Tuesday, November 4, 2014

பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு

வாவ் .
கரெண்ட் போய்விட்டது
நட்சத்திரங்கள் எவ்வளவு அழகு
‪#‎பிக்கூ‬
-----------------------------------------------------------------------
போனில் 5 மிஸ்டு கால் . புது நம்பர் . யாரென யோசித்தபோது மீண்டும் கால் . யாராவது பழைய தோழியா ? ஹலோ . ஆண்குரல் . வடை போச்சே . பேசினார் . என்ன பாஸ் . போனே எடுக்கமாட்டேங்கறீங்க . பஸ்சுக்கு டைம் ஆச்சு. கஷ்டப்பட்டு ஒரு நண்பரிடம் நம்பர் வாங்கினேன் . வேற ஒண்ணுமில்ல . கில்மா கதை எழுதியிருந்தீங்க . இதெல்லாம் நல்லாவா இருக்கு . உங்களுக்கு இதெல்லாம் சரி வராது . சரி . அப்புறம் பேசறேன் . டைம் ஆச்சு " 
அவர் திட்டியதில் வருத்தம் இல்லை . நான் அறிவியல் ஆன்மிகம் நாட்டுநல கருத்துகள் எழுதும்போதெல்லாம் யாரும் இப்படி பாராட்டுவதில்லை . திட்டுவதற்கு மட்டும் இப்படியெல்லாம் எஃபோர்ட் எடுக்கிறார்கள்.என்ன சொல்வது?
---------------------------------------------------------------------------------------------- ம தி மு க வெற்றி வாய்ப்பு குறித்து ரகசிய போலீஸ் ஆராய்கிறது - வைகோ .
இதை எப்படி மதிமுகவின் ரகசிய போலீஸ் கண்டுபிடித்தது ?ரகசியத்துக்கு உண்டான மரியாதையே போச்சே
------------------------------------------------------------------------------------- எப்ப இந்த பொண்ணுங்க தாவணி , சேலைய மறந்து வேறு ஆடைகளுக்கு மாறுனாங்களோ அப்பவே தமிழ் பண்பாடு அழிய ஆரம்பிச்சுருச்சு , என்ன நான் சொல்றது என இன்பாகஸ் மெசெஜ் அனுப்பினார் ஒருவர் . உடனே நெட் இணைப்பை துண்டித்து விட்டு ஷட் டவுனிவிட்டேன் . காரணம் எனக்கு வேட்டி கட்ட தெரியாது . வேட்டி அணிந்து எங்கும் போனதும் கிடையாது .
-------------------------------------------------------------------------------------------- தன் முன் தோன்றிய கடவுளிடம் தனக்கு சாவே வரக்கூடாது என வரம் கேட்டான் அவன் . கடவுள் வரமளித்து மறைந்தார் . சந்தோஷமாக தன் காதலியை பார்க்க ஓடினான் . உனக்கு ட்ரீட் தரேன் . வா அண்ணா லையில் இருக்கற ஹோட்டலுக்கு போய் ப்டிடலாம் என்றாள் அவள் . சொல்லி பார்த்தான் . அண்ணா (சா)லை . ம்ஹும் . அவனுக்கு 'சா' வே வரவில்லை
---------------------------------------------------------------------------------------- என்னடா மதவாதம் ? அதான் அன்னைக்கே சொல்லியாச்சே யுனிவர்சிட்டி இன் டைவர்சிட்டி . கரெக்டாதான் பேசறேனா . நான் இங்க்லிஷ்ல கொஞ்சம் வீக்கு ‪#‎கேப்டன்‬ ஆங்கிலம் பேசி அசத்தல்
----------------------------------------------------------------------------------------
யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் பிரதமர் என்கிறார் ஜெ . இங்குதான் கரண்டே இல்லையே . நீங்க கை காட்டினாலும் தெரியாது - கேப்டன்
---------------------------------------------------------------------------------------
ஓர் அரசர் அந்த சாமியாரை நல்லபடியாக கவனித்து அனுப்பினார் . போகும்போது சாமியார் சொன்னார் . சில ஆண்டுகளில் இறக்க போகிறாய் . பிறகு உன் மகன் இறப்பான் . அதன்பின் பேரனும் இறப்பான் . எல்லோரும் டென்ஷன் ஆகி விட்டார்கள் . அரசன் மட்டும் புன்னகைத்து வரமளித்ததற்கு நன்றி என்றான்
----------------------------------------------------------------------------
கடவுள் என ஓர் ஆள் எங்காவது இருப்பதாக நினைக்காதீர்கள் .பாலில் சுவை போல , பழத்தின் சாறு போல , புத்தகத்தின் கருத்து போல கடவுள் என்பது ஒரு தன்மை என்கிறார் இடைக்காட்டு சித்தர்
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
நூலிற் பொருள்போலும்
நுண்பொருளை போற்றீரே
---------------------------------------------------------------------------------------------
உழைப்பால் உயர்ந்த எஸ் எஸ் வாசன் , குதிரை ரேசில் ஆர்வம் காட்டினார் என்பது வியப்பளிக்கும் விஷயம் . அதை சூதாட்டமாக பார்க்காமல் அறிவியல் சார்ந்த விளையாட்டாக பார்த்தார் . துல்லியமான கணக்கீடுகள் மூலம் வெற்றிகுதிரையை கணிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார் .பல ஊர்களிலும் ரேசில் பணம் கட்டுவார் . ஒரு முறை இவர் பணம் கட்டிய குதிரை தோற்றது . தன் கணிப்பு தவறாதே என குழம்பினார் . அந்த குதிரையை பெரும்பணம் கொடுத்து வாங்கினார் . அடுத்த ரேசில் அது வென்றது . அதாவது சென்ற முறை மேட்ச்ஃபிக்ஸ் செய்துள்ளனர் . அத்துடன் ரேஸை தலை முழுகினார்
----------------------------------------------------------------------------------------
மிஸ் மாலினி என ஒரு படம் 1947ல் எடுக்கப்பட்டது . வாசன் எடுத்தார் . ஓர் ஏழைப்பெண் சந்தர்ப்ப சூழலால் மேடையில் பாடுவதாக காட்சி . கர்நாடக இசை மேதை டி கே பட்டம்மாளை பின்னணி பாட வைத்தார் . வரலாறு காணாத பெரியதொகையை ஊதியமாக கொடுத்தார் . ஆனால் படத்தில் டிவி ரத்னம் என்பவர் குரல் ஒலித்தது . பட்டம்மாள் குரலை ஏன் பயன்படுத்தவில்லை என்பது பல வருடங்கள் கழித்து வாசன் விளக்கினார் . இசை அறிவற்ற என் கதாநாயகி , இவ்வளவு அருமையாக , திறமையாக , குறைகளே இல்லாமல் பாடுவது செயற்கையாக ஒலிக்கும் என்றார்
-----------------------------------------------------------------------------------------
நேர்பட பேசு என்பார் பாரதியார் . கேட்பதை நேரடியாக கேட்டு பழக வேண்டும் . அப்படி கேட்பதே ஈகோ பிரச்னையாக நினைக்க தேவையில்லை .உதாரணமாக பேய் அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் என நேரடியாக கேட்கலாம் . பேயெல்லாம் முட்டாள்களின் கற்பனை என்ன நான் சொல்றது என கேட்டு போட்டுவாங்க முயலக்கூடாது
------------------------------------------------------------------------------------
வம்பு நடிகர் புசுபுசு நடிகை டிவிடி கிடைப்பதாக கிளப்பிவிட்ட வதந்தியை நம்பி ஆஸ்தான கடைக்கு போனேன் . வரவில்லையாம் . புன்னகை நடிகை டிவிடி வந்திருக்கு . வேணுமா என்றார் . பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்றால் இதுதானோ
-----------------------------------------------------------------------------
புரியாத மாதிரி எழுதும் பேசும் முகநூலர் ஒருவர் இருக்கிறார் . அவர் கேப்டனுக்கு நேர் எதிர் . சரக்கு உள்ளே போனால்தான் தெளிவாக பேசுவார் . கொஞ்ச நாளாக அடிப்பதில்லை . காரணம் கேட்டேன் . ஒரு தேவதையை ரொம்ப நாள் ரசித்து வந்தாராம் . ஒரு நாள் அவளே வந்து பேசினாளாம் . இனி தண்ணி அடிக்க கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டாளாம் . இப்ப என்ன பிரச்னை என்றால் அவள் உண்மையிலேயே பேசினாளா பிரமையா என குழப்பமாக உள்ளதாம் ‪#‎வெளங்கிரும்‬

---------------------------------------------------------------------
ஆர்வக்கோளாறு முகநூலர் அவர் . காப்கா , ஃபூக்கோ , சார்த்தர் என அவர் சீன் போடுவதை பார்த்து அண்ணே , எனக்கும் வாசிப்பு உண்டுணே . கைட் பண்ண ஆள் இல்ல என ஒரு கல்லூரி மாணவன் புலம்ப , அக மகிழ்ந்த அவர் அவனுக்கு தண்ணி பார்ட்டி வைத்தாராம் . கடைசியில் சரி , இதுவரை என்ன படிச்சிருக்கணு சொல்லு . அதற்கேற்ற மாதிரி நானே என் காசுல புக் வாங்கி தறேன் என்றாராம் . அவன் சொன்னானாம் . சரோஜா தேவி , மருதம் , திரைச்சித்ரா , விருந்து . அவ்வளவு நேரம் ஏற்றிய போதை சட் என இறங்கி விட்டதாம்
-------------------------------------------------------------------------------

புரியாத முகநூலர் பற்றி ஒரு பிரத்யேக செய்தி போஸ்ட் செய்தேன் அல்லவா ? அது நீங்கள்தானா என கேட்டு சம்பந்தமே இல்லாத இன்னொருவரிடம் ஒரு கல்லூரி பெண் விசாரித்தாராம் . அவர் மறுத்தாராம் . அப்படியே பேசி கேப்டனை கலாய்க்கும் அளவுக்கு திக் ஃபிரண்ட்ஸ் ஆகி விட்டார்களாம் . பொறுப்பாக எனக்கு நன்றி மெசேஜ் அனுப்பினார் அந்த முகநூலர் . அந்த பெண் எனக்கு ஒரு ஹாய்கூட சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இனி என் போஸ்ட்டில் சந்தேகம் எனில் என்னை மட்டுமே தொடர்பு கொள்ளவும் . எனக்கு வேறு கிளைகள் ஏதும் கிடையாது 
-----------------------------------------------------------------------------------
ஒரு வேலையாக நுங்கம்பாக்கம் சென்றேன் . வந்தது வந்தோம் . உறவினர் வீட்டுக்கு போகலாம் , போய் நாளாச்சே என அவர் இல்லம் சென்றேன் . அவர் மகிழ்ந்தார் . ஆனாலும் நான் வந்ததன் காரணம் புரியாமல் தவித்தார் . விஷயம் இல்லாம வரமாட்டியே . என்ன மேட்டர் என துளைத்து எடுத்தார் . விஷயம் இல்லாம வர மாட்டேன் என நான் எப்ப சொன்னேன் என குழம்பினேன் . சும்மாதான் வந்தேன் என்பதை கடைசி வரை அவர் நம்பவே இல்லை . ஏதாச்சும் கற்பனை காரணம் சொல்லலாமா என நினைத்தேன் . மூடு இல்லை
--------------------------------------------------------------------
பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
அண்ணா , தேர்தல் பணிகளை செய்தவர்கள் நான் . நீங்களோ மேடையில் கருணாநிதியை பாராட்டி , மோதிரம் அணிவித்து விட்டீர்களே
கண்ணதாசா , நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு . அடுத்த கூட்டத்தில் உனக்கு போட்டுவிடுகிறேன்
------------------------------------------------------------------------

பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
யார் பிரதமர் என்ற குழப்பம் ஏற்பட்டபோது , இந்திரா காந்தியை பிரதமராக்கியவர் காமராஜ் . பின்பு இந்திரா கொடூர ஆட்சி நடத்தினார் . அவரை காமராஜ் சந்திக்க விரும்புவதாக உதவியாளர் சொன்னார் . இந்திரா காந்தி கேட்டார் who is kamaraj
----------------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
மிகுந்த தயக்கத்துடன் பேசினேன்
"நம்ம காதலிச்சது உண்மைதான் . ஆனா வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க . பணக்கார ஃபேமிலி என்படதுகூட முக்கியமில்லை .ஆனா அம்மாவின் கட்டளைய மீற முடியல "
புழுவென முறைத்தாள் காயத்ரி . -அப்ப என்னிடம் பேசிய காதல் வசனத்துக்கெல்லாம் என்ன அர்த்தம்
-என்ன பெரிய காதல் . எல்லாம் ஹார்மோன் வேலைதான் . கவலைப்படாதே . உனக்கு நானே மாப்பிள்ளை பார்க்கிறேன் . சிரித்தேன்
- த்தூ .நான் வேணும்னா உனக்கு பொண்ணு பார்க்கிறேன் .கோபமாக கிளம்பினாள் காயத்ரி
லாப்டாப்பில் மெயில் திறந்து அம்மா அனுப்பிய பெண்ணின் படத்தை ஆர்வமாக ஓப்பன் செய்தேன் . அது காயத்ரியின் படம்

------------------------------------------------------------------------ பெஸ்ட் ஆப் நயவஞ்சகம்
" அப்பா மிரட்டுவாரு . பயப்படாதீங்க . காதலில் உறுதியா இருங்க " உற்சாகம் அளித்து ஆப்பிள் ஜுசும் கொடுத்து அப்பா ரூமுக்கு அனுப்பினாள் . அவர் மிரட்ட்வில்லை . ஹாட் கேஷ் .
ஸாரி டியர் . பிராக்டிக்கலா சரி வராது . பிரிஞ்சுடலாம் என்ற என்னை வெறுப்புடன் பார்த்தாள்
மாலை ஃபோன் செய்தேன் . செல்லம் . நான் உனக்கு துரோகம் செய்யல . அப்பா கொடுத்த பணத்தோட வெளிநாடு போவதே என் திட்டம் . புறப்படு
- அய்யோ . நீங்க இவ்வளவு அறிவாளியா . எப்படியும் துரோகம் செய்வீங்கணு நினைச்சு ஜுஸ்ல விஷம் கலந்து கொடுத்துட்டேனே
----------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆஃப் நய வஞ்சகம் -

 ( உலக நய வஞ்சகர்கள் தின் ஸ்பெஷல் )
அந்த கார் அந்த இளைஞன் மேல் பயங்கரமாக மோதியது.. சுருண்டு விழுந்தான்... ரத்த காயம்..
டிரைவர் பதறினார்.. -சாரி தம்பி... நானே உங்களை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு , பில்லை எனக்கு சொல்லிட்டு போலீசில் சரண்டர் ஆகிறேன்.. அப்பதான் என் மனம் ஆறும்
-பரவாயில்ல சார்.. வலி பயங்கரமா இருக்கு.. என்னை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணுங்க போதும்..
- ஓகே தம்பி... இந்த விஸ்கிய சாப்பிடுங்க... வலி தெரியாது... என் கார்லயே கொண்டு போய் விட்டுறேன்..
விஸ்கி அடிக்க அடிக்க வலி பறந்தது..இளைஞன் அரை மயக்க நிலைக்கு சென்றான்.. ஏதோ போலீஸ் கார் சத்தம் கேட்டது.. பேச்சு சத்தமும் கேட்டது..
“ யார்னு தெரியல சார்... ஃபுல் தண்ணி.. அடிபட்டு கிடந்தான்,.. ஒரு பொறுப்புள்ள சிட்டிசனா ஃபர்ஸ்ட் எய்ட் செய்ய நினைச்சேன்.. நீங்களே வந்துட்டீங்க ”
------------------------------------------------------------------------
பெஸ்ட் ஆஃப் நயவஞ்சகம் -1 ( நயவஞ்சகர்கள் நாள் ஸ்பெஷல் )
கர்ணா.. நீ இது வரை செய்த புண்ணியத்தை எனக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விடு.. அப்படி டிரான்ஸ்ஃபர் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தையும் , அதனால் இனி என்னென்ன் புண்ணியங்கள் ஏற்படுமோ அவற்றையும் கூட எனக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விடு 
--------------------------------------------------------------------------
கடவுள் என ஒருவன் இருந்தால் உலகில் ஏன் இவ்வளவு அவலங்கள் ?
அர்ஜுனா ,நல்லதும் தீயதும் நடப்பது என் அனுமதியால்தான் .சூதுவாது செய்பவர்களிடம் வஞ்சக எண்ணமாக செயல்படுவது நான்தான்
கீதை
உலக நயவஞ்சகர் தின வாழ்த்துகள் - march 25
-----------------------------------------------------------------------------------------
நானெல்லாம் கஞ்சியும் ஊறுகாயும் சாப்பிட்டு வளர்ந்தவன் . என் அஞ்சு வயசு பொண்ணு கே எஃப் சி சிக்கன் இல்லாம சாப்பிடுவது இல்லை என ஒருவர் பெருமையாக என்னிடம் சொன்னார் . இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என வெகு நேரம் யோசித்தேன்
-------------------------------------------------------------------------
சொல்ல முடியாது...இன்றைய பிச்சைக்காரன் நாளைக்கே பெரிய ஆளுமையாக மாறக்கூடும் என்கிறது நறுந்தொகை...இனியாவது என்னை கொஞ்சம் மதியுங்கள் மக்களே...ஹி ஹி
**********************************************
அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்
--------------------------------------------------------------------------------------
நீச்சல் குளத்தில் குதிக்கிறீர்கள்.. என்ன ஆகிறது... நீர் அழகாக உங்களை உள்வாங்கிகொள்கிறது அல்லவா... இதற்கு காரணம் நீரின் மூலக்கூறுகள் இறுக்கமாக பிணைக்கப்படாமல் இருப்பதே.. இரும்பு போன்றவற்றின் மூலக்கூறுகள் வெகு இறுக்கமாக இணைந்து இருக்கும்..
நீரில் 100 மூலக்கூறுகள் இருந்தால் , எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் பதினைந்து மூலக்கூறுகள் மட்டுமே இணைந்து இருக்கும்.. மற்றவை பிரிந்து அடுத்த காம்பினேஷனுக்கு முயன்று கொண்டு இருக்கும்... இப்படி வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கும்...
இப்படி உறுதி அற்ற பிணைப்பு இருந்தால்கூட , மலையில் இருந்து வீழும்போதோ , சாய்வான தளத்தில் வழியும்போதோ , ஒரு வித பிரியாத பிணைப்புடன் இருப்பது விந்தையாகும்.. நீச்சல் குளத்தில் நாம் குதித்து கொஞ்சம் மூழ்கினால் , உடனே மீண்டும் சேர்ந்து விடுகிற்து அல்லவா..
அதாவது அதை சேர்த்து வைத்தால் பிரிய நினைக்கிறது.. பிரிக்க நினைத்தால் சேரப்பார்க்கிறது...
இது விஷ்யம் அன்று.
மனிதனில் அதிக பங்கு வகிப்பது தண்ணீர்தான்... அதாவது நாம் தண்ணீரால்தான் ஆக்கப்பட்டு இருக்கிறோம்.. கூட்டிக்கழித்து பார்த்தால் , சற்று தலை சுற்றுவது போல இருக்கிறதல்லவா...
**************************************************************************************
ஒரு கதையை படித்தால், அதை சுருக்கி உங்களால் உங்கள் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள முடியவேண்டும்,.. இல்லை என்றால் அந்த கதை உங்களுக்கு புரியவில்லை என்று பொருள் என்கிறார் பிரபல எழுத்தாளர் ஒருவர். இது கதைக்கு மட்டும் அல்ல... பல கருதுகோள்களுக்கும் பொருந்தும்... 
ஒரு பள்ளி சிறுவன் என்னிடம் பல்படியாக்கல் பற்றி விளக்குமாறு கேட்டான்.. எனக்கு பிடிபடவில்லை.. எனக்கு தெரிந்த , 12வது மாணவன் ஒருவனை கேட்டேன்.. அவனுக்கு நினைவு இருந்தது.. ஆனால் என்ன படித்தானோ அதை அப்படியே ஒப்பித்தான்... எனக்கும் புரியும்படி சொல்லவில்லை.. 
பிறகு நான் படித்தபோது , அட இதுதானா என தோன்றியது... பிறகு அந்த பள்ளி சிறுவனுக்கு விளக்கினேன்..
சிறுவர்களுடன் பேசி , அந்த காலத்தில் படித்த தந்துகிக்கவர்ச்சி , பரப்பு இழுவிசை , கோண திசை வேகம் , விடுபடு திசைவேகம் என ரெஃப்ரெஷ் செய்து கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது
***********************************************************************************
பரங்கிமலை ஜோதியும் பின் நவீனத்துவமும்
ஒருவன் முதல் முறையாக கில்மா படம் சென்றான் . காட்சிகள் சூடேற்ற தாங்க முடியாமல் பக்கத்துசீட்காரனை கேட்டான் " அண்ணே . தேர்தலில் என் "தம்பி" 'நிக்கிறான்' . கொஞ்சம் 'கை' கொடுக்க முடியுமா ? பக்கத்துசீட் பிசி . மறுத்துவிட்டான் . பத்து நிமிடம் கழித்து " ஓகே . பிரதர் . தேர்தலுக்கு கை கொடுக்றேன்
எரிச்சலுடன் பதில் வந்தது . " தேவையில்லை . என் தம்பி சுயேட்சையா நின்னே ஜெயிச்சுட்டான்


1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா