Saturday, November 1, 2014

ஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகைக்கவைத்தவர்- அவியல்

ஓவிய கண்காட்சி.. ஆதாம் ஏவாள் ஓவியத்தை மூவர் ரசித்துக்கொண்டு இருந்தார்கள்..
பிரிட்டிஷ் ஆள் சொன்னார்... இது கண்டிப்பாக இங்கிலாந்தாகத்தான் இருக்க வேண்டும்.. மரங்கள் , பசுமையை பாருங்கள்... வேறு எங்கும் இப்படி ஒரு காட்டை பார்க்க முடியாது.
நார்வேக்காரர் சொன்னார் : இல்லை... இது நார்வே நாடு...இருவரும் நிர்வாணமாக இருக்கிறார்கள்..ஆனால் அது குறித்த பெருமிதம் இருக்கிறதே தவிர , அசிங்கமாக நினைக்கவில்லை...

கோயிந்தசாமி சொன்னார் : இல்லை.. இது கண்டிப்பாக தமிழ் நாடுதான்... உடுத்த ஆடை இல்லை...உண்ண சாப்பாடு இல்லை.. வசிக்க வீடு இல்லை... வேலை இல்லை...ஆனாலும் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துகொள்கிறார்களே..கண்டிப்பாக அவர்கள் இருவரும் தமிழர்கள்தான்..

******************************************************************

ஒரு கடையில் ஒரு புத்தகம் பார்த்து ஆச்சரியத்தேன்.. தமிழின் முதல் நாவல் என அதில் முன்னுரையில் சொல்லி இருந்தார்கள்...அந்த கால பதிப்பு .. அபூர்வமான புத்தகமாயிற்றே என விலை கேட்டேன். 100 ரூபாய் என்றார் கடைக்காரர்... வழக்கமாக நான் வாங்கும் கடைக்காரரின் மகன் இவர்.. தந்தையாக இருந்தால் டிஸ்கவுண்ட் கேட்கலாம். இவர் டிஸ்கவுண்ட் எல்லாம் இல்லை. மேக்சிமம் ஐந்து ரூபாய் டிஸ்கவுண்ட் என்றார்... இதற்கிடையே அந்த தந்தை வந்து விட்டார்.. மகனிடன் விலை கேட்டார். பிறகு என்னிடம் , அதுதான் சொல்லியாச்சே...ஐந்து ரூபாய் டிஸ்கவுண்ட்..இஷ்டம்னா வாங்கு..இல்லைனா வச்சுட்டு கெளம்பு என்றார். மேக்சிமம் பத்து ரூபாய் டிஸ்கவுண்ட் என்றார்,,
மனதுக்குள் சிரித்து கொண்டேன்... இவர் இப்படி எல்லாம் கடுமையாக பேசி கேட்டதில்லை. இவருக்குள் இப்படி ஒரு கேரக்டரா.. மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என நினைத்தபடி நூறு ரூபாய் கொடுத்தேன்..
அது அபூர்வமான புத்தகம் என்பதால் விலை பற்றி எனக்கு அதிக கவலை இல்லை.. அவர் மிச்ச காசை புத்தகத்தில்யே வைத்து ஒருவித அவசரத்துடன் கொடுத்தார்.. நான் அதை பார்க்க கூட இல்லை.
வெளியே வந்து டீ சாப்பிட அந்த பத்து ரூபாயை பயன்படுத்தலாம் என புத்தகத்தை திறந்தேன்.. உள்ளே இருந்தது , பத்து ரூபாய் அல்ல.. நாற்பது ரூபாய் !!! அவர் தவறிபோய் அப்படி வைக்கவில்லை... 20 ரூபாய்.,ஒரு பத்து ரூபாய்.இரு ஐந்து ரூபாய் நோட்டுகள் என தெரிந்தே வைத்து இருந்தார்.
இதில் காசு என்பது மேட்டர் அல்ல... ஒவ்வொருவரின் அவர்களுக்கே உரிய தர்மம் , அவர்களுக்கே உரிய லாஜிக் , பிரத்தியேக சிந்தனைப்போக்கு, எந்த இடத்தில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் திறன் ( இந்த சம்பவத்தில் தன் மகனை விட எனக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் ) என பல விஷ்யங்களை யோசிக்க வைத்து விட்டது இந்த சின்ன சம்பவம்
,,
***********************************************************
பேச்சாற்றலை வளர்ப்பது குறித்து கலைஞர் ஒரு புத்தகம் எழுதி இருப்பது பலருக்கு தெரியாது..அதில் சுவையான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.
ஒரு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய போய் இருந்தார். தான் பேசுவதை நன்கு கவனித்து எதிர்காலத்தில் பேச வேண்டும் என்றார் வேட்பாளரும் ஒப்புக்கொண்டார்.
கலைஞர் பேசினார் “ எங்களுக்கு வாக்களித்தால் உங்களுக்காக உழைப்போம்.. என்னை பெரிய தலைவன் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. வெகு வெகு சாதாரணமானவன். உங்கள் பிரச்சனைகளை எப்போதும் என் காதுகளுக்கு கொண்டு வரலாம் “ என பேச ஒரே கரகோஷம்.. வேட்பாளர் ஆச்சர்யமாக பார்த்தார்.
அடுத்த கூட்டத்தில் தனக்கு பேச வாய்ப்பு கேட்டார். கொடுக்கப்பட்டது..வேட்பாளர் தைரியமாக பேசினார்.
“ இதோ மேடையில் வீற்றிருக்கும் கலைஞரை பெரிய தலைவர் என நினைக்காதீர்கள். வெகு வெகு சாதாரணமானவர்.. ” பேச்சை ஆரம்பித்தவுடன் கரகோஷம் ஏதும் இன்றி மயான அமைதி நிலவுவதை கண்டு பேச்சை பாதியில் நிறுத்தினாராம்
**************************************************************************

எனக்கு ஏன் தமிழ் பிடிச்சு இருக்குனா , நாம திங்க் பண்றதை ஈசியா கம்யூனிகேட் பண்ண பொருத்தமான லாங்குவேஜ் தமிழ்தான் - பண்பலை வானொலி பாறைகள்
********************************************************

ஒருவர் எனக்கு முக நூலில் ரொம்ப நாள் பழக்கம்.. தன்னை தலித் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒருவர் தலித் என்பதற்காக அவரிடம் தலித்திய சிந்தனைகளை மட்டுமே பேசுவது என் இயல்பு அன்று. பொதுவாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் விஷ்யங்களையே அவரிடமும் பகிர்வேன். அதில் சில தலித்திய சிந்தனைகளும் அடங்கும். ஆனால் அவர் அதில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார். பண்டை தமிழரின் பொறியியல் ஞானம் குறித்து எழுதி இருந்தேன் அல்லவா.. அதைப்படித்து விட்டு , இஞ்சினியரிங்கில் நீங்கள் எந்த பிரிவு படித்தீர்கள் என கேட்டார்..மெக்கானிக்கல் என்றேன்.. அட,,அப்ப நீங்க என்னை மாதிரி தலித்தா என்றார்.. தக்காளி. மெக்கானிக்கலுக்கும் தலித்துக்கும் என்ன சம்பந்தம் என்றேன்.. ஆமா ,..ஐடி காரய்ங்க நம்மை மதிக்கிறதில்லை.. ஒடுக்குக்கிறார்கள்..அதுனால் இதுவும் தலித் தானே..என்றார்..ங்கொய்யால...சில ஃபேக் எழுத்தாளர்கள்தான் தலித் என சொல்லிக்கொண்டு உண்மையான தலித்துகளை ஏமாற்றுகிறார்கள் என்றால் , இது வேறையா என நினைத்துக்கொண்டேன்..

*************************************************
டெல்லியில் சைக்கிள் ரிக்‌ஷாக்களை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.. ஆனால் அதில் பயணிப்பதில் சிறு குழப்பம் உண்டு.. ஒருவர் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டும்போது நாம் சுகமாக அமர்ந்து இருப்பதை மன சாட்சி கண்டிக்கும். ஆனால் அவர்களை நாமும் புறக்கணித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தோன்றும். ஒரு முறை நான் செல்ல வேண்டிய இடம் சொன்னேன்.. ரிக்‌ஷா சாரதி நூறு ரூபாய் கேட்டார். எனக்கு தெரிந்த ஹிந்தியில் பேரம் பேசி அறுபது ரூபாய்க்கு ஒத்துக்கொள்ள வைத்தேன். இல்லை என்றால் ஆட்டோவில் போவேன் என மிரட்டியதால் பணிந்து விட்டார். அந்த வெயிலில் அவர் ரிக்‌ஷாவை மிதிப்பதை பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. மேடான பகுதியில் இறங்கி தள்ளுவார். கொட்டும் வியர்வையை துடைத்தபடி , சில கதைகளை எனக்கு புரியும்விதத்தில் சொல்லியவாறு நான் போக வேண்டிய இடத்தில் விட்டார். நான் பேசியது அறுபது ரூபாய் என்றால் நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு ( அது நியாயமான தொகைதான் ) கிளம்பினேன்.. தற்செயலாக திரும்பி பார்த்தேன்.. அவர் அந்த காசை மகிழ்ச்சி கலந்த சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது இதுதானோ என நினைத்துக்கொண்டேன்
******************************************************************
மொரிஷியஸ் நாட்டு கரன்சியில் ஆங்கிலத்தில் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டு இருக்கும்..அதன் கீழ் இரண்டாம் இடத்தில் தமிழ் இருக்கும்.. அதன் கீழ் ஹிந்தி 3ஆம் இடத்தில் இருக்கும்... இந்தியர் ஒருவர் அதை பார்த்தாராம்.. ஹிந்திதான்பா அதிகம் பேசப்படும் மொழி...தமிழை தமிழ் நாடு எனும் சின்ன பகுதியில்கூட பேசுவதில்லை..அதற்கு ஏன் இரண்டாம் இடம் என்று சொல்லவே ஹிந்தியை இரண்டாம் இடத்துக்கு கொண்டு போனார்கள்... அங்குள்ள தமிழர்கள் போராடினர்... கரன்சிகளை எரித்தனர்... கோடிக்கணக்கான கரன்சிகள் எரிக்கப்பட்டதால் அரசு பணிந்தது... மீண்டும் தமிழ் பழைய இடம் பெற்றது...
**************************************************************************************
காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்,,, நன்கு பழகுவாள்...புத்திசாலிப்பெண்... நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்..
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது... என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் ... அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் அவள் மேல் கொட்ட வேண்டும் என்பது போன்ற ஓர் உணர்வு... அவளது தாயாக நான் மாறியது போன்ற உணர்வு... அவள் தாய் அழைப்பது போல டிங்கு என அழைத்து விட்டேன்.. ஒரு கணத்தில் சுதாரித்து கொண்டேன்... டிங்கு..ம்ம்..இந்த பேருக்கு என்னமா அர்த்தம் என கேஷுவலாக கேட்பது போல மாற்றிக்கொண்டேன்..

அவள் முகம் சிவந்து விட்டது,, bye என சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்...
என்ன தப்பு செய்தேன்..இப்படி அவள் கோபித்ததே இல்லையே..அவமானமாக இருந்தது... நானே ஈகோவை விட்டு பேசினேன்..
என்ன ஆச்சு.
அந்த பேரை அப்பாவை தவிர வேற யார் யூஸ் செஞ்சாலும் பிடிக்காது என்றாள்...
அடடா..அந்த பேர்ல நான் கூப்பிடல... அதுக்கு அர்த்தம்தான் கேட்டேன் என சொல்லி ஓரளவு சமாதானம் செய்தேன்..
அவள் அப்பா போல நான் அவளை கவனிக்க முடியாது... அவள் அப்பாவுக்கு மாற்றும் ஆக முடியாது..அது என் ஆசையும் இல்லை...சாத்தியமும் இல்லை..
நான் ஒரு சாதாரண பிச்சைக்கார நாய்..
ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் காட்டிய அன்பை உலகில் யாரும் காட்டி இருக்கவும் முடியாது... இனி காட்டவும் முடியாது...
அந்த அன்பை அவளது இதயம் எப்படியோ உணர்ந்து விட்டது என்பதாலேயே அந்த கோபம் என புரிந்தது... ஆழ் மனதில் தன் தந்தையுடன் போட்டி போடுகிறேன் என்ற எண்ணம் வந்து இருக்க கூடும்..
என்றாவது ஒரு நாள் இந்த சம்பவத்தை அவள் நினைத்து பார்க்கலாம்.. அல்லது மறந்து போகலாம்.. ஆனால் அவள் இதயம் அதை அன்று புரிந்து கொண்டு விட்டது என்பதில் மகிழ்ச்சி..
***********************************************************************
இன்றைய சிறந்த போஸ்ட் 
********************************************
கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று 
ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியிருக்கிறாரே?
கலைஞர் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?
*************************************************

நான் ஒரு டுபாக்கூர் என நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.. நுனிப்புல் மேய்பவன்... உதாரணமாக ஆலயம் செல்வதால் ( பிராசதத்துக்காக ) , நாத்திகாவதிகள் என்னை ஏற்பதில்லை... சும்மா சைட் அடிப்பது க்யூவில் இரண்டு முறை போய் பிரசாதம் வாங்குவது போன்றவற்றல் ஆத்திகர்களும் என்னை ஏற்பதில்லை..
இன்று காலை கோயிலில் ஓர் அனுபவம்..அருகில் பார்வை அற்றவர் ஒருவர் சாமி கும்பிட வந்திருந்தார்.. சின்ன சின்ன உதவிகள் செய்தேன்... சார்,, ஆராதானை காட்டும்போது சொல்லுங்க என்றார்... காட்டினால் என்ன காட்டாவிட்டால் இவருக்கு என்ன என சற்று சாடிஸ்தனமாக நினைத்து அடுத்த கணமே அந்த நினைப்பை அழித்தேன்...

சாமிக்கு தீப ஆராதானை காட்டும்போது அவரிடம் சொன்னேன்..சாமி இருந்த திசையில் கும்பிட்டார்..முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..மகிழ்ச்சி...ம்ம்... நமக்கு தெரியாத ஏதோ ஒன்று அவருக்கு தெரிகிறது போல என நினைத்து கொண்டேன்...1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா