Monday, November 10, 2014

வசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து சிவாஜி- மிக்சர் போஸ்ட்

ஒருவர் நம் நட்பை வேண்டாம் என நினைத்தால் அதற்கு மரியாதை கொடுத்து அமைதியாக விலகி விட வேண்டும் என சொன்னேன் அல்லவா..
இதில் இன்னொரு கோணம் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட துறையில் நல்ல அறிவு கொண்ட நண்பர் அவர்... அந்த துறை சம்பந்தமாக அடிக்கடி சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொள்வேன்...எப்படியோ தவறுதலாக அல்லது தொழில் நுட்ப பிரச்சனைகளால் , அவர் பெயர் அன் ஃபிரண்ட் செய்யப்பட்டு இருக்கிறது..
அவர் கோபித்துகொண்டு போய் இருக்கலாம். ஆனால் அவர் பெருந்தன்மையாக , ஈகோ பார்க்காமல் என்னிடம் விளக்கம் கேட்டார்.. பதறிப்போய் தவறை சரி செய்தேன்... அவர் அமைதியாக விலகி போய் இருந்தால் , ஓர் ஆரோக்கியமான நட்பு ஒரு சாதாரண விஷயத்துக்காக முடிவுக்கு வந்து இருக்கும்..
அவர் பெருந்தன்மைக்கு நன்றி...பாதம் தொட்டு வணங்குகிறேன்
____________________________________________________________________
மனதில் வன்மத்தை கொண்டு , அன்பு காட்டுவது போல நடிப்பதுகூட எளிது... ஒருவர் மேல் அளவுகடந்த அன்பை வைத்துகொண்டு , சாதாரணமாக இருப்பது போல நடிப்பது ரொம்ப கஷ்டம்
_________________________________________________________________________
நான் ஒரு டுபாக்கூர் என நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.. நுனிப்புல் மேய்பவன்... உதாரணமாக ஆலயம் செல்வதால் ( பிராசதத்துக்காக ) , நாத்திகாவதிகள் என்னை ஏற்பதில்லை... சும்மா சைட் அடிப்பது க்யூவில் இரண்டு முறை போய் பிரசாதம் வாங்குவது போன்றவற்றல் ஆத்திகர்களும் என்னை ஏற்பதில்லை..
இன்று காலை கோயிலில் ஓர் அனுபவம்..அருகில் பார்வை அற்றவர் ஒருவர் சாமி கும்பிட வந்திருந்தார்.. சின்ன சின்ன உதவிகள் செய்தேன்... சார்,, ஆராதானை காட்டும்போது சொல்லுங்க என்றார்... காட்டினால் என்ன காட்டாவிட்டால் இவருக்கு என்ன என சற்று சாடிஸ்தனமாக நினைத்து அடுத்த கணமே அந்த நினைப்பை அழித்தேன்...
சாமிக்கு தீப ஆராதானை காட்டும்போது அவரிடம் சொன்னேன்..சாமி இருந்த திசையில் கும்பிட்டார்..முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..மகிழ்ச்சி...ம்ம்... நமக்கு தெரியாத ஏதோ ஒன்று அவருக்கு தெரிகிறது போல என நினைத்து கொண்டேன்.
____________________________________________________________
புத்தக கண்காட்சியில் நான் பரிந்துரைக்கும் இன்னொரு கிளாசிக் இது... ஹாலிவுட் படம் போன்ற ஆக்‌ஷன் த்ரில்லர்..ஸ்பீட் படம் போன்ற வேகம்... ஒரே இடத்தில் குறுகிய கால இடைவெளியில் நடக்கும் சம்பவம்.. தேவையற்ற செண்டிமெண்ட் , காதல் என எதுவும் இல்லை... அதீத கற்பனைகளோ , செயற்கையான ட்விஸ்ட்டுகளோ இல்லாமல் , நம் ஊர் பாரம்பரிய் கதைக்களனை வைத்து விளையாடி இருப்பார் சி சு செல்லப்பா- வாடிவாசல்
___________________________________________________________________

அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்
_______________________________________________________________________
செக்ஸ் ஏன் இந்த அளவுக்கு மனதை ஆக்ரமிக்கிறது ? சுயம் அழிந்து , முழுமையாக ஈடுபட செக்சில் மட்டுமே உங்களால் முடிகிறது . எனவே மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்தை மனதுக்குள் நிகழ்த்துகிறீர்கள் . இது அவசியமற்றது . சாப்பிடுவதை , நீர் அருந்துவதை , உரையாடுவதை , முழுமையாக ஈடுபட்டு செய்து பழகுங்கள் . சுயம் அழிய , செக்ஸ் தேவையில்லை என புரியும்#ஜேகிருஷ்ணமூர்த்தி

____________________________________________________________
நாம் ஏன் பிரபலமடைய துடிக்கிறோம் ? காரணம் , நாம் செய்யும் வேலையை விரும்பி செய்யவில்லை . அந்த கழிவிரக்கத்தை மறைக்க பிரபலமடைதலை விரும்புகிறோம் . ஓவியமோ இசையோ பொறியியலோ கல்வியோ -அதை விரும்பி செய்யும்பட்சத்தில் உங்களுக்கு பிரபலமடைவது முக்கியமாக இராது-ஜே கிருஷ்ண மூர்த்தி
____________________________________________________________
இணையத்தில் அதிக அளவு நண்பர்களை பெற்று இருப்பவர் யார் தெரியுமா? ரஜினி ? கமல்? அஜித் ? விஜய்? ஒபாமா? ம்ஹூம் ...இவர்கள் யாரும் இல்லை... “ ஒரு நண்பர் “ என்ற கற்பனை ஆசாமிதான் எல்லோருக்குமே நண்பராக இருக்கிறார் யாரையாவது ஜாடையாக திட்டுவதற்கு உதவுவது இவர்தான்.. பாவம்..என்ன திட்டினாலும் தலை குனிந்து சென்று விடுவது இவர் இயல்பு... உதாரணமாக கமல்ஹாசனை திட்ட வேண்டுமா? கை கொடுக்க “ ஒரு நண்பர் “ ரெடி ? எப்படி ? ஓர் உதாரணம்...
*****************************************************
“ ஒரு நண்பர் “ என்னைபார்க்க வீட்டுக்கு வந்தார்..அப்படியே டீ சாப்பிடபோனோம்.. அவர்தான் காசு கொடுத்தார் என்பது இங்கு தேவை இல்லை..பேச்சு வாக்கில் உலகத்திலேயே சிறந்த நடிகர் கமல்தான் என்றார் அவர்... அவரிடம் கேட்டேன் ..உலகத்தில் இருக்கும் எல்லா நடிகர்களின் படங்களைப்பார்த்து விட்டுதான் இதை சொல்கிறீர்களா? பாவம்.அவர் தலை குனிந்தவாறு அங்கே இருந்து புறப்பட்டார்
******************************************************
” ஒரு நண்பர் “ ராக்ஸ் 

___________________________________________________________________
என்னதான் நம் ஆட்டோ அண்ணன்கள் சீறும் பாம்பை நம்பு , சிரிக்கும் பெண்ணை நம்பாதே என எச்சரித்தாலும், நாமும் இந்த அட்வைசை பலருக்கு கொடுத்தாலும், ஒரு பெண் நம்மை பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டால் , இந்த அட்வைஸ் எல்லாம் மறந்து விடும்... அந்த சிரிப்புக்கு மயங்கி , நண்பர்கள் இலக்கியம் புரட்சி என எல்லாவற்றையும் மறந்து அந்த பெண் பின்னால் சென்று விடுவேன் - மன்னிக்கவும் சென்று விடுவோம்..இது இன்று நேற்றல்ல...சங்க காலத்திலேயே இப்படித்தான்..
ஒரு தம்மாதூண்டு பாம்பு யானைக்குட்டியை டார்ச்சர் செய்வது போல , அழகிய சிரிப்பழகி இவள் நினைவுகள் என்னை டார்ச்சர் செய்கின்றனவே என புலம்புகிறார் சாத்தினாதனார் எனும் புலவர் , குறுந்தொகையில்...
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே
_____________________________________________________________________
நரமாமிசம் தின்னக்கூடிய தந்தையும் மகனும் சென்னைக்குள் மாறுவேடத்தில் புகுந்து உணவை தேட ஆரம்பித்தனர்...
முதலில் மகன் கண்ணில் பட்டவர் நமீதா.. அப்பா..செம ஃபுட் ..சாப்பிடலாமா என்றான்
வேண்டாம்டா.. ஓவர் கொழுப்பு உடம்புக்கு ஆகாது என மறுத்தார் தந்தை...
அப்பா..அப்பா...இதோ...இது சூட் ஆகும்... அடுத்து தமன்னாவை பார்த்து கத்தினான் மகன்..
வேண்டாம்டா... ஒரே எலும்புதான் ..சதையே இல்லை மறுத்தார் அப்பா..
மகனுக்கு பசி அதிகரித்துக்கொண்டே போனது...வாவ்,,,இதை மறுக்க மாட்டார் என நினைத்து , காஜல் அகர்வாலை காட்டினான்... அப்பா...இது நல்லா இருக்கும்ப்பா....
தந்தை காஜலை பார்த்தார்..
மகனே... என்னதான் நரமாமிசம் சாப்பிடுபவராக இருந்தாலும், நீ உன் அம்மாவையே சாப்பிட நினைக்க கூடாது...அவரை பத்திரமாக ஊருக்கு அழைத்து வா என்றார்...
________________________________________________________________________

விரிவதெல்லாம் வானும் இல்லை. கற்பிப்பதெல்லாம் கல்வியும் இல்லை ‪#‎இளையராஜா‬
-------------------------------------------------------------------------------
இன்றைய பல்ப்..
ஒரு முக்கியமான வேலை இருக்கிறது..காலை ஆறு மணிக்கு போன் செய்து எழுப்பி விடுங்கள்..என நெருங்கிய உறவினர் கூறி இருந்தார்  அவரை இம்ப்ரஸ் செய்ய கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என நினைத்து நான்கு மணிக்கே எழுந்து விட்டேன்..ஷார்ப்பாக ஆறு மணிக்கி கால் செய்து அசத்த வேண்டும்..
மணியை பார்த்துக்கொண்டே இருந்தேன்... 4. 5 5.15 5.30 5.45 5.55 இந்த இடத்தில் கண் அசந்து விட்டேன்..
எட்டு மணிக்கு போன் செய்து அவர் என்னை எழுப்பி விட்டார்

________________________________________________________

என் பேச்சு புரியாமல் நண்பர்கள் கஷ்டப்படுவது பற்றி எழுதினேன் அல்லவா.. ஆனால் நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவன் அல்ல.. நான் உண்டு ,,,ஓசி சாப்பாடு உண்டு என ஒதுங்கி வாழ்பவன்...
நான் மிகைப்படுத்தி சொல்வதாக நினைத்த ஒருவர் , தன்னால் எந்த பேச்சையும் புரிந்து கொள்ள முடியும் என சவால் விட்டு நேற்று இரவு 9மணிக்கு களத்தில் இறங்கினார்...( உங்களைப்போன்றோருடன் பேசுவதாக தெரிந்தால் , என் இமேஜ் பாதிக்கபடும்.. நான் யார் என சொல்ல வேண்டாம் என சொல்லி விட்டார் )
பேசினோமா.. பத்து நிமிடங்களிலேயே ஒப்புக்கொண்டு விட்டார்.. அய்யா சாமி.உங்க பேச்சு புரியல..
அதன் பின் அவர் புரியவில்லை என சொன்ன வாக்கியத்தை இரு வெவ்வேறு மாடுலேஷனலில் பேசிக்காட்டினேன்...
விழுந்து விழுந்து சிரித்தார்...யூ ஆர் வெரி ஃபன்னி என சொல்லி சிரித்துக்கொண்டே கட் செய்தார் ( ஃபோன் லைனை )
அவர் பாராட்டினாரா அல்லது சிரிப்பு போலீஸ் என கிண்டல் செய்தாரா என புரியாமல் இரவெல்லாம் விழித்துக்கொண்டு இருந்தேன்...

____________________________________________________________________________

சற்று தாமதமாகவே இன்று எழுந்தேன்... டீ கடை சென்று தந்தியை மேய்ந்தவாறு , டீ சொல்வதை தாமதப்படுத்திக்கொண்டு இருந்தேன்.. ஒரு காலுக்காக வெயிட்டிங்.. ஏதாச்சும் வந்து இருக்குறதா என பார்ப்பதற்காக போனை எடுக்க சட்டை பையில் கை விட்டவன் திகைத்தேன்.. பாக்கெட்டில் பத்து பைசா கூட இல்ல...மறந்துட்டேன்போல.. ம்ம்ம்.. “ ஹலோ..இதோ வந்துட்டேன் “ என வராத போன் அழைப்பில் “ பேசி” விட்டு எழுந்து வெளியே கிளம்பினேன், அவ்சரமாக...
பக்கத்தில் இருந்த பெரியவர் “ டீ சாப்பிட்டு போங்க..என்ன அவ்சரம் “ என்றார்... அவரை அந்த கடையில் அவ்வப்போது பார்த்து இருக்கிறேன்..பேசியதே இல்லை.. அவராக முதல் முறையாக பேசுகிறார்..
கூட அவர் வயதை ஒத்த அவர் நண்பர்களும் இருந்தனர்... ” ஆமா,,டீ சாப்பிட்டு போங்க..எங்களோட “ என புன்னகையுடன் சொன்னார் ஒருவர்... அவர்களுடன் டெல்லி அரசியல் சூழ்னிலைகள் குறித்து பேசி விட்டு கிளம்பினேன்.. காசு நான் கொடுத்துறேன் என்றார் அவர்..
இது காலத்தினால் செய்த உதவி என்பதில் வராது.. கடையில் சொல்லி விட்டு பிறகுகூட கொடுக்கலாம்... அல்லது டீ சாப்பிடாமல் போனாலும் பெரிய இழப்பு இல்லை..
ஆனால் பாக்கெட்டில் கை விட்ட பின் என் முகம் மாறுவதை கவனித்து , நிலையை யூகித்து , எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் அன்பு ஆச்சர்யமும் நிறைவும் அளித்தது...

_____________________________________________________________

ஏதாவது ஒரு செய்தியை படித்து விட்டால் சூடாக நம் கருத்தை பதிவு செய்ய மனம் துடிக்கும் . ஒரு கணம் அமைதியாக இருந்தால் அந்த துடிப்பு அகன்றுவிடும் .அந்த விஷயம் அற்பமானதாகவோ , நமக்கு சம்பந்தம் இல்லாததாகவோ , நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக தோன்றும் . கருத்து சொல்லாமல் ஒரு செய்தியை கடக்கையில் மனம் உணரும் sense of conquereness இனிமையானது

Friday, November 7, 2014

இணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி


அமெரிக்க அதிபர் முதல் லோக்கல் எழுத்தாளர்கள்வரை அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்தவாறு உலகை கலக்கி வருபவர்கள் இணைய மொண்ணைகள்.  2016ல் ஆட்சியை பிடிக்கும் சூழலும் இருக்கிறது.. இப்படிப்பட்ட மொண்ணைகள் குறித்து , பின் நவீன பின்லேடன் என அழைக்கபடும் நிர்மலுடன் ஒரு பேட்டி..


பின் நவீன பின்கோட் அவர்களே.. மொண்ணைகள் உருவாகிறார்களா , உருவாக்கப்படுகிறார்களா?


பெரும்பாலும் உருவாக்க படுகிறார்கள் அல்லது கஷ்டப்பட்டு உருவாகி கொள்கிறோம். சிலர் இதற்க்காக பயிற்சிக்கெல்லாம் செல்வதாக கேள்வி.

ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணரும்போது என்ன நிகழ்கிறது ?


அக்ட்சுவலா இந்த கேள்வியே தவறு, இதில் இருப்பது பாராடாக்ஸ். உணருதல் முடியாமைதான் ஒரு மொண்ணையின் முதல் குணம். சரி அப்படியே உணர்ந்தாலும் ஃபேக்காகவே இருக்கும். அது ஃபேக்கான உணர்வுதான் என உணர்ந்தால் அன்று முதல் அவன் உலகின் மொன்னைகளின் எண்ணிக்கைகளில் ஒன்றை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இன்னும் 100 பேர் வரிசையில் நிற்பதால் கணக்கு சரியா வராது.


 நடிகருடன் பேட்டி என்றால் , நடிக்க வந்திராவிட்டால் என்ன செய்து இருப்பீர்கள் என கேட்பார்கள்.. அந்த பாணியில், ஒரு மொண்ணை மொண்ணையாக ஆகாதிருந்தால் , என்ன ஆகி இருப்பார்? 


இது செம கேள்வி, இதற்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன். எங்க் ஊர்ல பூச்சின்னு ஒருத்தன் இருந்தான் மாடு மேய்ப்பான், அவனுக்கு வாழ்கையில் ஒரே ஆசைதான் - அது நீயூஸிலாந்தில் சென்று மாடு மேய்ப்பதுதான்.

ஹா ஹா... செம.. ஜென் கதை போல சுருக்கமாக ஆழமாக சொல்லி விட்டீர்கள்.. 


ஜென் பற்றி சமிபத்தில் ஒரு சொற்பொழிவு கேட்டேன், சரியான மழை, பெரும்பாலோனரிடம் கேட்டேன் உங்களுக்கு ஜென் பிடிக்குமா என, அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மழைக்கு பயந்துல்லா இந்த பக்கம் வந்தோம் என

ஹா ஹா.. இணைய மொண்ணைகளை விஞ்சி விட்டார்களே... இண்டர்னெட் மொண்ணை , நான் - இண்டர்னெட் மொண்ணை .. ஒப்பிடுக 

இண்டர் நெட் மொண்ணைகள் - ரேஸ் குதிரைகள், நான் இண்டர் நெட் மொண்ணைகள் - செக்கு மாடுகள்.



அனைவர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி..  தென்னையால் ஊருக்கு பலன்.. சென்னையால் ஒரு மானிலத்துக்கே பலன். ஒரு மொண்ணையால் யாருக்கு என்ன பலன்? 


மொண்ணையால் எல்லோருக்குமே பலன். எப்படியென்றால் மொண்ணைகள் இல்லையென்றால் இந்த உலகம் இதை விட போரிங்கா போயிடும். ஏதோ ஒரு ஹேப்பனிங் ப்ளேஸ் போல ஆக்கிவிடுவதன் பெறும் பொறுப்பு அவர்களை சாரும்.

ஹா ஹா... சரி.  ஒபாமா, ஜெயமோகன் , ரஜினிகாந்த் என எல்லோர்க்குமே நம் மொண்ணைகள் அட்வைஸ் வழங்குகிறார்கள்.. இந்த மொண்ணைகளுக்கு அட்வைஸ் வழங்க யாரும் இல்லையே என என்றாவது வருந்தி இருக்கிறீர்களா? 


மங்கி சீ, மங்கி டூ என்பது போல சக மொண்ணைகளை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். இணையம் வந்ததால் இந்த மொண்ணைதன்ம் மிகச் சரியாக ஆவனப்படுத்தப்பட்டு வருகிறது என நினைக்கிறேன். வருங்காலத்தில் இன்றைய மொண்ணைகளின் செயலும் சீற்றமுமே அட்வைஸாக இருக்கும். என்பது எனது கணிப்பு

my life is my message என்பது போலவா? 


ஆமாம், ஆனால் அது இந்த காலத்தில் மட்டும்தான், அடுத்து வரும் தலைமுறைகளுக்கு சரியான ஆவனம் இருக்கும்

monnai does not exist என சில அமைப்பியல்வாதிகள் சொல்வது குறித்து? 

மொண்ணைதனம் என்பதே ஒரு அப்ஸ்ட்ராட் தாட் தானே, அதை குறித்து சிலர் அப்படி கூற காரணம், நான் சொல்லி தெரிய போவதில்லை. ஊழல் அரசியல்வாதி என்னிக்காவது ஊழலைப் பற்றி சாதாரனமாக , இயல்பாக பேசிருக்கிறானா. அது போலதான் இதுவும்.



மொண்ணைகளின் அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும்?


இன்னும் மொண்ணைதனமாக இருக்கும். உதாரணம் eப்படி மொண்ணைதனமாக இருப்பது பற்றி வகுப்பு எடுக்கப்படும், பாடம் நடத்தப்படும், பயிற்சி ஏடுகள் வெளியிடப்படும், எனென்றால் இன்றைய மொண்ணைகளின் பலமே இதுதான்.

இணைய மொண்ணைகள் அளவுக்கு மற்ற துறை மொண்ணைகள் ஏன் ஃபேமஸ் ஆக முடியவில்லை? 

இணைய மொண்ணைகளின் வெற்றிக்கு இணையத்தில் இருக்கும் மொண்ணைதனம்தான் காரணம். அது ஒரு ஃபெர்கட் மேட்ச். மொண்னைதனத்தை யாருக்கும் தெரியாமல் தைரியமாக வேறு வேறு பெயர்களில் செய்ய முடிகிறதே. எனக்கே சில நேரம் ஆசையாக இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இணையம் இஸ் சோ டெம்டிங் , யூ நோ டூ பிகம் எ மொண்ணை.

யாரும் உருவாக்காமல் சொந்தாமாக உருவானவர்கள் மொண்ணைகள்.. வைரஸ்தான் இப்படி உருவாகும்.. எனவே இணைய மொண்ணைகளும் வைரஸ்தான் என கூறப்படுவது குறித்து ? 

வைரஸ் அல்ல அவர்கள் , வைரஸுக்கு தான் வைரஸ் என தெரிய்ம்தானே

ஹா ஹா...
monnai is dead என்ற நிலை என்றாவது வருமா ? 




வராது. என்றே தோன்றுகிறது. ஜன நாயக அரசியல் அமைப்புதான் வருங்காலத்தில் இருக்குமென்றுதானே எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம்.

கைக்கு கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு ,  இலக்கியம் முழுக்க அறிந்ததை போல சில ஃபில்ம் காட்டினாலும் , மற்ற மொண்ணைகள் கோபிப்பது இல்லை... அவருக்கான உரிமையை அங்கீகரிக்கிறார்கள்.. இந்த ஜன நாயக மாண்பு ஏன் மற்ற துறையில் இல்லை



இந்த கேள்வி ஏதோ இலக்கியம் சம்பந்தம் பட்டதோ/ , எனக்கு புரியவில்லை. இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லுவது கூட நம்மை சில நேரம் மொண்ணைகளாகிவிடும்

கடைசியாக ஒரு கேள்வி.. உலகெங்கும் வாழும் மொண்ணைகளுக்கு உங்கள் மெசேஜ் என்ன? 

ஐ லவ் தெம்




Thursday, November 6, 2014

சங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்

என் நண்பர் கலாரசிகர் மட்டும் அல்ல, பண விஷ்யத்திலும் கில்லாடி. யாருக்கும் பத்து பைசா செலவழிக்க மாட்டார். ஒரு முறை காசுக்கு உடலை விற்கும் பெண்ணிடமே காசை கறந்த திறமைசாலி. நான் போய் வேலையை முடித்து விட்டு காசை கொடுத்து விட்டு வந்தேன், அடுத்து கலாரசிகர் போனார். உல்லாசமாக இருந்தார். காசு கேட்டபோது சண்டை போட ஆரம்பித்தார். பெண் தன்னை சுகப்படுத்தவில்லை என கத்தினார். போலீசிடம் புகார் சொல்லப்ப்போவதாக மிரட்டினார். பயந்து போன அவர்கள் கலாரசிகருக்கு காசு கொடுத்து அனுப்பினார்கள்
- கண்ணதாசன்
( கண்ணதாசனின் அந்த ஆருயிர் நண்பர் கலாரசிகர் யார்.. புரியவில்லையே  )

*****************************************************************8
இவர் யார் என்று தெரிகிறதா ? 
அந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தது. எனவே கலாரசிகர் தேர்தல் பணி எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டார். நானும் வேறு சில திமுகவினரும் கடுமையாக உழைத்தோம். இதன் விளைவாக திமுக வென்றது. வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அண்ணா பேசினார். வெற்றிக்கு பாடுபட்ட கலாரசிகரை பாராட்டுவதாக சொல்லி அவருக்கு மோதிரம் அணிவிப்பதாக சொன்னார். தன் மனைவிக்காககூட அப்படி தேடி அலைந்ததில்லை என்றும் , கலாரசிகருக்காக தானே சென்று தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி மேடையில் மோதிரம் அணிவித்தார். எங்களுக்கெல்லாம் பயங்கர ஏமாற்றம். பிறகு அண்ணாவை தனியாக சந்தித்து சண்டையிட்டேன். என்ன இப்படி செய்து விட்டீர்கள். உழைத்தது நாங்கள்..மோதிரம் அவருக்கா?
அண்ணா சிரித்து கொண்டே சொன்னார். “ அட என்னப்பா..புரியாத ஆளாக இருக்கிறாய்.. நீ ஒரு மோதிரம் வாங்கி கொடு. அடுத்த கூட்டத்தில் உனக்கும் போட்டு விடுகிறேன்”
-கண்ணதாசன்
வரலாறு செம இண்டரஸ்டிங்கா இருக்கே  சரி..அந்த கலாரசிகர் யார்? ஒன்றும் புரியவில்லையே
***********************************************************************8
அந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார்? யானையை வைத்து என்ன செய்வார் ? 
இந்த பாடலை பாருங்கள்...
மன்னா...
உன் நாட்டில் மட்டும்
பெண் யானைகள்
ஒரு கர்ப்பத்தில்
பத்து குட்டிகளை பிரசவிக்குமா
உன்னை பாடி வரும்
புலவர்களுக்கு
நீ அளித்த யானைகளின் எண்ணிக்கை
பகைவர்களை விரட்டி அடித்த
வேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்
- ஆய் அண்டிரன்

____________________________________________________________
புற நானூற்று பாடலின் மாஸ்டர் பீஸ்... பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல.. அதை நல்ல விதமாக பயன்படுத்து என சொல்லும் எவர் க்ரீன் க்ளாசிக்..
அரசனே...
நீ பெரியவன்,
உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்
அருளும் அன்பும் இல்லாதவர்கள்
நரகம் செல்வார்கள்.
அவர்களுடன் சேராதே.
குழந்தையை காக்கும் தாய் போல
நாட்டைக் காப்பாற்று ..
அரசாளும் பதவி
எல்லோருக்கும் கிடைத்து விடாது.
- நரிவெரூஉத் தலையார்
______________________________________________________________
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து ...குறளுக்கு அர்த்தம் தேவை..
கண்ணதாசன் : ஒரு பிறவில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் உதவும் என சிலர் உரை எழுதுகிறார்கள்.. ஆனால் அது தவறு.
ஒருமை என்றால் தனிமையில், ஒரே நோக்கத்தில் ( concentration )என்று பொருள். எழுமை என்றால் ஏற்றம் என்று பொருள். தனிமையில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏற்றம் தரும், உயர்வையும் பலத்தையும் கொடுக்கும் என்று இதற்கு அர்த்தம். தனிமை நிறைந்த சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பது பழந்தமிழ் முடிபு. எழுமையும் என்பதில் வரும் “உம்” எனும் அசை கெட்டு வரல் இலக்கணத்தில் உள்ள முறைதான்.
_____________________________________________________________
கண்ணதாசன் பாறைகள்,....
ஊழின் பெருவலி யாவுள ..குறளுக்கு அர்த்தம் கூறவும்?

கண்ணதாசன் அண்ணா தலைமையில் செயல்பட்டபோது அளித்த பதில் : ஊழ் என்ற சொல்லுக்கு முறை என்பது பொருள். முறையோடு காரியம் ஆற்றினால் அதை விட வலிமையானது எது என்பது இதற்கு பொருள். இடர்கள் சூழ்ந்தாலும் முறையான செயல் முன்னின்று காக்கும்.
___________________________________________________________
பாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)
புலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா ? பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு
_______________________________________________________
அமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி
____________________________________________________
தச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்-அவ்வையார் 
______________________________________________________
துறவி ஹபீப் அஸ்மீ ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆடைகளை கரையில் வைத்து விட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அந்த பக்கம் வந்த ஒருவன் , யாரோ ஆடைகளை தவறுதலாக விட்டு சென்று விட்டார்கள் போல என நினைத்து , அவர்கள் வரும்வரை ஆடைகளை பார்த்து கொள்ளும் நோக்கத்தில் அங்கேயே நின்றான், துறவி குளித்து விட்டு வந்தார்.
“ அய்யா பெரியவரே..ஆடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டு செல்லலாமா.. யாரேனும் திருடிச்சென்றால் என்ன ஆவது “ என்றான்.

துறவி சிரித்து கொண்டே சொன்னார் “ நான் ஆடைகளை பாதுகாப்பின்றி விட்டு செல்லவில்லை. பாதுகாக்க்கும் பொறுப்பை அல்லாவிடம் விட்டு சென்றேன். அவன் அந்த பொறுப்பை உன்னிடம் கைமாற்று கொடுத்து விட்டான் போலிருக்கிறது “ # சுஃபி கதைகள்

மாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்.. குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை
____________________________________________________
*********** இன்மையின் இருத்தலியல்****************
இன்மை என்பதும் ஒரு வகை இருத்தல்தான். ஒன்று இல்லாதபோது அது ஏற்படுத்தும் பாதிப்பு எவ்வளவு பயங்கரமானது...இந்த புற நானூற்று பாடலை பாருங்கள்..
பெரிய பெரிய உணவு உருண்டைக்ள்
கொடுத்து வளர்த்த
பிரமாண்டமான யானையால்
நிரப்பப்பட்டு இருந்த
அதன் கொட்டில்
அதன் மறைவுக்கு பின்
வெற்றிடமானதை கண்டு
கலங்கும் பாகன் போல
அரசன் வீற்றிருந்த
மாமன்றத்தை கண்டு கலங்குகிறேன்
- பொத்தியார் ( புற நானூறு )

_____________________________________________________--


Tuesday, November 4, 2014

டெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்

முல்லாவின் விலை உயர்ந்த குதிரை காணாமல் போய்விட்டது . எல்லோரும் சோகத்தில் . முல்லா மட்டும் சந்தோஷமாக காணப்பட்டார் . காரணம் கேட்டார்கள் . நல்ல வேளை , குதிரை மேல் அமர்ந்திருந்தால் இந்நேரம் நானும் காணாமல் போயிருப்பேனே . தப்பித்தேன் என்றார் மகிழ்ச்சியாக

*******************************************************************************************************

டெர்ரர் கதை . பேச்சு . ஃபேஸ் புக் சாட் , யாஹு சாட் எல்லாம் போரடித்திருக்கும் . இனி மரங்கள் , செடி , கொடிகளிடம் நீங்கள் பேசலாம் .மன்னிக்கவும் . உரையாடலாம் . அதற்கு என் கண்டுபிடிப்பு உதவும் . பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார் விஞ்ஞானி ராகவன் . இது பொழுது போக்கு கருவி மட்டும் அன்று . புயல் , வெள்ளம் போன்ற பேரிடர்களை நமக்கு முன் இவை உணர்ந்து நமக்கு சொல்லி விடும் . இதன்மூலம் உயிர்சேதம் , பொருள் சேதத்தை தடுத்து கொள்ளலாம் என அவர் பேச பேச கூட்டம் ஆர்ப்பரித்தது . தாவரங்களை பேச வைத்த தன்னிகரற்ற விஞ்ஞானி வாழ்க என கோஷம் எழுந்தது
( ஓகே guys . அடுத்த இரு வரிகளில் கதை முடியவேண்டும் . டெர்ரர் முடிவாக அவலச்சுவையுடன் இருக்க வேண்டும் . மேற்கண்ட வரிகளின் அடிப்படையில் க்ளைமேக்ஸ் இருக்க வேண்டும் . முயற்சியுங்கள் . நான் நினைத்து வைத்திருப்பதைத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை . சரியான கிளைமேக்ஸ் ,தவறான கிளைமேக்ஸ் என்பதும் இல்லை . சும்மா க்ரியேட்டிவிட்டிய காட்டுங்க


*********************************************************************************************************

டெர்ரர் கதை . டியர் . மலை உச்சிக்கு போற பாதை அழகா இருந்தாலும் , பயமாவும் இருக்குல ? ஆள் நடமாட்டமே இல்ல
ஆமாண்டா செல்லம் . பயமா இருக்கு . இப்பவாச்சும் நீ இருக்க . திரும்பி போகும்போது நான் மட்டும் தனியா எப்படித்தான் போகப்போறேனோ


**********************************************************************************************************
டெர்ரர் கதை . சொல்லுடி செல்லம் . உனக்கு ஆண் குழந்தை பிடிக்குமா ? பெண் குழந்தையா ?
எதுவா இருந்தா என்னங்க ? எதுவா இருந்தாலும் ஓகேதான்.
ஓ. என்னே பெருந்தன்மை . வியர்வி சிந்தி உழச்சவன் நானல்லவா ?
ஏன் ? நான் வியர்வை சிந்தலையா ?
ஹா ஹா . உன்னை ஜெயிக்க முடியாது . எனக்கும் ஆண் குழந்தை பெண் குழந்தை வித்தியாசம் எல்லாம் இல்லை . ஏதோ ஒண்ணு . சரி சீக்கிரம் கொண்டு வா . பசிக்குது. ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன்

**********************************************************************
டெர்ரர் கதை . வீ ட்ரைட் அவர் பெஸ்ட் . ஒரு பேட நியூஸ் ,ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன்
சொல்லுங்க டாக்டர்
முதலில் பேட் நியூஸ் . ஆக்சிடெண்ட்ல உங்க மனைவிக்கு கால் போயிருச்சு . கைகளையும் இனி அசைக்க முடியாது . பத்து லட்சம் செலவழிச்சா கண்களை காப்பாத்தலாம்
ஓ காட் ! சரி குட் நியூஸ் என்ன டாக்டர?
ஹாஹா . நான் சொன்னது சும்மா தமாஷ் . உங்க மனைவி இறந்துட்டாங்க


************************************************************************************
டெர்ரர் கதை , . திருட போன வீட்ல அழகான பொண்ண பார்த்தேன் . செம ஸ்ட்ரக்சர் .
அப்புறம் ?
அப்புறம் என்ன , நான்ஸ்டாப் செக்ஸ்தான் . அவ அப்ஜெக்ட் பண்ணல . உடம்பு முழுக்க கிஸ் அடிச்சேன்
வாவ் . லிப் கிஸ் அடிச்சியா ?

இல்லப்பா . அது மட்டும் முடியல . எவ்வளவு தேடியும் அவ தலையை கண்டு பிடிக்க முடியல
*********************************************************************************************************
டெர்ரர் கதை . சார் என்ன சாப்பிடுறீங்க . மெனு பாருக்க . மெனு எல்லாம் வேண்டாம் . வந்திருப்பவரகளின் லிஸ்ட் கொடுங்க

****************************************************************************************************
வாலி எழுத வந்த புதிதில் திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலகட்டம்..பிராமண எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. ஆனாலும் பிரமாணன் என்ற அடையாளத்தை மறைக்காமலும். ( பலர் அந்த அடையாளத்தை மறைக்க சொல்லி அட்வைஸ் கொடுத்தார்கள்) அதே நேரத்தில் பிராமணன் என்ற திமிர் இல்லாமலும் நடந்து கொண்டு , பிற்காலத்தில் திராவிட இயக்க தலைவர்களுடன் நெருக்கம் ஆனார்.. சினிமாவிலும் வென்றார்..
ஒரு பாடலில் , சர்க்கரை கட்டி பாப்பாத்தி..உன் மனச வச்சுக்கோ காப்பாத்தி என எழுதினார்... இதில் ஜாதியெல்லாம் இல்லை... வழக்கு சொல்தான் என்றார் அவர்.. அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் , பாப்பாத்தி என்பது தவறில்லை என கருதினார்.

ஆனால் பிராமணர் அல்லாத புரட்சித்தலைவர் அதை நீக்க சொன்னார்.. பிராமணர்கள் சிலர் புண்படக்கூடும் என்பது அவர் எண்ணம்..
மேன்மக்கள்..
கடைசியில் அது மாற்றப்பட்டது..
சக்கரக்கட்டி ராஜாத்தி... உன் மனச வச்சுக்கோ காப்பாத்தி
************************************************************************************************************
வாலியை ஒரு கட்டத்தில் கலைஞரின் ஜால்ரா என கிண்டல் செய்தனர்... ஆனால் அவர் , அந்த கால கட்டத்திலேயே வைகோ நிகழ்ச்சிகளுக்கும் சென்று இருக்கிறார் என்பதும் , அதை கலைஞர் தடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.. நான் எறும்பு மாதிரி... தமிழெனும் சர்க்கரை எங்கெல்லாம் இருக்கிறதோ. அங்கெல்லாம் செல்வேன் என்றார்... கலைஞரை புகழ்ந்தது போல வைக்கோவையும் புக்ழந்து இருக்கிறார் . கலைஞர் தவறாக நினைப்பாரோ என்ற பய்ம் இன்றி..
வைகோவை பற்றி அவர் பாடியதில் இரு பகுதிகளை தருகிறேன்.. இரண்டாம் பகுதியை பாருங்கள்... வழக்கம்போல வாலியின் குறும்புதான்,,,ஆனால் எனக்கு ஏனோ கண்கள் கலங்கின...

1
நீ நடந்து வருகையில் பூமரங்கள் வீசினவாமே சாமரங்கள் …
வைகோ …அது உன் ‘வேர்’ வைகோ ..
நீ நடந்து வருகையில் தரை இறங்கி நின்றனவாமே
தண்ணீர் மேகங்கள் ..
வைகோ அது உன் ‘பார்’ வைகோ
2
சிறைச்சாலையில் சில சாயங்கால வேளையில்
நீ பந்து விளையாடிய போது உன் நெஞ்சில் வந்து விளையாடியிருக்குமே
என் நினைவு..
அது எப்படி என்று சொல்லவா ..
அன்று நீ ஆடிய ஆட்டம் ‘வாலி’பால் அல்லவா …??

*************************************************************************************************
புரட்சிதலைவர் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தபோது , வாலியின் இந்த பாடல்தான் தமிழகம் முழுதும் ஒலித்தது.
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
எம் ஜி ஆர் நல்லபடியாக வந்ததும். ஜானகி அம்மையார் வாலிக்கு நன்றி தெரிவித்தார்... இந்த வரிகளை நாட்டு மக்கள் மனமுருக பாடி பிரார்த்தித்தே எம் ஜி ஆர் குணம் அடைய காரணம் என்றார்.
வாலி அடக்கத்துடன் சொன்னார்... எம் ஜி ஆர் குணம் அடைய காரணம் வாலி பாக்கியம் அல்ல...உங்கள் தாலி பாக்கியம்

******************************************************************************************
வாலி நினைவுகள் - வாலி மருத்துவமனையில் தன் கடைசி நிமிடங்களில் இருந்தபோது , கமல் அவரைப்பார்க்க வந்து இருந்தார்.. வாலி யாருடனும் பேசும் நிலையிலோ , பார்க்கும் நிலையிலோ இல்லை.. இந்த நிலையில் அவரை காண சகிக்காத கமல், மருத்துவர்களிடம் சத்தமாக வாலியின் காதில் விழும்படி சொன்னார்... “ விஸ்வரூபம் -2 படத்துக்கு பாட்டு எழுதணும்... அவருக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.. சீக்கிரம் அனுப்பி வைங்க “
எத்தனையோ பாராட்டுகளை கேட்ட அந்த மகா கவிஞன் கேட்ட கடைசி பாராட்டாக இது இருந்து இருக்க கூடும்... அதுவும் இன்னொரு பெரிய கலைஞனிடம் இருந்து !!!

****************************************************************************************

வாலி நினைவுகள் - கண்ணதாசனை தொடர்பு கொண்டு பலர் அப்போது வந்த ஒரு புதிய பாடலை பாராட்டி பேசினார்கள்... கண்ணதாசன் உதவியாளர்களிடம் அலுத்துக்கொண்டார்... இப்பலாம் நான் எழுதிய பாடலை நானே மறந்துடுறேன்.. இதை எப்ப எழுதுனேனு எனக்கே மறந்துடுச்சுப்பா என்றார்...
உதவியாளர்கள் தயங்கி கொண்டே சொன்னார்கள் “ அண்ணே..அது உங்க பாட்டு இல்லை.. வாலி எழுதியது “
கண்ணதாசன் உடனே வாலியை தொடர்பு கொண்டு பாராட்டினாராம் “ என்னை மாதிரியே எழுதி இருக்கய்யா.. அருமை “ என பெருந்தன்மையாக பாராட்டியதை தனக்கு கிடைத்த பெரிய கவுரமாக வாலி குறிப்பிட்டு இருக்கிறார்..
அந்த பாடல் ..
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ணமையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாள் - இவள்
காதலன் நானிருக்க பேரெழிலாள்
********************************************************************************************************
வாலி பாடல்களுக்கு கமல் ரசிகர் என்றாலும் , ஒரு குறிப்பிட்ட வரி அவருக்கு மிகவும் பிடிக்கும்., அதை அவர் குறிப்பிட்ட போது , நானும் “ அட !! “ என வியந்தேன்...
கமலுக்கு பிடித்த வாலியின் வரி..
“ மெய் என்று மேனியை யார் சொன்னது “ ( வாழ்வே மாயம் பாடல் )
*********************************************************************************************************************
வாலி நினைவுகள்- ஆறரை கோடிபேர்களில் ஒருவன்..அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் என்று எஸ் ஜே சூர்யா ஸ்டைலாக பாடுவதை பார்த்து ரசித்து இருப்பீர்கள்.. இந்த பாடலை ரஜினிக்காக வாலி எழுதினார். ஜக்குபாய் படத்துக்காக.. ஆனால் படம் டிராப் ஆகி விட்டது.. பிறகு பாடலை கேட்ட ரஜினி நல்ல பாடலை இழந்து விட்டேனே என வருந்தினாராம்
*******************************************************************************************
வாலி நினைவுகள் - தளபதி படத்த்தில் , சின்ன தாய் அவள் என்ற பாடலை கேட்டு கண் கலங்காதவர் இருக்க முடியாது.. அதிகம் கண் கலங்‌கியவர் யார் தெரியுமா ? இளையராஜா .. காரணம் ? சின்ன தாய் என்பது அவர் அன்னையின் பெயர்... அந்த பாடலில் வரும் ராசா எனும் பெயரையும் கவனியுங்கள் .. வாலியின் சிறந்த பாடல்களில் ஒன்று
******************************************************************************************
பாலகுமாரன் , சுஜாதவை எல்லாம் கடந்து வந்து விட்டோம் என சொல்பவர்களை பார்த்தால் , எனக்கெல்லாம் பொறாமையாக இருக்கும்.. நானெல்லாம் இன்னும் கிராமப்புற கதைகளையே கடந்து விடவில்லை... சமீபத்தில் படித்த ரஷ்ய கிராமப்புற கதை ஒன்று.
******************************************
ஒரு வயதான் நாய் ஒன்று பசியுடன் நடந்து போய்க் கொண்டு இருந்தது... வழியில் பார்த்த ஓநாய் அனுதாபத்துடன் விசாரிக்கவே , தான் அந்த காலத்தில் பெரிய தாதா என்றும் இப்போது வேட்டையாட முடியவில்லை என்றும் சொன்னது.. நான் உனக்கு உதவுகிறேன் என சொல்லி , ஓநாய் அதை அழைத்து சென்றது...
அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்கிறது..பார்த்து வா என ஓனாய் சொல்லவே , போய் பார்த்து வாத்து இருப்பதாக சொன்னது நாய்..அய்யே...ஒரே சிறகாக இருக்கும்..இந்த பக்கம் போய் பார் என்றது ஓனாய்... போய் பார்த்து விட்டு , ஆட்டு மந்தை இருப்பதாக சொன்னது நாய்..அய்யே...ஒரே முடியாக இருக்கும்... நேராக போய் பார் என்றது ஓனாய்.. பார்த்து விட்டு குதிரை இருப்பதாக சொன்னது நாய்.
ஓனாய் சந்தோஷத்துடன் வேட்டைக்கு தயாரானது.. கால்களை தரையில் வேகமாக தேய்த்தது.
“ என் வால் துடிக்கிறதா “ என்றது..
“ ஆம் “ என்றது நாய்
“ என் விழிகள் சிவந்து பிதுங்குகிறதா “
“ ஆம் “
ஓனாய் பாய்ந்து குதிரையை வீழ்த்தியது...இரண்டும் பசியாறின..
அடுத்த நாள் நாய் வழியில் ஒரு வயதான பூனையை பார்த்தது.. பூனை தன் ஃப்ளாஷ் பேக்கை சோகமாக சொல்ல , அதற்கு ஓனாய் பாணியில் உதவ முடிவு செய்தது நாய்.
அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்கிறது..பார்த்து வா என நாய் சொல்லவே , போய் பார்த்து வாத்து இருப்பதாக சொன்னது பூனை ..அய்யே...ஒரே சிறகாக இருக்கும்..இந்த பக்கம் போய் பார் என்றது நாய்... போய் பார்த்து விட்டு , ஆட்டு மந்தை இருப்பதாக சொன்னது பூனை ..அய்யே...ஒரே முடியாக இருக்கும்... நேராக போய் பார் என்றது நாய் .. பார்த்து விட்டு குதிரை இருப்பதாக சொன்னது பூனை
நாய் சந்தோஷத்துடன் வேட்டைக்கு தயாரானது.. கால்களை தரையில் வேகமாக தேய்த்தது.
“ என் வால் துடிக்கிறதா “ கேட்டது நாய்..
பூனை சந்தேகமா பார்த்தது..வாலின் முடிகள் லேசாக காற்றில் ஆடின.
“ ஆமா..லேசா துடிக்குது” என்றது பூனை..
“ என் விழிகள் சிவந்து பிதுங்குகிறதா “
இல்லையே “ பரிதாபமாக சொன்னது பூனை..
“ ஆம் என சொல்..அப்பத்தான் நான் வேட்டையாட முடியும் “ என்றது நாய்... அரைகுறை மனதுடன் ஆம் என்றது பூனை..
நாய் ஆக்ரோஷமாக பாய்ந்து குதிரை முன் விழுந்தது... குதிரை டென்ஷன் ஆகி ஓங்கி ஒரு உதை விட்டது.. ரத்தகளறியாகா பூனை முன் விழுந்தது... கண்கள் பிதுங்கி ரத்தம் கொட்டியது..
பார்த்த பூனைக்கு உற்சாகம்
“ சகோதரா...உண்மையிலே இப்போது உன் கண்கள் சிவந்து பிதுங்கி இருக்கின்றன.. இப்போது பாய்ந்து தாக்கு “ என்றது..
**************************************************************************
ட்ரெய்னில் கதை படிப்பதற்கு கவிதை ஒன்று இடைஞ்சலாக இருக்கிறது என்பதை வருத்தத்துடன் ( ? ! ) தெரிவித்து கொள்கிறேன்

********************************************************************
கவிதை வாசிப்பு முயற்சி anti - climax ல் ( aunty climax அல்ல ) முடிந்துவிட்டது என்பதை வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்

***************************************************************************
கவிதை வாசிப்பு முயற்சி தோல்வி என்று நான் சொன்னதை வைத்து நான் செருப்படி வாங்கியது போல சில எதிரிகள் வதந்திகளை பரப்புகிறார்கள் . நம்பவேண்டாம் . நானே சொல்கிறேன் . அந்த கவிதை என் அருகிலேயே வந்து அமரும் சூழ்நிலை வந்தது . க்ளோஸ் வியூவில் ரசித்தபடி நைசாக பேச்சை ஆரம்பித்தேன் . அப்போது ஒரு ஸ்டேஷனில் டிரெய்ன் கொஞ்ச நேரம் நின்றது . அண்ணா , எனக்கு ஒரு தண்ணி பாட்டில் என அந்த கவிதை காசை நீட்டியது . அண்ணா என்ற வார்த்தை அதிர்ச்சியளிக்கவே , வாங்கி கொடுத்துவிட்டு , மவுனமாக மௌனியை எடுத்தேன் . பின் அட்டையில் அவர் புன்னகைத்தார்
*********************************************************************************
அவர்களது குதிகால் உயர்ந்த பூட்ஸ் அவர்கள் மூளையை விட பளபளவென மின்னின . அவர்கள் நடையோ , அவர்களது தலை வகிடை விட கோணலாக அவனுக்கு தோன்றியது - மௌனியின் இந்த வர்ணனையை ஆட்டயைப்போட்டு சுஜாதா ஒரு கதையில் தான் எழுதியதுபோல எழுதியிருப்பார்
*************************************************************************
தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒர் எண்ணம் முதலில் - பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய் போய்விட்டதோ என்ற யோசனை . கடைசியில் ஒன்றும் புலப்படாமல் பைத்தியக்காரத்தனம் என முணுமுணுத்து மூச்சு விட்டான் . யார் யார் எப்படி எப்படி என அவனால் அப்போது உணரமுடியவில்லை.
எப்போதும் முடியாதென்ற எண்ணம்தான் எனக்கும்
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
1938ல் எழுதப்பட்ட வரிகள் என நம்பவே முடியவில்லை

*****************************************************************************
அவள் பார்வை என்னை ஊடுருவி துளைத்து சென்றது. ஒருவன் , தன் உள்ளூர உறைந்த ரகசியத்தை , பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவதுபோல , அவள் பார்வை என்னை விட்டு அகன்றது
-ங்கொய்யால , எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் ! !
*************************************************************************************************
ஒரு வாலிபன் ஒரு பெண்ணை ரொம்ப நாளாக சைட் அடித்து வந்தான்.அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் பிடிக்க ஆரம்பித்தது. தன் காதலை கவிதையாக எழுதி அனுப்பினாள்..அதைப்பார்த்த அவன் என்னவோ ஏதோ என அரண்டு விட்டான். ஊரை விட்டு ஓடிப்போகிறேன் என அவளுக்கு எழுதி விட்டு ஓடிவிட்டான். அந்த லெட்டர் பெண் வீட்டார்கள் கையில் கிடைத்தது... ஓடிப்போகலாமா என அதில் எழுதி இருந்தான். அவளை அவர்கள் திட்டினார்கள்.. முறைப்படி வீட்டுக்கு வந்தால் , திருமணம் செய்து வைப்பார்கள் என அவள் எழுதியதை புரிந்து கொள்ளாமல் இப்படி தன் பெயரை கெடுத்து விட்டானே என்ற வேதனையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.. ஊர் அவளுக்காக பரிதாபப்பட்டாலும், அந்த முட்டாள் காதலனை நினைத்து சிரித்தது..
அந்த ஊருக்கு ஒலவையார் வந்தார். தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் பேயாகி மாறி அவ்வையாரை தாக்க முனைந்தது..
என்னை ஏன் தாக்குகிறாய்.. ஒரு பாட்டை புரிந்து கொள்ள முடியாதவனை, ஒரு விஷயத்தை புரியும்படி எழுத தெரியாதவனை , ஊராரின் கேலிக்கு ஆளானவனை ஒரு பெண் பெற்று போட்டாளே...அந்த மாதரசியைப்போய் தாக்கு... தாக்கு ..தாக்கு என்றார்..அந்த பேய் யோசிக்க ஆரம்பித்தது..
வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற்றெற்றோமற்றெற்று
***********************************************************************
அவ்வையார் ஒரு கல்யாணத்துக்கு போனார்..பயங்கர கூட்டம் , சாப்பிட முடியவில்லை.. பசி மயக்கத்துடன் வந்து கொண்டு இருந்தார்.. வழியில் பார்த்த நண்பர் “ என்ன.. சாப்பாடு பலமா.. நன்றாக உணவு உண்டீர்களா “ என்றார்... அவ்வையார் கிண்டலாக சொன்னார் “ கூட்டத்தில் நெருக்குண்டேன்.. தள்ளுண்டேன்... பசியால் சுருக்குண்டேன். ஆனால் சோறு உண்டிலேன் “
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்


பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு

வாவ் .
கரெண்ட் போய்விட்டது
நட்சத்திரங்கள் எவ்வளவு அழகு
‪#‎பிக்கூ‬
-----------------------------------------------------------------------
போனில் 5 மிஸ்டு கால் . புது நம்பர் . யாரென யோசித்தபோது மீண்டும் கால் . யாராவது பழைய தோழியா ? ஹலோ . ஆண்குரல் . வடை போச்சே . பேசினார் . என்ன பாஸ் . போனே எடுக்கமாட்டேங்கறீங்க . பஸ்சுக்கு டைம் ஆச்சு. கஷ்டப்பட்டு ஒரு நண்பரிடம் நம்பர் வாங்கினேன் . வேற ஒண்ணுமில்ல . கில்மா கதை எழுதியிருந்தீங்க . இதெல்லாம் நல்லாவா இருக்கு . உங்களுக்கு இதெல்லாம் சரி வராது . சரி . அப்புறம் பேசறேன் . டைம் ஆச்சு " 
அவர் திட்டியதில் வருத்தம் இல்லை . நான் அறிவியல் ஆன்மிகம் நாட்டுநல கருத்துகள் எழுதும்போதெல்லாம் யாரும் இப்படி பாராட்டுவதில்லை . திட்டுவதற்கு மட்டும் இப்படியெல்லாம் எஃபோர்ட் எடுக்கிறார்கள்.என்ன சொல்வது?
---------------------------------------------------------------------------------------------- ம தி மு க வெற்றி வாய்ப்பு குறித்து ரகசிய போலீஸ் ஆராய்கிறது - வைகோ .
இதை எப்படி மதிமுகவின் ரகசிய போலீஸ் கண்டுபிடித்தது ?ரகசியத்துக்கு உண்டான மரியாதையே போச்சே
------------------------------------------------------------------------------------- எப்ப இந்த பொண்ணுங்க தாவணி , சேலைய மறந்து வேறு ஆடைகளுக்கு மாறுனாங்களோ அப்பவே தமிழ் பண்பாடு அழிய ஆரம்பிச்சுருச்சு , என்ன நான் சொல்றது என இன்பாகஸ் மெசெஜ் அனுப்பினார் ஒருவர் . உடனே நெட் இணைப்பை துண்டித்து விட்டு ஷட் டவுனிவிட்டேன் . காரணம் எனக்கு வேட்டி கட்ட தெரியாது . வேட்டி அணிந்து எங்கும் போனதும் கிடையாது .
-------------------------------------------------------------------------------------------- தன் முன் தோன்றிய கடவுளிடம் தனக்கு சாவே வரக்கூடாது என வரம் கேட்டான் அவன் . கடவுள் வரமளித்து மறைந்தார் . சந்தோஷமாக தன் காதலியை பார்க்க ஓடினான் . உனக்கு ட்ரீட் தரேன் . வா அண்ணா லையில் இருக்கற ஹோட்டலுக்கு போய் ப்டிடலாம் என்றாள் அவள் . சொல்லி பார்த்தான் . அண்ணா (சா)லை . ம்ஹும் . அவனுக்கு 'சா' வே வரவில்லை
---------------------------------------------------------------------------------------- என்னடா மதவாதம் ? அதான் அன்னைக்கே சொல்லியாச்சே யுனிவர்சிட்டி இன் டைவர்சிட்டி . கரெக்டாதான் பேசறேனா . நான் இங்க்லிஷ்ல கொஞ்சம் வீக்கு ‪#‎கேப்டன்‬ ஆங்கிலம் பேசி அசத்தல்
----------------------------------------------------------------------------------------
யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் பிரதமர் என்கிறார் ஜெ . இங்குதான் கரண்டே இல்லையே . நீங்க கை காட்டினாலும் தெரியாது - கேப்டன்
---------------------------------------------------------------------------------------
ஓர் அரசர் அந்த சாமியாரை நல்லபடியாக கவனித்து அனுப்பினார் . போகும்போது சாமியார் சொன்னார் . சில ஆண்டுகளில் இறக்க போகிறாய் . பிறகு உன் மகன் இறப்பான் . அதன்பின் பேரனும் இறப்பான் . எல்லோரும் டென்ஷன் ஆகி விட்டார்கள் . அரசன் மட்டும் புன்னகைத்து வரமளித்ததற்கு நன்றி என்றான்
----------------------------------------------------------------------------
கடவுள் என ஓர் ஆள் எங்காவது இருப்பதாக நினைக்காதீர்கள் .பாலில் சுவை போல , பழத்தின் சாறு போல , புத்தகத்தின் கருத்து போல கடவுள் என்பது ஒரு தன்மை என்கிறார் இடைக்காட்டு சித்தர்
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
நூலிற் பொருள்போலும்
நுண்பொருளை போற்றீரே
---------------------------------------------------------------------------------------------
உழைப்பால் உயர்ந்த எஸ் எஸ் வாசன் , குதிரை ரேசில் ஆர்வம் காட்டினார் என்பது வியப்பளிக்கும் விஷயம் . அதை சூதாட்டமாக பார்க்காமல் அறிவியல் சார்ந்த விளையாட்டாக பார்த்தார் . துல்லியமான கணக்கீடுகள் மூலம் வெற்றிகுதிரையை கணிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார் .பல ஊர்களிலும் ரேசில் பணம் கட்டுவார் . ஒரு முறை இவர் பணம் கட்டிய குதிரை தோற்றது . தன் கணிப்பு தவறாதே என குழம்பினார் . அந்த குதிரையை பெரும்பணம் கொடுத்து வாங்கினார் . அடுத்த ரேசில் அது வென்றது . அதாவது சென்ற முறை மேட்ச்ஃபிக்ஸ் செய்துள்ளனர் . அத்துடன் ரேஸை தலை முழுகினார்
----------------------------------------------------------------------------------------
மிஸ் மாலினி என ஒரு படம் 1947ல் எடுக்கப்பட்டது . வாசன் எடுத்தார் . ஓர் ஏழைப்பெண் சந்தர்ப்ப சூழலால் மேடையில் பாடுவதாக காட்சி . கர்நாடக இசை மேதை டி கே பட்டம்மாளை பின்னணி பாட வைத்தார் . வரலாறு காணாத பெரியதொகையை ஊதியமாக கொடுத்தார் . ஆனால் படத்தில் டிவி ரத்னம் என்பவர் குரல் ஒலித்தது . பட்டம்மாள் குரலை ஏன் பயன்படுத்தவில்லை என்பது பல வருடங்கள் கழித்து வாசன் விளக்கினார் . இசை அறிவற்ற என் கதாநாயகி , இவ்வளவு அருமையாக , திறமையாக , குறைகளே இல்லாமல் பாடுவது செயற்கையாக ஒலிக்கும் என்றார்
-----------------------------------------------------------------------------------------
நேர்பட பேசு என்பார் பாரதியார் . கேட்பதை நேரடியாக கேட்டு பழக வேண்டும் . அப்படி கேட்பதே ஈகோ பிரச்னையாக நினைக்க தேவையில்லை .உதாரணமாக பேய் அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் என நேரடியாக கேட்கலாம் . பேயெல்லாம் முட்டாள்களின் கற்பனை என்ன நான் சொல்றது என கேட்டு போட்டுவாங்க முயலக்கூடாது
------------------------------------------------------------------------------------
வம்பு நடிகர் புசுபுசு நடிகை டிவிடி கிடைப்பதாக கிளப்பிவிட்ட வதந்தியை நம்பி ஆஸ்தான கடைக்கு போனேன் . வரவில்லையாம் . புன்னகை நடிகை டிவிடி வந்திருக்கு . வேணுமா என்றார் . பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்றால் இதுதானோ
-----------------------------------------------------------------------------
புரியாத மாதிரி எழுதும் பேசும் முகநூலர் ஒருவர் இருக்கிறார் . அவர் கேப்டனுக்கு நேர் எதிர் . சரக்கு உள்ளே போனால்தான் தெளிவாக பேசுவார் . கொஞ்ச நாளாக அடிப்பதில்லை . காரணம் கேட்டேன் . ஒரு தேவதையை ரொம்ப நாள் ரசித்து வந்தாராம் . ஒரு நாள் அவளே வந்து பேசினாளாம் . இனி தண்ணி அடிக்க கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டாளாம் . இப்ப என்ன பிரச்னை என்றால் அவள் உண்மையிலேயே பேசினாளா பிரமையா என குழப்பமாக உள்ளதாம் ‪#‎வெளங்கிரும்‬

---------------------------------------------------------------------
ஆர்வக்கோளாறு முகநூலர் அவர் . காப்கா , ஃபூக்கோ , சார்த்தர் என அவர் சீன் போடுவதை பார்த்து அண்ணே , எனக்கும் வாசிப்பு உண்டுணே . கைட் பண்ண ஆள் இல்ல என ஒரு கல்லூரி மாணவன் புலம்ப , அக மகிழ்ந்த அவர் அவனுக்கு தண்ணி பார்ட்டி வைத்தாராம் . கடைசியில் சரி , இதுவரை என்ன படிச்சிருக்கணு சொல்லு . அதற்கேற்ற மாதிரி நானே என் காசுல புக் வாங்கி தறேன் என்றாராம் . அவன் சொன்னானாம் . சரோஜா தேவி , மருதம் , திரைச்சித்ரா , விருந்து . அவ்வளவு நேரம் ஏற்றிய போதை சட் என இறங்கி விட்டதாம்
-------------------------------------------------------------------------------

புரியாத முகநூலர் பற்றி ஒரு பிரத்யேக செய்தி போஸ்ட் செய்தேன் அல்லவா ? அது நீங்கள்தானா என கேட்டு சம்பந்தமே இல்லாத இன்னொருவரிடம் ஒரு கல்லூரி பெண் விசாரித்தாராம் . அவர் மறுத்தாராம் . அப்படியே பேசி கேப்டனை கலாய்க்கும் அளவுக்கு திக் ஃபிரண்ட்ஸ் ஆகி விட்டார்களாம் . பொறுப்பாக எனக்கு நன்றி மெசேஜ் அனுப்பினார் அந்த முகநூலர் . அந்த பெண் எனக்கு ஒரு ஹாய்கூட சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இனி என் போஸ்ட்டில் சந்தேகம் எனில் என்னை மட்டுமே தொடர்பு கொள்ளவும் . எனக்கு வேறு கிளைகள் ஏதும் கிடையாது 
-----------------------------------------------------------------------------------
ஒரு வேலையாக நுங்கம்பாக்கம் சென்றேன் . வந்தது வந்தோம் . உறவினர் வீட்டுக்கு போகலாம் , போய் நாளாச்சே என அவர் இல்லம் சென்றேன் . அவர் மகிழ்ந்தார் . ஆனாலும் நான் வந்ததன் காரணம் புரியாமல் தவித்தார் . விஷயம் இல்லாம வரமாட்டியே . என்ன மேட்டர் என துளைத்து எடுத்தார் . விஷயம் இல்லாம வர மாட்டேன் என நான் எப்ப சொன்னேன் என குழம்பினேன் . சும்மாதான் வந்தேன் என்பதை கடைசி வரை அவர் நம்பவே இல்லை . ஏதாச்சும் கற்பனை காரணம் சொல்லலாமா என நினைத்தேன் . மூடு இல்லை
--------------------------------------------------------------------
பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
அண்ணா , தேர்தல் பணிகளை செய்தவர்கள் நான் . நீங்களோ மேடையில் கருணாநிதியை பாராட்டி , மோதிரம் அணிவித்து விட்டீர்களே
கண்ணதாசா , நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு . அடுத்த கூட்டத்தில் உனக்கு போட்டுவிடுகிறேன்
------------------------------------------------------------------------

பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
யார் பிரதமர் என்ற குழப்பம் ஏற்பட்டபோது , இந்திரா காந்தியை பிரதமராக்கியவர் காமராஜ் . பின்பு இந்திரா கொடூர ஆட்சி நடத்தினார் . அவரை காமராஜ் சந்திக்க விரும்புவதாக உதவியாளர் சொன்னார் . இந்திரா காந்தி கேட்டார் who is kamaraj
----------------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
மிகுந்த தயக்கத்துடன் பேசினேன்
"நம்ம காதலிச்சது உண்மைதான் . ஆனா வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க . பணக்கார ஃபேமிலி என்படதுகூட முக்கியமில்லை .ஆனா அம்மாவின் கட்டளைய மீற முடியல "
புழுவென முறைத்தாள் காயத்ரி . -அப்ப என்னிடம் பேசிய காதல் வசனத்துக்கெல்லாம் என்ன அர்த்தம்
-என்ன பெரிய காதல் . எல்லாம் ஹார்மோன் வேலைதான் . கவலைப்படாதே . உனக்கு நானே மாப்பிள்ளை பார்க்கிறேன் . சிரித்தேன்
- த்தூ .நான் வேணும்னா உனக்கு பொண்ணு பார்க்கிறேன் .கோபமாக கிளம்பினாள் காயத்ரி
லாப்டாப்பில் மெயில் திறந்து அம்மா அனுப்பிய பெண்ணின் படத்தை ஆர்வமாக ஓப்பன் செய்தேன் . அது காயத்ரியின் படம்

------------------------------------------------------------------------ பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
" அப்பா மிரட்டுவாரு . பயப்படாதீங்க . காதலில் உறுதியா இருங்க " உற்சாகம் அளித்து ஆப்பிள் ஜுசும் கொடுத்து அப்பா ரூமுக்கு அனுப்பினாள் . அவர் மிரட்ட்வில்லை . ஹாட் கேஷ் .
ஸாரி டியர் . பிராக்டிக்கலா சரி வராது . பிரிஞ்சுடலாம் என்ற என்னை வெறுப்புடன் பார்த்தாள்
மாலை ஃபோன் செய்தேன் . செல்லம் . நான் உனக்கு துரோகம் செய்யல . அப்பா கொடுத்த பணத்தோட வெளிநாடு போவதே என் திட்டம் . புறப்படு
- அய்யோ . நீங்க இவ்வளவு அறிவாளியா . எப்படியும் துரோகம் செய்வீங்கணு நினைச்சு ஜுஸ்ல விஷம் கலந்து கொடுத்துட்டேனே
----------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆஃப் நய வஞ்சகம் -

 ( உலக நய வஞ்சகர்கள் தின் ஸ்பெஷல் )
அந்த கார் அந்த இளைஞன் மேல் பயங்கரமாக மோதியது.. சுருண்டு விழுந்தான்... ரத்த காயம்..
டிரைவர் பதறினார்.. -சாரி தம்பி... நானே உங்களை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு , பில்லை எனக்கு சொல்லிட்டு போலீசில் சரண்டர் ஆகிறேன்.. அப்பதான் என் மனம் ஆறும்
-பரவாயில்ல சார்.. வலி பயங்கரமா இருக்கு.. என்னை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணுங்க போதும்..
- ஓகே தம்பி... இந்த விஸ்கிய சாப்பிடுங்க... வலி தெரியாது... என் கார்லயே கொண்டு போய் விட்டுறேன்..
விஸ்கி அடிக்க அடிக்க வலி பறந்தது..இளைஞன் அரை மயக்க நிலைக்கு சென்றான்.. ஏதோ போலீஸ் கார் சத்தம் கேட்டது.. பேச்சு சத்தமும் கேட்டது..
“ யார்னு தெரியல சார்... ஃபுல் தண்ணி.. அடிபட்டு கிடந்தான்,.. ஒரு பொறுப்புள்ள சிட்டிசனா ஃபர்ஸ்ட் எய்ட் செய்ய நினைச்சேன்.. நீங்களே வந்துட்டீங்க ”
------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆஃப் நயவஞ்சகம் -1 ( நயவஞ்சகர்கள் நாள் ஸ்பெஷல் )
கர்ணா.. நீ இது வரை செய்த புண்ணியத்தை எனக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விடு.. அப்படி டிரான்ஸ்ஃபர் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தையும் , அதனால் இனி என்னென்ன் புண்ணியங்கள் ஏற்படுமோ அவற்றையும் கூட எனக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விடு 
--------------------------------------------------------------------------
கடவுள் என ஒருவன் இருந்தால் உலகில் ஏன் இவ்வளவு அவலங்கள் ?
அர்ஜுனா ,நல்லதும் தீயதும் நடப்பது என் அனுமதியால்தான் .சூதுவாது செய்பவர்களிடம் வஞ்சக எண்ணமாக செயல்படுவது நான்தான்
கீதை
உலக நயவஞ்சகர் தின வாழ்த்துகள் - march 25
-----------------------------------------------------------------------------------------
நானெல்லாம் கஞ்சியும் ஊறுகாயும் சாப்பிட்டு வளர்ந்தவன் . என் அஞ்சு வயசு பொண்ணு கே எஃப் சி சிக்கன் இல்லாம சாப்பிடுவது இல்லை என ஒருவர் பெருமையாக என்னிடம் சொன்னார் . இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என வெகு நேரம் யோசித்தேன்
-------------------------------------------------------------------------
சொல்ல முடியாது...இன்றைய பிச்சைக்காரன் நாளைக்கே பெரிய ஆளுமையாக மாறக்கூடும் என்கிறது நறுந்தொகை...இனியாவது என்னை கொஞ்சம் மதியுங்கள் மக்களே...ஹி ஹி
**********************************************
அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்
--------------------------------------------------------------------------------------
நீச்சல் குளத்தில் குதிக்கிறீர்கள்.. என்ன ஆகிறது... நீர் அழகாக உங்களை உள்வாங்கிகொள்கிறது அல்லவா... இதற்கு காரணம் நீரின் மூலக்கூறுகள் இறுக்கமாக பிணைக்கப்படாமல் இருப்பதே.. இரும்பு போன்றவற்றின் மூலக்கூறுகள் வெகு இறுக்கமாக இணைந்து இருக்கும்..
நீரில் 100 மூலக்கூறுகள் இருந்தால் , எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் பதினைந்து மூலக்கூறுகள் மட்டுமே இணைந்து இருக்கும்.. மற்றவை பிரிந்து அடுத்த காம்பினேஷனுக்கு முயன்று கொண்டு இருக்கும்... இப்படி வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கும்...
இப்படி உறுதி அற்ற பிணைப்பு இருந்தால்கூட , மலையில் இருந்து வீழும்போதோ , சாய்வான தளத்தில் வழியும்போதோ , ஒரு வித பிரியாத பிணைப்புடன் இருப்பது விந்தையாகும்.. நீச்சல் குளத்தில் நாம் குதித்து கொஞ்சம் மூழ்கினால் , உடனே மீண்டும் சேர்ந்து விடுகிற்து அல்லவா..
அதாவது அதை சேர்த்து வைத்தால் பிரிய நினைக்கிறது.. பிரிக்க நினைத்தால் சேரப்பார்க்கிறது...
இது விஷ்யம் அன்று.
மனிதனில் அதிக பங்கு வகிப்பது தண்ணீர்தான்... அதாவது நாம் தண்ணீரால்தான் ஆக்கப்பட்டு இருக்கிறோம்.. கூட்டிக்கழித்து பார்த்தால் , சற்று தலை சுற்றுவது போல இருக்கிறதல்லவா...
**************************************************************************************
ஒரு கதையை படித்தால், அதை சுருக்கி உங்களால் உங்கள் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள முடியவேண்டும்,.. இல்லை என்றால் அந்த கதை உங்களுக்கு புரியவில்லை என்று பொருள் என்கிறார் பிரபல எழுத்தாளர் ஒருவர். இது கதைக்கு மட்டும் அல்ல... பல கருதுகோள்களுக்கும் பொருந்தும்... 
ஒரு பள்ளி சிறுவன் என்னிடம் பல்படியாக்கல் பற்றி விளக்குமாறு கேட்டான்.. எனக்கு பிடிபடவில்லை.. எனக்கு தெரிந்த , 12வது மாணவன் ஒருவனை கேட்டேன்.. அவனுக்கு நினைவு இருந்தது.. ஆனால் என்ன படித்தானோ அதை அப்படியே ஒப்பித்தான்... எனக்கும் புரியும்படி சொல்லவில்லை.. 
பிறகு நான் படித்தபோது , அட இதுதானா என தோன்றியது... பிறகு அந்த பள்ளி சிறுவனுக்கு விளக்கினேன்..
சிறுவர்களுடன் பேசி , அந்த காலத்தில் படித்த தந்துகிக்கவர்ச்சி , பரப்பு இழுவிசை , கோண திசை வேகம் , விடுபடு திசைவேகம் என ரெஃப்ரெஷ் செய்து கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது
***********************************************************************************
பரங்கிமலை ஜோதியும் பின் நவீனத்துவமும்
ஒருவன் முதல் முறையாக கில்மா படம் சென்றான் . காட்சிகள் சூடேற்ற தாங்க முடியாமல் பக்கத்துசீட்காரனை கேட்டான் " அண்ணே . தேர்தலில் என் "தம்பி" 'நிக்கிறான்' . கொஞ்சம் 'கை' கொடுக்க முடியுமா ? பக்கத்துசீட் பிசி . மறுத்துவிட்டான் . பத்து நிமிடம் கழித்து " ஓகே . பிரதர் . தேர்தலுக்கு கை கொடுக்றேன்
எரிச்சலுடன் பதில் வந்தது . " தேவையில்லை . என் தம்பி சுயேட்சையா நின்னே ஜெயிச்சுட்டான்






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா