Thursday, November 6, 2014

சங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்

என் நண்பர் கலாரசிகர் மட்டும் அல்ல, பண விஷ்யத்திலும் கில்லாடி. யாருக்கும் பத்து பைசா செலவழிக்க மாட்டார். ஒரு முறை காசுக்கு உடலை விற்கும் பெண்ணிடமே காசை கறந்த திறமைசாலி. நான் போய் வேலையை முடித்து விட்டு காசை கொடுத்து விட்டு வந்தேன், அடுத்து கலாரசிகர் போனார். உல்லாசமாக இருந்தார். காசு கேட்டபோது சண்டை போட ஆரம்பித்தார். பெண் தன்னை சுகப்படுத்தவில்லை என கத்தினார். போலீசிடம் புகார் சொல்லப்ப்போவதாக மிரட்டினார். பயந்து போன அவர்கள் கலாரசிகருக்கு காசு கொடுத்து அனுப்பினார்கள்
- கண்ணதாசன்
( கண்ணதாசனின் அந்த ஆருயிர் நண்பர் கலாரசிகர் யார்.. புரியவில்லையே  )

*****************************************************************8
இவர் யார் என்று தெரிகிறதா ? 
அந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தது. எனவே கலாரசிகர் தேர்தல் பணி எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டார். நானும் வேறு சில திமுகவினரும் கடுமையாக உழைத்தோம். இதன் விளைவாக திமுக வென்றது. வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அண்ணா பேசினார். வெற்றிக்கு பாடுபட்ட கலாரசிகரை பாராட்டுவதாக சொல்லி அவருக்கு மோதிரம் அணிவிப்பதாக சொன்னார். தன் மனைவிக்காககூட அப்படி தேடி அலைந்ததில்லை என்றும் , கலாரசிகருக்காக தானே சென்று தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி மேடையில் மோதிரம் அணிவித்தார். எங்களுக்கெல்லாம் பயங்கர ஏமாற்றம். பிறகு அண்ணாவை தனியாக சந்தித்து சண்டையிட்டேன். என்ன இப்படி செய்து விட்டீர்கள். உழைத்தது நாங்கள்..மோதிரம் அவருக்கா?
அண்ணா சிரித்து கொண்டே சொன்னார். “ அட என்னப்பா..புரியாத ஆளாக இருக்கிறாய்.. நீ ஒரு மோதிரம் வாங்கி கொடு. அடுத்த கூட்டத்தில் உனக்கும் போட்டு விடுகிறேன்”
-கண்ணதாசன்
வரலாறு செம இண்டரஸ்டிங்கா இருக்கே  சரி..அந்த கலாரசிகர் யார்? ஒன்றும் புரியவில்லையே
***********************************************************************8
அந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார்? யானையை வைத்து என்ன செய்வார் ? 
இந்த பாடலை பாருங்கள்...
மன்னா...
உன் நாட்டில் மட்டும்
பெண் யானைகள்
ஒரு கர்ப்பத்தில்
பத்து குட்டிகளை பிரசவிக்குமா
உன்னை பாடி வரும்
புலவர்களுக்கு
நீ அளித்த யானைகளின் எண்ணிக்கை
பகைவர்களை விரட்டி அடித்த
வேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்
- ஆய் அண்டிரன்

____________________________________________________________
புற நானூற்று பாடலின் மாஸ்டர் பீஸ்... பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல.. அதை நல்ல விதமாக பயன்படுத்து என சொல்லும் எவர் க்ரீன் க்ளாசிக்..
அரசனே...
நீ பெரியவன்,
உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்
அருளும் அன்பும் இல்லாதவர்கள்
நரகம் செல்வார்கள்.
அவர்களுடன் சேராதே.
குழந்தையை காக்கும் தாய் போல
நாட்டைக் காப்பாற்று ..
அரசாளும் பதவி
எல்லோருக்கும் கிடைத்து விடாது.
- நரிவெரூஉத் தலையார்
______________________________________________________________
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து ...குறளுக்கு அர்த்தம் தேவை..
கண்ணதாசன் : ஒரு பிறவில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் உதவும் என சிலர் உரை எழுதுகிறார்கள்.. ஆனால் அது தவறு.
ஒருமை என்றால் தனிமையில், ஒரே நோக்கத்தில் ( concentration )என்று பொருள். எழுமை என்றால் ஏற்றம் என்று பொருள். தனிமையில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏற்றம் தரும், உயர்வையும் பலத்தையும் கொடுக்கும் என்று இதற்கு அர்த்தம். தனிமை நிறைந்த சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பது பழந்தமிழ் முடிபு. எழுமையும் என்பதில் வரும் “உம்” எனும் அசை கெட்டு வரல் இலக்கணத்தில் உள்ள முறைதான்.
_____________________________________________________________
கண்ணதாசன் பாறைகள்,....
ஊழின் பெருவலி யாவுள ..குறளுக்கு அர்த்தம் கூறவும்?

கண்ணதாசன் அண்ணா தலைமையில் செயல்பட்டபோது அளித்த பதில் : ஊழ் என்ற சொல்லுக்கு முறை என்பது பொருள். முறையோடு காரியம் ஆற்றினால் அதை விட வலிமையானது எது என்பது இதற்கு பொருள். இடர்கள் சூழ்ந்தாலும் முறையான செயல் முன்னின்று காக்கும்.
___________________________________________________________
பாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)
புலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா ? பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு
_______________________________________________________
அமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி
____________________________________________________
தச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்-அவ்வையார் 
______________________________________________________
துறவி ஹபீப் அஸ்மீ ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆடைகளை கரையில் வைத்து விட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அந்த பக்கம் வந்த ஒருவன் , யாரோ ஆடைகளை தவறுதலாக விட்டு சென்று விட்டார்கள் போல என நினைத்து , அவர்கள் வரும்வரை ஆடைகளை பார்த்து கொள்ளும் நோக்கத்தில் அங்கேயே நின்றான், துறவி குளித்து விட்டு வந்தார்.
“ அய்யா பெரியவரே..ஆடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டு செல்லலாமா.. யாரேனும் திருடிச்சென்றால் என்ன ஆவது “ என்றான்.

துறவி சிரித்து கொண்டே சொன்னார் “ நான் ஆடைகளை பாதுகாப்பின்றி விட்டு செல்லவில்லை. பாதுகாக்க்கும் பொறுப்பை அல்லாவிடம் விட்டு சென்றேன். அவன் அந்த பொறுப்பை உன்னிடம் கைமாற்று கொடுத்து விட்டான் போலிருக்கிறது “ # சுஃபி கதைகள்

மாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்.. குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை
____________________________________________________
*********** இன்மையின் இருத்தலியல்****************
இன்மை என்பதும் ஒரு வகை இருத்தல்தான். ஒன்று இல்லாதபோது அது ஏற்படுத்தும் பாதிப்பு எவ்வளவு பயங்கரமானது...இந்த புற நானூற்று பாடலை பாருங்கள்..
பெரிய பெரிய உணவு உருண்டைக்ள்
கொடுத்து வளர்த்த
பிரமாண்டமான யானையால்
நிரப்பப்பட்டு இருந்த
அதன் கொட்டில்
அதன் மறைவுக்கு பின்
வெற்றிடமானதை கண்டு
கலங்கும் பாகன் போல
அரசன் வீற்றிருந்த
மாமன்றத்தை கண்டு கலங்குகிறேன்
- பொத்தியார் ( புற நானூறு )

_____________________________________________________--


2 comments:

 1. கலா ரசிகர் யார்?
  ஜெயகாந்தனிடம் இந்தக் கேள்விக் கேட்கப்பட்டது,
  ( தற்பொழுதல்ல முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம்.)
  ஏறுமாறாய் அவரை விமர்சிக்கும் நீங்கள் அவரைப் பெயர் சொல்லி அழைக்காமல் ----------- , ----------- என்றுதானே இன்னமும் அழைக்கிறீர்களே?
  அன்று ஜெயகாந்தன் சொன்ன பதில்.
  1. ஒருவர் எப்பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்பெயரால் அவரை அழைப்பதுதான் மரபு
  2. அவரும கலைக்குடும்பத்தில் பிறந்தவர் தானே!
  3. அவர் கதைவசனம் எழுதிய படமொன்றில் கூட ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்று அவரே சொல்லியிருக்கிறாரே!
  எனவே அவரை ------------ என்பதுசரிதான்.
  இந்தப் புலியையும் அவர் புல்லைத் தின்ன வைத்துவிட்டது அவரது சாமர்த்தியம்.
  உங்களின் புனைவுகள் சொல்லும் விதம் அருமை!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா