Saturday, November 1, 2014

பாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர் இன்னபிற- அவியல்


அந்த தம்மாத்தூண்டு பெயர் பலகை என் கவனத்தை கவர்ந்தது.. பேருந்து ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று கொண்டு இருந்தபோது , பஞ்சர் கடை ஒன்றை பார்த்தேன்..மரத்தடி..சிறிய தடுப்பு..அதன் முன் பெயர் பலகை... ரேடியோவில் பாட்டுக்கேட்டபடி மெக்கானிக் ஹாயாக அந்த கணத்தை வாழ்ந்து கொண்டு இருந்தார்...
முருகன் மெக்கானிக் கடை என் பெயர் பலகை அதற்கு கீழே சப் டைட்டில் போல இன்னொரு சதுர வடிவ பலகை...
அதில் சாக்பீசால் இப்படி எழுதி இருந்தது.
உழைப்பே உயர்வு தரும்
இங்கு பஞ்சர் போடப்படும்... டீவீலருக்கும் காருக்கும் வேலை செய்யப்படும்..
வெளி இடங்களுக்கு கூப்பிடாதீர்கள்..தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்... விவாதம் வினையில் முடியும்... சரியான கருத்து என்றால் நீங்கள் அதை நிரூபிக்க தேவை இல்லை..தவ்றான கருத்து என்றால் விவாதத்தில் நுழைய வேண்டியதே இல்லை.ஞாயிறும் பஞ்சர் போடப்படும்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... மரங்களை பாதுகாப்போம்...
இப்படி நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.. யாரும் படிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இப்படி எழுதி இருப்பது ஆச்சர்யம் அளித்தது...சுவராஸ்யமான ஆளாக இருப்பார் போலயே, ஒரு மொக்கையை போடலாமா என நினைத்தேன்.. பஸ் கிளம்பி விட்டது...
************************************************************************************************************
பாலா குறித்து பாலு மகேந்திரா !!
உங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே?''
'நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா!'
''உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா?''
'Forgive and you shall be forgiven' என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.
ஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
என்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
என் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்!
***********************************************************************************************************************
பொது இடங்களில் நம் லேப்டாப்பை ஓப்பன் செய்தால் , எல்லோருமே ஆர்வமாக அதை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்... எனவே பாஸ் வோர்ட் அடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அராத்து முன்பு ஒரு முறை சொல்லி இருந்தார்... வேண்டுமென்றே தவறாக அடித்து , பிறகு பேக்ஸ்பேஸ் சென்று மாற்றினால் குழம்பி விடுவார்கள் என்பது அவர் ஐடியா.
சமீபத்தில் திருச்சி போய் இருந்தேன் அல்லவா.. கார்டை மறந்து விட்டேன்.. காசு கொஞ்சம்தான் இருந்தது...சரி, ஆன் லைனில் புக் செய்யலாம் என நினைத்து , பொது இடம் ஒன்றில் அமர்ந்து லாப் டாப் ஆன் செய்தேனோ இல்லையோ, எல்லோரும் அதை காண கூடி விட்டனர்..
அவர் சொன்ன யுக்தியை பயன்படுத்தி தப்பாக அடிப்பது போல போக்கு காட்டி , மீண்டும் சரியாக அடித்தேன்...இன்கரக்ட் பாஸ் வோர்ட் என வந்தது..
கரக்ட் செய்வதில் தப்பு போல என நினைத்தவாறு மீண்டும் அடித்தேன்..மீண்டும் இன்கரக்ட்...
ங்கொய்யால... டென்ஷன் ஆகி விட்டது.. நிதானமா அடிங்க சார் என்றார் ஒரு பார்வையாளர்..
அது ஒரு பொது பிரச்சனையாகி விட்டதே என நினைத்தவாறு இந்த முறை ட்ரிக் எதுவும் செய்யாமல் அடித்தேன்... மீண்டும் இன்கரட்..கார்ட் பிளாக் ஆகி விட்டது..
சுற்றி இருந்த எல்லோரும் ஏமாற்ற பெருமூச்சு விட்டனர்,,
அதை பார்த்து எனக்கு எரிச்சல் பெருமூச்சு வந்தது..
தமிழில் அடித்து விட்டு , ஆங்கிலத்துக்கு மாற்றாமல் அப்படியே அடித்ததுதான் பிரச்சனை போல.. டென்ஷனில் கவனிக்கவில்லை
யாராவது லேப் டாப் ஓப்பன் செய்தால் , இப்படி சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்
— feeling எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.
**********************************************************************************************************
சேரன் பாண்டியன் படத்தில் கவுண்டமணிக்கு யாரோ வாட்ச் வாங்கி கொடுத்து விடுவார்கள்... அவர் அதை கட்டிக்கொண்டு , யாராவது டைம் கேட்டு மானத்தை வாங்கி விடுவார்களோ என பயந்து கொண்டே செல்வார்.. காரணம் அவருக்கு மணி பார்க்க தெரியாது...அது போல , சிலர் என்னிடம் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை ஓரிரு வரிகளில் விளக்குங்கள் என கேட்டு அதிர்ச்சி அளிப்பதுண்டு...இது போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் அளிப்பவர் நண்பர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன் .. கேட்டு பலன் பெறுங்கள்
*****************************************************************************************************
தட்காலில் புக் செய்து திருச்சி போய்க்கொண்டு இருந்தேன்... செக்கிங் வரும்போதுதான் , உரிய ஐடி ஆவணம் என்னிடம் இல்லாதது தெரிந்தது... உரிய ஐடி இல்லை என்றாலும் வேறு சில இருந்தன....
எனவே வழக்கம்போல , நம் பாணியில் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தேன்...
அவர் மசியவில்லை...ஃபைன் கட்டியே ஆக வேண்டும் என்றார்...
என் பொது வாழ்க்கையில் பேச்சு வார்த்தைக்கு மசியாத டிடிஆரை சந்தித்தது இதுவே முதல் முறை..
வெகு நேரம் பேசிய பின் , கடைசியில் வார்ன் செய்து அனுப்பி விட்டார்.. ( அந்த நபர் நான் தான் என நிரூபிக்க வேறு சில ஆவனங்கள் இருந்ததால் - ரயில்வே அங்கீகரிக்காதவை..ஆனால் உண்மையானவை)
பத்து பைசா கூட வாங்கவில்லை...
இனி வருங்காலத்தில் எப்போதாவது லஞ்சம் கொடுக்க முயன்றால் சிவியராக நடந்து கொள்வேன் என்றும் சொன்னார்...
அவர் சற்று கடுமையாக நடந்து கொண்டாலும், குடியரசு தினத்தன்று நேர்மையான ஒருவரை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது
*******************************************************************************
சன் டீவியில் சீனா வானொலியில் பணி புரியும் கலை மகளை நம் மக்கள் பேட்டி எடுத்தனர்,.... அவருக்கு தூய தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் , நம் மக்கள் பேசும் ”பண்ணி தமிழ் ” அவருக்கு சரியாக பிடிபடவில்லை... உதாரணமாக உங்களை மீட் பண்ணுவதில் , டாக் பண்ணுவதில் மகிழ்ச்சி என்பது பிடிபடவில்லை.... சந்திப்பதில் பேசுவதில் மகிழ்ச்சி என மொழி பெயர்த்ததும் புரிந்து கொண்டார்.
அது போல , ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றாம் (1963 ) ஆம் ஆண்டு என அவர் சொல்வது நம் ஆட்களுக்கு புரியவில்லை... நைண்ட்டீன் சிக்ஸ்ட்டி த்ரீ என ”மொழி பெயர்த்து” புரிந்து கொண்டார்கள்...
தமிழ் பாறைகள் !!!!!
****************************************************************************
அருகி வருகிறது என்ற வார்த்தை வாக்கிய பயன்பாடு அருகி வருவதை யாரேனும் கவனித்தீர்களா?
******************************************************************************


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா