேசி , இணையம் என வந்து இருக்கும் . எனவே லெட்டர் என்பதே அவர்கள் வாழ்க்கையில் இருந்திராது.

 வெளியூரில் படித்தவர்களுக்கு வீட்டில் இருந்து எழுதுவார்கள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது நண்பர்கள் எழுதுவார்கள்.  இணையம் வந்தவுடன் இந்த தேவை அகன்று விட்டது.

அன்புள்ள , அன்புடையீர் , நலம் நலமறிய ஆவல் என ஒவ்வொருவரும் ஒவொரு “ நடை “ யை பின்பற்றுவதை கவனிப்பது சுவையாக இருக்கும். ஏன் இப்பெல்லாம் லெட்டரே போடறது இல்லை என கேட்பதும் , பதில் போடாததற்கு சண்டை போடுவதும் இப்போது  நகைச்சுவையாக தோன்றலாம்.

போஸ்ட் ஆஃபிசுக்கு கவர் வாங்க போனபோது இந்த நினைவுகள் வந்தன. ஆனால் அந்த போஸ்ட் ஆஃபிசில் கவர் இருப்பு இல்லை.  ஒரு சராசரி மனிதன் இதை கேட்டவுடன் உடனே கொரியரை நாடுவான்.  அடுத்த முறையும் கொரியரே செல்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமான தபால் துறை வாடிக்கையாளரை இழந்து ஒரு கட்டத்தில் தந்தியை போன்ற முடிவை சந்திக்கலாம்.  அதன் பின் கொரியர் நிறுவனங்களும் , அலைபேசி சேவை நிறுவனங்களும் இஷ்டத்துக்கு கொள்ளை அடிக்கும்.

சதுரங்க வேட்டை ஹீரோ போல ஒருவர் அமெரிக்காவில் உண்மையாக வாழ்ந்தார். அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  அதில் அவர் ஒன்று சொல்கிறார்.

மக்களை ஏமாற்றுவது மிக எளிது.  கேள்வி கேட்பவர்களை ஏமாற்ற முடியாது. ஆனால் நம் மக்கள் பதில் சொல்வதிதான் ஆர்வமாக இருக்கிறார்கள் . இவர்களை ஏமாற்றுவது மிக எளிது என்பதால் எனக்கு அது போரடித்து அதில் இருந்து விலகி விட்டேன் என்கிறார்.


இலவச எஸ் எம் எஸ் ,  இலவச நெட் என்றெல்லாம் ஆசை காட்டி அலைபேசியை மக்களுக்கு பழக்கி விட்டு , இப்போது அவர்கள் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து இருப்பது நம் மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.  சேவைக்கு காசு வாங்கத்தானே செய்வார்கள் என அவர்கள் சார்பாக இவர்களே பதில் சொல்கிறார்கள்.

தகவல் தொடர்புக்கு இணையம் நல்ல வழிதான். ஆனால் நாம் அதற்கு அடிமையாகபோனால் , ஒரு கட்டத்தில் இணைய சேவை நிறுவனங்களும் நம்மை ஆதிக்கம் செய்யத்தான் நினைக்கும்.

எனவே போஸ்ட் கவர் அங்கு இல்லாவிட்டால் பரவாயில்லை என இன்னொரு தபால் நிலையம் சென்று கவர் வாங்கினேன். கிராமங்களிலும் , புற நகர் பகுதிகளிலும் இன்னும் தபால் நிலையங்கள் உயிர்ப்புடன் உள்ளன. சென்னை நகரத்திலும்கூட  தபால் சேவையை பலர் பயன்படுத்துவதை காண மகிழ்ச்சியாக இருந்தது. ஊழியர்கள் கனிவுடன் பேசி சேவை அளிப்பது கூடுதல் மகிழ்ச்சி.  முகவரி முழுமையாக இல்லாவிட்டாலும்கூட எப்படியாவது போய் சேர்ந்து விடுகிறது. கொரியரில் இதை எதிர்பார்க்க முடியாது.

வட மானில கிராமங்கள் . எல்லைப்புற மானிலங்களுக்கு என் அலுவலகத்தில் இருந்து பொருட்களையோ கடிதங்களோ அனுப்பும்போது  ஸ்பீட் போஸ்ட்டையே பயன்படுத்துவோம். காரணம் கொரியர் நிறுவனங்கள் சேவை அங்கு இருக்காது.   மற்ற இடங்களில் கிடைக்கும் லாபத்தை வைத்து சில இடங்களில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என தபால் துறை செயல்பட்டு வருகிறது.   கொரியர் நிறுவங்களோ வசதியான இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.  இப்படி லாபம் பறிபோனால் , தபால் துறையும் சில சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். ஏழைகளும் , கிராமவாசிகளும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதம்....

Dear Modi ji... 

The idea of using radio to communicate with people is great Similarly using postal services also should be encouraged. one can communicate from kashmir to kanyakumari with just a 50 paise post card. But many people now a days not aware of this and they are depending on private sector for communication. Gradually it will kill postal services which will affect rural people. new services and awareness programmes are need of hour for postal department.







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா